Search
  • Follow NativePlanet
Share
» »உலகமே உத்துப் பாக்குற மாதிரி கல்யாணம் பண்ணிக்கணுமா? இத படிங்க மொதல்ல

உலகமே உத்துப் பாக்குற மாதிரி கல்யாணம் பண்ணிக்கணுமா? இத படிங்க மொதல்ல

அதிசயம்!.... தலைகீழாக விழும் கோபுர நிழல்!.. என்ன நடக்கிறது விருபாட்சரே!அதிசயம்!.... தலைகீழாக விழும் கோபுர நிழல்!.. என்ன நடக்கிறது விருபாட்சரே!

இந்த இடங்கள்ல மட்டும் திருமணம் செஞ்சீங்கனு வச்சிக்கோங்க உங்கள அடிச்சிக்க ஆள் இல்ல...

உண்மைதானுங்க.. இந்தியாவுலேயே மிக அழகான இடங்கள் இருக்கிறது. அங்கெல்லாம் திருமணம் செஞ்சிக்க நிறைய பேர் ஆசப்படுவோம். அதே நேரத்துல வீட்டுல எடுக்குற முடிவுக்கு கட்டுப்பட்டு வீட்லயே திருமணம் செஞ்சிக்குறாங்க.

இந்தியாவுலயே திருமணம் செஞ்சிக்க டாப் 9 பகுதிகள் இவை. இங்கெல்லாம் உங்க திருமணம் நடந்துச்சினா எப்படி இருக்கும் சொல்லுங்க!

திருமணம் ஆனவங்க யாராச்சும் இருக்கீங்களா நீங்க உங்க மனைவிய கூட்டிட்டு ஒரு ஹனிமூன் போய்ட்டு வாங்களேன்.. இப்ப என்ன கொறஞ்சிடிச்சி..

மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா? காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா? காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்

கேரளத்தின் கடற்கரைகள் நதிகள் பின்புலம்

கேரளத்தின் கடற்கரைகள் நதிகள் பின்புலம்

கேரளத்தின் கடற்கரைகள் நதிகள் பின்புலம்

கேரளா என்றாலும், சுற்றுலா என்றாலும் ஒரே அர்த்தத்தைதான் தரும். ஏனென்றால் கடற்கரைகளில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களையும், அழகும் அமைதியும் நிரம்பிய உப்பங்கழிகளில் மிதக்கும் படகு இல்லங்களையும், எண்ணற்ற கோயில்களையும், ஆயுர்வேதத்தின் அற்புதத்தையும், வளமை குன்றா ஏரிகள் மற்றும் குளங்களையும், கவின் கொஞ்சும் தீவுகளையும் நீங்கள் கேரளாவை தவிர உலகில் வேறெங்கும் பார்த்திட முடியாது. இதன் காரணமாக உலகம் முழுவதிமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு படையெடுத்து வருவதுபோல் வந்து கொண்டே இருக்கின்றனர். நேஷனல் ஜாக்ரபிக்கின் 'டிராவலர்' பத்திரிக்கையில் 'உலகின் பத்து அற்புதங்கள்' , 'வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 50 சுற்றுலாத் தலங்கள்' மற்றும் '21-ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த பயணங்கள்' ஆகிய தலைப்புகளில் கேரளா குறிப்பிடப்பட்டு போற்றப்பட்டுள்ளது.

கேரளத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள சொடுக்கவும்

kt.beyondperception

கோவா தேவாலயத்தில் திருமணம்

கோவா தேவாலயத்தில் திருமணம்

கோவா தேவாலயத்தில் திருமணம்இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மதுவுண்ட மயக்கமா இல்லை கவின் கடல் கண்ட கிறக்கமா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இடம் ஒன்று உண்டெனில் அது கண்டிப்பாக கோவாவாகத்தான் இருக்க முடியும். கோவா நகரம் போர்துகீசியர்களின் ஆளுகையின் கீழ் இருந்ததால் அதன் வாழ்வு முறையில் போர்த்துகீசிய பாதிப்பு பளிச்சென தெரிவதை இங்கு முதல் முதலாக வரும் பயணிகள் கட்டாயம் உணர்வார்கள். இந்த நகரத்தில் வாழும் மக்கள் தங்களின் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். அதன் காரணமாகவே இந்நகரத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் கட்டிடங்களையும், அடையாளச் சின்னங்களையும் கவனத்துடன் சிறந்த முறையில் பராமரித்து வருகிறார்கள். மேலும், பாங்காக், இபிஸா போன்ற உலகப் புகழ்பெற்ற கடற்கரை பிரதேசங்களுக்கு செல்வது போலவே கோவாவுக்கும் உலகம் முழுவதிலுமிருந்தும் பயணிகள் சுற்றுலா வருவதற்கு விரும்புகிறார்கள்.

