Search
  • Follow NativePlanet
Share
» »கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஒரு அட்டகாசமான கோவா சுற்றுலா

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஒரு அட்டகாசமான கோவா சுற்றுலா

By Naveen

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் வாட்டியெடுக்க சில்லுனு ஒரு கோவா சுற்றுலா போக இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியுமா என்ன?. கொண்டாட்டங்களின் தலைநகரமான கோவாவில் இதமான சூழலில் அங்கிருக்கும் கடற்கரைகளில் நீச்சலடிக்கவும், பல நாடுகளை சேர்ந்தவர்களுடன் பார்டி கொண்டாடவும், சாகச விளையாட்டுகளில் ஈடுபடவும் இதுவே சிறந்த காலகட்டமாகும். வாருங்கள், கோவாவிற்கு ஒரு கோடை சுற்றுலா சென்று வரலாம்.

கோவா கடற்கரைகள்:

கோவா கடற்கரைகள்:

கோவா என்றதுமே நினைவுக்கு வருவது அங்கிருக்கும் அட்டகாசமான கடற்கரைகள் தான்.

நம்ம ஊர் மெரீனா கடற்கரையோடு கொஞ்சமும் ஒப்பிடவே கூடாது. சற்றும் அசுத்தம் ஏதும் இல்லாத எந்த விதமான கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக கொண்டாடி மகிழ இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த இடம் என கோவா கடற்கரைகளை சொல்லலாம்.

Daniel Incandela

கோவா கடற்கரைகள்:

கோவா கடற்கரைகள்:

பலோலம் பீச், பகா பீச், கொல்வா பீச், அஞ்சுனா பீச், கண்டோலிம் பீச் போன்றவை தான் கோவாவில் இருக்கும் மிகப்பிரபலமான கடற்கரைகள் ஆகும்.

இவை ஒவ்வொன்றும் தனக்கென பிரத்யேகமான சுற்றுலா அம்சங்களை கொண்டிருக்கின்றன. அப்படி கோவாவில் இருக்கும் பிரபலமான கடற்கரைகளை பற்றி கொஞ்சம் விரிவாக அறிந்துகொள்ளலாம் வாருங்கள்.

Eustaquio Santimano

பலோலம் பீச்:

பலோலம் பீச்:

பார்ட்டி கொண்டாட்டங்களின் இரைச்சலோ ஆர்ப்பாட்டமோ இல்லாமல் அமைதியாக இயற்கையை ரசித்தபடி இருக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்ற இடம் தெற்கு கோவாவில் இருக்கும்பலோலம் பீச் ஆகும்.

Natesh Ramasamy

பலோலம் பீச்:

பலோலம் பீச்:

தெற்கு கோவாவின் தலைநகரான மார்கோவில் இருந்து 40 நிமிட பயணத்தில் நாம்பலோலம் பீச்சை அடையலாம்.

பிறை நிலா வடிவிலான இந்தபலோலம் பீச் 1.6 கி.மீ நீளமுடையதாகும். மாலை நேரத்தில் இங்கிருந்து அதி உன்னதமான சூரிய அஸ்தமனத்தை பார்க்கலாம்.

Eustaquio Santimano

பலோலம் பீச்:

பலோலம் பீச்:

பலோலம் கடற்கரையின் அருகில் உள்ள சிறிய வனப்பகுதில் உள்ள குன்றின் மேல் 'Money Stone' என்ற கற்சிற்பம் ஒன்று உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சிற்பி ஜாகேக் டைளிகி என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த சிற்பத்தில் 'முடிந்தால் கொடுங்கள்-தேவை இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் தாங்கள் விரும்பிய பொருளையோ பணத்தையோ இங்கே போடலாம் அல்லது தேவை இருந்தால் இதனுள் போடப்பட்டுள்ளவற்றை எடுத்துக்கொள்ளவும் செய்யலாம்.

Tylicki

அஞ்சுனா பீச்:

அஞ்சுனா பீச்:

அதிர வைக்கும் 'ட்ரான்ஸ்' இசை பார்டிகளுக்கும், வாரம் ஒருமுறை கூடும் சந்தைக்கும் பிரபலமான இடம் தான் வடக்கு கோவாவில் இருக்கும் அஞ்சுனா பீச் ஆகும்.

