Search
  • Follow NativePlanet
Share
» »பறக்கும் பார்கள் குதூகலிக்கும் இளைஞர் பட்டாளம்.. நம்ம நாட்டுல இப்படி ஒரு இடமா?

பறக்கும் பார்கள் குதூகலிக்கும் இளைஞர் பட்டாளம்.. நம்ம நாட்டுல இப்படி ஒரு இடமா?

தானியங்கி பறக்கும் பார்கள், ஹைட்ராலிக் மேடை மற்றும் மேட்ரிக்ஸ் ஒலி அமைப்புகளுடன் இந்தி மற்றும் ஆங்கில பாப் பாடல்கள் ஒலிக்க சும்மா என்ஜாய் பண்றதுக்காகவே ஒரு பொழுது போக்குத் தளம் நம்ம ஊர்ல இருக்கு.. உலக

By Udhaya

தானியங்கி பறக்கும் பார்கள், ஹைட்ராலிக் மேடை மற்றும் மேட்ரிக்ஸ் ஒலி அமைப்புகளுடன் இந்தி மற்றும் ஆங்கில பாப் பாடல்கள் ஒலிக்க சும்மா என்ஜாய் பண்றதுக்காகவே ஒரு பொழுது போக்குத் தளம் நம்ம ஊர்ல இருக்கு.. உலக நாடுகள்ல பல இடங்கள்ல இதுமாதிரி இருந்தாலும் நம்ம ஊர்ல இருக்குற இந்த இடத்தோட அழகையும், பெருமையையும் பத்தி தெரிஞ்சிக்கிட்டீங்கன்னா... உடனே இங்க போக ஆசப்படுவீங்க... சரி தெரிஞ்சிக்க நீங்க ரெடி தான?

Below Images are taken from official site

கனவுகளின் இராச்சியம்

கனவுகளின் இராச்சியம்

கனவுகளின் இராச்சியம் என்பது ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது தங்க முக்கோணத்தின் மிக அருகில் எளிதில் அணுகும் வண்ணம் அமைந்துள்ளது. இதை எளிதாக ஆக்ரா, தில்லி மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து அடையலாம். நாட்டின் கலை, கலாச்சாரம், உணவு, பாரம்பரியம் மற்றும் பிற கலைகளின் புகலிடமாக விளங்குவதால் இது ஒரு சிறந்த காட்சி இடமாக விளங்குகிறது. இது நவீன தொழில்நுட்பத்தின் அற்புதமான படைப்பாகும்.

 ஓய்வு பள்ளத்தாக்கு பார்க்

ஓய்வு பள்ளத்தாக்கு பார்க்

ஜனவரி 29, 2010 இல் நிறுவப்பட்ட இது ஓய்வு பள்ளத்தாக்கு பார்க் அருகில் உள்ளது. பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் கனவுகளின் இராச்சியத்துடன் இணைந்துள்ளனர். கனவுகளின் இராச்சியம் இந்திய சுற்றுலா பயணிகளை மட்டுமல்ல சர்வதேச பயணிகளையும் கவர்கிறது. இங்கு இந்திய பாரம்பரிய மற்றும் நவீன கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள பொழுதுபோக்கு முறையில் வழங்கப்படுகிறது.

 நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்


கைவினை, இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், திருவிழாக்கள், தெரு நடனங்கள், மற்றும் புராண நிகழ்ச்சிகள் போன்றவை இங்கு வழங்கப்படுகின்றன. நௌடன்கி மஹால் மற்றும் ஷ்ஹொவ்ஸ்ஹ திரையரங்கு போன்றவற்றில் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு வடிவங்கள் காட்சிகளாக நடத்தப்படுகின்றன. மேலும் இங்குள்ள கலாச்சார அரங்கில் இந்திய உணவு மற்றும் கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தபடுகின்றன.

காண்பவரின் மனதை கவரும் கண்கவர் நிகழ்ச்சிகள்

காண்பவரின் மனதை கவரும் கண்கவர் நிகழ்ச்சிகள்

நௌடன்கி மஹாலில் சுமார் 835 பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து காட்சிகளை கண்டுகளிக்க முடியும். இங்கு பாலிவுட்டை போன்று இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இங்கு இந்திய சினிமாவின் கண்கவர் நிகழ்ச்சிகள் காண்பவரின் மனதை கவரும் மற்றும் பளிச்சிடும் வகையில் வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் நிகழ்ச்சிகள் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையாக விளங்குவதால் இங்கு வரும் பயணிகளின் மனதை மிகவும் கவர்கிறது.

 பறக்கும் பார்கள்

பறக்கும் பார்கள்

தானியங்கி பறக்கும் பார்கள், ஹைட்ராலிக் மேடை மற்றும் மேட்ரிக்ஸ் ஒலி அமைப்பு போன்றவை மிகப் பெரிய வாழ்க்கை அனுபவத்தை கொடுக்கிறது. நௌடன்கி மஹாலில் உள்ள மஹாராஜா தளம் பார்வையாளர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்குகிறது. காட்சிகளின் இடைவேளையில் தின்பண்டங்கள் மற்றும் பானங்கள் பரிமாறப்படுகின்றன. இங்குள்ள ஷோ ஷா திரையரங்கில் ராம் லிலா மற்றும் கிருஷ்ணா லிலா போன்ற புராண கதைகள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் காண்பிக்கப்படுகின்றன.

இந்திய காவியங்கள்

இந்திய காவியங்கள்


ஆடம்பர திருமண ஒத்திகைகள் கூட இங்கு நடைபெறுகின்றன. ஆடம்பரமான ஆடைகள் மற்றும் அற்புதமான நடனங்களுடன் இந்திய காவியங்கள் அற்புதமான முறையில் இங்கு வழங்கப்படுகிறது. திறமை வேட்டைகளும் இங்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது. மேலும் இங்கு சுமார் 350 இருக்கைகள் கொண்ட மூடப்பட்ட கலையரங்கம் உள்ளது. கலாச்சார அரங்கில் ஒரு குளிரூட்டப்பட்ட இடம் ஆகும். இங்கு பார்வையாளர்கள் இந்திய கலாச்சாரம், மற்றும் உணவுகளை அனுபவித்து மகிழ்கிறார்கள். மேலும் அவர்கள் ஷாப்பிங் வேட்டையில் திகட்டத் திகட்ட ஈடுபடுகின்றார்கள்

கோவா கேரளா ராஜஸ்தான்

கோவா கேரளா ராஜஸ்தான்

இது கோவாவின் வாழ்க்கை, கேரளாவின் காயல், ராஜஸ்தானின் அரச வாழ்க்கை, அல்லது பஞ்சாபின் பழமையான வாழ்க்கை போன்றவற்றை சுற்றுலா பயணிகள் இந்த ஒரே இடத்தில் அனுபவித்து மகிழலாம். இது இந்தியாவின் வளமான பாரம்பரியம் மற்றும் கட்டிடக் கலையை பிரதிபலிக்கிறது. பார்வையாளர்கள் கலைஞர்களுடன் உரையாடலாம்.

Read more about: travel temple delhi india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X