Search
  • Follow NativePlanet
Share
» »நீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்! உண்மை தெரிஞ்சா அசந்துடுவீங்க

நீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்! உண்மை தெரிஞ்சா அசந்துடுவீங்க

நீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்! உண்மை தெரிஞ்சா அசந்துடுவீங்க

இந்த உலகம் நமக்காக பயணிக்கப்பட்டது. உலகம் முழுவதும் சுற்றித் திரிய நாமும் நம் அன்பிற்கு உரியவர்கள் தயாராக இருந்தால் ஒரு நொடி தாமதிக்காதீர்கள் பறந்து திரியுங்கள். பைக்கிலோ காரிலோ காண வேண்டிய இடங்கள் கண்டு, போக வேண்டிய இடங்கள் சென்று இந்த வாழ்வு இயற்கைக்காக படைக்கப்பட்டது என்பதை உணருங்கள். சரி நாம் இதுவரை குறைத்து மதிப்பிட்டிருக்கும் சில இடங்களைப் பற்றி பார்க்கலாம். அதன் உண்மை முகத்தை கண்டு தெரிந்ததும் நீங்களே அங்கு செல்ல ஆச்சரியப்படுவீர்கள்.

நீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள அந்த 6 இடங்களின் உண்மை முகம் இதோ!

மும்பை - அலிபக் - ஹரிஹரேஸ்வர் - குஹாகர் - ரத்னகிரி - மால்வன் - தர்கார்லி - தேரேகோல்

மும்பை - அலிபக் - ஹரிஹரேஸ்வர் - குஹாகர் - ரத்னகிரி - மால்வன் - தர்கார்லி - தேரேகோல்

*இது மகராஷ்டிரா மாநிலத்தின் கடற்கரை வழிச் செல்லும் சிறப்பான பயணமாகும்.

*இந்த பயணம் மொத்தம் 620 கிமீ தூரம் வரை வரும்.

*இது வரை கண்டிராத அழகிய பீச்களைக் கண்டுகொண்டே கார் அல்லது பைக்கில் பயணிக்கலாம் வாங்க..

இந்தியாவின் மிக அழகிய சாலை

இந்தியாவின் மிக அழகிய சாலை

*கொச்சியிலிருந்து வால்பாறை வரை செல்லும் இந்த பயணம் மிகவும் அழகாக இயற்கை வனப்புடன் சிறப்பாக காட்சியளிக்கும்.

*கொச்சியிலிருந்து சாலக்குடி வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடைந்து அங்கிருந்து சோலையாறு, மலக்காபாறை வழி வால்பாறையில் நிறைவடைகிறது நம் பயணம்.

*இந்தியாவின் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் கனவு அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு ஒருமுறையாவது வந்து சென்றுவிட வேண்டும் என்பது. இந்த பயணத்தில் அந்த கனவு நிறைவேறும்.

இந்தியாவின் கிழக்கு பிரதேசம்

இந்தியாவின் கிழக்கு பிரதேசம்


*தெஜு - ஹயுலியாங் - ஹவாய் - வலாங் - கிபுது என்னும் வழித்தடத்தில் இந்த வகையில் பயணித்து பார்த்தவர்களுக்கே புரியும் இதன் அருமை.

*அழகிய காடுகளும், மலைகளும் இயற்கை எழில் கொஞ்சும் வசந்த காற்றும் உங்களை சிலிர்த்துக் கொண்டே செல்லும்.

*லோகித் மற்றும் சயு நதிகளும் உங்களுடன் துணைக்கு வரும். தொங்கும் பாலமும், இயற்கையில் அமைந்த வெந்நீர் ஊற்றும் உங்களை வரவேற்கும்.

வரலாறும் நம்பிக்கையும் சேரும் இடம்

வரலாறும் நம்பிக்கையும் சேரும் இடம்

*மதுரை - ராமநாதபுரம் - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி எனும் பயணம் நிச்சயமாக சூப்பரான ஒரு பைக் ரைடுக்கு ஏற்றதாகும்.

*மதுரையிலிருந்து ராமேஸ்வரம் பின் ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி பயணத்தில் நீங்கள் வாழ்க்கையின் அருமையை உணரலாம்.

*சாலையில் அழகையும், பின் கடலின் அன்பையும் உணர்ந்து ரசித்துக்கொண்டே செல்ல செல்ல உங்களது பயணம் மிகவும் சிறப்பாக அமையும்.

பாலைவனத்துக்குள் ஓர் பர பர பயணம்

பாலைவனத்துக்குள் ஓர் பர பர பயணம்


*அஹமதாபாத் - பர்மர் - ஜெய்சல்மர் - ராம்கர் - தனோட் எனும் பகுதிகளின் வழியாக இந்த பயணம் அமையும்.

*657கிமீ பயணத்தில் குஜராத் மாநிலத்திலிருந்து ராஜஸ்தானுக்கு இமைக்கும் நேரத்தில் பயணித்து அதன் அருமையை உணர்ந்தவர்களுக்கு மீண்டும் மீண்டும் செல்லத் தோன்றும் இது.

*வழியில் அழகிய இடங்கள், பழமையான கோவில்கள் என கண்டு களிக்கலாம்.

அக்பரின் வெற்றிக்கான சாலை

அக்பரின் வெற்றிக்கான சாலை

*ஜம்மு - சுந்தர்பானி - ரஜூரி - சண்டிமார் - சோப்பியன் - ஸ்ரீநகர் எனுமாறு இந்த வழித்தடம் அமையும்.

*அழகிய காட்சிகளையும், அட்டகாசமான வழித்தடத்தையும் கொண்டிருக்கும் இந்த சாலைப் பயணம்

*இந்த 330 கிமீ சாலையில் 84 கிமீ வழி முகல் சாலை என அழைக்கப்படுகிறது. இது அக்பரின் வெற்றிக்கான சாலைகள் என சொல்லப்படுகிறது.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X