Search
  • Follow NativePlanet
Share
» »சீக்கிரமா ஒரு டூர் போகனுமா?

சீக்கிரமா ஒரு டூர் போகனுமா?

வார இறுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் திடீரென எங்கேனும் சுற்றுலா செல்லலாம் என முடிவெடுத்து விட்டு பின் எங்கே செல்வது என சரியான திட்டமிடல் இல்லாமல் தவிக்கிறீர்களா? வாருங்கள் நீங்கள் வசிக்கும் நகரில் இருந்து நினைத்தவுடன் சுற்றுலா கிளம்பி செல்ல அருமையான இடங்கள் எவை என்பதை தெரிந்து கொள்வோம். நீண்ட நாட்கள் தெளிவாக திட்டமிட்டு செல்லும் பயணங்களை விட இம்மாதிரியான திடீர் சுற்றுலாவில் தான் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும்.

பெங்களுருவில் இருந்து:

பெங்களுருவில் இருந்து:

இந்தியாவின் தொழில் நுட்ப தலைநகரான பெங்களுருவில் இருந்து சில மணி நேர பயணத்தில் இயற்கை நர்த்தனமாடும் அழகிய இடங்கள் உள்ளன.

Photo: PARSHOTAM LAL TANDON

சிக்மகளூர்:

சிக்மகளூர்:

அற்புதமான இயற்கை காட்சிகளையும், சாகசம் செய்ய தகுந்த இடங்களையும் கொண்டிருக்கும் இடம்தான் சிக்மகளூர். இந்த இடத்தின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது முல்லையணகிரி மலை இங்கே அமைந்திருக்கிறது.

Photo: Premnath Thirumalaisamy

சிக்மகளூர்:

சிக்மகளூர்:

மலையேற்றம் மற்றும் சைக்கிளிங் செய்ய தென் இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த இடங்களில் ஒன்றாக இந்த சிக்மகளூர் பார்க்கப்படுகிறது. சாகசம் விரும்பும் நண்பர்களுடன் செல்ல சிறந்த இடங்களில் ஒன்றான சிக்மகளூர் பெங்களுருவில் இருந்து 240 கி.மீ தொலைவில் அமைந்திருகிறது. நான்கு மணிநேர பயணத்தில் இவ்விடத்தை நாம் அடையலாம்.

Photo: Vikram Vetrivel

கூர்க்:

கூர்க்:

பெங்களுருவில் இருந்து கொஞ்சம் அதிக தூரத்தில் அமைந்திருகிறது என்றாலும் கூர்கின் அழகின் முன் அது ஒரு பொருட்டே இல்லை. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் உயிர் ஆதாரமாக விளங்கும் காவேரி இந்த குடகு மலைகளில் இருந்து தான் உற்பத்தியாகிறது.

Photo: Kalidas Pavithran

கூர்க் :

கூர்க் :

இங்குள்ள துபாரே யானைகள் முகாமில் யானைகளின் மேல் அமர்ந்தபடி காட்டுக்குள் உலா வரலாம், ராஜாவின் சிம்மாசனம் என்று சொல்லப்படும் மலை முனையில் நின்று பசுமையான மலைகளுக்கு பின்னே நடக்கும் விவரிக்க முடியாத அழகுடைய சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை ரசிக்கலாம்.

Photo: Saurabh Sahni

கூர்க்:

கூர்க்:

இந்தியாவில் ரப்டிங் எனப்படும் சாகச படகு சவாரி செய்ய கூர்க் நல்லதொரு இடமாகும். இவை தவிர கண்களுக்கு குளுமையுட்டும் காப்பித்தோட்டங்கள், அருவிகள் என தேனிலவு செல்லவும், சாகச பயணம் செல்லவும் நல்லதொரு இடம் கூர்க் ஆகும்.

பெங்களுருவில் இருந்து 260 கி.மீ தூரத்தில் 5 மணி நேர பயணத்தில் கூர்க்கை நாம் அடையலாம்.

Photo: Vijay Bandari

தில்லியில் இருந்து:

தில்லியில் இருந்து:

இந்தியாவின் தலைநகரான தில்லி பழமை மற்றும் புதுமையின் அற்புதக்கலவைகளின் சங்கமம் ஆகும். மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகராக ஒரு காலத்தில் திகழ்ந்த தில்லி இன்று நவீன இந்தியாவின் வாயிலாக இருக்கிறது. வாருங்கள் தில்லியில் இருந்து சீக்கிரம் சென்று வரக்கூடிய சுற்றுலாத்தலங்கள் எவை எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

Photo: LASZLO ILYES

முசூரி:

முசூரி:

உத்தரகண்ட் மாநிலத்தில் தேஹ்ராதூனில் அமைந்திருக்கும் முசூரி நகரம் வட இந்தியாவின் முக்கியமான மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும். தேயிலைத் தோட்டங்கள், அழகிய ஏரிகள், அருவிகள் என இங்கே நாம் கண்டு ரசிக்க ஏராளமான இடங்கள் உள்ளன.

Photo: Riser50

கெம்ப்டி அருவி:

கெம்ப்டி அருவி:

நாம் இதுவரை எத்தனையோ அருவிகளுக்கு சென்றிருந்தாலும் இந்த கெம்ப்டி அருவி அவை எல்லாவற்றையும் விட அழகானது என்று இதை கண்ட மாத்திரமே நாம் சொல்லி விடுவோம். வெள்ளி போல கொட்டும் நீர் தெளிவான நீல நிற ஓடை என இயற்கையின் அற்புதங்களில் ஒன்றான இங்கு நாம் நிச்சயம் செல்ல தவறி விடக்கூடாது.

