Search
  • Follow NativePlanet
Share
» »மத்தியப்பிரதேசத்தின் காடுகளுக்குள் ஓர் அற்புதப் பயணம் #காட்டுயிர்வாழ்க்கை 1

மத்தியப்பிரதேசத்தின் காடுகளுக்குள் ஓர் அற்புதப் பயணம் #காட்டுயிர்வாழ்க்கை 1

மத்தியப்பிரதேசத்தின் காடுகளுக்குள் ஓர் அற்புதப் பயணம் #காட்டுயிர்வாழ்க்கை 1

By Udhaya

காடுகளில் திரிவதென்றால் மனிதனுக்கு அலாதியாகிப்போகிறது அந்த பயணம். உண்மையில் நண்பர்களுடன் காடுதிரிந்து பாருங்கள் அதன் உணர்வை வார்த்தைகளால் விளக்க இயலாது. நீங்கள் காட்டுயிர் வாழ்க்கையை விரும்புபவர்களென்றால் இந்த பகுதி உங்களுக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் இந்த தொடரின் முதல் பகுதியாக மத்தியப்பிரதேசகாடுகளுக்குள் ஒரு உலாவைத் தொடங்கலாம்.

மத்தியப்பிரதேசத்தின் காடுகளில் மிக முக்கியமானவை பென்ச், பண்ணா, இடார்ஸி, பாந்தவ்கார், நீமுச், சியோனி , ஹோசாங்காபாத் மற்றும் ஷிவ் புரி ஆகியனவாகும். இவற்றை ஒவ்வொன்றாக இந்த பதிவில் நாம் காணலாம்,.

பென்ச்

பென்ச்

பென்ச் சுற்றுலா புகழ் பெற முக்கிய காரணமாக விளங்குகிறது இங்குள்ள பென்ச் தேசிய பூங்கா/பென்ச் புலிகளின் காப்பகம். இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. இந்த பூங்கா அதன் தாவரவளம் மற்றும் விலங்கின வளத்துக்கு புகழ் பெற்றது. ஜாமுன், டீக், லென்டியா, பலஸ், பிஜா, மஹுவா, குசும், செமல், மூங்கில் போன்ற பல வகையான பூண்டுத்தன்மையுடைய செடி கொடிகளை இங்கு காணலாம். கரடிக்குரங்குகள், புனுகுப் பூனைகள், கரடிகள், மான்கள், புலிகள், காட்டு நாய்கள், பன்றிகள், சிறுத்தைகள் போன்ற பல வகையான விலங்குகள் இந்த பூங்காவில் இருக்கின்றன.

Rudraksha Chodankar

 தி ஜங்கிள் புக்

தி ஜங்கிள் புக்

ருடியார்டு கிப்லிங்க் எழுதிய ஜங்கிள் புக் என்ற கதை இந்த காடுகளை மனதில் வைத்தே எழுதப்பட்டவையாகும். மேலும் இந்த காடுகளைச் சுற்றி, பச்டர் கிராமம், நேவ்கோன் தேசியப் பூங்கா,. கன்ஹா தேசியப்பூங்கா, நாக்பூர் நாக்சிரா வழிபாட்டு தலம் என நிறைய இடங்கள் காணப்படுகின்றன.

பச்டர் என்ற சின்ன கிராமம் பென்ச் துரியா கேட்டிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே களிமண்ணில் இருந்து மண் பாண்டங்கள் செய்பவர்களை அதிகம் காணலாம். இங்கு செய்யப்படும் கைவினை பொருட்களின் அழகு நம்மை மயங்க வைக்கும். அதனை நம் வீட்டிற்கு வாங்கியும் செல்லலாம்.

Graf orlok2004

சிறந்த காலம் மற்றும் எப்படி செல்வது?

சிறந்த காலம் மற்றும் எப்படி செல்வது?

சுற்றுலாப் பயணிகள் இந்த பூங்காவுக்கு அக்டோபர் முதல் ஜூன் வரையில் வருகைத் தரலாம். அதிலும் பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களில் இந்த பூங்காவுக்கு வருவது மிகவும் சிறந்ததாகும்.

