Search
  • Follow NativePlanet
Share
» »தோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா

தோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள அடக்கமான ஒரு மலைவாசஸ்தலம் இந்த தோரண்மால் ஆகும். சத்புரா மலைத்தொடரில் 1,150 அடி உயரத்தில் அமைந்துள்ள இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக அறியப்படு

By Udhaya

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள அடக்கமான ஒரு மலைவாசஸ்தலம் இந்த தோரண்மால் ஆகும். சத்புரா மலைத்தொடரில் 1,150 அடி உயரத்தில் அமைந்துள்ள இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக அறியப்படுகிறது. ஒரு பீடபூமி போன்று உச்சியில் 44 ச.கி.மீ பரப்பளவில் இந்த தோரண்மால் அமைந்துள்ளது. இந்த மலைவாசஸ்தலம் தோர்ணா எனும் மரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஐதீக நம்பிக்கைகளின்படி இந்தப்பிரதேசம் முழுக்க தோரணா மரங்களால் நிரம்பியிருந்ததாகவும் இங்கு வசித்த ஆதிகுடிகள் தோரணா மரத்தை பெண்மையின் வடிவமாக தோர்ணா தேவி என்றே வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தோரண்மால் பகுதி மிகவும் சிறப்பான ஒரு சுற்றுலாப் பிரதேசமாகும். இதன் அம்சங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாருங்கள்.

யஷ்வந்த் ஏரி

யஷ்வந்த் ஏரி

இங்குள்ள பல விசேஷ அம்சங்களில் யஷ்வந்த் ஏரி முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்று விளங்குகிறது. இந்த யஷ்வந்த் ஏரி முன்னாள் மஹாராஷ்டிரா முதல்வரான யஷ்வந்த் ராவ் சவாண் அவர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது. இயற்கையாக அமைந்துள்ள இந்த ஏரி 1.6 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த ஏரிப்பகுதிக்கு விஜயம் செய்யும் பயணிகள் படகுச்சவாரி மற்றும் மீன்பிடிப்பு போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். இந்த சூழலுக்கு மேலும் அழகூட்டும்படியாக அருகிலேயே ஒரு பிராட்டஸ்டண்ட் தேவாலயமும் அமைந்துள்ளது.

cool_spark

மற்ற சுற்றுலாத் தளங்கள்

மற்ற சுற்றுலாத் தளங்கள்

அது தவிர ஏராளமான கோயில்கள் இங்கு உள்ளன. கோரக்நாத் மற்றும் நாகார்ஜுனா கோயில்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். சீதாகாய் எனும் அழகிய பள்ளத்தாக்கு, காட்கி பாயிண்ட் மற்றும் சன்செட் பாயிண்ட் போன்ற மலைக்காட்சி தளங்கள் போன்றவையும் இங்கு முக்கியமான அம்சங்களாக உள்ளன.

cool_spark

 தோர்ணமால் – சிறப்பு தகவல்கள்

தோர்ணமால் – சிறப்பு தகவல்கள்

மலையின்மீது அமர்ந்திருப்பதால் இந்த தோரண்மால் மலைவாசஸ்தலம் வருடமுழுதுமே அற்புதமான பருவநிலையை கொண்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களுடனும் நல்ல போக்குவரத்து வசதிகளை கொண்டிருப்பதால் ஒரு நல்ல விடுமுறை சுற்றுலாத்தலமாக இது பிரசித்தமாக அறியப்படுகிறது.

cool_spark

சுற்றிலும் களிக்கலாம்

சுற்றிலும் களிக்கலாம்

நாலாபுறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளதால் பசுமையாக காட்சியளிக்கும் இந்த தோரண்மால் மஹாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது குளுமையான மலைவாசஸ்தலமாக அறியப்படுகிறது. பல அற்புதமான ஏரிகளையும், மலைக்காட்சி தளங்களையும் இது கொண்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மலையேற்றத்துக்கு உகந்த மலைப்பாதைகளும் இங்கு உள்ளன. நகரச்சந்தடிகளிலிருந்து விலகி அமைதியையும் இயற்கைச்சூழலையும் அனுபவிக்க தோதான சிறிய மலைவாசஸ்தலம் இந்த தோரண்மால் ஆகும்.

 கண்காட்சித் தளங்கள்

கண்காட்சித் தளங்கள்

ஆவாஷபரி பாயிண்ட்

இந்த ஆவாஷபரி பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளத்திலிருந்து மிக அற்புதமான மலைக்காட்சிகளை காண முடியும். இது மத்தியப்பிரதேச மாநில எல்லைக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. இதற்கு அருகாமையிலேயே உள்ள ஜலிந்தரநாத் கோயில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். அது தவிர வரலாற்று ஆர்வலர்களுக்கு பிடிக்கும் வகையில் கோண்டு ராஜா கோட்டையும் இங்கு அருகில் அமைந்துள்ளது.

காட்கி பாயிண்ட்

ஆவாஷபரி பாயிண்ட் போன்றே இந்த காட்கி பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளமும் தோரண்மால் பகுதியின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த மலைப்பகுதியை சுற்றிலும் ஒரு பெரிய மதிற்சுவர் எழுப்பப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அதன் இடிபாடுகள் இந்த இடத்தில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

சீதா காய்

சீதா தேவியின் பெயரால் அழைக்கப்படும் இந்த அற்புதமான பள்ளத்தாக்குப்பகுதி தோரண்மாலில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்குள்ள நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் அதிக பயணிகளை ஈர்க்கின்றது. அருகாமையிலேயே எக்கோ பாயிண்ட் என்ற இடமும் உள்ளது.

cool_spark

Read more about: travel maharashtra
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X