Search
  • Follow NativePlanet
Share
» »தலைநகரில் ஒரு நாள், 1000 ரூபாயில் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா ?

தலைநகரில் ஒரு நாள், 1000 ரூபாயில் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா ?

ஆயிரம் ரூபாய் என்றாலே பல நினைவுகள் நம் மனதில் தோன்றும். இப்ப நம்ம கையில அன்றாடம் இருக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் வச்சுட்டு தலைநகர் டெல்லில எப்படி ரவுண்டு அடிக்கலாம்ன்னு பார்க்கலாம் வாங்க.

ஆயிரம் ரூபாய் என்பது இன்று ஒரு பெரியத் தொகையாக யாரும் கருதுவதில்லை. பெரும்பாலானோர் ஒரு நாளில் செலவிடும் குறைந்தபட்சத் தொகையாகக் கூட இந்த 1000 ரூபாய் மாறியுள்ளது. ஆனால், ஒரு காலத்தில் இந்த 1000 ரூபாய் அவ்வளவு எளிதான பணம் இல்லை. எத்தனை உழைப்புகளை மீறி அதைப் பெற்றிருப்போம். சாதாரணமாக ஒரு சுற்றுலாச் செல்வதற்கே பெற்றோர்களிடம் இருந்து இந்தத் தொகையைப் பெருவதற்குள் எத்தனை எத்தனை ஆர்ப்பாட்டங்களும், பட்டினியும் இருந்திருப்போம். வீட்டிற்கு வரும் விருந்தினர் கூட நம் கண்ணத்தை கிள்ளி, மாவு பிசைவது போல் பிசைந்து, நசுக்கி இறுதியில் கண்ணில் நீர் வடியும் தருனத்தில் தானே இத்தகைய தொகையை நம் கையில் கொடுத்துவிட்டு சென்றிருப்பர். இப்படி ஆயிரம் ரூபாய் குறித்து பேசினால் மலரும் நினைவுகளாய் ஆயிரம் ஆயிரம் ஃபேஷ்பேக்குகள் வரும். சரி, இப்ப நம்ம கையில அன்றாடம் இருக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் வச்சுட்டு தலைநகர் டெல்லில எப்படி ரவுண்டு அடிக்கலாம்ன்னு பார்க்கலாம் வாங்க.

மெட்ரோவில் ஒன்டே கார்டு

மெட்ரோவில் ஒன்டே கார்டு


டெல்லியில் பயணிக்க சிறந்த மற்றும் எளியதும், மலிவானதும் மெட்ரோ ரயில் தான். பிற போக்குவரத்து அம்சங்களை விட மெட்ரோ சேவையில் கட்டணம் குறைவாக இருக்கும். அதுவும் காலை 5.30 மணி முதல் 11.30 மணிக்குள் ஒன்டே சுற்றுலா பயண அட்டையை பெற்றுவிட்டீர்கள் என்றால் அன்றைய நாள் முழுவதும் மெட்ரோவில் ஊர் முழுக்க சுத்திவிடலாம். ஒரு நாள் முழுவதும் பயணிக்க 150 ரூபாய்க்கு பயண அட்டை பெற வேண்டும். அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இதனை பெறலாம்.

WillaMissionary

காலை உணவுக்கு இப்போது நிஹாரி

காலை உணவுக்கு இப்போது நிஹாரி


அன்றைய காலைப் பொழுதை உற்றாகமூட்டும் உணவுடன் தொடங்குங்கள். அந்தமாதிரியான உணவு எங்க கிடைக்கும் தெரியுமா ?. ஹாஜி ஷப்ரடி நிஹாரி வாலே, ஹாவெலி அஷாம் கான், ஜாமா மஸ்ஜித், மாதியா மஹால். சுற்றுலா போன இடத்துல அந்த ஊரோட ஸ்பெசல் ஃபுட் சாப்பிட்டா தானே நல்லா இருக்கும். காலைல 6 மணியில் இருந்து 10 மணி வரைக்கும் 70 ரூபாயிக்கு கமகமக்கும் காலை உணவு கிடைக்கும்.

