Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையிலிருந்து மங்களூரு இப்படி ஒரு வித்தியாசமான கடல்பயணம் போயிருக்கீங்களா? #புதியபாதை 4

சென்னையிலிருந்து மங்களூரு இப்படி ஒரு வித்தியாசமான கடல்பயணம் போயிருக்கீங்களா? #புதியபாதை 4

சென்னையிலிருந்து வங்கக்கடலின் ஓரமாக கன்னியாக்குமரியை அடைந்து, முக்கடலை பார்த்துவிட்டு, அங்கிருந்து திருவனந்தபுரம் வழியாக அரபிக்கடலை ரசித்துக்கொண்டே மங்களூருவை அடையலாம். புட்டு, கடலை,மீன், மக்ரூன், அல்வா, நண்டு, கலத்தப்பம்னு கேரள, தமிழக, கர்நாடக கடற்கரை உணவுகள் அனைத்தையும் சுவைத்துவிட்டு, கடற்கரையை அனுபவித்துவிட்டு வரலாம் வாருங்கள்.

இங்கு நாள், நேரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், சுற்றுலாப் பயணிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தங்கும் வசதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். இங்கு குறிப்பிட்ட இடத்தில் தங்கும் வசதிகள், ரயில், பேருந்து, விமானம் பற்றிய தகவல்களை எங்களது https://tamil.nativeplanet.com/ என்ற தளத்தில் காணமுடியும். மேலும், ரயில், விமானங்கள் புக் செய்யவும் நமது தளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாவை அனுபவியுங்கள்.

பழவேற்காடு ஏரி

பழவேற்காடு ஏரி

புலிக்காட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பழவேற்காடு ஏரி சென்னைக்கு மிக அருகில் 60கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 460சகிமீ ஆகும்.

வடக்கில் சொர்ணமுகி ஆறும், வடமேற்கில் காலாங்கி ஆறும், தெற்கில் ஆரணி ஆறும் உருவாகின்றன.

அருகிலேயே ஸ்ரீஹரிகோட்டா உள்ளது. இங்குதான் இஸ்ரோவின் சதீஸ் தவான் விண்வெளி மையம் உள்ளது.

Srikaanth Sekar

சென்னை

சென்னை

இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் ஒன்றான சென்னை நகரம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலாச்சார கேந்திரமாக சுதந்திர காலம் தொட்டு விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமாக இருந்தாலும் கேரள, தெலுங்கு மற்றும் கன்னட பாரம்பரியங்களும் இங்கு கலந்திருப்பதை ஒரு அற்புதமான தேசிய வரலாற்று பரிமாணம் எனலாம். ஒருகாலத்தில் டெல்லிவாசிகள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் யாவரையும் ‘மதராஸி' என்றே விளிக்கும் ஒரு காலமும் இருந்திருக்கிறது. திருவனந்தபுரமும், பெங்களூரும், ஹைதராபாத்தும் தான் அண்டை மாநிலங்களின் தலைநகரங்கள் என்றாலும் அம்மாநிலங்களை சேர்ந்த ஒருசாராருக்கு மனதளவில் சென்னைதான் தலைநகரமாக விளங்கிவருகிறது என்பதும் மறுக்க முடியாத ஒரு உண்மை. கொரமாண்டல் எனப்படும் சோழமண்டலக் கடற்கரையில் வங்காளவிரிகுடாவை ஒட்டி சென்னை நகரம் அமைந்துள்ளது. 400 வருட வரலாற்றை கொண்டுள்ள இந்நகரம் தற்போது உலகில் பெரிய மெட்ரோபாலிடன் நகரங்களில் 36வது இடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Vinoth Chandar

சென்னை - பாண்டிச்சேரி

சென்னை - பாண்டிச்சேரி

மொத்த தூரம் : 156கிமீ

வழித்தடங்கள் : 1 கடற்கரைச்சாலை

2 சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை

நேரம்: கடற்கரைச் சாலையில் 3.40மணி

திருச்சி நெடுஞ்சாலையில் 4 மணி நேரம்

மாமல்லபுரம்

மாமல்லபுரம்

மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரை தலமாகும்.

குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கல், கட்டுமானக் கோயில்கள் என கட்டுமானத்தின் சிறப்புகளை கூறும் கட்டிடங்களை பல நூறு ஆண்டுகள் முன்பாகவே கட்டியுள்ளனர். இது யுனெஸ்கோ பாரம்பரிய இடமாகும்.

புடைப்புச் சிற்பங்கள் என்பவை பாறையை குடைந்து ஓவியங்களைப் போல சிற்பங்களாக செதுக்கப்பட்டிருப்பவை ஆகும்.

Ssriram mt

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

மூன்று இந்திய மாநிலங்களில் பரவியிருக்கும் கடற்கரை நகரங்களை கொண்ட யூனியன் பிரதேசம் தான் பாண்டிச்சேரி. ஆந்திரபிரதேசத்தில் யானாம், தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவின் மேற்கு கடற்கரையிலுள்ள மாஹே ஆகியவைதான் இந்த நான்கு ஆட்சிப்பகுதிகள். வங்காள விரிகுடா கடல் தழுவி நிற்கும் சோழமண்டல கடற்கரையில் இருக்கும் பாண்டிச்சேரி நகரம் சென்னையிலிருந்து 162 கிமீ தொலைவில் உள்ளது. பிரெஞ்சு அரசின் முக்கிய காலனிப் பகுதியாக இருந்து வந்த பாண்டிச்சேரி 1674-ம் ஆண்டு முதல் 1954-ம் வரை பிரெஞ்சு ஆட்சிப் பகுதியாகவே இருந்தது.

Nishanth Jois

பாண்டிச்சேரி - வேளாங்கன்னி

பாண்டிச்சேரி - வேளாங்கன்னி


மொத்த தொலைவு 156கிமீ

வழித்தடம் 1 கிழக்கு கடற்கரைச் சாலை

2 கடலூர் - சிதம்பரம் - கூத்தனூர்

3 வடலூர் - கும்பகோணம்

மொத்த நேரம் : முதல் பாதையில் 3 மணி 55 நிமிடங்கள் இரண்டாவது 4.30மணி நேரங்கள் மூன்றாவது பாதையில் 4 மணி 50 நிமிடங்கள்

 பிச்சாவரம் காடுகள்

பிச்சாவரம் காடுகள்

பிச்சாவரம் வடதமிழகத்திலும், தென்தமிழகத்திலும் பலருக்கு அறியாத இடமாகும். இது அப்படி ஒரு சிறப்பான இடம் என்பதை இங்கு சென்றுவந்தபின்னர்தான் உணரமுடியும்.

அலையாத்திக்காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் இங்கு கடற்கரையில் அமைந்துள்ளன. இதுபோன்ற காட்டுக்குள் படகில் சென்று வருவது சிறப்பானதாக அமையும்.

Aleksandr Zykov

 வேளாங்கன்னி

வேளாங்கன்னி

தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் இந்த வேளாங்கன்னியில் அன்னை மரியாவிற்கு ஒரு மகத்தான பேராலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த பேராலயம் மடோனா ஆப் வேளாங்கன்னிக்கு அர்ப்பனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பேராலயத்தில் குடிகொண்டிருக்கும் அன்னை மரியா, ஆரோக்கிய அன்னை என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

Vimal Raveendran

வேளாங்கன்னி - ராமேஸ்வரம்

வேளாங்கன்னி - ராமேஸ்வரம்

மொத்த தூரம்: 255கிமீ

வழித்தடம் - கடற்கரைச் சாலை - வேதாரண்யம் - தேவிப்பட்டினம் - மண்டபம்

பயண நேரம் - 5 மணி நேரங்கள்

வேதாரண்யம்

வேதாரண்யம்


பள்ளிக்குழந்தைகளுக்கும், விடுதலைப் போராட்ட வரலாறு பற்றி கேள்விப்பட்டிருப்பவர்களுக்கும் அதிகம் அறிமுகம் தேவையில்லாத இந்த இடம்தான் வேதாரண்யம். இந்த ஊர் திருமறைக்காடு என்று தமிழில் அழைக்கப்படுகிறது.