அஞ்சுனா கடற்கரை நெடுகவும் ஏராளமான பார்களும், உணவகங்களும் இருக்கின்றன.

Vinoth Chandar

அஞ்சுனா பீச்:

அஞ்சுனா பீச்:

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை கூடும் வார சந்தை சுற்றுலாப்பயணிகளிடையே மிகப்பிரபலம் ஆகும்.

கைவினைப்பொருட்கள், ஆயத்த ஆடைகள், காலணிகள், அலங்கார பொருட்கள் என விதவிதமான பொருட்களை இந்த சந்தையில் நாம் வாங்கலாம்.

Patrik M. Loeff

அஞ்சுனா பீச்:

அஞ்சுனா பீச்:

அஞ்சுனா பீச் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களை சுற்றிப்பார்க்க ஒரு ஸ்கூட்டி வண்டியை வாடகைக்கு எடுத்துக்கொள்ளுங்கள். இதற்கு நம்முடைய ஒரிஜினல் லைசன்சை தரவேண்டியது அவசியம்.

Eustaquio Santimano

கால்வா பீச்:

கால்வா பீச்:

தென்னந்தோப்புகளும், வெண்மணல் கடற்கரைகளும் நிறைந்தகால்வா பீச் தெற்கு கோவாவில் உள்ள சால்செட் என்ற ஊரில் உள்ளது. இது கோவாவில் இருக்கும் மிகவும் சுத்தமான கடற்கரைகளில் ஒன்றாகும்.

பட்ஜெட் ஹோட்டல்களும், பார்களும், உணவு விடுதிகளும் நிறைய இருக்கும் இந்த கடற்கரை தேனிலவு கொண்டாட வரும் ஜோடிகளுக்கு ஏற்ற இடமாக சொல்லப்படுகிறது.

Eustaquio Santimano

கால்வா பீச்:

கால்வா பீச்:

கால்வா பீச்சில் பாராசெயிலிங் என்ற சாகச விளையாட்டு மிகவும் பிரபலமாகும். ஒரு படகுடன் இணைக்கப்பட்ட பாராசூட்டை பிடித்தபடியே வானில் பறக்கும் விளையாட்டான இந்தபாராசெயிலிங்கை புது மணத்தம்பதிகள் நிச்சயம் முயற்சி செய்துபார்க்க வேண்டும்.

Eustaquio Santimano

இதர சுற்றுலாத்தலங்கள்:

இதர சுற்றுலாத்தலங்கள்:

போர்த்துகீசிய கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டாக சொல்லப்படும் போம் ஜீசஸ் பசிலிக்காதேவாலயம் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். அந்த காலத்தில் போர்துகீசியர்களின் தலைநகரமாக விளங்கிய பழைய கோவாவில் இந்த சர்ச் அமைந்திருக்கிறது.

இதனுள் 15ஆம் நூற்றாண்டில் மறைந்த புனித பிரான்சிஸ் சேவியர் கல்லறை அமைந்திருக்கிறது. இதனுள் அவரின் உடலில் இன்றும் சில பாகங்கள் உயிர்ப்புடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Nima Sareh

சலீம் அலி பறவைகள் சரணாலயம்:

சலீம் அலி பறவைகள் சரணாலயம்:

கோவாவில் 'சோரோ' என்னும் சிறு தீவில் மண்டோவி நதியின் கரையில் அமைந்திருக்கும் அலையாத்தி காடுகளை உள்ளடக்கி அமைந்திருக்கிறது சலீம் அலி பறவைகள் சரணாலயம்.

இந்த சரனாலயத்தையும் அங்குள்ள பறவைகளையும் சிறு படகுகள் மூலம் சுற்றிப்பார்க்கலாம். கொஞ்சமும் மாசுபடாத இயற்கையான சூழலில் இந்த சரணாலயம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Nikhil Prabhakar

கோவா:

கோவா:

நீங்க இப்போதே கோவா கிளம்ப வேண்டும் என்பதற்கான சில காரணங்கள்

Eustaquio Santimano

கோவா:

கோவா:

கோவாவில் கொண்டாடப்படும் அட்டகாசமான கார்னிவல் திருவிழாவை பற்றி தெரியுமா?

Joel's Goa Pics

கோவா:

கோவா:

கொண்டாட்டமென்றால் அது கோவாதான்!!!

Shahnawaz Sid

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X