அத்தார் வாசனைத் திரவியக் கடைகள்

அத்தார் வாசனைத் திரவியக் கடைகள்


இஸ்லாமியர்களால் அதிகம்பயன்படுத்தப்படும் வாசனைத் திரவியம் தான் இந்த அத்தார். இதை விற்பனை செய்யக்கூடிய கடைகளை நீங்க தேடிப் போகவேண்டிய அவசியம் இருக்காது. ஏன்னா, இதோட மனமயக்கும் வாசனையே நம்மை அதனை நோக்கி இழுத்துச் சென்றுவிடும். மத்த பாடி ஸ்ப்ரே மாதிரி ஒரு மாசத்துல எல்லாம் இது தீர்ந்தும் போகாது. 50 ரூபாய்க்கு வாங்குனோம்னா ஒரு வருடம் கடந்தும் நம்மை வாசனை மிக்கவராகவே வச்சுக்கும்.

பாங் குல்பி

பாங் குல்பி


பாதாம் குல்பி, பால் குல்பி, சாக்லேட் குல்பின்னு இத்தன நாளா நீங்க ருசிச்சதவிட இந்த பாங் குல்பிய ருசிக்குர சுகமே தனிதான். அதுவும் சீத்தாராம் பஜார்ல கிடைக்குற பாங் குல்பிக்கு டெல்லி மக்களே அடிமைன்னா பாருங்க. துல்சந் நரேஷ் குப்தா குல்பி வாலே, குச்சா பட்டி ராம், சீத்தாராம் பஜார், சாவ்ரி பஜார்- அட்ரஸ் நோட் பண்ணி வச்சுக்கோங்க பாஸ். அப்புறம் பாங் குல்பி 50 ரூபாய் தான். அதிகமா குடுத்து ஏமாந்துடாதீங்க.

புகைப்படம் எடுக்க சாந்தி சௌக்

புகைப்படம் எடுக்க சாந்தி சௌக்


புகைப்படம் எடுக்குறதுல ஆர்வம் மிக்கவர்களுக்கு ஏற்ற இடம் சாந்தி சௌக் வீதி தான். கோவில், அரண்மனை, பலதரப்பட்ட பொதுமக்கள் என எந்த நேரமும் கொஞ்சம் பிசியாத்தான் இந்தப் பகுதி இருக்கும். பழைய டெல்லில தாங்க இந்த சாந்தி சௌக் ஏரியா இருக்கு.

Ekabhishek

ஸ்ஸ்ஸ்... கறி போலி.!

ஸ்ஸ்ஸ்... கறி போலி.!


ஆசியாவிலேயே கார வகைகளை விற்பளை செய்யும் பெரிய சந்தை என்றால் அது சாந்தி சௌக் பகுதியில் செயல்பட்டு வருவதுதான். வீட்டு உபயோக சமையல் பொருட்களான காய்ந்த மிளகாய், கிராம்பு, வத்தல், மசாலா பொருட்கள் என முழுக்க முழுக்க பல வகையாக மசாலா பொருட்களை வாங்கி இங்கே வரலாம்.

Bahnfrend

டெல்லியின் அடையாள உணவகங்கள்

டெல்லியின் அடையாள உணவகங்கள்


பல பகுதிகளில் பயணித்து எற்படும் சோர்வைப் போக்குவது ஓய்வு. கூடவே காபியும், சிற்றுன்டியும் இருந்தால் நன்றாகத் தானே இருக்கும். உடனே சாந்தி சௌக்கில் இருக்கும் தரிபா கார்னருக்கு செல்லுங்கள். பழைய டெல்லியின் அடையாள சிற்றுண்டிகளான நட்ராஜ் கபே மற்றும் ஜிலேபி வாலா அங்க தான் இருக்கு.

Saad Akhtar

செங்கோட்டை

செங்கோட்டை


திங்கள்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் இந்த வரலாற்று பாரம்பரிய சின்னமான செங்கோட்டை பார்வையாளர்களுக்காக திறந்தே இருக்கும். கோட்டைக்குள் சுற்றுலா வழிகாட்டிகள், சிறிய உணவகங்கள் எல்லாமே இருக்கு. நுழைவுக் கட்டணம் 30 ரூபாய் செலுத்தி உள்நுழைந்தால் நாள் முழுக்க சுற்றிப்பார்த்தாலும் முழுமை பெறாது.

