Search
  • Follow NativePlanet
Share
» »அடிக்குற வெய்யில்ல... இந்த பெரியவரு இப்படி பண்ணிட்டாரே

அடிக்குற வெய்யில்ல... இந்த பெரியவரு இப்படி பண்ணிட்டாரே

அடிக்குற வெய்யில்ல... இந்த பெரியவரு இப்படி பண்ணிட்டாரே

அப்படி என்னதான் பண்ணார்னு கேக்குறீங்களா?

அப்பப்பா... என்னா வெய்யிலு என்னா வெய்யிலு.. பொசுக்கிடும்போலிருக்கே.குத்தாலம் கித்தாலும்னு போகலாம்னு பாத்தாக்கூட அங்க தண்ணியே இல்லியாம். இந்த ஜனங்க படுற பாட்ட பாக்கமுடியலயே தெய்வமேனு பெரியவர் ஒருத்தரு புலம்பிக்கிட்டே இருந்தத பாக்கமுடிஞ்சிது. சரி அவருக்கு என்னதான் பிரச்சனனு கொஞ்சம் கேக்கலாம்னு பக்கத்துல போயி கேட்டா, அவரோட பிரச்சனையே வெய்யில்தானாம்.

நாங்க சின்னபுள்ளைங்களா இருந்த காலத்துல இப்படில்லாம் வெய்யில் இல்ல தம்பி. இப்ப அடிக்குற வெய்யில் பாவம் சின்னஞ்சிறுசுங்கதான் அதிகமா பாதிக்கப்படுது.. 24 மணி நேரமும் உடம்புல தண்ணிய ஊத்திக்கிட்டே இருக்கணும்போல இருக்கு.. நா கூட பொறுத்துக்குவேன் என் பேரப்புள்ளைங்களுக்கு பரீட்ச முடிஞ்சிடிச்சி.. எங்கயாச்சும் டூர் போகலாம்னு நினச்சா எங்க போறது.. அடிக்குற வெய்யில்ல.. எந்த அருவியிலயும் தண்ணி இல்லையே அப்படின்னாரு..

நானும் ஒரு ஐடியா குடுத்தேன்... தம்பி இப்பவே திட்டம் போட்டு கிளம்பிடுறேன்னு போனாரு... அடுத்தவங்கள சந்தோசப் படுத்தி பாக்குறதுல நமக்கு அப்படி ஒரு சந்தோசம்.. சரி நானும் அப்படியே கிளம்புறேன்..

என்னங்க... ஓ.. அந்த ஐடியாவா.. ? கண்டிப்பா சொல்லணுமா என்ன? சரி கேளுங்க.. கீழ ஒரு 7 இடங்கள் இருக்கு.. இந்த இடங்கள்ல ஒன்ன தேர்ந்தெடுத்து சுற்றுலா போங்கனு சொன்னேன்... அவ்ளோதான்..

அட்லாப்ஸ் அக்கூவா மேஜிக்கா

அட்லாப்ஸ் அக்கூவா மேஜிக்கா

எங்க இருக்கு?

சிம்பிளா சொல்லணும்னா மும்பை பக்கத்துல இருக்கு.

அழகும் அமைதியும் நிறைந்த பொழுது போக்குகள் பல இருக்கும் அட்டகாசமான ஒரு இடம் இது.

ஆரம்பிக்கப்பட்ட குறைந்த நாட்களிலேயே மிகப் பிரபலமான இந்த இடம் பல காதலர்களின் இன்பச் சுற்றுலாத் தளமாக இருக்கிறது.

திரில் வேண்டுமா, மகிழ்ச்சி வேண்டுமா இரண்டும் கிடைக்கும். கவலை மறந்து சிறகடிக்க நினைக்கும் அனைவரும் இங்க வரலாம்.

மும்பையிலிருந்தும் புனேவிலிருந்தும் அதிக அளவு பயணிகள் இங்கு வருகின்றனர்.

எப்போ போகலாம்

காலைல 10.30க்கு திறக்கும் சாயங்காலம் 7 மணிக்கு மூடப்படும்.

11 மணில இருந்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் ரைடு போக அனுமதிக்கப்படுது.

எவ்ளோ ஆகும்?

800ரூ ல இருந்து 900ரூ வரைக்கும் ஆகலாம். உணவு அப்பறம் நொறுக்குத் தீனிலாம் உங்க செலவு.

Aaditya Bardhan

அக்கூவாட்டிக்கா

அக்கூவாட்டிக்கா

எங்க இருக்கு?

சிம்பளா சொல்லணும்னா கொல்கத்தாவுல. விளையாட்டு வேணுமா, விளையாட்டு இருக்கு, கலாச்சாரமா அதுவும் இருக்கு, உணவு சம்பந்தப்பட்ட எல்லாமே இருக்கு, கொஞ்சி விளையாட பூங்காவும் இருக்கு, குதூகலிக்க அருவிகளும் நீர் விளையாட்டுகளும் இருக்கு. அப்றம் என்ன வேணும் ?

எப்போ போகலாம்

காலைல 10 மணில இருந்து மாலை 6 மணி வரைக்கும் அட்டகாசமான அனுமதி

எவ்ளோ ஆகும்

ஒரு ஆளுக்கு 200ல இருந்து 550 ரூ வரை கட்டணம் வசூலிக்கப்படுது.

PC:அக்கூவாட்டிக்கா

ஓய்ஸ்டர் பீச் வாட்டர் பார்க்

ஓய்ஸ்டர் பீச் வாட்டர் பார்க்

எங்க இருக்கு

சிம்பளா சொல்லணும்னா டெல்லில.

