Search
 • Follow NativePlanet
Share
» »இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!

இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!

முப்பானே - அங்கே என்ன இருக்கிறது? ஏன் பல காலமாக இயற்கை ஆர்வலர்களின் பேச்சுப் பொருளாக இருந்து வருகிறது? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

கர்நாடகாவின் தலைப்பாகையில் ஒரு விலைமதிப்பற்ற நகையாக, காட்சியளிக்கும் இந்த முப்பானே சயாத்திரி மலைகளின் இயற்கையான வரங்களால் நிறைந்துள்ளது. பசுமையான பள்ளத்தாக்குகள், பொங்கி வழியும் ஆறுகள், செழிப்பான புல்வெளிகள் மற்றும் அடர்ந்த காடுகளுடன் முப்பானே ஒரு புதையலாக வீற்றிரிக்கிறது.

முப்பானேவில் என்னதான் இருக்கிறது?

முப்பானேவில் என்னதான் இருக்கிறது?

ஜோக் நீர்வீழ்ச்சியில் இருந்து வெறும் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஷராவதி சாகச முகாம், சாகசத்துடன் கூடிய மலைகளின் பிரம்மாண்டத்தை ஒருங்கிணைக்கிறது. தலகலலே நீர்த்தேக்கத்தை ஒட்டிய ஒரு குன்றின் சரிவுகளில் அழகாக அமைந்திருக்கும் இந்த இயற்கை முகாம், சூரிய ஒளி மற்றும் மழையின் உற்சாகத்தை அளிக்கும் சிறந்த இடமாகும். ஒவ்வொரு பருவமும் இந்த அற்புதமான மலைகளுக்குச் செல்வதற்கு ஒரு புதிய காரணத்தைக் கொண்டுவருகிறது.

முப்பானேவை எப்படி அடைவது?

முப்பானேவை எப்படி அடைவது?

கர்நாடக வனத் துறையின் மேற்பார்வையின் கீழ் வருவதால் இங்கு வருவதற்கு முன் முன்பதிவு செய்திருத்தல் அவசியம். சாராவதி உப்பங்கழியில் அமைந்துள்ள இந்த இயற்கை முகாம், பெங்களூருவில் இருந்து 440 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. உங்களது சொந்த காரிலோ அல்லது பேருந்து மார்க்கமாகவோ NH 48 வழியாக முப்பானேவை வந்தடையலாம். ஏழு அல்லது எட்டு மணி நேர நீண்ட பயணத்திற்கு பிறகு, வரவேற்பு பலகையுடன் கூடிய பதாகை உங்களை வரவேற்க்கும்.

ஆனால் இது ஆரம்பம் மட்டுமே, நீங்கள் சென்ற இலக்கை இன்னும் அடையவில்லை. உரிய அனுமதிகளைப் பெற்றவுடன், நீங்கள் வாயிலுக்குள் நுழைந்து காட்டின் கரடுமுரடான நிலப்பரப்பு வழியாகச் செல்ல வேண்டும். காட்டுக்குள் 3-4 கிமீ தூரம் சென்ற பிறகு விருந்தினர் மாளிகையை அடைவீர்கள்.

சொர்க்கத்தில் இருந்து விழுந்த ஒரு சிறு துண்டு போல காட்சியளிக்கும் முப்பானே

சொர்க்கத்தில் இருந்து விழுந்த ஒரு சிறு துண்டு போல காட்சியளிக்கும் முப்பானே

நீங்கள் ஒரு தீவில் இருக்கிறீர்களா அல்லது காட்டில் இருக்கிறீர்களா அல்லது ஒரு திரைப்படத்தில் இருக்கிறீர்களா என்று பலவும் உங்கள் மனதில் தோன்றி உண்மையை உணர சற்று நேரம் பிடிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தண்ணீரின் அலாதியான அமைதி, பறவைகளின் இனிமையான கூக்குரல், அடர்ந்த மரங்கள், அமைதியான மனம் என்று நீங்கள் அந்த இடத்தில் மூழ்கி போவது உறுதி!

முப்பானே பயணத்தின் வசீகரமும் தனிமையும் அந்த இடத்தில் எளிமையாக அமர்ந்து இயற்கையோடு ஒன்றிவிடுவதில் அடங்கியிருந்தாலும், வனத்துறை அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்படும் படகு சவாரி, கயாக்கிங், நீச்சல் மற்றும் ட்ரெக்கிங் ஆகியவற்றில் நீங்கள் கலந்து கொள்ளலாம்.

களைப்படைய வைக்காத முப்பானே ட்ரெக்கிங்

களைப்படைய வைக்காத முப்பானே ட்ரெக்கிங்

இயற்கை முகாமில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 110 மீட்டர் உயரமான டப்பே நீர்வீழ்ச்சியை நீங்கள் ட்ரெக்கிங் செய்து ஆராயலாம். நீங்கள் மாலையில் கேம்ஃப் பைர் வைத்து மகிழலாம். இங்கு இருக்கும் சிறப்பம்சமே இந்த சின்ன சின்ன முகாம்களில் இரவில் தங்குவது தான். உங்கள் காதுகளில் கிசுகிசுக்கும் காற்றுடன் நீங்கள் அந்த நெருப்பைச் சுற்றி உட்கார்ந்தால், நம் கிரகத்தின் ஒவ்வொரு அடிப்படை கூறுகளான வானம், நீர், காற்று, பூமி மற்றும் நெருப்புடன் ஒன்றாக இருப்பதைக் காண்பீர்கள்.

அனைத்து வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள், இயற்கைக் கவிஞர்கள், அமைதியான உள்ளங்கள், கலைஞர்கள் மற்றும் ஓய்வுக்காகத் தேடும் அனைவருக்கும் இது ஒரு சரியான இடம். அமைதி உங்களுக்குள் மூழ்கியவுடன், இந்த மாயாஜால இடத்தை விட்டு வெளியேற உங்களை நீங்கள் சமாதானப்படுத்திக் கொண்டால் திரும்பி வரும் வழியில், ஜோக் நீர்வீழ்ச்சிக்கு ஊட்டமாக செயல்படும் செக் டேம் மற்றும் வெறும் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி ஆகியவற்றைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சியடையலாம்.

நீங்கள் எப்போது செல்ல போகிறீர்கள்?

நீங்கள் எப்போது செல்ல போகிறீர்கள்?

உங்களுக்கு தேவையானது எல்லாம் சிறு விடுமுறையும், சிறு பணமும் தான். பரபரப்பான இந்த வாழ்வில் இருந்து சற்று ஓய்வெடுத்து இளைப்பாற முப்பானே ஒரு சரியான தேர்வு, ஒருமுறையேனும் சென்று வந்துவிடுங்கள்.

பின்குறிப்பு

· போதுமான பணத்தை எடுத்துச் செல்லுங்கள்.

· மொபைல் நெட்வொர்க்குகள் மற்றும் மின்சாரத்தை எதிர்பார்க்க வேண்டாம். கேம்ஃப் பயருடன் இசையை ரசிக்க பவர் பேங்குகள் மற்றும் போர்ட்டபிள் ஸ்பீக்கர்களை எடுத்துச் செல்லுங்கள்.

· சன்ஸ்கிரீன் லோஷன்களை மறந்துவிடாதீர்கள்.

· திண்பண்டங்களை எடுத்துச்செல்லுங்கள், இருப்பினும் அங்கு கிடைக்கும் உணவே பிரமாதமாக இருக்கும் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

· நிச்சயம் நீங்கள் ஒரு பேக் பேக்கரின் அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

  Read more about: muppane nature camp muppane
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X