Arunankapilan

 ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

வேளாங்கன்னி கிறிஸ்தவர்களின் சொர்க்கபூமியென்றால், ராமேஸ்வரம் இந்துக்களின் புண்ணிய பூமி ஆகும். தமிழ் நாட்டின் கிழக்கு கிடற்கரையில் உள்ள கறைபடாத, அமைதியான நகரம் பாம்பன் தீவின் ஒரு பகுதியாக உள்ள இராமேஸ்வரம் நகரமாகும். பாம்பன் கால்வாய் வழியாகவே இந்த நகரம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மன்னார் தீவுகள் இராமேஸ்வரத்திற்கு அருகிலேயே 50 கிலோமீட்டர் தொலைவிலேயே இருந்தாலும் கடல் வழியாக செல்வதாக இருந்தால் 1403 கிலோமீட்டர் தூரம் சுற்றித்தான் செல்லவேண்டும். இந்துக்களின் புனிதத் தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும் இராமேஸ்வரத்திற்கு கண்டிப்பாக ஒவ்வொருவரும் 'சார் தம்யாத்ரா' அல்லது புனிதப் பயணம் செய்ய வேண்டும்.

BOMBMAN

ராமேஸ்வரம் - தூத்துக்குடி

ராமேஸ்வரம் - தூத்துக்குடி

ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி மொத்த தொலைவு - 192கிமீ

வழித்தடங்கள் - கிழக்கு கடற்கரைச் சாலை

சாயக்குடி - வேம்பார் - சிப்பிக்குளம்

பயணநேரம் - 3.30மணி

தூத்துக்குடி

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான துறைமுக நகரம் ஆகும். இந்நகரம் முத்து குளித்தலுக்கு பிரபலமானதினால் 'முத்து நகரம்' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்நகரம் மீன்பிடி மற்றும் கப்பல் கட்டுதலுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பக்கத்தில் திருநெல்வேலி மாவட்டமும் மற்றும் அதன் கிழக்கில் ராமநாதபுரமும் விருதுநகரும் அமைந்துள்ளன. தமிழ்நாட்டின் தலை நகரமான சென்னை தூத்துக்குடி நகரில் இருந்து 600 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் கேரள தலைநகரம் திருவனந்தபுரம் தூத்துக்குடியிலிருந்து 190 கி. மீ தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது.

J'ram DJ

 தூத்துக்குடி - கன்னியாகுமரி

தூத்துக்குடி - கன்னியாகுமரி

மொத்ததொலைவு - 124 கிமீ

வழித்தடங்கள் - கிழக்கு கடற்கரைச் சாலை

திருச்செந்தூர் - உவரி - செட்டிக்குளம்

பயணநேரம் - 2.30மணி நேரம்

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர் எனும் புண்ணிய பூமி. இது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றாகும்.

சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்ட இந்த கோயில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அதீத புகழ் பெற்ற விளங்கியது. பொதுவாக முருகருக்கு மலைகளில்தான் கோயில்கள் இருக்கும். கடற்கரையில் அமைந்துள்ள ஒரே கோயில் இதுதான்.

Sa.balamurugan

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கலை மற்றும் பண்பாடுகளில் நாட்டம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் கன்னியாகுமரி உகந்த இடம் அல்ல. ஆயினும் கன்னியாகுமரியிலுள்ள கோயில்களும் கடற்கரைகளும் பல சுற்றுலாப் பயணிகளையும் புனித பயணம் செல்பவர்களையும் கவரும் வண்ணம் உள்ளன. விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, வட்டகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வாவத்துறை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி அருங்காட்சியகம், ஆகியவைகள் தான் இங்குள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள்.

Raj

 கன்னியாகுமரி - திருவனந்தபுரம்

கன்னியாகுமரி - திருவனந்தபுரம்

மொத்த தொலைவு 105கிமீ

வழித்தடங்கள்- கடற்கரைச் சாலை

நாகர்கோயில் வழி

பயணநேரம் - 3 மணி

 கோவளம்

கோவளம்

கோவளம் கேரளமாநிலம் திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள கடற்கரை தலமாகும். கோவாவுக்கு அடுத்தபடியாக சின்ன கோவா என்று உள்ளூர் மக்களால் வர்ணிக்கப்படுகிறது.

