Search
  • Follow NativePlanet
Share
» »இந்த கிறிஸ்மசுக்கு வேளாங்கன்னி மாதா கோயிலுக்கு போகலாம் வாங்க...

இந்த கிறிஸ்மசுக்கு வேளாங்கன்னி மாதா கோயிலுக்கு போகலாம் வாங்க...

தீராத நோய்கள் எல்லாம் இங்கே சென்றால் குணமாகும், நீங்காத துயரமெல்லாம் அன்னையின் முன்னே மண்டியிட்டு பிரார்த்தனை செய்தால் நீங்கிவிடும் என போற்றப்படும் இடம் தான் வேளாங்கன்னி ஆரோக்கிய மாதா கோயில். கிறிஸ்துவர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து மதத்தினரும் சென்று வழிபடக்கூடிய வேளாங்கன்னி மாதா கோயிலுக்கு சென்று இந்த வருட கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடலாம் வாருங்கள்.

கிறிஸ்மஸ் சிறப்பு சலுகை: ஹோட்டல் கட்டணங்களில் 60% வரை தள்ளுபடி பெற்றிடுங்கள்

வேளாங்கன்னி ஆரோக்கிய மாதா கோயில்:

வேளாங்கன்னி ஆரோக்கிய மாதா கோயில்:

வங்காளா விரிகுடாவின் சோழ மண்டல கடற்கரையில் சென்னையில் இருந்து 350 கி.மீ தெற்க்கே நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த வேளாங்கன்னி மாதா சர்ச்.

Photo:Koshy Koshy

வேளாங்கன்னி ஆரோக்கிய மாதா கோயில்:

வேளாங்கன்னி ஆரோக்கிய மாதா கோயில்:

இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய மற்றும் மிகப்பழமையான சர்ச்சுகளில் ஒன்றான இதன் வரலாறு 16ஆம் நூற்றாண்டு வரை நீள்கிறது. இந்த கோயில் எழுப்பப்படுவதற்கு காரணங்களாக மூன்று அற்புத நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன.

Photo:Sukumaran sundar

முதலாவது அற்புதம்:

முதலாவது அற்புதம்:

16ஆம் நூற்றாண்டில் ஒரு நாள் தூய அன்னையும், குழந்தை ஏசுவும் பால் விற்கும் சிறுவன் ஒருவன் ஒரு குளத்திற்குபக்கத்தில் இருக்கும் ஆலமரத்தின் கீழ் ஓய்வெடுக்கையில் அவன் முன் தோன்றி தன் குழந்தைக்கு பால் வேண்டும் என மேரி அன்னை கேட்கவே சிறுவன் மறுக்காமல் கொடுத்திருக்கிறான். பின் பாலை கொண்டு சேர்க்க வேண்டிய இடத்திற்கு சென்ற அச்சிறுவன் பாலின் அளவு குறைந்ததற்காக மன்னிப்பு கேட்க்கிறான். ஆனால் பின்னர் பரிசோதித்து பார்க்கையில் பாலின் அளவு குறையவே இல்லை.

Photo:Waiting For The Word

முதலாவது அற்புதம்:

முதலாவது அற்புதம்:

இதற்க்கு ஏதேனும் அற்புதம் தான் காரணமாக இருக்க முடியும் என நினைத்த பால் வாடிக்கையாளர் சிறுவனுடன் அவன் ஓய்வெடுத்த குளத்திற்கு சென்று பார்க்கும் போது அவர்களுக்கும் மேரி அன்னை குழந்தை யேசுவுடன் தோன்றி தரிசனம் தந்திருக்கிறார். மேரி அன்னை தோன்றிய குளம் இன்றும் 'மாதா குளம் என்று அழைக்கப்படுகிறது.

மாத குளம் அமைந்துள்ள சர்ச்

Photo:dixon

இரண்டாவது அற்புதம்:

இரண்டாவது அற்புதம்:

முதலாவது அற்புதம் நடந்து சில வருடங்கள் கழித்து மேரி மாதா குழந்தை யேசுவுடன் மோர் விற்றுக்கொண்டிருந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் முன் தோன்றி பக்கத்து ஊரில் இருக்கும் செல்வந்தருக்கு தான் வந்திருப்பதை பற்றி கூற சொல்கிறார். தன் கால்களில் இருந்த குறைபாடு குணமானதை உணராமல் சிறுவன் எழுந்து ஓடுகிறான்.

