Search
  • Follow NativePlanet
Share
» »கொடைக்கானல் சாலைக்கு வயசு நூறாம் எந்த சாலை தெரியுமா?

கொடைக்கானல் சாலைக்கு வயசு நூறாம் எந்த சாலை தெரியுமா?

இந்த பதிவில் கொடைக்கானலுக்கு செல்லும் ஒரு சாலையின் பழமை பற்றியும் அதன் சிறப்புகள், அருகாமையிலுள்ள இடங்கள் பற்றியும் காணவிருக்கிறோம்.

By Udhaya

தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களுள் ஒன்றாகும். எழில் கொஞ்சும் இயற்கையை கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளுள் ஒன்றில் இருக்கிறது இந்த கொடைக்கானல் மலை. இது கடல்மட்டத்திலிருந்து 2133 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து பார்த்தால் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான பழனி மலையைக்காணமுடியும். சரி இந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது நாம் பயன்படுத்தும் சாலை ஒன்றுக்கு நூறு வயது ஆகிவிட்டது என்பது தெரியுமா? வாருங்கள் அது பற்றி தெரிந்துகொள்வோம்.

 உலக சிறப்புமிக்க கோடை வாழிடம்

உலக சிறப்புமிக்க கோடை வாழிடம்


சர்வதேச கோடை வாழிடமான கொடைக்கானலின் அழகில் மெய்மறந்து நிற்கும் சுற்றுலா பிரியர்கள் ஏராளம். மேற்கு தொடர்ச்சி மலையில் ஏறக்குறைய 7000 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த மலை. மலையில் அமைந்திருக்கும் ஒரு சிறிய நகரம். இந்த மலை எப்போது தோன்றியது என்பது உங்களுக்குத் தெரியுமா?

"கானகத்தின் கொடை" அல்லது "காடுகளின் பரிசு" என்பது கொடைக்கானல் என்பதன் தமிழ் அர்த்தம். இருப்பினும் கோடை என்ற வார்த்தைக்கு நான்கு அர்த்தங்கள் உள்ளதால் கொடைக்கானல் என்பதற்கு அர்த்தத்தை நான்கு விதமாக எடுத்துக் கொள்ளலாம். அவைகள் "வனத்தின் முடிவு", "படர்க்கொடி அடங்கிய காடு", "கோடைக்காலத்து காடு" மற்றும் "காடுகளின் பரிசு".

Raj

எப்போது தோன்றியது

எப்போது தோன்றியது

இந்த மலை எப்போது தோன்றியது என்பது குறித்த ஆய்வை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் சிலர் கண்டறிந்தனர். பெரும் ஆய்வுக்கு பிறகு கண்டறிந்த இந்த மலையில் வயது கிட்டத்தட்ட மூவாயிரத்து எண்ணூறு இருக்கலாம் என தெரிகிறது. புவியியல் பரிணாம மாற்றத்தால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இந்த அளவுக்கு ஆகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த மலை தற்போதும் வளர்ந்துகொண்டிருக்கிறதாம். பத்து வருடத்திற்கு சில சென்டிமீட்டர்கள் மட்டுமே வளர்வதால் நம்மால் அவ்வளவு சீக்கிரம் இதை கண்டறிய முடியாது என்கின்றனர் அறிவியலாளர்கள். மேலும் மலையின் உயரம் துல்லியமாக அளவிடப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mrithunjayan

 ஆங்கிலேயர்கள் கண்டறிந்த அற்புத மலை

ஆங்கிலேயர்கள் கண்டறிந்த அற்புத மலை

இந்தியாவில் பெரும்பாலான சாலைகள், தண்டவாளங்களுக்கான ஆரம்ப நிலை வழித்தடங்கள் எல்லாமே ஆங்கிலேயர்கள் கொண்டுவந்ததாகவே இருக்கும். அப்படி கொடைக்கானலுக்கு சாலை அமைத்ததும் அவர்கள்தான். இவ்வளவு ஏன் இந்த கொடைக்கானல் மலையையே கண்டறிந்தது அவர்கள்தான்.