கோவாவில் கிடைக்கும் கொண்டாட்டங்களைப் போல இங்கும் நிறைய மகிழ்ந்திருக்கலாம். இங்கு மூன்று பிறை வடிவ கடற்கரைகள் உள்ளன. இங்கு நீந்துவதற்கு சுலபமாக ஆழம் குறைவாகத்தான் இருக்கிறது.

Jo Kent

 திருவனந்தபுரம்

திருவனந்தபுரம்


டவுளின் சொந்த தேசம் என்ற சிறப்புப்பெயருடன் உலகமெங்கும் அறியப்படும் பெருமையை பெற்றுள்ள கேரள மாநிலத்தின் தலைநகரம் இந்த ‘திருவனந்தபுரம்' என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். ஆங்கிலேயரின் உச்சரிப்பில் இது ‘டிரிவன்ட்ரம்' என்று திரிந்து அழைக்கப்பட்டு வந்தாலும் திருவனந்தபுரம் என்ற கம்பீரப்பெயரே இதன் அடையாளமாகும். காலனிய ஆட்சியின் மிச்சமாக 'டிரிவன்ட்ரம்' என்ற பெயரே அரசாங்க ஆவணங்களிலும் இடம் பெற்றிருந்ததால் 1991ம் ஆண்டு கேரள மாநில அரசாங்கமானது ‘திருவனந்தபுரம்' என்ற பெயரை அதிகாரபூர்வமாக திரும்பவும் அங்கீகாரம் செய்தது.

Thejas Panarkandy

திருவனந்தபுரம் - கொச்சி

திருவனந்தபுரம் - கொச்சி


மொத்த தொலைவு - 199கிமீ

வழித்தடங்கள் - கடற்கரைச் சாலை

திருவல்லா, கோட்டயம் வழி

பயணநேரம் - 5.30 மணி - 6 மணி நேரங்கள்

வர்க்கலா

வர்க்கலா

வர்க்கலா கேரளமாநிலம் திருவனந்தபுரத்துக்கு வெளியே அமைந்துள்ள ஒரு அமைதியான கிராமம் ஆகும். இங்கு அழகிய கடற்கரை, இரண்டாயிரம் ஆண்டு பழமையான விஷ்ணுகோயில் உள்ளிட்ட பல சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன.

பாபநாசம் அருவியைப் போல இது பாபநாசம் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.

இங்கு 2000 ஆண்டு பழமையான சனார்த்தன சுவாமி கோயில் சில கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஆயுர்வேத மசாஜ் செய்யப்படுவது இந்த கிராமத்தின் சிறப்பாகும்.

cat_collector

 கொச்சி

கொச்சி

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரத்துக்கு உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒரு முறையாவது விஜயம் செய்து ரசிக்க வேண்டும். அரபிக்கடல் ஓரம் வீற்றிருக்கும் இந்த கம்பீரமான நகரம் ஒரு காலத்தில் இந்தியாவில் முக்கியமான துறைமுக நகரமாக திகழ்ந்திருக்கிறது. கொச்சின் என்ற பெயரில் முன்னர் அழைக்கப்பட்ட இந்த கடற்கரை நகரம் கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ‘கொச்சு அழி' எனும் மலையாள மொழிச்சொல்லிலிருந்து இந்த கொச்சி எனும் பெயர் பிறந்துள்ளது. அதாவது, ஒரு சிறிய தீவு என்பது அதன் பொருளாகும். பண்டைய கால யாத்ரீகர்களின் வரலாற்றுக் குறிப்புகளில் கொச்சி நகரம் தவறாமல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்போதைய பயணிகளின் முக்கிய விஜய ஸ்தலமாகவும் இது திகழ்ந்திருக்கிறது.

