Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா?

இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா?

இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா?

By Udhaya

ஜோதிர்லிங்கம் என்பது இந்து மதத்தில் சைவக்கடவுளாக போற்றப்படும் சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் எனும் அர்த்தம் விளங்க ஜோதிர்லிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

சமஸ்கிருதத்தில் ஆரித்ரா என்று குறிப்பிடப்படும் திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை ஜோதிர்லிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இதன் காரணமாக திருவாதிரை நாள் ஜோதிர்லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

ஜோதிர்லிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எந்த வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும் உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியை துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக ஜோதிர்லிங்கத்தை காண்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் மத்திய பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 2 கோயில்கள் அமைந்துள்ளன. எஞ்சியுள்ள 6 ஜோதிர்லிங்க கோயில்கள் தமிழ்நாடு, ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஆந்திர பிரதேசம், குஜராத் மாநிலங்களில் அமைந்துள்ளன.

இந்த கோவில்களின் சிறப்பம்சங்களையும் அங்கு எப்படி செல்வது என்பன குறித்தும் விரிவாக காண்போம்.

 சோம்நாத் கோயில், குஜராத்

சோம்நாத் கோயில், குஜராத்

*குஜராத் மாநிலம் சௌராஷ்டிரா பகுதியில் சோம்நாத் கோயில் அமைந்திருக்கிறது.

*ஜோதிர்லிங்க யாத்திரை செல்வோர் முதலில் தரிசக்க வேண்டிய ஸ்தலமாக சோம்நாத் கோயில் கருதப்படுகிறது.

*சோம்நாத் கோயில் அமைந்திருக்கும் சோம்நாத் கடற்கரையிலிருந்து கடலுக்கு அப்பால் உள்ள அண்டார்டிகா கண்டம் வரைக்கும் இடையே எந்த நிலப்பகுதியும் இல்லை என்று கடற்பாதுகாப்பு சுவரில் உள்ள பான ஸ்தம்பத்தின் கல்வெட்டு கூறுகிறது.

*சோம்நாத் கோயில் 16 முறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Shaq774

 மல்லிகார்ஜுனா கோயில், ஆந்திர பிரதேசம்

மல்லிகார்ஜுனா கோயில், ஆந்திர பிரதேசம்

*ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள புனித நகரமான ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனா கோயில் அமையப்பெற்றிருக்கிறது.

*மல்லிகார்ஜுனா கோயில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குவதோடு 18 மஹா சக்தி பீடங்களில் ஒன்றகாவும் சிறப்பு பெறுகிறது.

*இங்குதான் ஆதி சங்கரர் தன்னுடைய புகழ்பெற்ற 'சிவானந்த லஹிரி' எனும் கவிதைகளை படைத்தார் என்று நம்பப்படுகிறது.

மஹாகாலேஷ்வர் ஆலயம், மத்திய பிரதேசம்

மஹாகாலேஷ்வர் ஆலயம், மத்திய பிரதேசம்

*மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் அமைந்திருக்கும் மஹாகாலேஷ்வர் கோயில் ருத்திர சாகர் என்னும் ஏரிக்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும்.

*12 ஜோதிர்லிங்க கோயில்களில் மஹாகாலேஷ்வர் ஆலயத்தில் உள்ள லிங்கம் மட்டும்தான் தானாக உருவான சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது.

* 12 ஜோதிர்லிங்க கோயில்களில் மஹாகாலேஷ்வர் மட்டுமே தெற்கு நோக்கி அமையப்பெற்றிருக்கிறது.

கேதார்நாத் கோயில், உத்தரகண்ட்

கேதார்நாத் கோயில், உத்தரகண்ட்

*உத்தரகண்ட் மாநிலத்தின் பனிபடர்ந்த இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் கேதார்நாத் கோயில் அமைந்திருகிறது.

*கேதார்நாத் கோயிலே 12 ஜோதிர்லிங்க கோயில்களில் சிவனின் கைலாய மலைக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் கோயிலாக கருதப்படுகிறது.

*கேதார்நாத் பகுதியில் நிலவும் தீவிர காலநிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் முதல் தீபாவளி திருநாள் வரையே திறந்திருக்கும். அதோடு இக்கோயிலை சாலை வழியாக நேரடியாக அணுக முடியாது.

*கௌரிகுண்டம் என்ற இடத்திலிருந்து 14 கிமீ தூரம் மலை ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும்.

