Search
  • Follow NativePlanet
Share
» »ரெட்டை வானவில், ஆறு நிற கொடி, ரயிலே இல்லாத ஊர் - அதுதான் சிக்கிம் மர்மங்கள்!

ரெட்டை வானவில், ஆறு நிற கொடி, ரயிலே இல்லாத ஊர் - அதுதான் சிக்கிம் மர்மங்கள்!

புத்துணர்வு பெற விரும்புவோரை சுற்றுலாப் பயணங்கள் எப்போதுமே ஏமாற்றுவதில்லை. முன்னரே அறிந்த இடம் என்றாலும் அறியாத இடம் என்றாலும் பயண விரும்பிகளுகக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கின்றன சுற்றுலாத் தலங்கள்.

By Udhaya

புத்துணர்வு பெற விரும்புவோரை சுற்றுலாப் பயணங்கள் எப்போதுமே ஏமாற்றுவதில்லை. முன்னரே அறிந்த இடம் என்றாலும் அறியாத இடம் என்றாலும் பயண விரும்பிகளுகக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கின்றன சுற்றுலாத் தலங்கள். அதிலும் உள்ளூர் மக்களால் 'சொர்கம்' என அழைக்கப்படும் அற்புதமான இயற்கை காட்சிகள் நிறைந்த, பனிகளால் சூழப்பட்ட சிகரங்களைக் கொண்ட, பூக்களால் நிறப்பப்பட்ட புல்வெளிகளுடன் காட்சியளிக்கும், பரிசுத்தமான நீரால் நிரப்பப்பட்ட நீர்நிலைகள் உள்ள இடத்திற்கு பயணித்தால் ஏற்படும் ஆனந்தத்தை அளவிடவா முடியும்? இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற அழகான இடம் எதுவாக இருக்கும்? சில வார்த்தைகளில் வர்ணித்தாலே இவ்வளவு அற்புதமாகத் தெரியும் அந்த இடம் எதுவாக இருக்கும்? ஆம்! நாம் 'சிக்கிம்' என்ற இடத்தைப் பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறோம். சிக்கிம் மாநிலத்தின் 9 வித்தியாசமான விசயங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாமலிருந்தால் உடனடியாக இதைப் படியுங்கள்.

 ட்சோங்க்மோ ஏரி

ட்சோங்க்மோ ஏரி


ட்சோங்க்மோ அல்லது சாங்கு ஏரி என்றழைக்கப்படும் இந்த ஏரி கிழக்கு சிக்கிம் பிரதேசத்தில் காங்க்டாக் நகரத்திற்கு 40 கி.மீ முன்னதாக அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3780 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த அழகிய ஏரி பனிமலை நீரால் நிரம்பி காட்சியளிக்கிறது. சிக்கிம் பிரதேசத்தில் நாது லா பாஸ் எல்லைப்பாதைக்கு செல்லும் வழியில் இந்த ஏரியை பார்க்கலாம். இங்கிருந்து சீன எல்லைப்பகுதி 5 கி.மீ தூரத்திலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெருமைப்படுத்தும் வகையில் ஒரு விசேஷ தபால் தலையையும் இந்திய அஞ்சல் துறை 2006ம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறது.

Indrajit Das

மர்மக் கதை

மர்மக் கதை

இந்த ஏரி இருக்கும் கிராமத்தில் ஒரு மர்மக்கதை ஒன்று உள்ளது. இது கதை என்றாலும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கூறப்படுபவை ஆகும். சில பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த மக்களுடன் கூடி வாழ்ந்த வயதான பெண் ஒருவர் திடீரென்று ஒரு நாள் கனவில் இந்த ஊர் வெள்ளத்தில் மூழ்கப்போவதாக உணர்கிறார். இதை ஊர் மக்களிடம் சென்று கூறும்போது அவர்கள் இதை கேட்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் ஊரை காலி செய்துவிட்டு கிளம்புகிறார். அவர் சென்ற அந்த நாளே ஏரி நிரம்பி ஊர் மூழ்குகிறது. இதனால் ஊர்மக்கள் அனைவரும் இறந்துவிடுகின்றனர். அந்த இடத்தில் இறந்த உயிர்களுக்காக அஞ்சலி செலுத்த இந்த இடத்துக்கு நிறைய பேர் வருகை தருகின்றனர்.

