Search
  • Follow NativePlanet
Share
» »நீங்க பைக் ரைடரா? உங்களுக்காக இந்தியாவின் 8 அற்புத சாலைப் பயண இடங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

நீங்க பைக் ரைடரா? உங்களுக்காக இந்தியாவின் 8 அற்புத சாலைப் பயண இடங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

நீங்க பைக் ரைடரா? உங்களுக்காக இந்தியாவின் 8 அற்புத சாலைப் பயண இடங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

By Bala Karthik

நம் நாட்டில் காடுகளும், வனவிலங்குகளும், கடற்கரைகளும், நீர்வீழ்ச்சிகளும், நிலப்பரப்புகளும், என அனைத்தையும் நமக்காக இயற்கை அன்னை அளித்திட, அவை அனைத்து நாட்டின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவி நம்மை பரவசத்தில் ஆழ்த்த துடிக்கிறது. ஒவ்வொரு இடமும் வெவ்வேறு விதமான அனுபவத்தை நமக்கு தந்து அந்த இடத்தின் தனித்துவத்தை நமக்கு உணர்த்த அதனை வார்த்தைகளால் ஒருபோதும் நம்மால் வர்ணிக்க இயலாது.

எண்ணற்ற சாகச செயல்களை நாம் செய்ய, வடக்கு பகுதியில் உயரமான மலைகளும், தெற்குப்பகுதியில் அனுபவத்தை தரும் அழகிய கடற்கரைகளும் காணப்படுகிறது. ஆனால், இந்த ஆர்டிக்கலில், பைக் பயணத்திற்கான சிறந்த இடங்களை நாம் பார்ப்பதோடு, குறிப்பாக மூலை முடுக்குகளை தேடி ஆராய்ந்து ஆச்சரியப்படும் ஆர்வலர்களுக்கான இந்தியாவில் காணப்படும் எண்ணற்ற இடம் பற்றி நாம் பார்க்கலாம்.

நீங்கள் தவிர்க்க கூடாத பைக் பயணத்திற்கு ஏற்ற சிறந்த இடங்கள் இதோ உங்களுக்காக. நீங்கள் பைக் பயணத்தை முற்றிலும் ரசிக்கும் ஒருவராயின், நீங்கள் தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ இணைந்து செல்லலாம். இதோ உங்களுக்கான இடங்களை நாங்கள் காட்டுகிறோம். வாருங்கள்...

 மணலி முதல் லடாக் வரை:

மணலி முதல் லடாக் வரை:


மணலியின் பெருமூச்செறிந்து பார்க்கவைக்கும் பள்ளத்தாக்கிலிருந்து கம்பீரமான உச்சமான லேஹ் வரைக்கும் நாம் செல்ல, மணலியிலிருந்து லடாக்கிற்கு நாம் செல்லும் பயணமானது மெக்கா போன்றதொரு பைக் பயணமாக அமைகிறது. இந்த பயணமானது, பைக் ஓட்டிகளில் வல்லவர்களுக்கு சிறந்ததாக அமைய, அனுபவம் குறைவாக உள்ளவர்கள் வேறு இடத்தை தேர்ந்தெடுப்பது நல்லதாகும். இந்த பயணமானது பைக் ஓட்டிகளை பரிசளிக்க வரவேற்க, அவர்களுக்கு அனைத்துவிதமான மகிழ்ச்சியும் ஒட்டுமொத்த பயணத்தில் கிடைக்கிறது.

அதேபோல் ஒரு குழுவாகவோ அல்லது உள்ளூர் வாசிகள்/கற்று தேர்ந்தவர்களுடனோ நாம் இந்த இடத்தை பார்க்க செல்ல வேண்டியது அவசியமாகும். நீங்கள் குழுவாக பைக்கில் சென்றாலும், ஒரு கார்... பைக் சரிசெய்யும் கருவிகளுடனும், உதிரி பாகங்களுடனும், மற்றும் அடிப்படை முதலுதவி வசதிகளையும் கொண்டு வருகிறது. இவை கைகளுக்கு அடக்கமாக இருக்க, இந்த வழியானது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த வல்லதாகவும் இருப்பதால் கையாளும் யுத்தியானது கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது.

