Search
  • Follow NativePlanet
Share
» »குளிர்காலத்தில் நீங்க போக ஏற்ற டூரிஸ்ட் இடம் இந்த அரண்மனைகள் நிறைந்த நகரம்தான்!!

குளிர்காலத்தில் நீங்க போக ஏற்ற டூரிஸ்ட் இடம் இந்த அரண்மனைகள் நிறைந்த நகரம்தான்!!

குளிர்காலத்தில் நீங்க போக ஏற்ற டூரிஸ்ட் இடம் இந்த அரண்மனைகள் நிறைந்த நகரம்தான்!!

By Bala Karthik

ராஜஸ்தானின் பிங்க் சிட்டி அழைக்கப்படும் ஜெய்ப்பூர், பாரம்பரியத்தை தாங்கிக்கொண்டு காணப்படும் அற்புதமான பகுதியாக அமைய, இந்தியாவில் காணப்படும் சில சக்தி வாய்ந்த அரசவைகளும் இங்கே காணப்படுகிறது. கோட்டைகளும், அரண்மனைகளும், ஆலயங்களும் என பலவும் இங்கே காணப்பட, வருடந்தோரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை இந்த ஜெய்ப்பூர் ஈர்ப்பதோடு, மிகவும் புகழ்பெற்ற விடுமுறை இலக்காகவும் அமையக்கூடும்.

ராஜஸ்தானை அரசர்களின் நிலம் என அழைக்கப்பட, மற்ற நகரங்களான ஜோத்பூர், ஜெய்சால்மர் என பலவற்றையும் நம்மால் பார்க்க முடிகிறது. அத்துடன் கலாச்சார மிகுதியான இடம் அழகிய காட்சியை கண்களுக்கு தந்து கடந்த காலத்தை நோக்கி நம்மை அழைத்து செல்கிறது. இருப்பினும், இந்த ஆர்டிக்கலின் மூலமாக தலைநகரத்தின் நகரத்தை மட்டும் நாம் கவனிக்க, ஜெய்ப்பூரில் காணப்படும் வியக்கத்தகு இடங்களையும் நாம் இப்போது பார்க்கலாம். குளிர்காலமான நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் ஜெய்ப்பூரை நாம் காண அற்புதமான அனுபவத்தை தரக்கூடும்.

அமீர் கோட்டையின் யானை சவாரி:

அமீர் கோட்டையின் யானை சவாரி:


இந்த கோட்டையை நாம் ஆராய்ந்து அதிசயித்து போக கோட்டையை சுற்றிய யானை சவாரி நமக்கு உதவக்கூடும். இந்த மாபெரும் அமீர் கோட்டையை சிவப்பு மணற் கற்களாலும், பளிங்கு கற்களைக்கொண்டும் கட்டப்பட்டிருக்க, நெகிழ்ச்சியடைய வைக்கும் ஹிந்து கட்டிடக்கலை பாணியும் இதில் காணப்படுகிறது.

இக்கோட்டை ஷீஷ் மஹால், சுக் நிவாஸ், திவான்-ஈ-ஆம் என பல அமைப்புகளை கொண்டிருக்க, அவை அனைத்தும் நெகிழ்ச்சியைடைய செய்யும் அரண்மனைகளாகவும் நம் நேரத்தை விலைமதிப்பற்றதாக மாற்றுகிறது. இவ்விடம் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து காணப்படுகிறது.

PC: Jason Rufus

அரண்மனை துள்ளல்:

அரண்மனை துள்ளல்:


எண்ணற்ற மதிமயக்கும் அரண்மனையையும், கோட்டையையும் கொண்டிருக்கும் ஜெய்ப்பூர், கடந்த காலத்து பல சக்திவாய்ந்த ஆட்சியாளர்களால் கட்டப்பட்டும் காணப்படுகிறது. அரண்மனை துள்ளல் என்பது நாம் பார்க்க வேண்டிய இடமாக அமைய, கடந்த காலத்து வாழ்க்கை அனுபவத்தையும் அது நமக்கு தருகிறது.

ஜெய்ப்பூர் நகர அரண்மனை, ஜெய்கார்ஹ் கோட்டை, ராம்பாஹ் அரண்மனை, ஹவா மஹால் என பலவும் நம்மை கட்டிடக்கலை அழகை காண மனமுவந்து வரவேற்கிறது.

PC: Tim Moffatt

 ஜெய்ப்பூரின் பழங்காலத்து தெருக்களில் ஒரு நடைப்பயணம்:

ஜெய்ப்பூரின் பழங்காலத்து தெருக்களில் ஒரு நடைப்பயணம்:


இந்த நகரத்தை காண நடைப்பயண உலா என்பது நமக்கு புதுவித அனுபவத்தை மனதில் தரும். சிலை வட்ட தோட்டத்தின் வழியே நாம் நடக்க, நகரத்தின் இதயப்பகுதியில் இது காணப்படுகிறது. ஆசியாவின் பெரிய வட்டங்களுள் ஒன்றான இவ்விடத்தில் நாம் நடக்க, இதனை ஜவஹர் வட்ட தோட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கே கிடைக்கும் ஜெய்ப்பூர் கீ கச்சோரி மற்றும் பிற சுவையூட்டும் தெரு உணவை நாம் உண்டும் மனமகிழலாம்.