முதன்முதலாக இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் இந்த இடத்துக்கு வேட்டையாடும் பொருட்டு சென்று, பின் இங்குள்ள சூழ்நிலை தட்பவெப்பத்தை உணர்ந்து கோடைக்காலத்தில் இங்கு குடியேறினர். இங்கிலாந்தில் இருக்கும் அதே தட்பவெப்பம் இங்கு நிலவுவதாக அவர்கள் கருதினர். பின்னர் படிப்படியாக மண்சாலைகள், தார்சாலைகள் என அமைத்தனர். கொடைக்கானலுக்கு தார்சாலை முதன்முதலில் 1914ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

shyam sundar

ஆங்கிலேயர்கள் முதலில் குடியேறிய இடம்

ஆங்கிலேயர்கள் முதலில் குடியேறிய இடம்

ஆங்கிலேயர்கள் முதன்முதலில் எங்கே குடியேறினார்கள் தெரியுமா? தற்போது கொடைக்கானல் ஏரி அருகேதான் ஆங்கிலேயர்கள் இரு பங்களாக்களை கட்டி குடியேறினர். இந்த பங்களாவுக்கு அவர்கள் கோடைக்காலத்தில் மட்டுமல்லாமல் அடிக்கடி வருகை தந்தனர். இதனால் மண் கொண்டு சாலைகள் இட்டு, ஓரளவுக்கு பயணிக்க ஏதுவாக மாற்றப்பட்டது. இதன்பின் இது படிப்படியாக சுற்றுலாத் தளமாகவும் மாறியது. அதன்பின்னர்தான் 1914ம் ஆண்டு ஊத்து எனும் பகுதி வரை தார்ச் சாலை அமைக்கத் தொடங்கினர் ஆங்கிலேயர்கள். அடுத்த இரு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஊத்திலிருந்து கொடைக்கானல் நகரம் வரை சாலையை அமைத்து நல்ல வழித்தடத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

கொடைக்கானல் மலையில் முதலில் குடியேறியவர்கள் பலையர் பழங்குடி மக்கள். இந்த இடம் கிறிஸ்துவ காலத்து இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள், லெப்டினென்டு பி.எஸ்.வார்ட் கட்டுப்பாட்டில், இங்கு முதன் முதலில் அடியெடுத்து வைத்தது 1821-ஆம் வருடம். 1845 ஆம் வருடம் அவர்களால் இந்நகரம் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. பின்னர் 20-ஆம் நூற்றாண்டில் பல இந்திய பிரஜைகள் இங்கு குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

J.A.D. LLoyd

கொடைக்கானலில் என்னென்ன இருக்கு

கொடைக்கானலில் என்னென்ன இருக்கு


கோக்கர்ஸ் வாக் எனும் அற்புதமான பகுதி, பியர் ஷோலா எனப்படும் ஒரு நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனைப் பகுதி, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானியல் ஆய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி போன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன. இவை அனைத்திற்கும் சென்று பார்க்கவேண்டும்.

tshrinivasan

Kreativeart

கொடைக்கானலை அடைவது எப்படி?

கொடைக்கானலை அடைவது எப்படி?

கொடைக்கானலுக்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் 120 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம். மதுரை விமான நிலையம் கோயம்புத்தூர் மற்றும் சென்னை விமான நிலையங்களுடன் சேவையில் உள்ளது. கொடைரோடு ரயில் நிலையம் தான் கொடைக்கானலுக்கு மிக அருகில் இருக்கும் ரயில் நிலையம். கோயம்புத்தூர் சந்திப்பு கொடைக்கானலுக்கு மிக அருகில் இருக்கும் பெரிய ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து பெங்களூரு, மும்பை, எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன. கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Kreativeart

கொடைக்கானலின் வானிலை

கொடைக்கானலின் வானிலை

வருடம் முழுவதும் கொடைக்கானலில் தட்ப வெப்பநிலை இனிமையாக இருக்கும். கொடைக்கானல் செல்ல சிறந்த காலம் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையும், பின் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை. ஜூனிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை பச்சை பசுமையாய் காட்சி அளிப்பதால் அப்போதும் கொடைக்கானல் சென்று மகிழலாம்.

Nikhil1508

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X