Nick Taylor

 சிம்லா முதல் ஸ்பித்தி பள்ளத்தாக்கு வரை:

சிம்லா முதல் ஸ்பித்தி பள்ளத்தாக்கு வரை:

அழகிய காட்சிகளுக்கு பெயர் பெற்ற இந்த ஹிமாச்சல பிரதேசம், வருபவர்களை பேச்சு மூச்சற்று பார்க்க வைத்து, செல்வதற்குள் மனதினை பிடிங்கிக்கொண்டு தவிக்க வைக்கவும் செய்கிறது. நீங்களே கற்பனை செய்து பாருங்களேன். பள்ளத்தாக்கின் வழியே நீங்கள் பைக்கில் செல்ல, அழகிய பசுமையான வெளிகள், தூய்மையாகவும், குளுமையுடனும் காணப்பட, அந்த அழகிய நிலப்பரப்பின் தன்மையானது உங்கள் மனதில் எத்தகைய உணர்வினை உண்டாக்கும்? இந்த சிம்லா முதல் ஸ்பித்தி பள்ளத்தாக்கு பயணத்திற்கும் நமக்கு அனுபவமானது தேவைப்படுகிறது.

இந்த பயணத்தில் நம் மனம் அழகாக, மனதினையும் அனுபவத்தால் நிரப்புகிறது. நீங்கள் செல்லும் வழியானது நகரம் மற்றும் கிராமங்களான கல்பா, பஸ்பா, காஷா, மற்றும் கின்னூர் வழியாகவும் செல்கிறது. இறுதியாக ஸ்பித்தி பள்ளத்தாக்கினை நாம் அடைய, அங்கே பழத்தோட்டங்களும், ஆலயங்களும் சூழ்ந்து காணப்படுகிறது.

Shiraz Ritwik

 பெங்களூரு முதல் கொல்லி மலை வரை:

பெங்களூரு முதல் கொல்லி மலை வரை:

வெளியில் செல்ல விரும்பும் பெங்களூரு வாசிகள் அனைவரும், வார விடுமுறையின்போது பைக் பயணத்திற்கு ஆசைப்பட்டால், இதோ உங்களுக்கான பதில். இங்கிருந்து ஆறு மணி நேரம் பயணம் வாயிலாக கொல்லி மலையை நாம் அடைய, பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலை பாதையாக தடையின்றி அமைந்து, அதன்பின்னர் சிறிய அழகிய சாலையானது நல்ல முறையிலும் அமைக்கப்பட்டு நம் பயணத்திற்கு உதவுகிறது.

நகரத்து நீலவண்ணத்திலிருந்து நல்லதோர் இடைவேளையாய் இது அமைய, இந்த வழி முழுவதும் பச்சை பசேலென காணப்படுகிறது. இந்த இலக்கிற்கு நாம் செல்லும் வழியில் எங்கும் பசுமையானது அடர்ந்து காணப்பட, மலையில் ஒரு சிறிய நீர்வீழ்ச்சியும் காணப்படுவதோடு, பல சாகசங்களையும் உள்ளடக்கி, கொல்லி மலையை நோக்கி பயணிக்க வைக்கிறது.

Pravinraaj

 சிலிக்குரி முதல் யூக்சோம் வரை:

சிலிக்குரி முதல் யூக்சோம் வரை:

வடகிழக்கு இந்தியாவின் ஆதாரமாக விளங்கும் இந்த மலைப்பகுதி, நல்லதோர் மாய அனுபவத்தை தருகிறது. இந்த மலையின் வழியாக நாம் செல்ல, இந்த பரப்பினை சுற்றி, மாபெரும் இமயமலை காணப்பட, பைக்கின் கடின பயணத்தை மேற்கொள்ளும் ஆர்வலர்களுக்கு இது மறக்கமுடியாத, தவிர்க்க கூடாத அனுபவமாக அமைகிறது.

சிலிக்குரியில் நம் பயணமானது ஆரம்பிக்க, டார்ஜிலிங்க் வழியாக நம் பைக் பயணத்தை திட்டமிடுவதோடு, அழகிய காட்சியும் கலிம்பொங்க், டார்ஜிலிங்க் மற்றும் சிக்கிமில் காணப்படுகிறது.

Shayon Ghosh

 கவுஹாத்தி முதல் காஷி மலை வரை:

கவுஹாத்தி முதல் காஷி மலை வரை:

கவுஹாத்தியிலிருந்து பைக்கில் நாம் செல்ல, ஷில்லோங்க் பாதை வழியாக இறுதியில் காஷி மலையை அடைந்து அழகிய அனுபவத்தையும் பெறுகிறோம். இந்த வழியானது வற்றாத மழையினால் ஈரத்துடன் காணப்பட, அதனால் சறுக்கவும், அபாயகரமானதாகவும் கூட அமைய வாய்ப்பிருக்கிறது. அதனால், இந்த பயணத்தில் நமது கவனம் முழுவதுமாக இருக்க வேண்டும்.