காலை 6 முதல் 10.30மணி வரையிலும் மாலை 3 முதல் 6 மணி வரையிலும் இந்த பூங்கா திறந்திருக்கும்.

ரயில், விமானம், பேருந்து மூலமாகவும் இந்த இடத்துக்கு வருகைத் தரமுடியும். இதுகுறித்த தகவல்களை நீங்கள் நமது நேட்டிவ் பிளானட் தமிழ் தளத்தின் இந்த பகுதியில் மிகவும் எளிதானமுறையில் காணலாம்.

Tanmay Haldar

 பண்ணா

பண்ணா


பண்ணா நகரில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலம் பண்ணா தேசியப் வன விலங்குப் பூங்கா. இது தவிர பாண்டவர் குகை மற்றும் நீர்வீழ்ச்சிகளும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவருகின்றன. இயற்கை அழகை ரசிக்க விரும்புபவர்கள், பண்ணா நகரத்திற்கு வந்து, இங்குள்ள பூங்காக்கள், வன விலங்குகள் பறவைகள் மற்றும் பல இயற்கை சூழல்களை கண்டு ரசிக்கலாம்.

Sagar Das, Rosehub

பண்ணா தேசியப் பூங்கா

பண்ணா தேசியப் பூங்கா


பண்ணா தேசியப் பூங்கா, சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும் சுற்றுலாத் தளமாக திகழ்கிறது. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் புலிகளைக் காணலாம். கஜூரஹோவிற்கு அருகில் இந்தப் பூங்கா அமைந்திருக்கிறது. இதனைச் சுற்றி பல்வேறு கேளிக்கை விடுதிகளும், தங்கும் இடங்களும் உள்ளன.

பண்ணா நகரின் கோடை காலத்தில் வெயில் அதிகமாக உணரப்படும். ஆனால் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை வெப்பம் குறைந்து சுற்றிப் பார்ப்பது ஏதுவாக இருக்கும்.

Shivamd2d

பாண்டவர் குகை மற்றும் நீர்வீழ்ச்சி

பாண்டவர் குகை மற்றும் நீர்வீழ்ச்சி


பண்ணா நகரில் இருந்து, சுமார் 12 கிமீ தொலைவில், பண்ணா தேசியப் பூங்காவிற்கு அருகில் பாண்டவர் குகைகளும், நீர்வீழ்ச்சிகளும் அமையப்பெற்றுள்ளன. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருப்பதால், இவ்விடத்திற்கு எளிதில் வர முடியும்.

அங்குள்ள ஒரு ஊற்றிலிருந்து தோன்றும் இந்த நீர்வீழ்ச்சி, பண்ணா சுற்றுலாவின் சிறப்பம்சாகத் திகழ்ந்து வருகிறது. வருடம் முழுவதும் இந்த நீர்வீழ்ச்சியில் நீர் இருந்தாலும், மழைக்காலத்தில் சுற்றுலா செய்வது சிறப்பாக இருக்கும்.

சுமார் 100 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி ஒரு பெரிய நீர்தேக்கத்தில் விழுகிறது. நீர்வீழ்ச்சியின் அடிப் பகுதியில், பாண்டவர் குகைகள் அமைந்துள்ளது.

Anurag nashirabadkar

 இடார்ஸி

இடார்ஸி

இடார்ஸி சுற்றுலா பயணிகளுக்கு மிகச் சிறந்த சுற்றுலா இடங்களை தருகிறது. அவற்றுள் டாவா ஆற்றில் அமைந்துள்ள டாவா நீர்த்தேக்கம் மற்றும் போரி வனவிலங்கு சரணாலயம் போன்றவை மிக முக்கியமானவை. இந்த நகரத்தில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல மதத் தளங்கள் உள்ளன. அவற்றுள் இவன்ஜெலிக்கல் லூத்தரன் தேவாலயம், போதி மாதா மந்திர், ஹுஸைனி மஜ்ஜித், போன்றவை முக்கியமானவை. இங்கு உள்ள தெருக்களில் கைகளால் செய்யப்பட்ட கவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

Ashishchepure -

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

இடார்ஸியை போபாலில் இருந்து மிக எளிதாக அணுகலாம். இது சாலை மற்றும் ரயில்கள் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை NH-69, இடார்ஸி வழியாக செல்கிறது. இந்த நகரத்தில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதியாக பல்வேறு ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் உள்ளன. குளிர் காலமே இந்த நகரத்திற்கு சுற்றுலா செல்ல சிறந்த பருவம் ஆகும்.

