Search
  • Follow NativePlanet
Share
» »பிராமணர்கள் உண்ட எச்சில் இலையின் மேல் அங்கப்பிரதட்சணம் செய்யும் வழக்கம் கொண்ட கோயில் எது தெரியுமா?

பிராமணர்கள் உண்ட எச்சில் இலையின் மேல் அங்கப்பிரதட்சணம் செய்யும் வழக்கம் கொண்ட கோயில் எது தெரியுமா?

By Naveen

தமிழர் மரபில் எத்தனையோ கடவுளர்களை போற்றி வணங்குவதுண்டு ஆனால் அவை எல்லோரிலும் நமக்கு அதிக பிரியமான விருப்பத்துக்குரிய கடவுளென்றால் அது சர்வமுமான தன் தந்தை ஈசனுக்கே பாடம் சொன்ன பாலகன் பகவான் முருகப்பெருமான் தான்.

ஞானப்பழதிற்காக கோவம்கொண்டு கயிலாயத்தை விட்டு வெளியேறிய முருகனுக்கு தமிழகத்திலும் கர்நாடகாவிலும் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் கர்நாடக மங்களூரில் அமைந்துள்ள குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாகும்.

முருக பக்தர்கள் அனைவரும் கட்டாயம் செல்ல வேண்டிய இந்த இடத்தை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

எங்கே அமைந்திருக்கிறது?

எங்கே அமைந்திருக்கிறது?

குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலானது கர்நாடக மாநிலம் தட்சனகன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூரில் குமரபர்வத மலைக்கு அருகில் சுப்ரமணியா என்கிற ஊரில் அமைந்திருக்கிறது.

Vishal

எங்கே அமைந்திருக்கிறது?

எங்கே அமைந்திருக்கிறது?

ஆறு முகங்கள் கொண்ட ஆதிசேஷன் என்ற சர்ப்பம் போல இருக்கும் சேஷ பர்வத மலை குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு பின்னணியில் இருக்கிறது. அடர்ந்த காடுகள், ஆறுகள், மலைகள் சூழ பசுமையான சூழலில் இந்த கோயில் அமைந்துள்ளது.

karthick siva

புராண வரலாறு:

புராண வரலாறு:

குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலை பற்றி இரண்டு புராணகதைகள் சொல்லப்படுகின்றன. கருடனின் தொல்லைகளில் இருந்து தங்களை காத்திட பாம்புகளான நாகர்களின் தலைவி வாசுகி இந்த இடத்தில் சிவபெருமானை நோக்கி பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்ததாகவும் அவர் முன் தோன்றிய சிவபெருமான் தனது மகனான முருகன் இங்கே கோயில் கொண்டு கருடனிடமிருந்து உங்களை காத்தருள்வான் என்று உறுதியளித்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

Shiva shankar

புராண வரலாறு:

புராண வரலாறு:

மற்றொரு கதைப்படிதாருகாசூரன்,சூரபதுமன் போன்ற அரக்கர்களை வதைத்த பிறகு முருகன் தனது அண்ணன் கனபதியோடு குமர பர்வதம் வருகிறார். அவர்களை உவகையோடு வரவேற்ற தேவர்களின் தலைவன் இந்திரன் தனது மகள் தேவசேனாவை முருகனுக்கு மணமுடிக்க விரும்புகிறார். இந்திரனின் விருப்பத்திற்கு இணங்க சிவன், பிரம்மா, விஷ்ணு போன்றோர் நல்லாசியுடன் முருகப்பெருமான்-தேவசேனா திருமணம் இனிதே நடைபெறுகிறது. அன்றுமுதல் இங்கே முருகப்பெருமான் சுப்பிரமணியன் என்ற நாமத்துடன் உமையாள் தேவசேனாவுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக சொல்லப்படுகிறது.

C21Ktalk

வழிபாட்டு முறை:

வழிபாட்டு முறை:

தேவ தீர்த்தம் என்று சொல்லப்படும் குமாரதாரா நதியில் புனித நீராடிய பிறகே கோயிலுக்கு செல்ல வேண்டும். இங்கேமுன் மண்டபத்திற்கும் கர்ப்பகிரகத்திற்கும் நடுவில் உள்ள கருடனின் வெள்ளித்தூணை வழிபட்டால் நாக விஷங்களை எதிர்கொள்ள முடியும் என்பது நம்பிக்கையாகும்.

Adityamadhav83

அங்கப்பிரதட்சணம்:

அங்கப்பிரதட்சணம்:

டிசம்பர் மாதத்தில் இங்கே பூசை செய்யும் நம்பூதரிகள் சாப்பிட்ட இலையின் மேல்அங்கப்பிரதட்சணம் செய்யும் வழக்கம் இங்கே நடைமுறையில் உள்ளது.

திருவிழாக்கள்:

திருவிழாக்கள்:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி போன்ற பண்டிகைகள் இங்கே வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

டிசம்பர் மாதத்தில்சர்ப்ப சம்கார பூசை என்ற நாகதோஷ நிவர்த்தி பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் வருகைதருகின்றனர்.

Sarvagnya

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

பெங்களூர் மற்றும் மங்களூரிலிருந்து அதிக அளவில் பேருந்துகள் குக்கே சுப்ரமண்யா கோயில் ஸ்தலத்துக்கு இயக்கப்படுகின்றன.சுப்ரமண்யா ரோடு ரயில் நிலையம் இந்த கோயில் ஸ்தலத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாகும். 7 கி.மீ தூரத்திலிருந்து இந்த ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் டாக்ஸி அல்லது ஆட்டோ ரிக்‌ஷாவில் கோயிலுக்கு வரலாம்.

Soorajna

குமாரதாரா ஆறு:

குமாரதாரா ஆறு:

தேவதீர்த்தம் என்ற சொல்லப்படும்குமாரதாரா ஆறு!!

karthick siva

ட்ரெக்கிங்:

ட்ரெக்கிங்:

குக்கிசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு அருகில் இருக்கும் குமர பர்வத மலை ட்ரெக்கிங் செல்ல மிகச்சிறந்த இடமாக சொல்லப்படுகிறது.

karthick siva

ட்ரெக்கிங்:

ட்ரெக்கிங்:

குமர பர்வத மலையின் சில அற்புதமான இயற்கை காட்சிகள் !!

solarisgirl

ட்ரெக்கிங்:

ட்ரெக்கிங்:

குமர பர்வத மலையின் சில அற்புதமான இயற்கை காட்சிகள் !!

karthick siva

Read more about: karnataka spiritual tour temples
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X