Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் எங்கெல்லாம் மிகச்சுவையான அசைவ உணவுகள் கிடைக்கும் தெரியுமா?

இந்தியாவில் எங்கெல்லாம் மிகச்சுவையான அசைவ உணவுகள் கிடைக்கும் தெரியுமா?

By Naveen

என்னதான் கே.எப்.சி, மெக்டோனால்ட்ஸ் போன்ற பன்னாட்டு அசைவ உணவகங்கள் இந்தியாவில் கடைவிரித்தாலும் இந்தியாவில் பலவித மசாலாப் பொருட்களை கொண்டு சமைக்கப்படும் ஸ்பைசியான அசைவ உணவுகளை அடித்துக்கொள்ள முடியாது.

அப்படி இந்தியாவெங்கும் கிடைக்கும் அதிசுவையான, விதவிதமான அசைவ உணவுகளை பற்றி அறிந்துகொள்ள ஒரு உணவுச்சுற்றுலா போகலாம் வாருங்கள்.

லக்னோ - கலூட்டி கபாப் :

லக்னோ - கலூட்டி கபாப் :

முகலாயர்களின் ஆட்சியின் போது அவர்களின் முக்கிய நகரமாக இருந்த லக்னோவின் உணவு மற்றும் கலாசாரத்தில் பெரிய அளவில் முகலாயர்களின் தாக்கம் இருப்பதை காண முடியும்.

அப்படி முகலாயர்களால் இந்தியாவினுள் கொண்டுவரப்பட்ட உணவுகளில் ஒன்று தான் கலூட்டி கபாப் ஆகும்.

லக்னோ - கலூட்டி கபாப் :

லக்னோ - கலூட்டி கபாப் :

லக்னோவை ஆட்சி செய்த நவாப் வாஜித் அலி என்பவருக்கு பற்கள் இல்லதாததால் எளிதாக மாமிசத்தை சுவைக்கும் விதமாக இந்தகலூட்டி கபாப் உருவாக்கப்பட்டிருக்கிறது.

எலும்பு நீக்கிய மெதுமெதுவான ஆட்றைச்சியை பப்பாளி மற்றும் பல்வேறு மசாலாப் பொருட்களுடன் சேர்த்து கலந்து நெய்யில் பொறிக்கப்படுகிறதுகலூட்டி கபாப்.

லக்னோ - கலூட்டி கபாப் :

லக்னோ - கலூட்டி கபாப் :

பாரம்பரியம் மிக்க லக்னோ நகருக்கு எப்போதாவது செல்லும் வாய்ப்புக்கிடைத்தால் இந்த கபாபை சுவைக்க தவறாதீர்கள். கபாப் தவிர புலாவ் வகை உணவுகளுக்கும் லக்னோ பெயர்போன இடமாகும்.

லக்னோ நகரை பற்றிய பயண தகவல்கள்

லக்னோ ஹோட்டல்கள்

ஜம்மு - கட்டா மீட்:

ஜம்மு - கட்டா மீட்:

கட்டா மீட் இந்தியாவின் மிகச்சிறந்த மட்டன் உணவுகளில் ஒன்றாக புகழப்படுகிறது. இதன் பூர்வீகம் ஜம்முவில் வசிக்கும் டோக்ரா மக்களின் சமையலறை ஆகும்.

ஜம்மு - கட்டா மீட்:

ஜம்மு - கட்டா மீட்:

பொதுவாக செய்யப்படும் மட்டன் கிரேவி போன்று தான் இந்த கட்டா மீட் சமைக்கப்படுகிறது என்றாலும் இதனோடு உலரவைத்து அரைக்கப்பட்ட மாங்காய் அல்லது மாதுளம்பழத்தின் பொடி சேர்க்கப்படுகிறது.

ஜம்மு - கட்டா மீட்:

ஜம்மு - கட்டா மீட்:

அதுவே கட்டா மீட்டின் தனித்துவமான புளிப்பு சுவைக்கு காரணமாக சொல்லப்படுகிறது. அரிசி சாதம் அல்லது ரொட்டியுடன் சேர்த்து இது பரிமாறப்படுகிறது.