ஓங்காரேஸ்வரர் கோயில், மத்திய பிரதேசம்

ஓங்காரேஸ்வரர் கோயில், மத்திய பிரதேசம்

*மத்திய பிரதேசத்தில் நர்மதை ஆற்றில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா எனும் தீவு ஒன்றில் ஓங்காரேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது.

*இந்த கோயில் அமையப்பெற்றுள்ள தீவின் வடிவத்தை 'ஓம்' என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள்.

* இந்த தீவில் ஜோதிர்லிங்க கோயிலான ஓங்காரேஸ்வரர் கோயிலை போலவே அமரேஸ்வரர் கோயில் என்ற மற்றொரு ஆலயமும் அமையப்பெற்றுள்ளது.

பீமாஷங்கர் கோயில், மகாராஷ்டிரா

பீமாஷங்கர் கோயில், மகாராஷ்டிரா

*பீமாசங்கர் கோயில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து 110 கிமீ தொலைவில் உள்ள போர்கிரி எனும் ஊரில் சஹயாத்திரி குன்றுகளின் மீது அமைந்துள்ளது.

*பீமாஷங்கர் கோயில் தொன்மையான மற்றும் நவீன கட்டிடக்கலை பாணிகளின் கலவையில் காட்சியளிக்கிறது.

*பீமாஷங்கர் ஆலயம் ஆன்மீக யாத்ரீகர்களிடையே மட்டுமல்லாமல் இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்கள் மற்றும் மலையேற்ற விரும்பிகள் மத்தியிலும் பிரபலமாக திகழ்கிறது.

காசி விஸ்வநாதர் கோயில், உத்தரப்பிரதேசம்

காசி விஸ்வநாதர் கோயில், உத்தரப்பிரதேசம்

*காசி விஸ்வநாதர் கோயில் இந்துக்களின் புனித நகரமாக கருதப்படும் வாரணாசியில் கங்கை நதியின் மேற்கு கரையோரத்தில் அமைந்திருக்கிறது.

*காசி விஸ்வநாதர் கோயிலின் மூலவர் பெயரான விஸ்வநாதர் என்பதற்கு அகிலத்தை ஆள்பவர் என்று பொருளாகும்.

*3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாக அறியப்படும் காசியின் (வாரணாசி) பெயராலேயே இக்கோயில் காசி விஸ்வநாதர் கோயில் என்று அழைகப்படுகிறது.

* சிவன் கோயில்களிலே இதுதான் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.

திரிம்பகேஷ்வர், மகாராஷ்டிரா

திரிம்பகேஷ்வர், மகாராஷ்டிரா

*மகாராஷ்டிராவின் நாசிக் நகரிலிருந்து 28 கிமீ தொலைவில் திரிம்பாக் என்னும் நகரில் திரிம்பகேஷ்வர் ஆலயம் அமைந்திருக்கிறது.

*திரிம்பகேஷ்வர் ஆலயத்தில் உள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும்.

*பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டு அழகிய சிற்பங்களுடன் காட்சியளிக்கிறது.

 பைத்யநாத் தாம், ஜார்கண்ட்

பைத்யநாத் தாம், ஜார்கண்ட்

*இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பைத்யநாத் கோவில் ஜார்கண்டின் தியோகர் நகரத்தில் அமைந்திருக்கிறது.

*பைத்யநாத் தாம் கோயிலுக்கு ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

* குறிப்பாக ஆனி மாதத்தில் சுல்தான்கஞ்ச் என்னும் இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு 100 கிலோமீட்டர்கள் தூரம் வரை கால்நடையாக இக்கோயிலுக்கு வருகிறார்கள்.

*சிலர் இந்த தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

நாகேஸ்வரர் கோயில், உத்தரகண்ட்

நாகேஸ்வரர் கோயில், உத்தரகண்ட்

*உத்தரகண்ட்டின் அல்மோரா மாவட்டத்தில் ஜாகேஷ்வர் எனுமிடத்தில் கொத்தாக அமைந்திருக்கும் 124 வரலாற்று சிறப்புமிக்க கற்கோயில்களின் மத்தியில் நாகேஸ்வரர் கோயில் அமையப்பெற்றுள்ளது.

*நாகேஸ்வரர் கோயிலில் ஜாகேஷ்வர் மழைக்கால திருவிழா, மஹாசிவராத்திரி மேளா ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், தமிழ்நாடு

ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், தமிழ்நாடு

*12 ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது.

*இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம்.

*இராவணனை கொன்ற பாவத்தினை நீங்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று நம்பப்படுகிறது.

*இராமன் ஈஸ்வரனை வணங்கிய இடம் என்ற பொருளில் 'இராம+ஈஸ்வரம்' இராமேஸ்வரம் ஆனது.