ராஜஸ்தானி நாட்டுப்புற திருவிழாவில் நீங்களும் ஒரு அங்கமாக வாருங்களேன்:

ராஜஸ்தானி நாட்டுப்புற திருவிழாவில் நீங்களும் ஒரு அங்கமாக வாருங்களேன்:

ஒவ்வொரு வருடமும் எண்ணற்ற மூர்க்கத்தனமான விழாக்கள் ராஜஸ்தானில் கொண்டாடப்பட, அவற்றுள் பல ஜெய்ப்பூரில் நடந்தேருகிறது. செப்டம்பர் மாதம் போன்று தீஜ் திருவிழா நடக்க, மார்ச் மாதத்தில் யானை சவாரியும், ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவும் நடைபெற, ஜனவரி மாதத்தின் போது உலகிலேயே மிக பெரிய இலவச இலக்கிய விழா நடந்திட, அவற்றுள் பல விழாக்களில் நாமும் ஒரு அங்கமாக பங்கேற்றிடலாம்.

 அரச உறைவிட அனுபவம் கொள்ள வாரீர்:

அரச உறைவிட அனுபவம் கொள்ள வாரீர்:

ஜெய்ப்பூரின் புகழ்மிக்க அரண்மனைகளும், கோட்டைகளும் உலகம் முழுவதுமுள்ள பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்திடுகிறது. அவற்றுள் பல அரண்மனைகள் ஆடம்பர உணவகமாக மாறிவிட, சுற்றுலா பயணிகளுக்கு இந்த ராஜ குடும்பத்து வாழ்க்கை.,அவர்கள் வாழ்ந்த இடத்தில் தங்குவதற்கான வாய்ப்பு கிடைத்திட, கடந்த காலத்தை நோக்கியும் அவர்கள் வாழ்வை புரட்டிப்பார்க்கக் கூடும்.

ராம்பாஹ் அரண்மனை மற்றும் ஜெய் மஹால் அரண்மனை என இரு அரண்மனைகள் தங்குவதற்கு ஆடம்பரமாக அமைய; இங்கே மீண்டும் ஒரு கணம் வரவேண்டிய ஆசையும் நம்முள் தோன்றக்கூடும்.

ஜால் மஹாலின் அழகை கண்டு களிப்படையலாம் வாரீர்:

ஜால் மஹாலின் அழகை கண்டு களிப்படையலாம் வாரீர்:


இந்த ஜால் மஹாலை இலக்கிய ரீதியாக "நீர் அரண்மனை" என அழைக்க, எந்த ஒரு ஆச்சரியமும் வேண்டாம்; இந்த கண்கொள்ளா காட்சி தரும் ஏரியின் மூலமாகவே இந்த பெயரானது இவ்விடத்திற்கு கிடைக்கிறது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரி எனவும், தர்பாவதி நதியை தழுவி இங்கே அணை கட்டப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்த மாபெரும் ஜால் மஹால், ஆம்பெரின் இரண்டாம் மஹாராஜ ஜெய் சிங்கினால் உருவாக்கப்பட, பதினெட்டாம் நூற்றாண்டிலும் இது கட்டப்பட்டது என தெரியவருகிறது. இந்த அரண்மனையை காண வரும் நீங்கள், மங்கலான ஒளியையும் காண, இணையற்ற அழகிய காட்சியாலும் வெகுவாக கவரக்கூடும்.

 தனித்தன்மைக்கொண்டு சுவையூட்டும் ராஜஸ்தானி உணவு:

தனித்தன்மைக்கொண்டு சுவையூட்டும் ராஜஸ்தானி உணவு:

ராஜஸ்தானில் திகிலூட்டும் தனித்துவமிக்க உணவு கிடைக்க, அனைத்து தரப்பு உணவுப்பிரியர்களையும் அந்த உணவு வெகுவாக கவரக்கூடும். இந்த உணவானது முற்றிலும் இனிப்பாக அமைய, அது ஒட்டுமொத்தமாக ராஜஸ்தானின் அதீத கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது. ராஜஸ்தானில் காணப்படும் சில உணவுகளுள் தால் பட்டி குர்மா, லால் மாஸ், கட்டே கி கிச்சடி மற்றும் பிற இனிப்புகளுமான ஆம் கீ லாஞ்சி, குஜ்ஜா என பெயர் சொல்லும் பலவும் அடங்கும்.