கோவா பற்றி மேலும் தெரிந்துகொள்ள சொடுக்கவும்

Aleksandr Zykov

ராஜஸ்தானில் ஒரு ராயல் திருமணம்

ராஜஸ்தானில் ஒரு ராயல் திருமணம்

ராஜஸ்தானில் ஒரு ராயல் திருமணம்ராஜஸ்தான் என்று சொன்ன மாத்திரத்திலே அதன் கவின் கொஞ்சும் அரண்மனைகளும், சிறப்புமிக்க ஒட்டக சவாரிகளும், காதல் மற்றும் வீர காவியங்களும், வசீகரிக்கும் பாரம்பரியமும், கலாச்சாரமும் நம் சிந்தையில் சத்தமிடாமல் நகர்ந்து செல்லும். இந்தியாவின் வடமேற்கில் வியக்கத்தக்க பேரழகுடன் இயற்கையின் இணையில்லா படைப்பாய் காட்சியளித்துக்கொண்டிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை தாகம் கொண்ட பயணிகள் கண்டிப்பாக தவற விட்டுவிடக்கூடாது. இந்த பாரம்பரிய பெருமை வாய்ந்த பூமியில் இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கட்டிடக்கலை அற்புதங்கோடு, ராஜஸ்தானின் செல்வச் செழிப்பிற்கும், வரலாற்று பெருமைக்கும் சாட்சிகளாக ஏராளம் இந்த மாநிலம் முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. எனவே வாருங்கள் சிறிது காலம் இந்த எழில் சிந்தும் மாநிலத்தில் சஞ்சரித்து அதன் சிறப்புகளை கண்டறிவோம்.

ராஜஸ்தானைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள சொடுக்கவும்

Raj Gopal Singh Verma

உத்திரப்பிரதேசத்தில் வானில் பறந்து கொண்டே

உத்திரப்பிரதேசத்தில் வானில் பறந்து கொண்டே

உத்திரப்பிரதேசத்தில் வானில் பறந்து கொண்டே ஒரு திருமணம் செஞ்சா எப்புடி இருக்கும் சொல்லுங்க!ண்ணற்ற சுவாரசிய சுற்றுலாத்தலங்களை தன்னுள் கொண்டுள்ள உத்தரப்பிரதேச மாநிலம் சுற்றுலா ஆர்வலர்களை வசீகரித்து வரவேற்கிறது. சுற்றுலா என்றில்லை இந்திய ஆன்மீக மரபுகளில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஒரு வரலாற்று பாரம்பரியம் என்ற அடிப்படையில் இங்குள்ள சில யாத்ரீக ஸ்தலங்களை இந்தியர் அனைவருமே வாழ்நாளில் ஒருமுறை தரிசிப்பது மிக அவசியம். சர்வதேச அளவில் இம்மாநிலம் கவனத்தை பெற்றிருப்பதற்கான காரணங்கள் பல உண்டு. அவற்றில் முதலாவதாக உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தாஜ் மஹால் ஆக்ராவில் வீற்றிருக்கிறது. கதக் எனும் பாரம்பரியக்கலை இங்குதான் உதயமாகியிருக்கிறது. கிருஷ்ணர் அவதரித்த ஸ்தலமும், புத்தர் தனது முதல் உபாசனையை அளித்த இடமும் இந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அமைந்திருக்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் உத்தரகண்ட், ஹிமாச்சல் மற்றும் நேபாளத்தை தனது வடக்குப்பகுதியிலும், மத்தியப்பிரதேசத்தை தெற்கிலும், பீகாரை கிழக்கிலும், ஹரியானாவை மேற்கிலும் தனது எல்லைகளாக கொண்டு அமைந்திருக்கிறது.

உபி பற்றி மேலும் தெரிந்துகொள்ள சொடுக்கவும்

ஐந்தறிவு பூங்கா, புதுடெல்லி

ஐந்தறிவு பூங்கா, புதுடெல்லி

ஐந்தறிவு பூங்கா, புதுடெல்லிமானுட வரலாற்றில் மஹோன்னதமான கலாச்சார செழுமையை கொண்டுள்ள - பல்வேறு ராஜவம்ச நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கிய - பரந்த இந்திய தேசத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதே ஒரு உன்னதமான அனுபவம் எனில், அதன் தலைநகரமாக விளங்கும் டெல்லி மாநகரத்துக்கு விஜயம் செய்வதும் ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பல அதிசயங்களை தன்னுள் பொதித்திருக்கும் அற்புத பொக்கிஷப்பெட்டி போன்று ‘புராதன'த்தையும் ‘நவீன'த்தையும் ஒருங்கே கொண்டுள்ள இந்த ‘டெல்லி' மாநகரமானது அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச பெருநகரங்களில் ஒன்றாக கம்பீரமாக வீற்றிருக்கிறது. ஹிந்தியில் ‘டில்லி' என்று உச்சரிக்கப்படும் ‘டெல்லி' நகரமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் என்.சி.டி (NCT - NATIONAL CAPITAL TERRITORY) எனப்படும் ‘தேசிய தலைநகர பிரதேசம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு விசேட திருத்தம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 1991ம் ஆண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தலைநகரமான புதுதில்லி நகரம் இந்த NCT பகுதியின் அங்கமாக உள்ளது. இந்தியாவில் மும்பை மாநகரத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநகரமாக டெல்லி விளங்குகிறது.

