Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் 8 மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்கள்!

இந்தியாவின் 8 மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்கள்!

By

உலகில் எந்த நாட்டிலும் இந்தியாவில் இருப்பது போல் கிரிக்கெட் மீது தணியாத ஆர்வம் கொண்ட ரசிகர்கள் கிடையாது. இங்கு கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே பார்க்கப்படுகிறது. அதை மெய்யாக்கும் விதத்தில் தற்போது பீகார் மாநிலத்தில் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு கோயிலே கட்டப்பட்டு வருகிறது.

இப்படி கிரிக்கெட்டை தீவிரமாக காதலிக்கும் ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவே நிறைய கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுகின்றன.

இதற்கு தகுந்தாற்போல் இந்தியாவில் கிரிக்கெட் மைதானங்களுக்கும் பஞ்சமில்லை. அதுமட்டுமல்லாமல் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கிரிக்கெட் மைதானங்களை கொண்ட நாடு இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடன் கார்டன் மைதானம்

ஈடன் கார்டன் மைதானம்

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் 2-வது பெரிய கிரிக்கெட் மைதானமாக ஈடன் கார்டன் மைதானம் அறியப்படுகிறது. அதோடு இந்தியாவின் மிகப்பழமையான கிரிக்கெட் மைதானமாகவும் கருதப்படும் ஈடன் கார்டன் மைதானம் இந்திய இராணுவத்திற்கு சொந்தமானது என்பது நிறைய பேருக்கு தெரியாத செய்தி. தற்போது டெஸ்ட், ஒருநாள், 20-20 என்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படும் ஈடன் கார்டன் மைதானத்தில் 90,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது.

D.Y.பட்டேல் ஸ்டேடியம்

D.Y.பட்டேல் ஸ்டேடியம்

நவி மும்பையின் நெருள் பகுதியில் அமைந்திருக்கும் D.Y. பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் 60,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்டது. இங்கு 9 டென்னிஸ் கோட்டுகளும், 4 உள்ளரங்கு பேட்மிட்டன் கோட்டுகளும், ஒரு ஒலிம்பிக் அளவு நீச்சல் குளமும் இருக்கின்றன. இந்த மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவான இசையமைப்பு முறை ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன் இதுபோன்ற வசதி செய்யப்பட்ட உலகின் முதல் கிரிக்கெட் மைதானமாகவும் இது கருதப்படுகிறது.

கலூர் சர்வதேச மைதானம்

கலூர் சர்வதேச மைதானம்

கொச்சியில் அமைந்திருக்கும் கலூர் சர்வதேச மைதானம் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் என்ற பெயரிலும் அறியப்படுகிறது. 60,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட இந்த மைதானம் முதலில் கால்பந்து ஆட்டத்துக்காக கட்டப்பட்டாலும் எண்ணற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இங்கு நடந்துள்ளன. அதோடு அரசியல் பேரணிகள், பொருட்காட்சிகள் போன்றவற்றுக்காகவும் கலூர் சர்வதேச மைதானம் பயன்படுத்தப்படுகிறது.

ராய்பூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

ராய்பூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

சத்தீஸ்கரின் நயா ராய்பூர் (புதிய ராய்பூர்) பகுதியில் அமைந்திருக்கும் ராய்பூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்தான் இந்தியாவில் அண்மையில் கட்டப்பட்ட கிரிக்கெட் மைதானமாகும். இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்காக கட்டப்பட்டிருந்தாலும் இதுவரை கனடா மற்றும் சத்தீஸ்கர் மாநில அணிகள் பங்கேற்ற ஒரே ஒரு போட்டி மட்டுமே இங்கு நடந்துள்ளது. இந்த மைதானம் 65,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்டது.

எம்.சின்னஸ்வாமி ஸ்டேடியம்

எம்.சின்னஸ்வாமி ஸ்டேடியம்

பெங்களூரின் குவீன்ஸ் ரோடு மற்றும் கப்பன் பார்க்கிற்கு மத்தியில் அமைந்துள்ள எம்.சின்னஸ்வாமி ஸ்டேடியம் 1969-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். அது கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை ஏராளமான சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் இங்கு நடந்துள்ளன. தற்போது 55,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட இந்த மைதானத்தின் இருக்கை வசதியை 70,000-ஆக உயர்த்துவதற்கு கர்நாடக கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு வருகிறது.

சென்னை சிதம்பரம் கிரிக்கெட் மைதானம்

சென்னை சிதம்பரம் கிரிக்கெட் மைதானம்

சென்னையில் மெரினா கடற்கரைக்கு வெகு அருகில் சேப்பாக்கம் பகுதியில் 1916-ஆம் ஆண்டு சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது. 1934-ஆம் ஆண்டிலிருந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் இந்த மைதானத்தில் 50,000 அமரக்கூடிய வசதி உள்ளது. இங்குதான் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை 1952-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்றது.

 சர்தார் பட்டேல் ஸ்டேடியம்

சர்தார் பட்டேல் ஸ்டேடியம்

குஜராத்தின் அஹமதாபாத் நகரில் அமைந்திருக்கும் சர்தார் பட்டேல் ஸ்டேடியம் மோட்டேரா ஸ்டேடியம் என்றும் அறியப்படுகிறது. இந்த கிரிக்கெட் மைதானம் 54,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்டது.

சுப்ரதா ராய் சஹாரா ஸ்டேடியம்

சுப்ரதா ராய் சஹாரா ஸ்டேடியம்

மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதானம் என்ற பெயரிலும் அறியப்படும் சுப்ரதா ராய் சஹாரா ஸ்டேடியம் புனே நகரின் மையத்தில் அமைந்திருக்கிறது. இந்த மைதானம் 55,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்டது. இங்கு மழைநீர் வடிகால், ஸ்குவாஷ் மற்றும் பேட்மிட்டன் கோர்ட்டுகள், நீச்சல் குளம், ஸ்பா, உணவகம், மது விடுதி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் இந்த மைதானம் இந்தியாவின் மேம்படுததப்பட்ட கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்

ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்

ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் முன்னர் விசாகா சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. தற்போது 55,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட இந்த மைதானத்தின் இருக்கை வசதியை 65,000-ஆக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X