Search
  • Follow NativePlanet
Share
» »டாப் 6 பறவைகள் நிறைந்த சொர்க்க பூமி!

டாப் 6 பறவைகள் நிறைந்த சொர்க்க பூமி!

அழிந்து வரும் மற்றும் இடம் பெயரும் பறவைகளைப் பாதுகாக்கப்பட்டதே பறவைகள் சரணாலயம். இந்தியாவில் எண்ணற்ற சரணாலயங்கள் இருந்தாலும் அவற்றில் எது பெஸ்ட் என தெரியுமா ?

பறவைகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா ?. ஆனால், ஒரு காலத்தில் நாட்டில் இருந்த பெரும்பாலான பறவைகளும், மிருகங்களும் உணவு மற்றும் வேறு சில காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டு பல அரியவகை வனவிலங்குகளும், பறவைகளும் இன்று காணாமல் போய்விட்டன. இதைத் தடுக்கும் நோக்கத்துடன்தான் இடைப்பட்ட கால ஆட்சியாளர்கள் இணைந்து நாட்டின் பல பகுதிகளில் பறவைகள் சரணாலயங்களை ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் டாப் 6 பறவைகள் சரணாலயம் குறித்து அறிந்துகொள்வோம் வாங்க.

கீச்சன் பறவைகள் சரணாலயம்

கீச்சன் பறவைகள் சரணாலயம்


கீச்சன் கிராமத்தில் அமைந்திருக்கும் கீச்சன் பறவைகள் சரணாலயம் பல்வேறு வகையான பறவை இனங்களுக்கு விருப்பமான புகலிடமாக இருந்து வருகிறது. இந்த பறவைகள் சரணாலயத்தை தேடி தென்மேற்கு ஐரோப்பா, கருங்கடல் பகுதி, போலந்து, உக்ரைன், கஜகிஸ்தான், வடக்கு மற்றும் தென் ஆப்ரிக்கா, மங்கோலியா போன்ற பகுதிகளிலிருந்து எண்ணற்ற பறவைகள் வருகின்றன.

Charlesjsharp

பணிக்காலப் பறவைகள்

பணிக்காலப் பறவைகள்


கீச்சன் வரும் பறவைகளில் குர்ஜா, கர்கரா மற்றும் குஞ்ச் எனும் மூன்று இனங்களை சேர்ந்த பறவைகளை அதிகமாக பார்க்கலாம். அதுவும் குளிர் மிகுந்த ஐரோப்பாவின் பனிக் காலத்தை தவிர்ப்பதற்காக இந்த சரணாலயத்துக்கு பனிக் காலங்களில் அதிக எண்ணிக்கையில் பறவைகள் வந்து செல்கின்றன.

Rubalshantun

60 கி.மீட்டர் வேகப் பறவை

60 கி.மீட்டர் வேகப் பறவை


இந்தியாவுக்கு வரும் புலம்பெயர் பறவைகளில் 4000 முதல் 6000 பறவைகள் கீச்சன் பறவைகள் சரணாலயத்துக்கு வருகின்றன. இவற்றில் 'குர்-குர்' என்று ஒலியெழுப்பும் குர்ஜா என்ற இள நாரைகள் 4 முதல் 6 கிலோ எடையும், 3 அடி உயரமும் இருக்கும். இதன் குறிப்பிடத்தக்க 'குர்-குர்' ஒலியின் காரணமாகவே இது குர்ஜா என்று அழைக்கப்படுகிறது. இந்த பறவையினம் 40-60 கிலோமீட்டர் வேகத்தில் நெடுந்தூரம் வரை பறக்கும் அளவுக்கு திறன் பெற்றது.

Asheeshmamgain

கார்பெட் தேசிய பூங்கா

கார்பெட் தேசிய பூங்கா


இயற்கையின் மடியில் ஓய்வெடுத்துக் கொண்டு வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கும் வனவிலங்கு ஆர்வலர்களின் சொர்க்கம் கார்பெட் தேசிய பூங்கா. புகழ் பெற்ற பிரிட்டிஷ் வேட்டைக்காரர், இயற்கை ஆர்வலர் மற்றும் புகைப்படக் கலைஞருமான ஜிம் கார்பெட்டின் பெயராலேயே இந்த பூங்கா பெயர் பெற்றுள்ளது.