டெல்லி பற்றி மேலும் தெரிந்து கொள்ள சொடுக்கவும்

Kprateek88

வைண்யார்டு திருமணம், நாசிக்

வைண்யார்டு திருமணம், நாசிக்

வைண்யார்டு திருமணம்இந்தியாவிலேயே 2-வது பெரிய மாநிலமாக மத்தியப்பிரதேசம் அறியப்படுகிறது. இயற்கை எழில், புவியியல் அமைப்பு, ஆழமான வரலாற்று பின்னணி மற்றும் தனித்தன்மையான கலாச்சார பாரம்பரியம் போன்றவற்றுக்காக இந்த மாநிலம் இந்தியாவின் முக்கியமான சுற்றுலா கேந்திரமாக பிரசித்தி பெற்றுள்ளது. இம்மாநிலத்தின் தலைநகரமான போபால் நகரம் ஏரிகளின் நகரம் எனும் சிறப்புப்பெருமையுடன் திகழ்கிறது. சுற்றுலாப்பயணிகள் அனுபவித்து ரசிக்க விரும்பும் எல்லா அம்சங்களையும் மத்தியப்பிரதேச மாநிலம் தன்னுள் கொண்டுள்ளது. பண்டவ்கர் தேசிய வனவிலங்கு சரணாலயத்தின் கம்பீரமான புலிகள் மற்றும் கஜுராஹோவின் அற்புதக்கோயில்கள் என வெகு அபூர்வமான அம்சங்கள் மத்தியப்பிரதேச மாநில சுற்றுலாவை தனித்துவம் வாய்ந்தவையாக பிரசித்தி பெற வைத்துள்ளன.

மத்தியப்பிரதேசம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள சொடுக்கவும்

லட்சத்தீவில் கடற்கரை திருமணம்

லட்சத்தீவில் கடற்கரை திருமணம்

லட்சத்தீவில் கடற்கரை திருமணம்மாலத்தீவில் உள்ள மாலே நகரத்தை ஒரு பாலைவனச்சோலை என்று கூறுகின்றனர். எனில் அங்கிருந்து சிலநூறு கிலோமீட்டர் வடக்கே, இந்தியாவின் கேரளக்கடற்கரையிலிருந்து 250 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கும் இந்த அற்புத ‘லட்சத்தீவு'களுக்கு விஜயம் செய்வதில் என்ன தயக்கம் இருக்க முடியும். இந்தியாவுக்கு சொந்தமான இந்த தீவுகளின் அற்புதங்களை ரசிக்க இந்தியக் குடியுரிமை அந்தஸ்தே போதும் எனும்போது இந்த சொர்க்கத்தீவுகளுக்கு விஜயம் செய்யாமல் தவிர்ப்பதில் அர்த்தமே இல்லை. 30 தீவுகள் மற்றும் குறுந்தீவுகளை உள்ளடக்கியுள்ள இந்த லக்ஷ்வதீப் ஒரு பிரபல்யமான சுற்றுலாத்தலமாக சமீபகாலத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக கடற்கரை மணல், சூரியன், கடல் போன்ற அம்சங்களை வெகுவாக விரும்பும் பயணிகள் மத்தியில் இது மிக பிரசித்தமாக அறியப்படுகிறது. 4200 ச.கி.மீ பரப்பளவுக்கு அதிகமான தீவுக்கூட்ட பரப்பையும் 36 ச.கி.மீ பரப்பையும் கொண்டுள்ளது. தோராயமாக 132 கிமீ நீள கடற்கரைப்பரப்புடன் அமைந்துள்ளதால் இந்த தீவுப்பிரதேசம் எல்லாவிதமான நீர் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

