Search
  • Follow NativePlanet
Share
» »500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது!

500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது!

500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது!

இந்தியாவில் பல அருமையான கோட்டைகள் அமைந்துள்ளன. அவற்றில் ஒவ்வொன்றுக்கும் பல சிறப்புகள் உள்ளன. வரலாற்று சிறப்புகள் கொண்ட கோட்டைகள் பல தற்போது சுற்றுலாத் தளங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

அவற்றில் முக்கிய மான ஒன்றான மத்தியபிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்த கோட்டையின் அற்புதங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 எங்குள்ளது

எங்குள்ளது


மத்தியபிரதேச மாநிலம், கார்கோன் மாவட்டத்தில் உள்ளது இந்த கோட்டை.

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

மும்பையிலிருந்து ஆக்ரா செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து 13 கிமீ கிழக்கில் அமைந்துள்ளது. இந்த கோட்டைக்கு இந்தூர் சென்று அங்கிருந்து எளிதாக செல்லமுடியும்.

இந்தூரிலிருந்து

இந்தூரிலிருந்து


இது இந்தூரிலிரந்து 91 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை ரியல் மகிழ்மதி என்று அழைக்கப்படுகிறது.

sumit surai

நர்மதா ஆறு

நர்மதா ஆறு

இந்த நகரம் நர்மதா ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளதால் இயற்கையாகவே, சுற்றுலாவுக்கான சாத்தியக்கூறுகள் அமையப்பெற்று விட்டது. அதுவுமில்லாமல் 500 மனைவிகளுடன் வாழ்ந்தால் ஒரு அரசன் எப்படி சுகபோகமாக வாழமுடியும் என்பதை காணவே இந்த கோட்டையை காண பலர் வருகின்றனர்.

Bernard Gagnon

 1818ம் ஆண்டுகளில் கோலோச்சிய கோட்டை

1818ம் ஆண்டுகளில் கோலோச்சிய கோட்டை

இந்த நகரமும் , கோட்டையும் ஒரு காலத்தில் அதிக நிலப்பரப்பை அடக்கி ஆண்டது. அதாவது 1818ம் ஆண்டுகளில் இந்த கோட்டை, மரத்தார் அரசர்களின் கோட்டையாக இருந்தது,.

Dchandresh

மகேஸ்வர் என்றால் என்ன

மகேஸ்வர் என்றால் என்ன

இந்த கோட்டையின் பெயருக்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, மகேசுவரன் என்றால் சிவனை குறிக்கும் சொல்லாகும்.

Bernard Gagnon

பாகுபலி படம்

பாகுபலி படம்


பாகுபலி படத்தில் காட்டப்பட்டுள்ள மகிஸ்மதி இந்த இடம்தான் என்கிறார்கள் சிலர். அதற்கேற்றார் போல பெயர்களும் ஒத்துப்போகின்றன.

Bernard Gagnon

 500 மனைவிகள்

500 மனைவிகள்


இந்த கோட்டையை மையமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த அரசன் சகஸ்ரார்ஜூன். அவனுக்கு 500 மனைவிகள்

Bernard Gagnon

 மகேஸ்வர் நகரம்

மகேஸ்வர் நகரம்

இந்த மகேஸ்வர் நகரத்தில் 24 ஆயிரம் பேர் வாழ்ந்துவருகின்றனர். இங்கு வாழும் மக்கள் 5ம் நூற்றாண்டுகளிலிருந்தே கைத்தறி தொழில் செய்து வருகின்றனர்.

Bernard Gagnon

 திருவிழாக்கள்

திருவிழாக்கள்

இந்த நகரம் மட்டுமில்லாது, மாநிலமே முழுவதும் கொண்டாட்டங்களால் நிறைந்து காணப்படுகிறது.

Bernard Gagnon

கொண்டாட்டங்களுடன் குதூகலம்

கொண்டாட்டங்களுடன் குதூகலம்


நாக பஞ்சமி, குடி படவா, தீஸ், மகாசிவராத்திரி, சமோதி அமாவாசை முதலிய பண்டிகைகள் பெரும்பாலும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

Bernard Gagnon

 திரைப்படங்கள்

திரைப்படங்கள்

இந்த இடங்களில் பல பாலிவுட் மற்றும் சில கோலிவுட் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அலைப்பாயுதே படத்தில் வரும் சிநேகிதனே பாடலும், யாரோ யாரோடி பாடலும் இந்த இடத்தில் எடுக்கப்பட்டது. லீலை படத்தில் வரும் ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி பாடல், ஆரம்பம் படத்தில் வரும் அடடடா ஆரம்பமே பாடலும் இங்கு எடுக்கப்பட்டவைதான்.

Bernard Gagnon

வேறு சில கோயில்கள்

வேறு சில கோயில்கள்

இந்த கோட்டையை சுற்றி பல கோயில்கள் இருப்பதாகவும், அவை நூற்றுக்கும் மேலே இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Bernard Gagnon

 உலகப் புகழ் பெற்ற கோயில்கள்

உலகப் புகழ் பெற்ற கோயில்கள்


காளியின் சக்தி பீடங்களில் ஒன்றான விந்தியாவிசினி இங்கு அமைந்துள்ளது.

ஏக் முகி தாதா கோயில் இங்கு 30 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது.

Bernard Gagnon

பிற கோயில்கள்

பிற கோயில்கள்


காசி விஸ்வநாதர் கோயில், அகில்யா மாதா கோயில், பத்ரிநாத் கோயில், பவானி கோயில் என பல கோயில்கள் உள்ள இந்த நகரத்துக்கு ஒரு சுற்றுலா போய்ட்டு வாங்க. முக்கியமா புதுமணத் தம்பதிகள்..

அடடே..உங்கள மறந்துட்டேனே.. காதலர்களுக்கும் ஏற்ற இடம்.

Bernard Gagnon

Read more about: travel fort madhya pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X