Search
  • Follow NativePlanet
Share
» »ராயல் என்பீல்டில் நீண்ட தூர பயணம் போக சிறந்த வழித்தடங்கள்

ராயல் என்பீல்டில் நீண்ட தூர பயணம் போக சிறந்த வழித்தடங்கள்

சிறு வயதில் நம்ம ஊரில் புல்லெட் வண்டியில் கம்பீரமாக உலா வரும் பெரியவர்களை பார்த்து நிச்சயம் பிரமித்திருப்போம். புல்லெட் வண்டி எழுப்பும் அதிரும் சத்தமும், அதில் உட்கார்ந்து வருபவரின் மிடுக்கான தோரணையும் வேறு எந்த வண்டியிலும் நமக்கு கிடைக்காது. இதனால் தான் இன்றும் புல்லெட் வண்டிகளுக்கான மவுசு சற்றும் குறையவில்லை. சொல்லப்போனால் பழைய மாடல் புல்லெட் வண்டிகளை லட்சங்கள் கொடுத்தும் வாங்க தயராகவே பலர் இருக்கின்றனர்.

அப்படி வாங்க முக்கிய காரணங்களில் ஒன்று நீண்ட தூர பயணங்கள் போக புல்லெட்டை விட சிறந்ததொரு வண்டியே இல்லை என்பது தான். நண்பர்களுடன் குழுவாக புல்லெட்டில் நமக்கு பிடித்ததொரு இடத்திற்கு பயணிப்பதை காட்டிலும் சுகமான அனுபவம் வேறு இருக்க முடியாது. வாருங்கள் இந்தியாவில் புல்லெட்டில் நீண்ட தூரம் பயணிக்க சிறந்த வழித்தடங்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ஜெய்பூர் - ஜெய்சால்மர் :

ஜெய்பூர் - ஜெய்சால்மர் :

இந்தியாவின் சுற்றுலா தலைநகரான ராஜஸ்தானில் தகிக்கும் பாலைவனத்திற்கு ஊடாக ஜெய்ப்பூரில் இருந்து ஜெய்சால்மர் வரையிலான 570 பயணத்தை மேற்கொள்ளுங்கள். இந்த பயண வழித்தடத்தை பரிந்துரைக்க முக்கிய காரணங்களில் ஒன்று பாலைவனத்தில் பயணிக்கும் அனுபவம் இந்தியாவில் வேறெங்கும் நமக்கு கிடைக்காது என்பது தான்.

Photo: Flickr

ஜெய்பூர் - ஜெய்சால்மர் :

ஜெய்பூர் - ஜெய்சால்மர் :

பாலைவனமாக இருந்தாலும் சாலைகள் மிகச்சிறப்பாக இருக்கின்றன. வெயில் குறைந்து அந்தி சாய்ந்த பிறகு பாலைவன வானில் நிகழும் வர்ணஜாலங்களையும் நாம் கண்டு மகிழலாம். வழியில் அரண்மனைகள் நிரந்த 'ஜோத்பூர்' நகருக்கும், இந்தியாவின் பெருஞ்சுவர் எனப்படும் கும்பல்கர்க்ஹ் கோட்டைக்கும் சென்று சுற்றிப்பாருங்கள்.

Photo: FLickr

ஜெய்பூர் - ஜெய்சால்மர் :

ஜெய்பூர் - ஜெய்சால்மர் :

ஜெய்பூர் மற்றும் ஜெய்சால்மர் நகரங்களை பற்றிய மேலதிக தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

புகைப்படம் : இந்திய பெருஞ்சுவர் என்று அழைக்கப்படும் கும்பல்கர்ஹ் கோட்டை

ஜெய்பூர்

ஜெய்சால்மர்

மனாலி - லெஹ் :

மனாலி - லெஹ் :

கனவுப்பயணம் என்று ஒன்றை குறிப்பிடவேண்டும் என்றால் சந்தேகமே இல்லாமல் அது மனாலி - லெஹ் வரையிலான 470 கி.மீ தூர பயணம் தான். இந்த பயணத்தின் வழியில் நமக்கு காணக்கிடைக்கும் இமய மலையின் பேரழகு மிக்க இடங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவைகளாக இருக்கும்.

Photo: Flickr

மனாலி - லெஹ் :

மனாலி - லெஹ் :

ஒரு வருடத்தில் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையே இந்த சாலை பயன்பாட்டுக்கு உகந்ததாக இருக்கிறது. மற்ற மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் மனாலி - லெஹ் தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பது சாத்தியமற்றதாகிறது.