இங்கே ஒதுக்குபுறமான நீர்வீழ்ச்சியின் அழகுடன் பசுமை சூழ்ந்த மலையும் அரவணைத்து காணப்பட, இந்த ஏற்றமானது கொஞ்சம் கடினமானதாகவே இருக்கிறது. நீங்கள் இந்த நீர்வீழ்ச்சியில் வண்டியை நிறுத்தி, இயற்கையின் முன்னே கைகளை நீட்டி மூழ்கடித்து மனமகிழலாம்.

Nick Irvine-Fortescue

 ஜெய்ப்பூர் முதல் ஜெய்சால்மர் வரை:

ஜெய்ப்பூர் முதல் ஜெய்சால்மர் வரை:

பைக் பயணத்தின் அன்றாட பாதையை நீங்கள் மாற்ற எண்ணினால், ராஜஸ்தானின் பாலைவனம் வழியாக சென்று மகிழலாம். ஜெய்ப்பூரில் தொடங்கி ஜெய்சால்மர் வரை நாம் செல்ல, தங்க பழுப்பு நிற மணல் வழியாக பசுமை நிறத்தை கண்டு பரவசமடைகிறோம். இங்கே உள்ளூர் வாசிகளின் விருந்தோம்பலை ரசிக்கும் நாம், ராஜஸ்தான் மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பெருமையையும் உணர்கிறோம்.

இங்கே கிராமங்களில் கிடைக்கும் சுவையூட்டும் உள்ளூர் உணவை உண்ண மறந்துவிடாதீர்கள். அதுவும் இங்கே புகழ்பெற்ற ராஜஸ்தானி உணவானது நாம் சாப்பிட வேண்டிய ஒன்றாக அமைய, இந்த மாநிலம் முழுவதும் கோட்டைகளும் சூழ்ந்து நாம் பார்க்க வேண்டிய இடங்களுள் முக்கியமானதாக விளங்குகிறது.

Manoj Vasanth

தில்லி முதல் ரத்தம்பூர் வரை:

தில்லி முதல் ரத்தம்பூர் வரை:

இந்த பயணத்தில் தில்லி முதல் ரத்தம்பூர் வரை நாம் செல்ல, உலகத்திலேயே சிறந்த பயணமாக இது அமைகிறது. இந்த பகுதியில் வீடுகளும், சின்ன தெருக்களும் நிறைய காணப்பட, சில பகுதிகள் வறண்டுபோயும், அகன்று விரிந்து, தடையற்ற சாலையையும் நமக்கு தருகிறது.

ஆக்ரா வழியாக நாம் செல்ல அறிவுறுத்தப்பட, இங்கே நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய நினைவு சின்னங்களும், பீடங்களும் அமைந்து செல்லும் வழியில் நம் பயணத்தை மேலும் ஆர்வமூட்டும் வகையில் மாற்றுகிறது. மேலும்... ஜெய்ப்பூர், ஜோத்பூர், மற்றும் ராஜஸ்தானின் பைகனேர் ஆகிய இடங்களின் வழியாகவும் நாம் செல்கிறோம்.

Mark Bold

 மும்பை முதல் கோவா வரை:

மும்பை முதல் கோவா வரை:

இது மிகவும் பிரசித்திபெற்ற பைக் பயணங்களுள் ஒன்றாக அமைய, தேசிய நெடுஞ்சாலை 17இன் வழியாகவும் நாம் செல்கிறோம். இந்த நெடுஞ்சாலையானது மும்பை முதல் கேரளா வரை இணைந்தே காணப்படுகிறது. இந்த பயணமானது மேற்கு கடற்கரை வழியாக செல்ல, இந்த வழியில் நாம் காணும் காட்சிகளாக பெருந்தன்மைமிக்க மேற்கு தொடர்ச்சி மலைகள் முதல் கோவா கடற்கரை வரை அமைகிறது. மேலும் இது ஒரு சாகச பைக் பயணமாகவும் அமைகிறது.

கோவாவிற்கு செல்வதனால் மட்டும் உங்கள் மனமானது நிம்மதி அடையாமல் தவித்தால், நெடுஞ்சாலைவழியாக மேலும் பயணத்தை தொடர்ந்து கேரளாவை கண் இமைக்கும் நேரத்தில் அடையலாம். இந்த பயணமானது மிகுந்த பரவசத்தை மனதில் அள்ளி தெளிக்க, இந்த வழியானது தடையற்று, அமைதியையும் தருகிறது.

Jaskirat Singh Bawa

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X