அடிக்குற வெய்யில்ல இங்க போனா சூப்பரா குளிச்சிட்டு வரலாம். அய்யோ அது இல்லாமயா.. விளையாட்டுக்களும் நிறைய இருக்கு. குழந்தைகளுக்கு ரொம்ப புடிச்ச பல விளையாட்டுக்கள் இங்க இருக்கு. குடும்பத்தோட போய் அழகா சுற்றுலா ஒன்னு போய்ட்டு வரலாம்.

எப்ப போகலாம்

காலைல 11 மணில இருந்து சாயங்காலம் 6 மணி வரைக்கும்

எவ்ளோ ஆகும்

600ரூபாய்ல இருந்து 1200ரூ வரைக்கும் ஆகும்

PC:ஓய்ஸ்டர் பீச் வாட்டர் பார்க்

ஜி ஆர் எஸ் பேன்டஸி பார்க்

ஜி ஆர் எஸ் பேன்டஸி பார்க்

எங்க இருக்கு

சிம்பிளா சொல்லணும்னா மைசூர்ல

கொஞ்சம்கூட போர் அடிக்காம ஜாலியா குடும்பத்தோட போய்ட்டு வரணும்னா நிச்சயமா மைசூர் பேன்டஸி பார்க் சிறப்பானதா இருக்கும்.

இங்கு இருக்கக்கூடிய அக்குவா ரேசர் அப்படிங்குற நீர் விளையாட்டு பலருக்கு பிடித்தமானதா இருக்கு.

எப்ப போகலாம்

காலைல 10.30 மணில இருந்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் எப்ப வேணா போகலாம்

எவ்ளோ ஆகும்

380ரூபாய்ல இருந்து 650 ரூபா வரைக்கும் ஆகும்

PC:ஜி ஆர் எஸ் பேன்டஸி பார்க்

வாட்டர் கிங்க்டம்

வாட்டர் கிங்க்டம்

எங்க இருக்கு

சிம்பளா சொல்லணும்னா மும்பைல இருக்கு

இந்தியாவின் முதல் வாட்டர் பார்க் இதுதான். அதுவும் இல்லாம ஆசியாவிலேயே மிகப் பெரியது இதுதான்.

இவ்வளவு வருசங்கள்ல புதுசு புதுசா பல விளையாட்டுகள அறிமுகப் படுத்தியிருக்காங்க.

இங்க இருக்குற செயற்கை பீச் கூட உண்மையான பீச் மாதிரியே இருக்கும். குழந்தைகள், மனைவிமார்களுடன் கணவர்கள் கொண்டாட சிறந்த இடமாக மும்பையில் இருக்கும் இந்த வாட்டர் பார்க்கை பலர் பரிந்துரைக்கின்றனர்.

எப்ப போகலாம்

காலைல 10 மணியில இருந்து சாயங்காலம் 8 மணி வரைக்கும் போகலாம்.

எவ்ளோ ஆகும்

399ரூபாய்ல இருந்து 999 ரூபா வரைக்கும் ஆகும்.

PC:Water Kingdom, Mumbai

சங்கு வாட்டர் பார்க்

சங்கு வாட்டர் பார்க்

சிம்பளா சொல்லணும்னா இந்த வாட்டர் பார்க் அகமதாபாத்ல இருக்கு.

விடுமுறை நாட்கள்ல குழந்தைகளோட கொஞ்சி விளையாட ஏற்ற இடம் இதுவாத்தான் இருக்கும்.

இங்க அக்குவா சட்டில், சங்கு டிவிஸ்ட்டர், கிட்டிஸ் கார்னர், கிட்ஸ் பிளானட், ஜிப் ஜாப் ஜூம்னு எல்லாமே குழந்தைகளை மைய்யப்படுத்தி அமச்சிருக்கறனால சிறப்பானதா இருக்கும்.

எப்ப போகலாம்

காலைல 10 மணில இருந்து சாயங்காலம் 5.30 மணி வரைக்கும் போகலாம்

எவ்ளோ ஆகும்

ஒரு ஆளுக்கு 400ரூபா வரைக்கும் ஆகும்.

PC:சங்கு வாட்டர் பார்க்

வொண்டர் லா

வொண்டர் லா

வாட்டர் கேம்ஸ் வேணும்னா அங்க போகலாம், தீம் பார்க் வேணும்னா இங்க போகலாம்னு இல்லாம ரெண்டையும் ஒரே இடத்துல வச்சிருக்குற பிரம்மாண்ட கேளிக்கை பூங்காதான் வொண்டர் லா...

இங்க வந்தவங்க எல்லாரும் வொண்டர்புல்னு சொல்லாம போகமாட்டாங்க.. இங்க கட்டணம் கொஞ்சம் அதிகமா இருக்குற மாதிரிதான் தோணும். ஆனா உள்ள வந்து பாத்தவங்களுக்கு புரியும் தகுதியான கட்டணம்தான்னு.

இங்க 5டி தியேட்டர், மழையில நடனமாடுற இடம், சூப்பரான ரைடுகள்னு பல இடங்கள் இருக்கு.

எப்ப போகலாம்

மதியம் 12.30ல இருந்து சாயங்காலம் 5 மணி வரைக்கும்

எவ்ளோ ஆகும்

ஒரு ஆளுக்கு 580ல இருந்து 1300ரூபாய் வரைக்கும் ஆகும்.

PC: வொண்டர் லா

Read more about: mumbai bangalore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X