A.Savin

புறாக்களின் அணிவகுப்பு

புறாக்களின் அணிவகுப்பு


நம்ம வீட்டு மாடில ஒத்த புறா வந்து உக்காந்தாலே நாம கைகால் புரையாம உடனே போட்டோ எடுத்து ஃபேஸ்புக்குல அப்லோடு பண்ணிடுவோம். ஆனா, சாந்தி சௌக்கில் இருக்கும் தரம்புராவில் நூற்றுக்கணக்கான புறாக்கள் மனிதர்களைக் கூட மதிக்காம அதுபாட்டுக்கு சுத்திட்டும், பறந்துட்டும் இருக்கு.

tripleigrek

ஜந்தர் மந்தர்

ஜந்தர் மந்தர்


டெல்லியின் அடையாளப் பகுதி என்றாலும், அறிவிக்கப்படாத போராட்டப் பகுதி என்றாலும் அது ஜந்தர் மந்தர் தான். பல வரலாற்று சிறப்புகளும் இப்பகுதியில் இருக்கு. இதனுள் நுழைய 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர். rந்தி சௌக்கில் இருந்து மெட்ரோ ரயில் மூலமாக ராஜிவ் சௌக் வந்தடைந்து இதனை அடையலாம்.

Nikkul

பங்களா சாஹீப்

பங்களா சாஹீப்


பங்களா சாஹீபில் உள்ள புனித நீரில் இறங்கி நீராடுங்கள். அதன் பின், சாஹீப்பை வழிபட்டுவிட்டு, அங்கேயே கிடைக்கும் பிரசாதத்தை வாங்கி உண்டு மகிழுங்கள்.

Nimitnigam

உயரமான தேசியக் கொடி

உயரமான தேசியக் கொடி


ராஜிவ் சௌக் என்னும் பகுதியில் உயரமான தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த கொடி 48 கிலோ எடை கொண்டது. மேலும், 96 அடி நீளமும், 64 அடி அகலமும் கொண்டுள்ளது. பரிதாபாத்தில் உள்ள பூங்காவில், 250 அடி உயரத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

Shijan Kaakkara

ஜில்ஜில் ஃபயர் பிடா

ஜில்ஜில் ஃபயர் பிடா


ஸ்வீட் பீடா, பான் பிடா இதத்தான நம்ம ஊருல நீங்க ருசிச்சுருப்பீங்க. ஆனா, டில்லியில் உள்ள ஓடன் குப்தா பான் ஏரியாவுக்கு போனா நெருப்பு பத்திட்டு எரியுற பீடா, ஜில்ஜில்-ன்னு ஐஸ் பீடா,, இப்படின்னு வகைவகையா பீடா கிடைக்கும். 70 ரூபாய் முதல் இந்த பீடாக்கள் விற்பனை செய்யுறாங்க.

ரயில் மியூசியம்

ரயில் மியூசியம்


சானக்கியாபுரியில் அமைந்துள்ளது நேஷனல் ரயில் மியூசியம். ராமக்கிருஷ்ணா ஆஷ்ரம் மார்க்கத்தில் இருந்து சவுத் கேம்பஸ் வந்து அங்கிருந்து ஆட்டோ ரிக்ஷா மூலம் இதனை அடையலாம். காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே இந்த மியூசியம் திறந்திருக்கும். 300 வருட பழமையான ரயில் இஞ்சின், பட்டியாலா மகாராஜாவின் 108 வருட பழமையான ரயில் என கண்டுரசிக்க ஏராளமானவை இங்கே இருக்கும். அனுமதிச் சீட்டு 30 ரூபாய்.

m - Miya.m's file

சரோஜினி நகர் மார்க்கெட்

சரோஜினி நகர் மார்க்கெட்


ரொம்ப நேரம் சுத்தியபின் ஏற்படும் சோர்வைப் போக்க ரொம்ப முக்கியம் ஓய்வு. ஆனால் ஒரே நாள்ள டெல்லிய சுத்திப் பார்க்கனுமே. அப்ப நேரத்தை விரயம் பண்ணக்கூடாது. இதுக்கு ஏற்றமாதிரியான இடம் தான் சரோஜினி நகர் மார்க்கெட். மதிய உணவுக்கு, ஆடம்பர ஐட்டங்கள வாங்க ஏற்ற பல கடைகள் இந்த மார்க்கெட் முழுவதம் இருக்கும். ரயில் மியூசியத்தில் இருந்து வாடகை ஆட்டோவில் வந்தால் 40 முதல் 50 ரூபாய் வரை மட்டுமே ஆகும். மேலும், பேருந்துகளை விட இது உங்களது பயண நேரத்தை குறைக்கும்.