Shiv's fotografia

 இயற்கையான வெந்நீர் ஊற்றுகள்

இயற்கையான வெந்நீர் ஊற்றுகள்


பூமிக்கடியில் இருந்து வரும் நீர் வெப்பமாக கொதித்துக்கொண்டு வருவதை எங்கேயும் பார்த்திருக்கிறீர்களா. இல்லைதானே. அப்படியானால் சிக்கிமில் இருக்கும் இந்த இடத்துக்கு வருகை தாருங்கள். நிறைய பேருக்கு தெரியாத ஒரு இடம் இதுவாகும். சாலையின் வலதுபுறம் அமைந்துள்ள இந்த இடத்துக்கு செல்ல அனுமதி இலவசம். எளிதில் யார் வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம். அடிக்குற குளிரில் கொஞ்ச நேரம் இந்த வெப்ப நீரூற்றில் இறங்கி குளியல் போடலாம் என்ற எண்ணம் உங்களுக்கு வரும்.

Yellowstone National Park

வழிபாட்டுக் கொடிகள்

வழிபாட்டுக் கொடிகள்

இந்தியாவிலேயே மிக மிக வித்தியாசமான ஒரு கலாச்சாரம் இங்குள்ளது என்றால் அதில் ஒன்று வழிபாட்டு கொடிகள். இங்குள்ள நிறங்கள் உங்களை அன்புடன் வரவேற்கும். கொடியும் வண்ண வண்ண அழகு நிறைந்த நிறங்களில் இருக்கும். இத்தனை நிறங்களில் கொடிகளை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். ஆனால் அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு பொருள் இருக்கிறது என்பது தெரியுமா. இதில் மொத்தம் 5 நிறங்கள் கொண்ட கொடிகள் இருக்கும். அனைத்துமே வேண்டுதலுக்காக அமைக்கப்பட்டது.

வெள்ளை நிறத்தின் பொருள் பெருமையும் கர்வமும்

பச்சை நிறத்தின் பொருள் பொறாமை, காமம்

மஞ்சள் நிறத்தின் பொருள் குறிக்கோள், நோக்கம்

நீலம் புறக்கணித்தலும் பாரபட்சமும்

சிவப்பு பேராசை, தனக்கு மட்டுமே உரிமை என எண்ணுவதற்கும்

கறுப்பு தலையீடு, வெறுப்பு ஆகியவற்றுக்கும் வேண்டுதலுக்காக பயன்படுத்தப்படுகிறது.

Safina dhiman

போக்குவரத்து

போக்குவரத்து


சிக்கிம்மின் பெரும்பாலான இடங்களுக்கு போக்குவரத்து என்பது பெரும் சிக்கல். பேருந்து வசதிகள் இன்றி, ரயில் சேவையும் இன்றி இருக்கும் இந்த மாநிலம் பொம்மை ரயில் மட்டுமே கொண்டுள்ளது. இங்கு கார் அல்லது டாக்ஸிகள் மூலமாகவே செல்லமுடியும். தற்போது கொஞ்சம் சாலைகள் போடப்பட்டு வருகிறது.

Will Smith

 காலநிலை

காலநிலை

நைட்டு விடிஞ்சதுக்கப்பறம் தூங்கி நண்பகல்ல எழுறவரா நீங்க.. அப்ப உங்களுக்கு ஏத்த இடம்தான் சிக்கிம். 6 இல்ல 7 இல்ல 8, 9, பத்து மணி வரைக்கும் உங்களுக்கு தூங்கணும்போலத்தான் இருக்கும்.