குஷ்மேஷ்வர் கோயில், ராஜஸ்தான்

குஷ்மேஷ்வர் கோயில், ராஜஸ்தான்

*ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் புகழ்பெற்ற ரணதம்போர் தேசிய பூங்காவுக்கு வெகு அருகிலேயே குஷ்மேஷ்வர் கோயில் அமைந்திருக்கிறது.

*12 ஜோதிர்லிங்க கோயில்களில் கடைசி ஜோதிர்லிங்க ஆலயமாக கருதப்படும் குஷ்மேஷ்வர் கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது.

*குஷ்மேஷ்வர் கோயில் சிவராத்திரியின்போது வண்ணமயமாக காட்சியளிப்பதுடன் விழாக்காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களையும் ஈர்த்து வருகிறது.

கேதார்நாத் எப்படிச் செல்வது ?

கேதார்நாத் எப்படிச் செல்வது ?

*உத்தரகண்டின் மையப்பகுதியில் இருந்து 179 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கேதார்நாத் கோவிலை கல்யசவுர் வழியாக அடையலாம். அல்லது, சட்டோளி, கவுச்சர், ருத்ரபிரயாங் வழியாக 226 கிலோ மீட்டர் பயணதித்தும் சென்றடையலாம். கௌரிகுண்டம் பகுதி வரை பேருந்து மற்றும் தனியார் வாகன வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

*கேதார்நாத் குறித்த விரிவான தகவல்களுக்கு சொடுக்கவும்

அருகிலுள்ள ரயில் நிலையங்கள்

டேராடூன் - 109 கிமீ
ஹரித்வார் - 123கிமீ
நஜிபாபாத் - 143 கிமீ

Shaq774

 காசி விசுவநாதர் கோவிலுக்கு எங்கிருந்து எப்படிச் செல்வது ?

காசி விசுவநாதர் கோவிலுக்கு எங்கிருந்து எப்படிச் செல்வது ?

உத்திரபிரதேசத்தில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கு கேதர்நாத்தில் இருந்து 941 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். உத்திரபிரதேசத்தில் இருந்து முங்கரா பத்சல்பூர் வழியாக 310 கிலோ மீட்டர் பயணம் செய்தாலும் இந்தக் கோவிலை சென்றடையலாம். மாநில மற்றும் மத்திய அரசின் சார்பில் ஏராளமான போக்குவரத்து வசதிகள் காசிக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் - வாரணாசி
தொலைவு - 2 கிமீ

காசி விசுவநாதர் கோவில் பற்றிய விரிவான தகவல்களுக்கு சொடுக்கவும்

Dennis Jarvis

குஷ்மேஷ்வர் கோயில் எப்படி செல்வது?

குஷ்மேஷ்வர் கோயில் எப்படி செல்வது?

தில்லியில் இருந்து ராஜஸ்தான் சென்றடை மூன்று வழிப்பாதைகள் உள்ளன. இதில் குறைந்த தூரத்தில் சென்றடைய வேண்டும் என்றால் தில்லி- கோட்புட்லி-யில் இருந்து ஜாலா வழியாக 430 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். ஜன்ஜூனு அல்லது ஷபுரா வழியாக 440 கி.மீட்டர் பயணித்தும் ராஜஸ்தானைச் சென்றடையலாம்.

Manishtripathipbh

 மஹாகாலேஷ்வர் கோவிலுக்கு எப்படிச் செல்வது ?

மஹாகாலேஷ்வர் கோவிலுக்கு எப்படிச் செல்வது ?

*போபாலில் இருந்து செல்கிறீர்கள் என்றால் 195 கிலோ மீட்டர் சேகூர் வழியாக அஷ்டா, தேவாஸ் சென்று மஹாகாலேஷ்வர் கோவிலை அடையலாம்.

*இந்த இடைப்பட்ட தூரத்தில் மத்திய பிரதேசத்தின் மிகப் பெரிய ஏரியான காளிசிந்து ஏரி உள்ளது.

*மஹாகாலேஷ்வர் கோவிலில் இருந்து 600 மீட்டருக்குள் விக்ரமாதித்யா கோவிலும் உள்ளது.

மஹாகாலேஷ்வர் பற்றிய விரிவான தகவல்களுக்கு சொடுக்கவும்

Diego Delso

ஓம்காரேஸ்வரர் கோவில் எப்படி செல்வது?

ஓம்காரேஸ்வரர் கோவில் எப்படி செல்வது?