செட்டிநாடு மட்டன் வறுவல்:

செட்டிநாடு மட்டன் வறுவல்:

தமிழ்நாட்டில் அசைவ உணவு என்றாலே அது செட்டிநாட்டு விருந்து தான். கைகளால் அரைக்கப்பட்ட மசாலாக்களை கொண்டு செய்யப்படும் செட்டிநாட்டு உணவு வகைகளில் பிரபலமானது கண்களில் நீர் வரவைக்கும் அளவுக்கு மிகக்காரமான செட்டிநாட்டு மட்டன் வறுவல் ஆகும்.

செட்டிநாட்டு உணவுகளை அதன் சுவை மாறாமல் ருசித்திட மதுரை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள செட்டிநாட்டு உணவகங்களுக்கு செல்ல வேண்டும்.

கேரளா மட்டன் குழம்பு:

கேரளா மட்டன் குழம்பு:

கேரளா கோயில்களுக்கும், ஆயுர்வேதத்துக்கும் மட்டுமில்லாது அறுசுவை உணவுகளுக்கும் பெயர்போன இடமாகும். கேரளா மட்டன் குழம்பு பார்த்தவுடனேயே நாவூறவைக்கும் ஓர் உணவாகும். தேங்காய், ஏலக்காய், மல்லி, மிளகு போன்ற நறுமணப்பொருட்கள் சேர்த்து இது சமைக்கப்படுகிறது.

ரோகன் கோஷ்:

ரோகன் கோஷ்:

காஷ்மீரி உணவான ரோகன் கோஷ் உலகளவில் பிரபலமான இந்திய அசைவ உணவுகளில் ஒன்றாகும். மிகவும் காரமான காஷ்மீரி மிளகாய், ஏலக்காய், முந்திரி மற்றும் தக்காளி பேஸ்ட் கொண்டு இந்த உணவு தயாரிக்கப்படுகிறது.

ரோகன் கோஷ்:

ரோகன் கோஷ்:

இது பெர்சியாவில் முதன்முதலில் சமைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் முகலாயர்களால் இந்தியாவினுள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மற்ற இந்திய அசைவ குலம்புகளைக் காட்டிலும் மிகுந்த சிவப்பு நிறமும், சுண்டியிழுக்கும் மணமும் ரோகன் கோஷின் தனித்துவம் ஆகும்.

அடுத்தமுறை வடஇந்திய உணவுகள் கிடைக்கும் உணவகத்திற்கு சென்றால் நிச்சயம் இதனை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

Liji Jinaraj

லால் மான்ஸ்:

லால் மான்ஸ்:

ராஜஸ்தானிய ராஜ போஜனத்தில் முக்கிய உணவுகளில் ஒன்று தான் இந்த லால் மான்ஸ் ஆகும். இஞ்சி மற்றும் காரமான மிளகாய் மற்றும் தயிர் சேர்க்கப்பட்டு லால் மான்ஸ் தயாரிக்கப்படுகிறது.

Garrett Ziegler

லால் மான்ஸ்:

லால் மான்ஸ்:

அந்தக்காலத்தில் ராஜஸ்தானிய ராஜாக்கள் தாங்கள் வேட்டையாடிய மான்கள், காட்டுப்பன்றிகள் போன்றவற்றை கொண்டு லால் மானஸை தயாரித்திருக்கின்றனர்.

இப்போது பொதுவாக ஆட்டிறைச்சி கொண்டு இது சமைக்கப்படுகிறது.

Robert Logie

வாசகர் கருத்து:

வாசகர் கருத்து:

இங்கே குறிப்பிடப்பட்டிருப்பதை தவிர இன்னும் பலப்பல சுவையான இந்திய அசைவ உணவுகள் உண்டு. உங்களுக்கு அப்படியான சுவையான அசைவ உணவுகள் கிடைக்கும் இடங்களை பற்றித் தெரிந்திருந்தால் அதனை பின்னூட்டத்தில் பகிர்ந்திடுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X