Mattancherry koonan

 கொச்சி - கண்ணூர்

கொச்சி - கண்ணூர்

மொத்த தொலைவு - 286கிமீ

பயண நேரம் - 8 முதல் 8.30 மணி நேரங்கள்

வழித்தடம் - கடற்கரைச் சாலை

கடலுன்டி பறவைகள் சரணாலயம்

கடலுன்டி பறவைகள் சரணாலயம்


கேரளமாநிலத்தின் மலப்புரம் பகுதியில் அமைந்துள்ளது கடலுண்டிப்புழா ஆறு. இங்கு அதிகம் பறவைகள் வந்து செல்கின்றன. இது கடலுண்டி பறவைகள் சரணாலயமாக பாதுகாக்கப்பட்டுவருகிறது.

Dhruvaraj S

கண்ணூர்

கண்ணூர்

கண்ணூர் என்ற தனது ஆங்கில உச்சரிப்பிலேயே பிரசித்தமாக அழைக்கப்படும் கண்ணனூர் கேரளாவின் வடக்குப் பகுதியிலுள்ள மாவட்டமாகும். இது செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய வேர்களை தன் அடையாளமாக கொண்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கும் அரபிக்கடலுக்கும் இடையில் பொதிந்துள்ள இப்பிரதேசமானது நிரம்பி வழியும் இயற்கை எழிலையும், தனித்தன்மையான - பாரம்பரிய கலாச்சார இயல்பையும் கொண்டு விளங்குகிறது. பண்டைய காலத்தில் மலபார் பிரதேசத்தின் வணிகக்கேந்திரமாக இந்த கண்ணூர் மாவட்டம் திகழ்ந்துள்ளது. கண்ணூர் பகுதியின் செழிப்பான கலாச்சாரமானது பல்வேறு ராஜ்ஜியங்கள் இப்பகுதியில் கோலோச்சியதன் விளைவாக பிறந்துள்ளது. பைபிள் காலத்திலேயே சாலமன் மன்னரின் கப்பல்கள் இப்பகுதிக்கு வந்ததாக சொல்லப்படும் கதையிலிருந்து இப்பகுதியின் வரலாற்றுப்பின்னணி துவங்குகிறது.

 கண்ணூர் - மங்களூர்

கண்ணூர் - மங்களூர்

கண்ணூரிலிருந்து மங்களூர் மொத்த தொலைவு - 143 கிமீ

வழித்தடம் - கடற்கரைச் சாலை

பயணநேரம் - 4 மணி நேரங்கள்

சந்திரகிரி கோட்டை

சந்திரகிரி கோட்டை


கேரளமாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சந்திரகிரி கோட்டை.

ஏழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோட்டையைக் காண பலர் இங்கு வருகைத் தருகின்றனர். பயசுவினி ஆறு இதன் அருகே உள்ளது. இந்த கோட்டை தற்போது சிதிலமடைந்து வருகிறது.

M agnihotri

மங்களூர்

மங்களூர்


கர்நாடகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது கரு நீலத்தில் காட்சியளிக்கும் அரபிக்கடலுக்கும், உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையே அமைந்திருக்கிறது. மங்களாதேவி தெய்வத்தின் பெயரில் அமைந்திருக்கும் இந்த மங்களூர் நகரம் பல காலமாக ஓய்வில்லாத ஒரு துறைமுக நகரமாகவே விளங்கி வந்திருக்கிறது. இந்த துறைமுக நகரத்தினை பற்றிய வரலாற்று குறிப்புகள் 14 ம் நூற்றாண்டிலிருந்து நமக்குக் காண கிடைக்கின்றன. மங்களூர் அரசர்கள் மற்ற பாரசீக வளைகுடா நாடுகளோடு வணிக தொடர்பு துவங்கியதிலிருந்து இந்த குறிப்புகள் பதியப்பட்டுள்ளன. புவியியல் ரீதியாக முக்கிய இடத்தில் இருப்பதால் மங்களூர் நகரம் பல ஆட்சியாளர்களிடம் மாறி மாறி இருந்து வந்துள்ளது. இந்த நகரத்தை கைப்பற்ற போர்த்துக்கீசியர்களும், ஆங்கியலேயரும் மைசூர் மன்னர்களான திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலியுடன் பல கடுமையான போர்களை நடத்தியுள்ளனர்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X