மஹாகாலேஷ்வர் கோவிலில் இருந்து சுமார் 940 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓங்காரேஸ்வரர் கோவிலை சென்றடைய ரயில் சேவை உள்ளது. சுற்றுலா பேருந்து உள்ளிட்ட இதர வாகனங்களில் பயணிக்க விரும்புவோர் அஜ்மீர், கோட்டா, ஆக்ரா உள்ளிட்ட மூன்று வழித்தடங்களில் ஒன்றில் பயணிக்கலாம்.

ஓங்காரேஸ்வரர் பற்றிய விரிவான தகவல்களுக்கு சொடுக்கவும்

Bernard Gagnon

பைத்யநாத் தாம் எப்படி செல்வது?

பைத்யநாத் தாம் எப்படி செல்வது?


உத்திரபிரதேசத்தில் வாரனாசி அல்லது அலகாபாத் வழியாக 740 கிலோ மீட்டர் பயணித்தால் ஜார்கண்ட் வந்தடையலாம்.

ரயில் வழியாக கொல்கத்தாவிலிருந்து 5 மணி நேரத்தில் தியோகரை அடையலாம். அங்கிருந்து பைத்யநாத்தாம் அருகிலேயே அமைந்துள்ளது.

விரிவான தகவல்களுக்கு இதை சொடுக்குங்கள்

William Hodges

சோம்நாத் எப்படிச் செல்வது ?

சோம்நாத் எப்படிச் செல்வது ?

மஹாகாலேஷ்வர் கோவிலில் இருந்து 795 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு செல்ல அன்கலேஸ்வரர் ஜங்சன் வழியாக ரயில் சேவை உள்ளது. பேருந்து அல்லது பிற வாகனம் மூலம் ராஜ்கோட் வழியாகவும் சோம்நாத் கோவிலை சென்றடையலாம். குஜராத், அகமதாபாத்தில் இருந்து 425 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் உள்ளது.

சோம்நாத் பற்றிய விரிவான தகவல்களுக்கு சொடுக்கவும்


Anhilwara

 பீமாஷங்கர் கோவில் எப்படி செல்வது

பீமாஷங்கர் கோவில் எப்படி செல்வது

சாலைகள் மூலமாக பல நகரங்களுடன் பீமாஷங்கர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் தொடர்ச்சியான போக்குவரத்து வாகனங்களும்,வாடகை வண்டிகளும் கிடைக்கின்றன.

அருகிலுள்ள விமான நிலையம் - புனே

அருகிலுள்ள ரயில் நிலையம் - கர்ஜத்

ரயில் நிலையம் தொலைவு - 168கிமீ

Udaykumar PR

திரிம்பகேஷ்வர் எப்படி செல்வது

திரிம்பகேஷ்வர் எப்படி செல்வது

நாசிக் நகரத்திலிருந்து 169 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். இங்கு ரயில் நிலையம் இல்லை என்பதால் திரிம்பகேஸ்வருக்கு பேருந்து அல்லது கட்டண வாகனங்களிலேயே பயணிக்கவேண்டும்.

காரில் பயணிப்பது மிகவும் அலாதியாகவும், காண்பதற்கு நிறைய காட்சிகளுடனும் இருக்கும்.

அருகிலுள்ள ரயில் நிலையம் - நாசிக்

Niraj Suryawanshi

மல்லிகார்ஜுனா கோவில் எப்படி செல்வது

மல்லிகார்ஜுனா கோவில் எப்படி செல்வது

ஸ்ரீசைலம் செல்ல பல வழித்தடங்கள் இருக்கின்றன. பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.

ஸ்ரீசைலத்தில் ரயில் நிலையம் இல்லை. அதன் அருகிலுள்ள மர்கார்பூர் ரயில் நிலையத்துக்கு சென்று அங்கிருந்து கோவிலுக்கு செல்ல எளிமையான வழிகள் இருக்கின்றன.

அருகிலுள்ள ரயில் நிலையம் - மர்கார்பூர்

Vjvikram

ராமேஸ்வரம் எப்படிச் செல்லலாம் ?

ராமேஸ்வரம் எப்படிச் செல்லலாம் ?

மதுரையில் இருந்து இராமநாதபுரம் வழியாக 172 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். மாநிலத்தில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாகவும் இராமேஸ்வரம் போற்றப்படுகிறது. மேலும், இங்குள்ள 2,065 மீட்டர் கொண்ட கடல் வழி செல்லும் பாம்பன் பாலம் உலக புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அருகிலுள்ள ரயில் நிலையம் - ராமேஸ்வரம்

விமான நிலையம் - மதுரை

பேருந்து வசதிகள் - சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரியிலிருந்து அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Maitreyo Bhattacharjee

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X