Search
  • Follow NativePlanet
Share
» »வட இந்தியாவில் தனியாக ஒரு பயணம் மேற்கொள்ள சிறந்த இடங்கள்

வட இந்தியாவில் தனியாக ஒரு பயணம் மேற்கொள்ள சிறந்த இடங்கள்

பயணங்கள் என்றாலே நண்பர்கள், கொண்டாட்டம், ஆட்டம் பாட்டம் என்றெல்லாம் இருந்தாலும் சில சமயங்களில் நம்மை நாமே புதிதாய் கண்டுபிடிக்க தனியாக அமைதியாக பயணம் செல்வதும் நமக்குள் நல்லதொரு மாற்றத்தை கொண்டுவரும்.

வட இந்தியாவில் தனியாக ஒரு பயணம் மேற்கொள்ள சிறந்த இடங்கள்

பயணத்தின் போது நாம் சந்திக்கும் பலவிதமான மனிதர்கள், சந்திக்கும் சவாலான நேரங்கள், அதிசயிக்க வைக்கும் இடங்கள் போன்ற விஷயங்கள் நம்மை பற்றி நமக்கே தெரியாத விஷயங்களை வெளிக்கொண்டுவரும். அப்படி உங்கள் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமையவிருக்கும் ஒரு பயணம் போக ஆசையா? வாருங்கள் வட இந்தியாவில் தனியாக பயணம் செல்ல சிறந்த ஐந்து இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

திரயுந்து:

Photo: Kiran Jonnalagadda

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் தர்மஷாலா நகருக்கு அருகில் அமைந்திருக்கிறது இந்த திரயுந்து என்னும் இயற்க்கை பேரழகு குவிந்துகிடக்கும் இடம். கடல் மட்டத்தில் இருந்து 2900 அடி உயரத்தில் இருக்கும் இந்த இடத்தை மக்லியோட்கஞ்ச் என்னும் இடத்தில் இருந்து 9 கி.மீ டிரெக்கிங் மூலம் அடைய முடியும். ஹிமாச்சல் மாநிலத்தில் ஹிமாலய மலையை ரசித்தபடி ட்ரெக்கிங் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த ட்ரெக்கிங் பாதையே சிறந்ததாகும். இவ்வழியில் ட்ரெக்கிங் செய்கையில் ராக்கர் மற்றும் தர்மகொட் என்ற அழகு நிறைந்த இடங்களை கடந்து வரமுடியும். திரயுந்திளிருந்து நாம் பனிபடர்ந்த நிலா குன்றை ரசிக்கலாம். எல்லா வயதினரும் இந்த ட்ரெக்கிங் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பது மற்றுமொரு சிறப்பு.

ஜிரோ பள்ளத்தாக்கு:

Photo: rajkumar1220

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த இடம் தனியாக பணம் செய்ய விரும்புபவர்களுக்கான மிகச்சிறந்த இடமாக கருதப்படுகிறது. வெளி உலகத்துடன் கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட இந்த கிராமம் இயற்க்கைக்கு வெகு அருகில் நம்மை அழைத்து செல்லும். இங்கு வாழும் அபடநிஸ் என்னும் பழங்குடி மக்களுடன் சில நாட்கள் தங்கி இயற்க்கைக்கு எவ்வித இடைஞ்சலும் ஏற்படுத்தாத அவர்கள் வாக்கை முறையை சில நாட்கள் வாழ்ந்து பார்க்கலாம். உங்களை புதுமையான ஒருவராக இப்பயணம் மாற்றும்.

புஷ்கர்:

Photo: Ryan

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்நகரம் இந்தியாவில் மக்கள் வசித்துவரும் பழமையான நகரங்களுள் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள பிரம்மா கோயில் ஹிந்து யாத்ரீகர்களிடையே மிகவும் பிரபலமாகும். வருடா வருடம் நவம்பர் மாதத்தில் இங்கு நடைபெறும் புஷ்கர் ஒட்டக திருவிழா வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிடையே மிகவும் விரும்பப்படும் விழாவாகும். அந்த நேரத்தில் இங்கு வந்தால் இந்த நகரின் பழமையையும், திருவிழாவின் கொண்டாட்டத்தையும் ராசிக்கலாம்.

உதய்பூர்:

Photo: Jon Connell

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கும் மற்றுமொரு அற்புதமான சுற்றுலாத்தலம் தான் இந்த உதய்பூர். இந்தியாவின் வெனிஸ் என்று அழைக்கப்படும் இந்த நகரம் கிளாசிக்கல் வாழ்க்கை வாழ நினைப்பவர்களின் கனவை நிச்சயம் பூர்த்தி செய்யும். எப்படி என்றால் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மன்னர்களின் அழகிய அரண்மனைகள் இப்போது தாங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டு அங்கே தாங்கும் போது பழங்காலத்தில் வாழ்வது போன்ற உணர்வை பெறலாம். நாம் வாழும் வழக்கமான உலகத்தில் இருந்து விலகி தனியாக சில பொழுதுகளை கழிக்க நல்லதொரு இடம் இந்த உதய்பூர்.

கஜுரஹோ:

Photo: Partha Sarathi Sahana

வாழ்நாளில் நிச்சயம் ஒரு முறை சென்று பார்த்திட வேண்டும் என்று ஓரிடம் இருக்குமானால் அது இன்பத்தின் கோயிலான கஜுரஹோ தான். மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த கோயிலில் இன்பம் ததும்பும் பல சிற்பங்கள் இக்கோயில் முழுக்க நிறைந்து இருக்கின்றன. தனியாக ஒருமுறை இக்கோயிலுக்கு சென்று இந்த சிற்பங்களின் அழகில் மயங்கிடுங்கள் . தனியாக பயணம் செய்திட வட இந்தியாவில் சிறந்த இடங்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more