Photo: Flickr

மனாலி - லெஹ் :

மனாலி - லெஹ் :

ரோஹ்டங் கணவாய், கிளாங், கேம்ப் அடித்து தங்க தகுந்த இடமான ஜிங்க்ஜிங் பார், சார்சு, தங்கங் லா போன்றவை இந்த வழித்தடத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலாத் தளங்களாகும். இந்த பயணத்தை நிறைவு செய்ய குறைந்தது 4 - 6 நாட்களாகும்

Photo: Flickr

மனாலி - லெஹ் :

மனாலி - லெஹ் :

கணிக்க முடியாத சீதோஷன நிலை மற்றும் உயர்ந்துகொண்டே வரும் சாலைகள் நமக்கு இந்த பயணத்தை கடுமையானதாக மாற்றும்.

Photo: Flickr

மனாலி - லெஹ் :

மனாலி - லெஹ் :

மனாலி மற்றும் லெஹ் இடங்களை பற்றிய விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள். மனாலி - லெஹ் பயணத்தை பற்றிய ஒரு புகைப்பட தொகுப்பை காணலாம் வாருங்கள்.

மனாலி

லெஹ்

Photo: Flickr

மனாலி - லெஹ் :

மனாலி - லெஹ் :

கரணம் தப்பினால் மரணம் என்கிற ரீதியில் இருக்கும் ஆபத்து நிறைந்த சாஜிலா கணவாய் சாலை.

Photo: Flickr

மனாலி - லெஹ் :

மனாலி - லெஹ் :

கோடை காலத்தில் பனி உறைந்திருக்கும் போது லடாக் பகுதியின் பசுமை நிறைந்த பேரழகு நம்மை நிச்சயம் மூர்ச்சையாக்கும்.

Photo: Flickr

மனாலி - லெஹ் :

மனாலி - லெஹ் :

பேரழகின் பிரதிபலிப்பு.

Photo: Flickr

மனாலி - லெஹ் :

மனாலி - லெஹ் :

லடாக் பகுதியில் இருக்கும் நுப்ரா பள்ளத்தாக்கு.

Photo: Flickr

தி க்ராண்ட் டிரன்க் ரோடு:

தி க்ராண்ட் டிரன்க் ரோடு:

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புகள் கொண்ட இந்திய பெருங்கண்டத்தில் இருக்கும் நான்கு நாடுகளையும் இணைக்கும் சாலை தான் இந்த க்ராண்ட் டிரன்க் ரோடு. மவுரிய பேரரசர்கள் காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருக்கும் இந்த சாலையில் பயணிப்பது நாம் பார்த்திராத இந்தியாவின் வேறொரு முகத்தை நாம் காணலாம்.

Photo:Avik Haldar

தி க்ராண்ட் டிரன்க் ரோடு:

தி க்ராண்ட் டிரன்க் ரோடு:

பங்களாதேசின் சிட்டகாங் நகரில் துவங்கி கொல்கத்தாவின் துர்காபூர், வாரணாசி, அலகாபாத், கான்பூர், தில்லி, அம்ரித்சர் வழியாக இந்திய பாகிஸ்தான் எல்லையை அடைந்து பின் லாகூர், பெஷாவர் வழியாக ஆப்கானிஸ்தானின் காபுல் நகரத்தில் முடிவடைகிறது இந்த 2500 தூர நீளம் கொண்ட சாலை.

தி க்ராண்ட் டிரன்க் ரோடு:

தி க்ராண்ட் டிரன்க் ரோடு:

இந்தியாவில் மொத்தம் 1700 கி.மீ தூரத்திற்கு இந்த சாலை உள்ளது. இந்தியாவில் கிழக்கு எல்லையில் இருந்து மேற்கு எல்லை வரை இந்த சாலையில் நாம் பயணிக்கலாம். மலைகளில் அமைந்திருக்கும் பசுமையான பெங்கால் தேயிலைத் தோட்டங்கள், பஞ்சாபின் கோதுமை வயல்கள், பழமை மாறாத பழைய தில்லியின் கட்டிடங்கள், காவியுடை அணிந்த சாதுக்கள் என வேறுபட்ட இந்தியாவின் பண்முகங்களை நாம் இந்த பயணத்தின் போது காணலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X