அந்த அளவுக்கு கணிக்கமுடியாதுனாலும் சிக்கிம் காலநிலைய ஓரளவுக்கு கணிச்சி மக்கள் வாழ்ந்துட்டுதான் வராங்க. நிச்சயமா மழைக்காலத்துல மழையும், கோடைக்காலத்துல வெய்யிலும் மட்டும் வந்துட்டு இருக்கும்னு சொல்லமுடியாது. எப்பவேணா மழை வரும். எப்பவேணா வெயில் அடிக்கும். அப்படி ஒரு காலநிலை. உலகத்திலேயே சில இடங்களில் மட்டும் இயற்கையாக தோன்றும் இரட்டை வானவில்லை பாக்கமுடியும். அப்படி ஒரு இடம் இது. சிக்கிம்போனா கண்டிப்பா குடையோடதான் போகணும்.
wiki

வித்தியாசமான புவியியல் அமைப்பு

வித்தியாசமான புவியியல் அமைப்பு


சிக்கிம் இமயமலைகளுக்கு நடுவே அமைந்துள்ள மலைசார்ந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் பெரும்பாலான நகரங்கள் கடல் மட்டத்தில் இருந்து 280மீ முதல் 8585மீ உயரம் வரை அமைந்துள்ள மலைப்பகுதிகளாகவே இருக்கின்றன. உலகின் 3-வது உயரமான சிகரமான கஞ்சஞ்ஜங்கா இங்கு அமைந்துள்ளது. கிழக்கில் பூட்டானையும், மேற்கில் நேபாளத்தையும், வடக்கே திபெத்தையும் தன் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது சிக்கிம். ஏறத்தாழ 28 மலைச் சிகரங்களும், 227 அதிக ஆழமாக ஏரிகளும், 80 பனி மலைகளும் சிக்கிமில் இருக்கின்றன. மேலும் தனிச்சிறப்பாக சிக்கிமில் 100 நதிகளும், சில சிறிய நதிகளும், சுடுநீர் ஊற்றுகளும் அமைந்துள்ளன. இயற்கையான 50 டிகிரி சூட்டில் இருக்கும் வெந்நீர் ஊற்றுகளுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. சிக்கிமின் மூன்றில் ஒரு பகுதி அடர்ந்த காடுகளாக உள்ளது. மேலும் பனிகளால் நிரம்பிய பல ஓடைகள் சிக்கிமின் உயிர்நாடி என அழைக்கப்படும் தீஸ்தா நதியில் சங்கமிக்கின்றன

$udeep Bajpai

கடைத்தெரு

கடைத்தெரு

சிக்கிம் மாநிலத்திலேயே மிகச்சிறந்த ஷாப்பிங்க் தலங்கள் என்றால், அவை காங்டாக்கில் அமைந்துள்ள லால் சந்தை மற்றும் எம்ஜி சந்தை. அதே நேரத்தில் பெரும்பாலான மக்களுக்கு தெரியாத ட்ஸ்மோகோ ஏரி அருகே அமைந்துள்ள பெரிய சந்தையில், அதற்குரிய விலையில் தாராளமாக பொருள்கள் கிடைக்கின்றன. உடைகளும், காலணிகளும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

உணவு

உணவு


வடகிழக்கு மாநில மக்கள் காரம் குறைவாகவே சாப்பிடுவார்கள். அவர்களின் மிக முக்கிய உணவாக நூடுல்ஸ் இருப்பது ஆச்சர்யமானதே. உருளைக்கிழங்கு விரும்பி சாப்பிடப்படுகிறது. இது எல்லா வகையான உணவிலும் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. உங்களுக்கு காரசாரமான உணவுதான் வேண்டும் என்றால் சிக்கிமில் அது சிரமம்தான்.

நம்ம ஊரில் கிடைக்கும் மோமோஸ், நூடுல்ஸ் எல்லாம் சிக்கிமில் மிக எளிதில் வாங்கி சாப்பிடமுடியும்.

 அதிர்ஷ்ட குறியீடுகள்

அதிர்ஷ்ட குறியீடுகள்

இங்கு எட்டு குறியீடுகள் அதிர்ஷ்டத்துக்கானதாக நம்பப்படுகிறது.

சிறுகுடை - பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது.

இரண்டு தங்க மீன்கள் - வாழ்வின் சோகங்களைக் கடந்து நீந்தி வர

சங்கு - தர்மத்துக்கான ஒலியாக பயன்படுகிறது

தாமரை - பூத்துக்குலுங்கும் வாழ்க்கைக்காக

வெற்றிப் பதாகை - எதிரிகளிடமிருந்து வெற்றி பெற

குவளை - நீண்ட நெடிய நோயற்ற வாழ்க்கை

தர்ம சக்கரம் - வாழ்வின் சக்கரத்தை குறிக்க

Read more about: travel temple sikkim
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X