Dhanireena

 போரி வனவிலங்கு சரணாலயம்

போரி வனவிலங்கு சரணாலயம்

மேற்கு பகுதியில் டாவா ஆறு ஓடுகிறது. இத்தகைய அழகிய சூழலில் அமைந்துள்ள இந்த போரி வனவிலங்கு சரணாலயத்தில் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. இந்த சரணாலயத்தில் உலர் இலையுதிர் மற்றும் மூங்கில் காடுகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த சரணாலயத்தில் புலி, சிறுத்தை, புள்ளிமான், காட்டெருமை, சாம்பார், சின்காரா, குரைக்கும் மான், பெரிய அணில், கோடிட்ட கழுதை புலி, குள்ளநரி, நீல்காய், நான்கு கொம்பு மான் போன்ற பல விலங்கினங்கள் காணப்படுகின்றன. புலிகள் இந்த சரணாலயத்தின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சபாரிக்கள் நடத்தப்படுகின்றன. இங்கு சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக காட்டு பங்களாக்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் உள்ளன.

Arpitargal1996

 பாந்தவ்கார்'

பாந்தவ்கார்'

பாந்தவ்கார்' அரிய வகை வெள்ளை புலிகளின் உண்மையான இருப்பிடமாக நம்பப்படுகிறது. வரலாற்றுப் பதிவுகளின் படி ரேவா மகாராஜாக்களின் வேட்டை தளமாக பாந்தவ்கார் இருந்தது. இங்குள்ள பழைய கோட்டை இதற்கு சான்றாக இருக்கிறது. அது இன்றும், இந்த காட்டுப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்த இடத்தை தேசிய பூங்காவாக அறிவிப்பதற்கு முன்பிருந்தே இது வேட்டையாளர்களின் சொர்க்கபுரியாக இருந்தது. ஆனால், அந்த அரசகாலத்திய மகிழ்ச்சி என்பது மலையேறி விட்டது.

இந்திய அரசு வேட்டையாளர்களிடம் இருந்து புலிகளை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சியின் காரணமாக புலிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இயற்கையின் மத்தியில்! ஒரு பரந்த பல்லுயிர் பெருக்கத்தின் காரணமாக, பாந்தவ்கார் 1968-ஆம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இந்த இடம் இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற புலிகள் சரணாலயங்களில் ஒன்றாகும். மேலும் இந்தியாவிலேயே இங்குதான் அதிகமாக புலிகள் வசிக்கின்றன. இங்கு

Subhrajyoti Parida

பாந்தவ்கார் தேசிய பூங்கா

பாந்தவ்கார் தேசிய பூங்கா

இந்த தேசிய பூங்கா சுமார் 400 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த பூங்கா செங்குத்தான முகடுகள், மாசடையாத காடுகள் மற்றும் திறந்த புல்வெளிகளை உள்ளடக்கியது.

புலிகளை தவிர பல அரிய வகை வன விலங்குகளான சிறுத்தைப்புலிகள், மான் போன்றவை பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றன. பாந்தவ்கார் தேசிய பூங்காவில் 250 வகையிலான பறவைகளும், 37 வகையிலான பாலூட்டிகளும், 80 வகையிலான பட்டாம்பூச்சிகள் மற்றும் பல வகையிலான ஊர்வனவும் இருக்கின்றன. இதைத்தவிர இந்த பூங்காவில் சால், தோபின், சாலை, சாஜா மற்றும் பலவகையிலான தாவரங்கள் உள்ளன. இப்பகுதியில் காணப்படும் பலவகையிலான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களே பாந்தவ்கார் சுற்றுலாவில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

