Search
  • Follow NativePlanet
Share
» »கடவுளின் ஊரான வய நாட்டில் ஸ்ப்ளாஷ் திருவிழா எப்படி நடக்கும்னு தெரியுமா? உங்களுக்காக ஒரு கைடு!!

கடவுளின் ஊரான வய நாட்டில் ஸ்ப்ளாஷ் திருவிழா எப்படி நடக்கும்னு தெரியுமா? உங்களுக்காக ஒரு கைடு!!

கடவுளின் ஊரான வய நாட்டில் ஸ்ப்ளாஷ் திருவிழா எப்படி நடக்கும்னு தெரியுமா? உங்களுக்காக ஒரு கைடு!!

By Balakarthik Balasubramanian

அழகிய காட்சி, பளபளப்பான பின்னல், அழகிய கடற்கரை, விரிவடைந்த தேயிலை, காபி, மற்றும் நறுமண பொருள் தோட்டங்கள், மரகத மலைகள், மலைகள், பள்ளத்தாக்குகள், எண்ணற்ற இயற்கை காட்சிகள், அதிகளவில் வனவிலங்குகள், சுவையூட்டும் உணவுகள், மற்றும் ஆயுர்வேதம் என பலவற்றால் அழகிய உணர்வினை நம் மனதில் சமர்ப்பணம் செய்யும் கேரளாவை 'கடவுள் ஆண்ட நாடு' என அழைப்பர். உலகம் முழுவதுமுள்ள யாத்திரிகர்களின் சொர்க்கமான இந்த இடம், 'கேரளா' அல்லது 'கேரளம்' என அழைக்கப்பட, தென்னிந்தியாவில் அழகிய காட்சிகளை சமர்ப்பிக்கும் ஒரு மாநிலமாகவும் இது விளங்குகிறது.

பருவமழை வாசஸ்தலங்களுள் சிறந்ததாக இந்த வயநாடு மாவட்டம் விளங்க, கேரளாவின் வடகிழக்கு பகுதியில் இது காணப்படுகிறது. டெக்கான் பீடபூமியின் தெற்கு முனையில் இது காணப்பட, இந்த வயநாடு... இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட அழகிய இடமாக விளங்குகிறது. அதோடுமட்டுமல்லாமல், அதிகளவில் வரலாற்றையும், கலாச்சார மரபையும் தன்னுள் புதைத்துகொண்டிருக்கிறது இந்த இடம், வயநாடு காடுகளின் தொல்பொருள் தடயமானது 3000 வருடங்களுக்கு மேலாக இங்கே இருந்து வருகிறது. வெற்றிகரமான எண்ணற்ற பழங்குடியினரின் வாழ்க்கையானது, பாரம்பரியத்துக்கு அழகு சேர்ப்பதோடு கலாச்சாரத்தின் பெருமையையும் தாங்கிகொண்டு நிற்கிறது. நிறைய பகுதிகள் காடுகளால் சூழ்ந்திருக்க, இயற்கை ஆர்வலர்களுக்கும், வனவிலங்கு பிரியர்களுக்கும் இந்த இடம் சிறந்த தேர்வாக அமைகிறது.

 வயநாடு சுற்றுலா:

வயநாடு சுற்றுலா:

ஒரு வருடம் விட்டு, வய நாடு சுற்றுலா அமைப்பு, கேரளா சுற்றுலாவுடனும் கேரள அரசுடனும் இணைந்து நடத்தப்படும் "ஸ்பிளாஷ்" எனப்படும் பருவமழை திருவிழா, பருவ மழையை வரவேற்பதோடு...வயநாடு சுற்றுலாவையும் மேம்படுத்த முன்வருகிறது. இது தான் கொச்சி பையனலுக்கு அப்புறம் கொண்டாடப்படும் இரண்டாவது பெரிய திருவிழாவாகும். கேரள மாநிலம் இணைந்து நடத்தும் இந்த திருவிழாவிற்கு உலகம் முழுவதும் பலரும் வந்து செல்கின்றனர்.