Photo:Waiting For The Word

இரண்டாவது அற்புதம்:

இரண்டாவது அற்புதம்:

செல்வந்தரும் சிறுவனும் ஒன்றாக மேரி மாத தோன்றிய இடத்திற்கு வருகின்றனர். மாதாவின் தரிசனத்தை கண்ட செல்வந்தர் மாதர்விற்க்காக சிறிய கோயில் ஒன்றை நிர்மாணிக்கிறார். மோர் விற்ற சிறுவனின் காலை குணப்படுத்தியதன் காரணமாகவே மேரி மாத இங்கே ஆரோக்கிய மாதா என அழைக்கப்படுகிறார்.

Photo:angelofsweetbitter2009

மூன்றாவது அற்புதம்:

மூன்றாவது அற்புதம்:

இம்முறை போர்த்துகீசிய வணிகர்கள் பெரும் புயல் ஒன்றில் சிக்கி வழிதெரியாமல் நடுக்கடலில் தடுமாறி கொண்டிருக்கையில் தொலைவில் தெரிந்த ஒரு ஒளியை நோக்கி தங்கள் படகை செலுத்தியிருகின்றனர். அந்த ஒளி வேளாங்கன்னி கடற்கரைக்கு அவர்களை கொண்டு சேர்த்திருக்கிறது. தங்களை பத்திரமாக கரை சேர்த்தது மேரி அன்னையின் அற்புதம் தான் என உணர்த்த அந்த போர்த்துகீசிய வணிகர்கள் சிறிய சர்ச் ஒன்றை கட்டியிருக்கின்றனர்.

Photo:Krrishnah

எப்போது செல்லலாம் வேளாங்கன்னிக்கு?:

எப்போது செல்லலாம் வேளாங்கன்னிக்கு?:

வேளாங்கன்னியில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை பெரும் விழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் செப்டம்பர் 8ஆம் தேதி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏனெனில் செப்டம்பர் 8ஆம் தேதி தான் போர்த்துகீசிய வணிகர்கள் மேரி அன்னையின் கருணையால் பத்திரமாக வேளாங்கன்னி கரைக்கு வந்து சேர்ந்தார்களாம். இந்த திருவிழாவின் போது வேளாங்கன்னிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Photo:Jpullokaran

வேளாங்கன்னியில் கிறிஸ்மஸ்:

வேளாங்கன்னியில் கிறிஸ்மஸ்:

வருடாந்திர திருவிழாவிற்கு அடுத்து வேளாங்கன்னியில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது இயேசு இப்பூவுலகில் அவதரித்த தினமான டிசம்பர் 25 கிறிஸ்மஸ் பண்டிகை தான். ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக கூடி கீதங்கள் பாடி இயேசுவின் பிறப்பை கொண்டாடுகின்றனர். எங்கும் பொங்கும் ஆன்மீக உணர்வுகளுக்கு மத்தியில் வேளாங்கன்னி மாதா ஆலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவது பேரின்பம் தருமொரு அனுபவமாக இருக்கும்.

Photo:Diganta Talukdar

 2004 சுனாமி - அழிக்க முடியாத கருப்பு தினம்:

2004 சுனாமி - அழிக்க முடியாத கருப்பு தினம்:

இந்த சர்ச்சின் வரலாற்றில் ஏன் உலக வரலாற்றிலேயே பெரும் அழிவை ஏற்ப்படுத்திய 2004 சுனாமி தக்கியத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட வேளாங்கன்னிக்கு வந்திருந்த 600க்கும் மேற்ப்பட்ட பக்த்தர்கள் ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்மசுக்கு அடுத்த நாள் வேளாங்கன்னி கடற்கரையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

Photo:Diganta Talukdar

வேளாங்கன்னியை எப்படி அடைவது?:

வேளாங்கன்னியை எப்படி அடைவது?:

சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை நீளும் கிழக்கு கடற்க்கரை சாலையில் கடலூர் வந்து அங்கிருந்து நாகப்பட்டினம் வந்து வேளாங்கன்னியை சாலை மார்கமாக அடையலாம். மேலும் தகவல்களுக்கு இங்கே கிளிக்குங்கள்.

Photo:BrownyCat

எங்கு தங்குவது?

எங்கு தங்குவது?

வேளாங்கன்னி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 1620 அறைகள் மற்றும் 11 ஹால்கள் உள்ளன. அங்கே குறைந்த விலையில் பக்தர்கள் தங்கிக்கொள்ளலாம். இதை தவிர்த்து வேளாங்கன்னி முழுக்க 50க்கும் மேற்ப்பட்ட தாங்கும் விடுதிகள் உள்ளன.

வேளாங்கன்னி ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Photo:BrownyCat

Read more about: church velankanni christmas
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X