Search
  • Follow NativePlanet
Share
» »600 வருடங்களாக தொடர்ந்து தவத்தில் ஈடுபட்டு வரும் முனிவர் வாழும் மலே மகாதேஸ்வரா கோயில் !!

600 வருடங்களாக தொடர்ந்து தவத்தில் ஈடுபட்டு வரும் முனிவர் வாழும் மலே மகாதேஸ்வரா கோயில் !!

தமிழக கர்னாடக எல்லையில் அமைந்திருக்கிறது பசுமையான காடுகள் நிறைந்த மலே மகாதேஸ்வரா மலை. இந்த மலையின் மேல் புகழ்பெற்ற சிவாலயமான மலே மகாதேஸ்வரா கோயில் இருக்கிறது. மிக சிறப்பு வாய்ந்த சைவ திருக்கோயிலான இந்த இடத்திற்கு இரண்டு மாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.

இந்த கோயிலில் தான் ஸ்ரீ மகாதேஸ்வரா என்ற முனிவர் 15ஆம் நூற்றாண்டு துவங்கி இன்று வரை தொடர்ந்து தவத்தில் ஈடுபட்டுள்ளனர் என நம்பப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அந்த முனிவர் மலே மகாதேஸ்வரா மலையில் புலி வாகனத்தின் மேல் அமர்ந்தபடி உலா வருவதாகவும், அவர் பலரை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட அபூர்வமான விஷயங்கள் நிறைந்திருக்கும் மலே மகாதேஸ்வரா கோயிலுக்கு ஒரு சுவாரஸ்யம் நிறைந்த பயணம் போகலாம் வாருங்கள்.

மலே மகாதேஸ்வரா கோயில் :

மலே மகாதேஸ்வரா கோயில் :

இந்த மலே மகாதேஸ்வரா கோயிலானது கர்னாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொல்லேகள் தாலுக்காவில் அமைந்திருக்கிறது.

இது மைசூரில் இருந்து 150 கி.மீ தொலைவிலும், பெங்களுருவில் இருந்து 210 கி.மீ தொலைவிலும் இருக்கிறது.

Tumkurameen

மலே மகாதேஸ்வரா கோயில் :

மலே மகாதேஸ்வரா கோயில் :

தென் இந்தியாவில் உள்ள மிகப்புகழ்பெற்ற மற்றும் மிக சக்திவாய்ந்த சிவன் கோயிலாக பக்தர்களால் கருதப்படும் மலே மகாதேஸ்வரா கோயில் பசுமையான அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த மலையின் நடுவே கிட்டத்தட்ட 155 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது.

Pavithrah

மலே மகாதேஸ்வரா கோயில் :

மலே மகாதேஸ்வரா கோயில் :

முதன்முதலில் குருப கௌடா மற்றும் ஜுஞ்சே கௌடா என்ற இரண்டு மிகப்பெரும் செல்வந்தர்களால் சிறிய அளவில் கட்டப்பட்டிருக்கிறது. பின் கொஞ்சம் கொஞ்சமாக இக்கோயில் பிரபலமாகவே இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் நன்கொடையை கொண்டு இப்போது நாம் பார்க்கும் பிரம்மாண்ட தோற்றமுடைய கோயில் கட்டப்பட்டிருக்கிறது .

Pavithrah

மலே மகாதேஸ்வரா கோயில் :

மலே மகாதேஸ்வரா கோயில் :

மற்ற சிவன் கோயில்களை விடவும் இந்த மகாதேஸ்வரா கோயில் சற்றே வித்தியாசமானது ஆகும். காரணம் 600 வருடங்களுக்கு முன்பு வாழ்த்து வந்த மகாதேஸ்வரர் என்ற முனிவர் சிவ பெருமானின் அம்சம் பொருந்தியவர் என்றும், அவர் தான் லிங்க வடிவில் இன்றும் தவத்தில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

hardulphatak

மலே மகாதேஸ்வரா கோயில் :

மலே மகாதேஸ்வரா கோயில் :

இக்கோயிலின் கருவறையில் இருக்கும் மகாதேஸ்வரரின் லிங்கமானது 'ஸ்வயம்பு லிங்கம்' என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

அதுமட்டுமில்லாமல் சுவாமி மகாதேஸ்வரர் புலி வாகனத்தில் அமர்ந்தவாறு மகாதேஸ்வரா மலையை சுற்றி வருவதாகவும் இங்கு தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களையும் தவத்தில் ஈடுபட்டு வரும் முனிவர்களையும் ஆபத்தில் இருந்து காப்பாற்றி அதிசயங்களை நிகழ்த்துவதாகவும் கூறப்படுகிறது.

மலே மகாதேஸ்வரா கோயில் :

மலே மகாதேஸ்வரா கோயில் :

500 வருடங்களுக்கு முன்பு உத்தராஜம்மா என்ற கன்னிக்கு மகனாக பிறந்திருக்கிறார் மகாதேஸ்வர முனிவர். சிறு வயதில் இருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராகவும், அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய வல்லமை கொண்டவராகவும் இருந்திருக்கிறார்.

வளர்ந்து வாலிபனான பிறகு இந்த மகாதேஸ்வர மலைக்கு வந்து, ஷரவனா என்ற தீய சக்திகள் பொருந்திய அரக்கனிடம் இருந்து இம்மலையில் தவத்தில் ஈடுபட்டு வரும் சிவனடியார்களை பாதுகாக்கிறார்.

மலே மகாதேஸ்வரா கோயில் :

மலே மகாதேஸ்வரா கோயில் :

அதன் பிறகு நிரந்தரமாக இந்த மகாதேஸ்வரா மலையில் தங்கி இம்மலையில் வாழ்ந்த பழங்குடி மக்களிடையே ஆன்மீக பணியில் ஈடுபட்டுள்ளார். மகாதேஸ்வரரின் மகிமையை உணர்ந்த அம்மக்கள் அவரின் சீடர்களாக மாறி அவருக்கு தொண்டாற்றியிருக்கின்றனர்.

மலே மகாதேஸ்வரா கோயில் :

மலே மகாதேஸ்வரா கோயில் :

அப்படி இவரின் சீடராக மாறியவர்களின் வாரிசுகளே பரம்பரை பரம்பரையாக இக்கோயிலின் அர்ச்சகர்களாக இருந்து வருகின்றார்.

1953ஆம் ஆண்டு வரை இக்கோயிலானது மகாதேஸ்வர முனிவரால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ சாலூர் மடத்தின் கீழ் இருந்து வந்தது. இப்போது கர்னாடக அரசின் பராமரிப்பின் கீழ் இந்த கோயில் இருக்கிறது.

Pavithrah

மலே மகாதேஸ்வரா கோயில் :

மலே மகாதேஸ்வரா கோயில் :

50 வருடங்களுக்கு முன்பு வரை இக்கோயிலுக்கு நடந்து மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால் இன்று தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் தமிழக மற்றும் கர்னாடக அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Pavithrah

மலே மகாதேஸ்வரா கோயில் :

மலே மகாதேஸ்வரா கோயில் :

இந்த கோயிலுக்கு புனித யாத்திரை வரும் பக்தர்கள் அனைவரும் தவறாமல் மகாதேஸ்வரா மலையில் பாய்ந்தோடும் 'அந்தரகங்கே' என்ற ஓடையில் ஸ்நானம் செய்கின்றனர்.

இக்கோயிலை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X