இந்த வருடம், "ஸ்ப்ளாஷ்" ஜூலை 1 முதல் 9ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. அனைத்து விதமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்த ஒன்பது நாள் திருவிழாவில் எண்ணற்ற செயல்பாடுகள் நம்மை சிறப்பிக்க...அவற்றில் சேற்று கால்பந்து, கைப்பந்து, இழுபறி போர், இனிய சாலை ஜீப் பேரணிகள், பருவமழை மாரத்தான், ஓய்வு செயல்களான படகு பயணம், சாகச செயல்களான சிறு பயணம், ஷிப் லைன் பயணம் என பல சிறப்பம்சங்களும் அடங்கும். அத்துடன், கலை, கலாச்சார மற்றும் இசை நிகழ்ச்சிகளும் என இன்னும் நிறையவே நம் மனதினை நெருட செய்கிறது.

Official site

 வயநாட்டில் நாம் பார்க்க வேண்டிய இடங்களும், செய்ய வேண்டிய செயல்களும்:

வயநாட்டில் நாம் பார்க்க வேண்டிய இடங்களும், செய்ய வேண்டிய செயல்களும்:


சாகசங்களில் மதி மயங்கும் ஆர்வலர்கள், எண்ணற்ற செயல்கள் இங்கே காணப்படுவதால் எதில் பங்கேற்பது என குழப்பமும் கொள்கின்றனர். அப்பேற்ப்பட்டவையான மலை ஏறுதல், கூடாரமிடல், ஷிப் லைன், ATV/ க்வாட் பைக்கிங், என பலவற்றை அவர்கள் தெரிந்துகொள்ள...இந்த செயல்பாடுகளை மட்டும் ஒரு குறிப்பிட்ட குழுவானது நடத்துகிறது. அதனால், பருவமழை காலங்களின் போது நாம் இந்த வயநாடுக்கு பயணிப்போமெனில், இங்கே நாம் பார்க்க வேண்டிய இடங்களும் செய்ய வேண்டிய செயல்களும் நிறைய இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

yogini

 எடக்கல் குகை பற்றிய ஆய்வு:

எடக்கல் குகை பற்றிய ஆய்வு:


இந்த எடக்கல் குகையானது இரண்டு இயற்கை குகைகளை கொண்டிருக்க, அது வயநாடு மாவட்டத்தின் கல்பெட்டா நகரத்துக்கு அருகாமையில் காணப்படுகிறது. இந்த குகைகளில் உருவகமாக எழுத்துக்கள் காணப்பட, வரைபடங்களும் முந்தைய வரலாற்றின் நாகரிகத்தை உணர்த்துவதாக இருக்க, அதுவும் 6000 வருடங்களுக்கு முன்னதாக காணப்படும் வரலாறாக தெரிகிறது. எடக்கல் அடிவாரத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த குகைகள் இருக்கிறது. இது ஏறுவதற்கு எளிதாக இருக்க, நமக்கு இரண்டு மணி நேரமாவது குறைவாக பயணத்துக்கு தேவைப்படுகிறது. அங்கே நாம் ஆய்வுகளை ஆர்வத்துடன் கண்டு அதன் பின் மீண்டும் கீழ் இறங்கலாம்.

Vinayaraj

 செம்ப்ரா சிகரத்தை நோக்கியதோர் அழகிய பயணம்:

செம்ப்ரா சிகரத்தை நோக்கியதோர் அழகிய பயணம்:


வயநாட்டில் காணப்படும் உயர்ந்த சிகரமான இந்த செம்ப்ரா சிகரம், பயணத்துக்கு ஏற்ற பிரசித்திபெற்ற இடங்களுள் ஒன்றாக விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் இந்த சிகரம் காணப்பட, மேப்படி நகரத்தின் அருகாமையிலிருந்து நாம் நடை பயணம் மூலம் செல்ல தொடங்கலாம். இந்த சிகரத்தின் சிறப்பம்சமாக தமிழ் நாட்டின் காணும் நீலகிரி மலை எல்லையாக இருக்க, அதோடு கோழிக்கோடின் வெல்லரிமலாவும், இதன் எல்லைகளில் அமைந்திருக்கிறது. கேரளாவில் காணப்படும் இந்த சிகரம், வயநாடு மலையின் ஒரு அங்கமாக இருக்க அது மேற்கு தொடர்ச்சியிலும் காணப்படுகிறது. இந்த இதய வடிவில் காணப்படும் ஏரியானது நம் கண்களை வெகுவாக கவர, சுற்றுலா பயணிகளின் மனதை இந்த ஏரி சுண்டி இழுக்கிறது.