BluesyPete

பாந்தவ்கார் கோட்டை

பாந்தவ்கார் கோட்டை

பாந்தவ்கார் கோட்டையின் கட்டுமானத்தை பற்றிய எந்த ஒரு பதிவுகளும் வரலாற்றில் இல்லை. இந்த கோட்டை சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என கருதப்படுகிறது. ஏனெனில் `நாரத்-பஞ்சரத்ரா' மற்றும் `சிவ புராணம்' போன்றவற்றில் இந்த கோட்டையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புராணங்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழைய புராணங்கள் ஆகும். இந்த கோட்டையில் இருந்து பல வம்ச அரசர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். உதாரணமாக `மகா' வம்ச அரசர்கள், மற்றும் `வகதகஸ்' அரசர்கள் 3-ம் நூற்றாண்டில் இருந்தும், `ஸென்கார்ஸ்' அரசர்கள் 5 ம் நூற்றண்டில் இருந்தும், `கல்ச்ஹுரிஸ்' அரசர்கள் 10-ம் நூற்றண்டில் இருந்தும் இங்கிருந்து ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.

LRBurdak

 வான் விஹார் தேசிய பூங்கா

வான் விஹார் தேசிய பூங்கா

போபால் நகரத்தின் மத்தியில் வான் விஹார் தேசிய பூங்கா அமைந்துள்ளது. நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு மலையின் மீது 445 ஹெக்டேர்கள் பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளிடம் சற்றே பிரபலமாக விளங்கும் இந்த பூங்காவிற்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரக் கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவில் மென்மையாக நிமிர்ந்து நிற்கும் பசும் புல்வெளிகள் வருடம் முழுவதுமே பசுமையாக இருக்கும். இந்த பூங்காவில் பல்வேறு வகையான தாவர மற்றும் ஊண் உண்ணிகள் தங்களுடைய இயற்கையான வாழிடங்களில் வசித்து வருவதை உங்களால் காண முடியும். எனினும், இங்கு வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளை காணும் போது இது ஒரு தேசிய பூங்காவைப் போல் இல்லாமல் ஒரு விலங்கியல் பூங்காவைப் போலவே தோற்றமளிக்கிறது.

Sudheer Pandey

 மனித குல மியூசியம்

மனித குல மியூசியம்


ஷாம்லா மலைகளின் மேல் சுமார் 200 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்திருக்கும் மனித குல மியூசியம் அப்பர் லேக் ஏரியின் சுற்று வட்டக் காட்சியைக் காட்டும் இடமாகவும் இருக்கிறது. 1977-ல் திறக்கப்பட்ட, நாட்டிலேயே மிகப்பெரிய திறந்த வெளி மானிடவியல் மியூசியமான சங்கராலயா மனித குல வரலாற்றை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காகவே வருடம் முழுவதும் திறந்த வெளி மற்றும் உள்ளரங்கு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கண்காட்சிகள் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம், கலை மற்றும் கட்டிடக்கலை சிறப்புகளை வெளிப்படுத்தி, அவற்றைப் பற்றி சிறந்த வகையில் தகவல்கள் அளிப்பவையாக உள்ளன.

Dinesh Valke

 நீமுச்

நீமுச்

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல்வேறு இடங்கள் நீமுச் நகரில் உள்ளது. சுகாநந்த்ஜி ஆஸ்ரமம், நவ தோரான் கோவில், காந்தி சாகர் அணை, காந்தி சாகர் சரணாலயம், பத்வமாதா கோவில் என நீமுச் நகரில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.நம் கண்களைக் கவரும் அழகிய பல சந்தைகளும் நீமுச்சில் இருக்கின்றன. நீமுச் நகரின் மரபும், தனிச்சிறப்பும்! தாசியாவின் முஹரம் ஊர்வலம் நீமுச்சில் மிகவும் புகழ் வாய்ந்தது. சுமார் 150 வருடங்களாக தொடர்ச்சியாக இந்த ஊர்வலம் நடைபெற்றுவருகிறது. சுற்றுலாப் பயணிகள் இதனைக் காண்பதற்கென்றே நீமுச் நகருக்கு வருகின்றனர். இமாம் ஹுசைனின் உயிர்த் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் நீமுச்சும் ஒன்றாகும்.

