» »பழனி தண்டாயுதபாணியின் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

பழனி தண்டாயுதபாணியின் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

Posted By: Udhaya

விஜய் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பழனி அருகே நடப்பதாகவும், இடைவேளையின்போது நடிகர் விஜய் பழனியாண்டவர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

சிலர் இதனைப் பொய் என்றும், இது மாறுவேடம், தங்களிடம் புகைப்பட ஆதாரம் இருப்பதாகவும் சொல்லி வருகின்றனர். சிலர் தாங்கள் விஜய்யை நேரடியாக பார்த்தோம் என்றும் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்தான் வந்தாரா இல்லை உண்மையிலேயே வேறொருவரா என்பது பற்றி இன்னும் உண்மை வெளிவரவில்லை.

நடிகர் விஜய் சென்றதாக கூறப்படும் பழனியாண்டவர் கோயில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.

பழனி நகரம், இந்தியாவில் உள்ள ஒரு மிக பழமையான மலைப் பிரதேசம் ஆகும். பழனி என்ற வார்த்தை பழம் மற்றும் நீ என்ற இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் இந்த பழனி மலை பாளையக்காரங்களின் தாயகமாக விளங்கியிருக்கிறது. தற்போது இந்த பழனி மலை உலக மக்களின் பார்வையைஅதிக அளவில் ஈர்த்து வருகிறது. அதற்கு காரணம் பழனி மலையின் உச்சியில் பழனி தண்டாயுதபாணி சுவாமியாக எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுளே.

பழனியைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை பல ஆன்மீக ஏடுகள் குறிப்பிடுகின்றன. மதுரை மற்றும் கோயம்புத்தூர் மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக பல காலங்கள் பழனி இருந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கு இருக்கும் பெரிய நாயகி அம்மன் ஆலயம், பாண்டிய மற்றும் நாயக்க மன்னர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

பழனிக்கு சுற்றுலா சென்று மகிழ்ந்து, தண்டாயுதபாணியின் அற்புதங்களைப் பற்றி அறிந்து அவர் அருளைப் பெற்று வாருங்கள்...

தண்டாயுதபாணி ஆலயம்

தண்டாயுதபாணி ஆலயம்

பழனியில் முக்கியமாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று பழனி தண்டாயுதபாணி ஆலயம் ஆகும். முருகப் பெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ள இந்த ஆலயம் பழனி மலையின் உச்சியில் கம்பீரமாக அமைந்திருக்கிறது.

PC: Adityamadhav83

எத்தனை படிகள் தெரியுமா?

எத்தனை படிகள் தெரியுமா?

இந்த மலைக்கு மேலுள்ள கோயிலுக்கு போக 600 படிகள் ஏறவேண்டும். குடும்பத்தோடு பழனி மலை ஏறினால் குடும்பம் செழித்து விளங்கும் என்பது ஐதீகம்.

PC: Athi S

ரோப் கார்

ரோப் கார்

இந்த மலை மீது ஏறுவதை எளிமையாக்கும் வகையில் ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. இரவு மற்றும் பராமரிப்பு பணிகள் இடைவேளைத் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் ரோப் கார் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.


PC: Ranjithsiji

கட்டியது யார்?

கட்டியது யார்?

தண்டாயுதபாணி ஆலயத்திலிருந்து பழனி நகர் முழுவதையும் தெளிவாகப் பார்க்கலாம். தண்டாயுதபாணி ஆலயம் சேர மன்னன் சேரமான் பெருமாலால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

Pc: SivRami

கட்டடக்கலை

கட்டடக்கலை


தங்கள் கட்டடக்கலையை பறைசாற்றும் வகையில் பாண்டியர்களும், சோழர்களும் இந்த ஆலயத்தைப் புதுப்பித்து பல வசதிகள் செய்துள்ளனர். கோபுரங்கள், மண்டபங்கள் இதன் சிறப்பாக சொல்லலாம்.

PC: palanimurugantemple

பறவைகளின் சொர்க்க பூமி

பறவைகளின் சொர்க்க பூமி

பறவைகளை விரும்புவோரின் சொர்க்கமாகவும் பழனி விளங்குகிறது.

ஏனெனில் நைட் ஹெரான்ஸ், இக்ரெட்ஸ், கோல்டன் பேக்ட் உட்பெக்கர்ஸ் போன்ற வெளிநாட்டு புலம்பெயர் பறவைகளை இந்த பகுதியில் சாதாரணமாக பார்க்கலாம்.

டிரெக்கிங்க் எனும் மலையேற்றம்

டிரெக்கிங்க் எனும் மலையேற்றம்

மலை ஏறுபவர்களுக்கும் இந்த பழனி மலை ஒரு ஏற்ற இடமாக இருக்கிறது.

PC: Renju George

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அழகாக பசுமையான சூழலில் அமைந்துள்ளது பழனி.

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், உடுமலைப் பேட்டை ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

போகர் சமாதி, இடும்பன் ஆலயம், சரவண பொய்கை, குதிரையாறு அணை நீர்வீழ்ச்சி, பெரிய நாயகி அம்மன் ஆலயம், வரதமனதி அணை, தேக்கந்தோட்டம் நீர்வீழ்ச்சி, திரு ஆவினன் குடி முதலிய சுற்றுலாத் தளங்கள் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தைச் சுற்று உள்ளது.

நன்றி! தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளாணட் தமிழ்

Read more about: travel, temple