Photo: KuwarOnline

பரத்பூர்:

பரத்பூர்:

புகைப்படதுறையில் ஆர்வம் இருப்பவர்கள் நிச்சயம் செல்லவேண்டிய இடம் ராஜஸ்தான் மாநில எல்லையில் அமைந்திருக்கும் இந்த பரத்பூர் ஆகும். யுனெஸ்கோ அமைப்பினால் அங்கிகரிக்கப்பட்ட கியோலாடியோ தேசிய பூங்கா பல்வேறு நாடுகளில் இருந்து புலம்பெயரும் பறவைகளின் சரணாலயமாக உள்ளது.

Photo: Anupom sarmah

 பரத்பூர்:

பரத்பூர்:

சைபீரிய நாட்டு நாரை போன்ற அழிந்துவரும் பறவை இடங்களையும் இங்கே நாம் காணலாம். வார இறுதியில் தில்லியில் இருந்து உங்கள் கேமராவை தூக்கிக்கொண்டு கிளம்ப பரத்பூர் சிறந்த ஒரு தேர்வாகும்.

Photo: Anupom sarmah

மும்பையிலிருந்து:

மும்பையிலிருந்து:

நகர வாழ்க்கை நரகம் என்பதற்கு சிறந்த உதாரணம் மும்பை தான். இங்கே காலையும் மாலையும் நிலவும் போக்கு வரத்து நெரிசலே வாழ்க்கையே வெறுத்து போகும் அளவுக்கு இருக்கும். எல்லா பொது இடங்களிலும் நெருக்கித்தள்ளும் கூட்டம், ஒரு வித பாதுகாப்பற்ற சூழல் என மும்பையில் இருந்து தப்பிச்செல்லவே பலரும் விரும்புகின்றனர். அப்படி கொஞ்ச நேரம் தப்பிச்செல்ல நல்ல இடங்கள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Photo: Aam422

காம்ஷேத்:

காம்ஷேத்:

மும்பையில் இருந்து ஒன்றரை மணி நேர பயணத்தில் 100 கி.மீ தொலைவில் இருக்கும் சிறிய கிராமம் தான் கர்ம ச்தேத்திரம் எனப்படும் காம்ஷேத் ஆகும்.

Photo: Flickr

காம்ஷேத்:

காம்ஷேத்:

இந்த குக்கிராமத்தில் அப்படி என்ன இருந்து விடபோகிறது என நினைத்தால் நீங்கள் ஏமார்ந்து போவீர்கள். பாராக்ளிடிங் எனப்படும் பாராசூட்டின் உதவியுடன் மலையின் மேல் இருந்து குதிக்கும் விளையாட்டின் முக்கிய கேந்திரமாக காம்ஷேத் திகழ்கிறது. பருந்துகளுடனும், பிணந்தின்னி கழுகுகளுடனும் நீங்கள் போட்டி போட்டு பறக்க வேண்டுமெனில் நிச்சயம் இந்த கிராமத்திற்கு வர தவறி விடாதீர்கள்.

Photo: Len Matthews

சென்னை:

சென்னை:

மும்பையை போலவே சென்னையிலும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிப்பதே ஒவ்வொரு நாளும் பெரும் போராட்டமாக இருக்கும். சென்னையில் சுற்றிபார்க்க மரினா கடற்கரை, கோயில்கள், பூங்காக்கள் என ஏராளமான இடங்கள் இருந்தாலும் சென்னை நகரின் இரைச்சலில் இருந்து தப்பிக்க சென்னைக்கு வெளியே இருக்கும் இடங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Photo: Dr. Mithun James

மகாபலிபுரம்:

மகாபலிபுரம்:

அமைதியாக கடலை ரசித்தபடி பல நூற்றாண்டுகளுக்கு முன் பாறையை குடைந்து கட்டப்பட்ட மகாபலிபுரம் கடற்கரை கோயிலை சுற்றிப்பார்ப்பது ஆனந்தமான அனுபவமாக அமையும். கோயிலை சிற்றி இருக்கும் பஞ்சரத சிற்பங்கள் மற்றும் அர்ச்சுனன் குகை ஆகியவை நம்மை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும்.

Photo: Amit Rawat

மகாபலிபுரம்:

மகாபலிபுரம்:

மகாபலிபுரத்தை விட அதனை நாம் அடைய பயணிக்கும் கிழக்கு கடற்கரை சாலை மிகச்சிறந்த பயண அனுபவத்தை தரவல்லது. வங்காள விரிகுடாவை ரசித்தபடி கடற்கரையை ஒட்டிய சாலியில் பயணிக்கலாம்.

Photo: Mahesh Balasubramanian

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி:

பிரஞ்சு காலனியகமாக இருந்த பாண்டிச்சேரி இன்றும் அந்த பிரஞ்சு அடையாளத்தை இழக்காமல் ரசனையான ஓரிடமாக இருக்கிறது. அழகிய கடற்கரை, பழமையான பிரஞ்சு கால கட்டிடங்கள், ஆன்மீக ஸ்தலங்கள் என பலவைகயான இடங்கள் இங்கே உண்டு.

Photo: Jean-Pierre Dalbéra

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி:

விருப்பம் உள்ளவர்கள் இங்குள்ள கடற்கரையில் நடத்தப்படும் அலைசறுக்கு பயற்சி வகுப்புகள் மற்றும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். மேலும் இங்குள்ள ஆரோவில்லே கிராமம் சுற்றுலாப்பயணிகள் விரும்பும் இடங்களில் ஒன்றாகும். குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ உடனே முடிவெடுத்து சுற்றுலாச்செல்ல பாண்டிச்சேரி நல்லதொரு இடமாகும்.

Photo: Devaiah PA

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more