Usandeep

 சூஜிபாறை நீர்வீழ்ச்சியில் கால் நனைத்து மகிழலாம்:

சூஜிபாறை நீர்வீழ்ச்சியில் கால் நனைத்து மகிழலாம்:

இதனை ‘சென்டினல் பாறை நீர்வீழ்ச்சி' என்றும் அழைப்பர். இந்த சூஜிபாறை நீர்வீழ்ச்சியானது மூன்று அடுக்குகளை கொண்டிருக்க, அந்த இடமோ வெள்ளரிமலை எனப்படுகிறது. இதனை ‘சூச்சிபாறை' என்றும் உச்சரிப்பதுண்டு. உள்ளூர் பாசையில் அப்படி என்றால், ஊசிபோன்ற பாறை என அர்த்தமாகும். இது மேப்படிக்கு அருகில் காணப்பட, பருவமழைக்காலங்களில் நாம் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்றாகவும் இது விளங்குகிறது. இந்த இடமானது பசுமைமாறா இலையுதிர் காடுகளால் சூழ்ந்திருக்க, நீர்வீழ்ச்சியானது அற்புத காட்சியை கண்களுக்கு தருகிறது. பருவ மழைக்காலங்களின் போது 700 அடி உயரத்திலிருந்து நீர் விழ, அந்த அழகிய காட்சியை நாம் காண நிற்குமிடத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் நடக்க வேண்டியதாக இருக்கிறது.

M.arunprasad

 பூக்கொடி ஏரியில் நாள் உலா:

பூக்கொடி ஏரியில் நாள் உலா:

இயற்கை தூய நீரை கொண்டிருக்கும் இந்த பூக்கொடி ஏரியானது, மலை சரிவுகளின் மத்தியிலும், பசுமைமாறா காடுகள் மத்தியிலும் அமைந்திருக்கிறது. இந்த இடமானது, நம் ஓய்வை கழிக்க சிறந்த இடமாக அமைய இது அருகில் காணும் நம் நண்பன் போல் அழகிய காட்சிகளை கர்வமின்றியும் வழங்குகிறது. இந்த ஏரியில் காணப்படும் வீடுகளை அழகிய நன்னீர் மீன்கள் சுற்றி வளைக்க, நீல நிறத்து நீர் அல்லியும் இங்கே காணப்படுகிறது. இந்த ஏரியின் வளாகத்தில் குழந்தைகள் விளையாடும் பூங்கா, மீன் வளர்ப்பு இடம் (அகுவரியம்), கைவினை, மசாலா எம்போரியம், உணவகங்கள் என பல காணப்பட, படகு பயண வசதிகளும் இங்கே காணப்படுகிறது.

yogini

 ஓய்வு நேரங்களில் நதி நீரில் செய்ய வேண்டிய படகு சவாரி:

ஓய்வு நேரங்களில் நதி நீரில் செய்ய வேண்டிய படகு சவாரி:

படகு சவாரிக்கான பாரம்பரிய படகானது மூங்கில் கொண்டு தனித்துவமிக்கதாக வயனாடில் தயாரிக்கப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த பாரம்பரிய படகை, வன மூங்கில்களை கொண்டு நாம் தயாரிக்க, இந்த மூங்கில்கள் பெருமளவில் வயனாடில் விளைகிறது. அதனை உப்பு கயிற்றை கொண்டு வேகப்படுத்த...அந்த அமைதியான நீரில் பசுமையான புல்வெளிகளிலும், வனங்களிலும் படகானது அழகாக மிதக்கிறது. இங்கே சுற்றியுள்ள நிலப்பரப்புகளை நாம் ரசித்து ஒரு வித புது அனுபவத்தை அடைய, இங்கே அழகிய பறவைகளும் சுற்றி திரிந்து நம் மனதை தூக்கி செல்கிறது. வித்ரி நதி மீது நாம் படகு பயணம் மேற்கொள்ள, ‘பொழுதானா' ஒரு பிரசித்திபெற்ற இடமாக சிறந்து விளங்குகிறது.

yogini

 த்ரில்லிங்க் நிறைந்த ஷிப் லைன் பயணம்:

த்ரில்லிங்க் நிறைந்த ஷிப் லைன் பயணம்:

காற்று கிழித்துகொண்டு வீச, பசுமையான தேயிலை தோட்டம் வழியே ஷிப்லைன் பயணம் செல்வது ஒரு திரில்லர் அனுபவமாக நமக்கு இருக்கிறது. இடைக்காற்று நீக்கத்தை கவனத்தில் கொள்ளாமல் செல்பவர்களுக்கு இந்த ஷிப்லைன் பயணம் இனிமையானதாக அமைய, பாதுகாப்பு கம்பியைகொண்டு மிகவேகமாகவும் இது சென்று, கனவு நிலப்பரப்புகளை அடைகிறது. இந்த பொழுதானாவும் நீண்ட நெடிய ஷிப்லைன் பயணத்துக்கு (வயனாடில்) உதவ, பசுமையான தேயிலை தோட்டத்தின் வழியே செல்ல, பின்புலத்தில் பனியால் மூடிய மலையும் நம் கண்களை குளிர்விக்கிறது. இந்த இடமானது சுமார் 300 மீட்டர்கள் உள்ளடக்கி காணப்படுகிறது.

பயணிகள் ஓய்வெடுத்து மீண்டும் திரும்ப, வயநாடுதான் நம் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரும் ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. இந்த பகுதியில் நாம் பயணிக்க, எண்ணற்ற இயற்கை காட்சிகள் நம் கண்களை வெகுவாக கவர்வதோடு, தனித்துவம் வாய்ந்த பறவைகளையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது. மேலும் சூழ்ந்திருக்கும் மரங்களையும், தோட்டங்களையும் நாம் பார்த்து வியந்து செல்ல, பாரம்பரிய படகுக்கு தேவையான மூங்கில்களையும் நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் இவை நம்பகமான ஆயுர்வேத சிகிச்சைகளுக்கும், நீருற்றுக்கும் பயன்படுவதாகவும் தெரிகிறது.

yogini

 வயநாட்டில் நாம் எங்கே தங்குவது?

வயநாட்டில் நாம் எங்கே தங்குவது?

இங்கே ஓய்வு விடுதிகள் நிறையவே இருக்க, அனைத்து விதமான பயணியர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற விடுதிகளும் காணப்படுகிறது. மேலும், தனியாக வந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான ஒரு இடமாகவும் இந்த வயநாடு இருக்கிறது.

Sarath Kuchi

 வய நாட்டிற்கு நாம் செல்வது எப்படி?

வய நாட்டிற்கு நாம் செல்வது எப்படி?

சாலை மார்க்கமாக செல்வது எப்படி?

பக்கத்தில் காணப்படும் முக்கிய நகரங்களுடனும், மாநிலங்களுடனும் இந்த வயநாடு இணைக்கப்பட்டிருக்க, தினமும் பேருந்துகள்...பெங்களூரிலிருந்தும், மைசூரிலிருந்தும், கூர்க்கிலிருந்தும், கோழிக்கோடுலிருந்தும் என பல இடங்களிலிருந்து வயநாடுக்கு தங்கு தடையின்றி இயக்கப்படுகிறது. பெங்களூரிலிருந்து 280 கிலோமீட்டர் தொலைவிலும், மைசூரிலிருந்து 130 கிலோமீட்டர்கள் தொலைவிலும், கூர்க்கிலிருந்து 111 கிலோமீட்டர்கள் தொலைவிலும், கோழிக்கோடிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த வயநாடு காணப்படுகிறது.

தண்டவாள மார்க்கமாக செல்வது எப்படி?

வயனாடில் இரயில் நிலையம் என்பது கிடையாது. ஆதலால், நீலாம்பூரில் இருக்கும் இரயில் நிலையம் தான் அருகில் காணப்படும் ஒன்றாகும். இது வயனாடிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இங்கிருந்து வாடகை கார் அல்லது பேருந்துகளின் மூலம் நாம் வயனாடை அடையலாம்.

ஆகாய மார்க்கமாக செல்வது எப்படி?

கோழிக்கோடு விமான நிலையம் தான் வயனாடிற்கு அருகில் காணப்படும் ஒரு விமான நிலையமாகும். இங்கிருந்து வயநாடு 90 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. மைசூர் விமான நிலையம், இங்கிருந்து 132 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. நிறைய பேருந்துகள் வந்த வண்ணமும் போன வண்ணமும் காணப்பட, வாடகை காரின் மூலமாக கூட நாம் விமான நிலையத்திலிருந்து வயனாடை அடையலாம்.
friedwater

Read more about: travel temple sports
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X