Christian Haugen

டிலி ஹாட்

டிலி ஹாட்


கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவையின் மீத மிகுற்த ஆர்வம் கொண்டவராக நீங்க இருந்தா தவறாம டிலி ஹாட் ஏரியாவுக்கு போங்க. காலை 11 மணியில இருந்து இரவு 9 மணி வரைக்கும் திருவிழாக் கோலமாகத்தான் இருக்கும். சரோஜினி நகரில் இருந்து சேர் ஆட்டோவுல வரதுதான் பெஸ்ட். ஒருத்தருக்கு 10 ரூபாய் தான் கட்ணமே.

Kundansen

தாமரைக் கோவில்

தாமரைக் கோவில்


காலையில் இருந்த பொதுமக்களின் ஊடாக பயணித்து, அதிகப்படியான கூட்ட நெரிசலால அவதிப்பட்டுட்டீங்கன்னா உங்களுக்குத் தேவை மன அமைதி. அதுக்காகவே இருக்கு தாமரைக் கோவில். உள்ளே செல்ல இலவசம் தான். மெட்ரோ ரயில் மூலமா கல்கஜி மந்தீர் வந்து சிறிது தூரம் நடந்தாலே இக்கோவிலை அடைந்து விடலாம்.

Lakshmikandh

மூல்சந் பரோட்டா

மூல்சந் பரோட்டா


கல்கஜி மந்தீர்ல இருந்து மூல்சந்துக்கு மெட்ரோ ரயில்ல வந்து இறங்கியதும் உங்களுக்காக காத்திட்டு இருக்கும் பரோட்டா... இரவு உணவுக்கு ஏற்ற இடம் இந்த முந்சந் லாலா லாஜ்பாட் ராய் மார்ஜ் பரோட்டா கடை தான். அந்த ஏரியாவுல பிரசிதிபெற்ற உணவகம் என்பதால் கொஞ்சம் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். இருந்தாலும் போராட்டத்திற்குப் பின் கிடைக்குற பரோட்டாவ ருசிக்கும் போது வருமே ஒரு ஆனந்தம். அடஅடஅட...

Russelak1976

மீட்டி பிரியாணி

மீட்டி பிரியாணி


ஏங்க, சுற்றுலா போய்ட்டு எதுக்குங்க பரோட்டா, வாங்க பிரியாணி சாப்பிடலாம். ஆமா, இங்க எங்க தரமான பிரியாணி கிடைக்கும் ?. இருக்கவே இருக்கு டெல்லி புகழ் நிசாமுதீன் உணவகம். கலிப் சாலை, லால் மஹால் பகுதியில் உள்ளது நிசாமுதீன். பகல் 12 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரைக்கும் கமகமக்கும் பிரியாணி ரெடியா இருக்கும்.

onourownpath

இரவில் மிளிரும் இந்தியா கேட்

இரவில் மிளிரும் இந்தியா கேட்


டெல்லியோட முக்கிய ஏரியா எல்லாம் சுத்திப்பாத்தாச்சு, இறுதியா நம்ம இந்தியாவோட கேட்டையும் பார்த்துட்டு வந்திடலாமே. டெல்லியில் உள்ள ஏராளமான சுற்றுலா அம்சங்களுக்கு மத்தியில், பயணிகளால் மிக விரும்பி பயணம் செய்யப்படும் ஒரு சில சுற்றுலாத் தலங்களில் இந்த இந்தியா கேட் பகுதியும் ஒன்றாக உள்ளது. பகல் நேரங்களை விட இரவில் தான் இன்னும் பேரழகாக இது காட்சியளிக்கிறது. காரணம், இரவு நேரங்களில் இங்கு எரியவிடப்படும் வண்ணமயமான விளக்குகளே. நிசாமுதீனில் இரவு உணவை முடித்துவிட்டு ஆட்டோ ரிக்ஷா ஏரி இந்தியா கேட்டுன்னு சொன்னாலே போதும். விரைவில் வந்தடைந்து விடலாம்.

Joel Godwin

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X