ஹவா மஹாலில் நாம் காண வேண்டிய காட்சி நிலைகள்:

ஹவா மஹாலில் நாம் காண வேண்டிய காட்சி நிலைகள்:


ஜெய்ப்பூரின் மிகப்பெரிய ஈர்ப்புகளுள் ஒன்றாக ஹவா மஹால் இருக்க, இதனை இலக்கிய ரீதியாக ‘காற்று அரண்மனை' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த அற்புதமான அரண்மனை, மஹாராஜ சவாய் பிரதாப் சிங்கினால் கட்டப்பட, ஒவ்வொரு நாளும் இங்கே ராஜ வம்சத்து பெண்களையும் முற்றத்தில் காண முடிய, வெளிப்புற ஆட்களை தவிர்த்து தெரு செயல்களும் நம்மை வியக்க வைத்திடக்கூடும்.

இந்த அரண்மனையின் அழகானது உங்களை மயக்க, இங்கே போட்டோ எடுக்காமல் உங்களால் நகர இயலாது என்பதே உண்மை.

நஹர்கார்ஹ் கோட்டையினை சுற்றிய ஒரு சைக்கிள் பயணம்:

நஹர்கார்ஹ் கோட்டையினை சுற்றிய ஒரு சைக்கிள் பயணம்:


ஆரவல்லி மலையின் அற்புதமான உயரத்தில் காணப்படும் நஹர்கார்ஹ் கோட்டையின் ஆக்கப்பூர்வமான அமைப்பு ஜெய்ப்பூரின் ஒட்டுமொத்த நகரத்தையே கண்கொள்ளா காட்சியாக மாற்றுகிறது. இக்கோட்டையானது நகரத்தின் பாதுகாப்பின் ஒரு அங்கமாக விளங்க, அத்துடன் இணைந்த அமீர் கோட்டை மற்றும் ஜெய்கார்ஹ் கோட்டையையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.

இங்கே சைக்கிள் பயணம் வருவதன்மூலம் அட்ரினலின் பெருமளவில் சுரக்க, சாகச பிரியர்களுக்கு இந்த செங்குத்தான 18 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் அற்புதமாகவும் அமையும்.

கடைகளில் கிடைக்கும் உண்மையான ராஜஸ்தானி உடை:

கடைகளில் கிடைக்கும் உண்மையான ராஜஸ்தானி உடை:


பல கடைகள் ஜெய்ப்பூரில் வரிசைக்கட்டி நம்மை வரவேற்க, இங்கே உண்மையான ராஜஸ்தானி ஆடைகளும், உதிரி பாகங்களும், காலணிகளும், அணிகலன்களுமென, அனைத்தும் கடை உலா பிரியர்களை வெகுவாக கவர்ந்திட! மிர்ஷா இஸ்மைல் சாலையில் நாம் செல்ல, அழகிய கைக்குட்டையும், ஜோஹாரி பஸாரின் ஆடைகளும், இரத்தின கற்களுமென, நேரு கடைத்தெருவும் காணப்பட, புகழ்பெற்ற ராஜஸ்தானி ஜூட்டிஸ் அல்லது காலணியையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.

அறிவியல் பிழையை தூண்டும் ஜந்தர் மந்தருக்கு ஒரு பயணம்:

அறிவியல் பிழையை தூண்டும் ஜந்தர் மந்தருக்கு ஒரு பயணம்:


பத்தொன்பது வானியல் கருவிகளை கொண்டிருக்கும் ஜந்தர் மந்தர், இரண்டாம் சவாய் ஜெய் சிங்கினால் கட்டப்பட்ட அற்புதமான நினைவு சின்னமாக ஜெய்ப்பூரில் அமைந்திருக்கிறது. இது உலகிலேயே மிகப்பெரிய கல் சூரியக்கடிகாரமாக காணப்பட, ஜந்தர் மந்தர், யுனெஸ்கோவின் உலக பார்ம்பரிய தளமாகவும் முடிவு செய்யப்பட்டது.

ஒளி மற்றும் ஒலியை தவிர்த்திடாமல், நினைவு சின்னத்தை நாம் காண வேண்டும். இந்த ஆய்வுமையம் காலை 9 மணி முதல் மாலை 4.30 வரை திறந்து காணப்படுகிறது.

ஒட்டக சவாரி போகலாம் வாருங்கள்:

ஒட்டக சவாரி போகலாம் வாருங்கள்:


ராஜஸ்தானின் மிக முக்கியமான விலங்காக ஒட்டகமிருக்க, பாலைவனத்திலும் அதனை நம்மால் பார்க்க முடிய, நகரத்தின் அனைத்து தெருக்களிலும் அது உலா வரவும் செய்கிறது. நகரத்தில் ஒட்டக சவாரி நாம் செல்ல முயல, அல்லது ஜெய்ப்பூரின் பல அரண்மனைகளுக்குமென, இதுவரை காணாத அனுபவத்தை நீங்கள் கண்டிடக்கூடும்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X