மேலும் தெரிந்துகொள்ள சொடுக்கவும்

மேற்கு வங்க தேயிலைத் தோட்டத்தில்

மேற்கு வங்க தேயிலைத் தோட்டத்தில்

மேற்கு வங்க தேயிலைத் தோட்டத்தில்மேற்கு வங்காள மாநிலம் பன்முகத்தன்மை கொண்ட புவியியல் அமைப்பை பெற்றிருக்கிறது. இதன் வடபகுதி இமயமலைப்பகுதியை ஒட்டியதாக உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு சிக்கிம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்துடன் இம்மாநிலம் தனது எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது. கங்கை ஆற்றுப்படுகை இம்மாநிலத்தின் பெரும் நிலப்பரப்பில் பரவியுள்ளது. அதனை ஒட்டி தெற்கே அமைந்துள்ள சுந்தர்பன் காடுகள் பசுமையான இயற்கைச்செழிப்புடன் வீற்றிருக்கின்றன. மேலும் இம்மாநிலத்தை ஒட்டி வடக்கில் நேபாள் மற்றும் பூடான் போன்ற நாடுகளும் கிழக்கில் பங்களாதேஷ் நாடும் அமைந்துள்ளன. எனவே சுற்றுலாப்பயணிகள் விரும்பும் வித்தியாசமான புவியியல் அமைப்பை இம்மாநிலம் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

மேலும் தெரிந்துகொள்ள சொடுக்கவும்

Os Rúpias

மேகாலயாவில் ஒரு பழங்குடி மரபு திருமணம்

மேகாலயாவில் ஒரு பழங்குடி மரபு திருமணம்

மேகாலயாவில் ஒரு பழங்குடி மரபு திருமணம்1972-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மேகாலயா மாநிலம் காஸி, ஜைன்டியா மற்றும் கரோ பழங்குடி இன மக்கள் வசிக்கும் பூமியாகும். மடிப்பு மடிப்புகளாய் புரண்டு கிடக்கும் மலைத்தொடர்களை கொண்டுள்ள இம்மாநிலத்தில் பழங்கள் மற்றும் பாக்கு போன்றவை அதிகம் பயிராகின்றன. ஷில்லாங் நகரம் இதன் தலைநகரமாகும். மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் ஷில்லாங் 23 வது இடத்தை வகிக்கிறது. மேகாலயா மாநிலம் அதன் வடக்கில் அஸ்ஸாம் மாநிலத்தையும் தெற்கில் பங்களாதேஷ் நாட்டையும் எல்லைகளாக கொண்டுள்ளது. இந்த மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதி வனப்பிரதேசமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள காடுகள் பல்லுயிர்ப்பெருக்க இயற்கைச்சூழல் அமைப்பை கொண்டுள்ளன. பல்வேறு விலங்கினங்கள், பறவைகள் மற்றும் தாவரங்கள் இந்த காடுகளில் இடம்பெற்றுள்ளன. செழுமையான இந்த வனப்பிரதேசத்தின் தாவர மற்றும் உயிர் செழிப்பு பார்வையாளர்களை பிரமிக்க செய்கின்றன.

மேகாலயா பற்றி மேலும் தெரிந்துகொள்ள சொடுக்கவும்

Vishma thapa

பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயம்

பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயம்

பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயத்திற்குபெங்களூரிலிருந்து எப்படி போவது? உங்களுக்கான ஒரு உபயோகமான கைடு!!

மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா?

மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா?

மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா? காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்

இன்றும் பெண்களை நுழைய அனுமதிக்காத இந்திய கோயில்கள்

இன்றும் பெண்களை நுழைய அனுமதிக்காத இந்திய கோயில்கள்

இன்றும் பெண்களை நுழைய அனுமதிக்காத இந்திய கோயில்கள்

இந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய அரண்மனையை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

இந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய அரண்மனையை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

இந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய அரண்மனையை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

கரிகாலன் கட்டிய கல்லணையில் புதைந்துள்ள மர்மங்கள்

கரிகாலன் கட்டிய கல்லணையில் புதைந்துள்ள மர்மங்கள்

கரிகாலன் கட்டிய கல்லணையில் புதைந்துள்ள மர்மங்கள்

நவபாசான சிலை செய்தபின் போகர் என்ன ஆனார் தெரியுமா?

நவபாசான சிலை செய்தபின் போகர் என்ன ஆனார் தெரியுமா?

நவபாசான சிலை செய்தபின் போகர் என்ன ஆனார் தெரியுமா?

இந்தியாவின் 1000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் - 1இந்தியாவின் 1000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் - 1

கொங்கனுக்கு ஒரு பைக் டூர்... ஜாலியா போகலாம் வாங்க!கொங்கனுக்கு ஒரு பைக் டூர்... ஜாலியா போகலாம் வாங்க!

ராஜஸ்தானில் இருக்கும் வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள்ராஜஸ்தானில் இருக்கும் வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள்

பரந்து விரிந்த அற்புத கோட்டை சிதிலமடைந்ததன் அதிர்ச்சி பின்னணி இதுதானா!பரந்து விரிந்த அற்புத கோட்டை சிதிலமடைந்ததன் அதிர்ச்சி பின்னணி இதுதானா!

Read more about: travel tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X