LRBurdak

 காந்தி சாகர் சரணாலயம்

காந்தி சாகர் சரணாலயம்

மத்திய பிரதேசத்தில், நீமுச் மற்றும் மண்ட்சார் மாநிலத்திற்கு வடக்கே அமைந்துள்ள காந்தி சாகர் சரணாலயம், இயற்கை அழகை அள்ளித் தரும் ஒரு அற்புதமான இடம். 1974 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட காந்தி சாகர் சரணாலயம், 1983 ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது. இப்பொழுது, இந்த சரணாலயத்தின் பரப்பளவு 368.82 சதுர கிலோமீட்டரையும் விட அதிகமாக இருக்கிறதாம். எழில் கொஞ்சம் இயற்கை அழகு, நம் மனதிற்கு அமைதியையும், நிம்மதியையும் தரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்தச் சரணாலயம் பரந்து விரிந்து ராஜஸ்தான் மாநிலத்தை தழுவி நிற்கிறது. காந்தி சாகர் சரணாலயத்தின் குறுக்கே ஓடும் சாம்பல் ஆறு, இச்சரணாலயத்தை இரண்டாகப் பிரிக்கிறது.

LRBurdak

காந்தி சாகர் அணை

காந்தி சாகர் அணை

நீமுச் அருகே உள்ள மண்ட்சார் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது காந்தி சாகர் அணை. இந்த அணை மத்திய பிரதேசத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகும். சாம்பல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மிகவும் பிரம்மாண்ட அணையாகத் திகழ்கிறது காந்தி சாகர் அணை. 1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் அடிக்கல் நட்டு பணிகள் துவக்கிவைக்கப்பட்டது இந்த அணை. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நீர்த்தேக்கமாக திகழும் காந்தி சாகர் அணை, ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு சரணாலயமாகவும் விளங்குகிறது. சர்வதேச பறவைகள் வாழ்வு இயக்கம் இந்த அணைப் பகுதியை பறவைகள் சரணாலயமாக அடையாளப்படுத்தியுள்ளது.

LRBurdak

 சியோனி

சியோனி


சியோனி சுற்றுலாவில் இங்குள்ள ஆசியாவிலேயே மிகப் பெரிய மண் அணையான ஆசியா-பீம்கார்க் முக்கிய இடம் வகிக்கிறது. விவசாயத்திற்கு பெரிதும் உதவும் இந்த அணை வைன்கங்கா நதியின் குறுக்கே சப்பாரா என்கிற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள `பென்ச்' புலிகள் சரணாலயம் மற்றொரு முக்கிகயமான சுற்றுலா தலமாகும். இங்குள்ள `பர்கட்' என்கிற சிறிய நகரம் அதன் வளமான பள்ளத்தாக்குகள் மற்றும் அழகிய சுற்றுப்பகுதிகளுக்காக மிகவும் பிரபலமானது. முகாம், மலையேறுதல் மற்றும் பிற வெளிப்புற பொழுதுபோக்குகளில் ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகள் பர்கட்டிற்கு சுற்றுலா செல்லலாம். இங்குள்ள மகாகாலேஷ்வர் கோயில், சிவ ஆலயம், மற்றும் அமோடாகார் போன்றவை சிறப்புமிக்க பிற சுற்றுலா இடங்களாகும்.

Guptaumesh100

 மகாகாலேஷ்வர் கோயில்

மகாகாலேஷ்வர் கோயில்

திக்ஹோரி கிராமத்தில் அமைந்துள்ள மகாகாலேஷ்வர் கோயில் மிகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த சிறிய கிராமம் சியோனிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மிகப் பழமையான இந்த கோவில் 8 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற இந்திய தத்துவ ஞானி ஜகத் குரு ஆதி சங்கரரால் கட்டப்பட்டது. புகழ் பெற்ற சிவன் கோவிலான இது இந்துக்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

LRBurdak

பீம்கார்க் சஞ்சய் சரோவர்

பீம்கார்க் சஞ்சய் சரோவர்

பீம்கார்க் சஞ்சய் சரோவர் அணை சியோனி மாவட்டத்தில் இருந்து சுமார் 43 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த புகழ்பெற்ற அணை வைன்கங்கா நதியின் குறுக்கே சப்பாரா என்கிற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை ஆசியாவிலேயே மிகப் பெரிய மண் அணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மண் அணையை உருவாக்கிய பின், பாசன வசதிகள் பெரிய அளவில் விரிவடைந்தன.