Pediddle

உலகிலேயே அதிகமான புலிகள்

உலகிலேயே அதிகமான புலிகள்


பசுமையான சுற்றுச்சூழலுக்கு பெயர் பெற்ற இந்த தேசியப் பூங்கா பிரம்மாண்டமான இமயமலையின் அடிவாரத்தில் அமைதியாக அமர்ந்துள்ளது. உலகத்திலேயே அதிகமான காட்டுப்புலிகளை கொண்ட நாடு என்ற பெருமை பெற்ற இந்தியாவின், கார்பெட் தேசிய பூங்காவில் மட்டும் சுமார் 160 புலிகள் உள்ளன. ராம்கங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த இடத்தின் இயற்கை எழிலை காணும் வாய்ப்புகளுக்காகவும் மற்றும் சாகசப் பயணங்களுக்காகவுமே எண்ணற்ற சுற்றுப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

Join2manish

கார்பெட் நீர்வீழ்ச்சி

கார்பெட் நீர்வீழ்ச்சி


இந்த சரணாலயத்திலேயே சுமார் 60 அடி உயரத்திலிருந்து விழும் கார்பெட் நீர்வீழ்ச்சியும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான சுற்றுலா தலமாக அமைந்துள்ளது. முகாமிடுவதற்கும், இன்பசுற்றுலாவிற்கும் மிகவும் ஏற்ற இடமாக இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த தேசிய பூங்காவின் பிஜ்ரானி மற்றும் திக்காலா பகுதிகளில் யானை சவாரி செய்யும் வாய்ப்புகளும் உண்டு.

Ana 182

சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம்

சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம்


ஹரியானா மாநில அரசால் 1972-ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட சுல்தான்பூர் பறவைகள் சரணாலயத்தில் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் பறவைகள் என 250-க்கும் மேறபட்ட பறவை இனங்களை பார்த்து ரசிக்க முடியும். அதிலும் குறிப்பாக பனிக் காலங்களில் இங்கு வந்தால் சைபீரியா, ஐரோப்பா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் அரிய வகை புலம்பெயர் பறவைகளை காணலாம்.

J.M.Garg

சில்கா ஏரி பறவைகள் சரணாலயம்

சில்கா ஏரி பறவைகள் சரணாலயம்


வரலாற்று காலத்தில் இருந்தே இந்த சில்கா ஏரி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது. கி.மு 200களில் கலிங்க அரசன் காரவேலன் காலத்தில் கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளுடன் வணிகம் செய்கையில் இது முக்கிய துறைமுகமாக திகழ்ந்திருக்கிறது. இதன் தனித்துவமான நீர் அமைப்பினால் இங்கு பல்வேறு கடல் தாவரங்கள், மீன்கள் போன்றவை செழிப்பாக வளர்கின்றன. ஓடிஸாவில் அதிக மீன்வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்றாகவும் இந்த ஏரி இருக்கிறது. பத்து லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து செல்கின்றன.

J.M.Garg

ஈகிள்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயம்

ஈகிள்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயம்


செஸ்ஸா ஆர்கிட் சரணாலயத்துடன் வடகிழக்கில் இணையுமாறு இருக்கும் ஈகில்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயம், மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள இமயமலைப் பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். 1950-ம் ஆண்டில் இந்திய இராணுவத்தின் 'ரெட் ஈகிள் பிரிவு' இங்கு தங்கியிருந்ததால் இவ்விடம் 'ஈகிள்நெஸ்ட்' என்று பெயர் பெற்றது. பறவைகள் மட்டுமல்லாமல், பாதுகாக்கப்பட்ட உயிரினமான தொப்பியுடைய லாங்கூர், வங்காளப் புலி, ஆசிய யானை, சிவப்பு பாண்டா என பல இனங்களின் வாழ்விடமாக ஈகிள்நெஸ்ட் சரணாலயம் திகழ்கிறது.

Brunswyk

குமரகம் பறவைகள் சரணாலயம்

குமரகம் பறவைகள் சரணாலயம்


குமரகம் பறவைகள் சரணாலயம் அல்லது வேம்பநாடு ஏரி பறவைகள் சரணாலயம் என்று அழைக்கப்படும் இந்த சரணாலயம் கேரள மாநிலம் வேம்பநாடு ஏரியின் கிழக்குக்கரையில் அமைந்துள்ளது. 14 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ள இந்த சரணாலயப்பகுதிக்கு இமாலயம் மற்றும் சைபீரியா போன்ற தொலைதூரங்களிலிருந்தும் புலம்பெயர் பறவைகள் குறிப்பிட பருவங்களில் வருகின்றன.

Lip Kee

படகு வீடுகள்

படகு வீடுகள்


பிற சரணாலயங்களைப் போல் அல்லாமல் குமரகம் பறவைகள் சரணாலயம் தனித்துவம் பெறக் காரணம் படகு வீடுகள் அல்லது மோட்டார் படகுகளில் பயணித்தபடியே கரைப்பகுதியிலுள்ள பறவைகளையும் இயற்கை எழிலையும் ரசிக்கக் கூடிய வாய்ப்புகளை வழங்குகிறது. வழிகாட்டிகளுடன் கூடிய நடைச்சுற்றுலாவும் சரணாலயத்தின் உள்ளேயே பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

Amog

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X