Guptaumesh100

சாத்பூரா தேசிய பூங்கா

சாத்பூரா தேசிய பூங்கா

லிகளின் பிரதான சரணாலயமாக உள்ள சாத்பூரா தேசிய பூங்கா, அதன் மாறுபட்ட வகையான தாவர மற்றும் விலங்கினங்களுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். இந்தியாவில் அதிகம் கவனிக்கப்படாத வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாக இந்த இடம் விளங்குகிறது. ஆரம்பத்தில் இந்த பூங்கா புலிகள் பாதுகாப்பகமாகவே இருந்து வந்தது. இந்த பூங்காவின் கடினமான தரைப்பகுதிகளில் ஆழமான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் குறுகலான மலைச்சரிவுகள் ஆகியவை உள்ளன. இந்த பூங்காவில் ஊர்ந்து செல்லும் போது படிவுப்பாறைகளால் உருவான சிகரங்கள், அடர்ந்த சால் மரக்காடுகள் மற்றும் தாவா பாதுகாப்பிடம் ஆகியவற்றைக் நீங்கள் ஆச்சரியமின்றி கண்டிட முடியும். இந்த சாத்பூரா தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக புள்ளி மான்கள், முள்ளம்பன்றிகள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் சேற்றிலுள்ள முதலைகள் ஆகியவற்றை கண்டிப்பாக காணும் வாய்ப்புகள் கிடைக்கும்.

LRBurdak

கரேரா பறவைகள் சரணாலயம்

கரேரா பறவைகள் சரணாலயம்

பறவை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இந்த கரேரா பறவைகள் சரணாலயம் பிரசித்தி பெற்றுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் இங்குள்ள உயிரினங்கள் எந்த இடையூறுமின்றி பல்கி பெருகி வாழ்ந்து வருகின்றன. பறவைகள் மட்டுமன்றி இந்த சரணாலயத்தில் பல்வேறு விலங்குகளையும் பார்க்க முடியும் என்பது ஒரு சிறப்பம்சம். அருகி வரும் பறவையினங்கள் மற்றும் புகலிடப்பறவைகளையும் இங்கு பார்க்கலாம். இவற்றில் காட்டு மயில் எனும் பறவை இனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எண்ணிக்கையில் குறைந்துவரும் இந்த பறவையினம் கரேரா பறவைகள் சரணாலயத்தில் இயற்கைச்சூழலில் வசிக்கின்றது. மொத்தம் 245 வகையான பறவைகள் இந்த சரணாலயத்தில் வசிப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

LRBurdak

 மாதவ் தேசிய பூங்கா

மாதவ் தேசிய பூங்கா


இயற்கை ரசிகர்களுக்கு இந்த வனப்பகுதி மிகவும் பிடித்தமான ஸ்தலமாக உள்ளது. தாவரச்செழுமை மற்றும் காட்டுயிர் அம்சங்கள் ஆகியவை இந்த பூங்காவில் மனித இடையூறுகள் ஏதுமின்றி நிரம்பியுள்ளன. சிந்தியா ராஜ வம்சத்து மன்னரான சிவாஜி ராவ் சிந்தியா என்பவரால் கட்டப்பட்ட ஜார்ஜ் கேசில் எனும் கோட்டை ஒன்றும் இந்த பூங்கா வளாகத்தில் இடம் பெற்றுள்ளது. சுதந்திர காலத்திற்கு முந்தைய காலனிய கால கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் இந்த கோட்டை வீற்றிருக்கிறது. இதன் மேற்பகுதியிலிருந்து சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பது ஒரு அற்புதமான அனுபவமாக சொல்லப்படுகிறது. சாகச பொழுதுபோக்கில் ஈடுபட விரும்பவர்கள் இங்குள்ள சாக்யா சாஹர் படகுத்துறை மூலமாக படகுச்சவாரி செய்து ஏரியில் வசிக்கும் முதலைகளை மிக அருகில் பார்த்து ரசிக்கலாம்.

Wiki

Read more about: travel temple forest
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X