Search
  • Follow NativePlanet
Share
» »பொன்முடி மலையை பற்றிய சுவையான தகவல்கள்

பொன்முடி மலையை பற்றிய சுவையான தகவல்கள்

By Naveen

வார விடுமுறைக்கு எங்காவது புதிய இடமொன்றிற்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் கடவுளின் சொந்த தேசம் என்ற பெயருக்கு ஏற்றார்போல் இயற்கை வனப்பு நிறைந்திருக்கும் கேரளாவில் வெண்மேகங்கள் பசுமை போர்த்திய மலைகளை முத்தமிடும் பொன்முடி என்ற இடத்திற்கு நிச்சயம் செல்லலாம்.

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இந்த பேரழகு மிக்க பொன்முடி மலையை பற்றிய சுவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

எங்கே அமைந்திருக்கிறது?

எங்கே அமைந்திருக்கிறது?

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 55கி.மீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 1100மீ உயரத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது இந்த பொன்முடி மலை.

Satish Somasundaram

திருவனந்தபுரம் - பொன்முடி:

திருவனந்தபுரம் - பொன்முடி:

திருவனந்தபுரம் - பொன்முடி சாலை நெடுகவும் மனதை கொள்ளைகொள்ளும் இயற்கை காட்சிகள் நிறைந்திருக்கின்றன. இந்த சாலையில் மொத்தம் 22 ஊசிமுனை வளைவுகள் இருக்கின்றன.

காரிலோ, வண்டியிலோ செல்லும்போது இடையிடையே நிறுத்தி அற்புதமான இயற்கை காட்சிகளை ரசிக்காமல் நம்மால் நகர முடியாது என்றே சொல்லலாம்.

Thejas Panarkandy

பொன்முடி:

பொன்முடி:

பள்ளத்தாக்குகளும் மலைச்சிகரங்களும் மாறிமாறி அமைந்திருக்கும் பொன்முடியில் தான் கேரளத்தில் இருப்பதாக சொல்லப்படும் 483 வகை பறவையினங்களில் 283 வகை பறவையினங்கள் வாழ்வதாக சொல்லப்படுகிறது.

இவைதவிர 15க்கும் மேற்ப்பட்ட அரிய வகை பட்டாம்பூச்சியினங்கள், திருவிதாங்கூர் ஆமை, மலபார் பறக்கும் தவளை போன்றயும் பொன்முடியில் இருக்கின்றன.

arwcheek

பொன்முடி - சுற்றுலாத்தலங்கள்:

பொன்முடி - சுற்றுலாத்தலங்கள்:

கல்லார்: பொன்முடிக்கு அருகில் அமைந்திருக்கும் கல்லார் ஆறு இங்கிருக்கும் முக்கியமான சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. பன்னீர் போல தெளிவான நீர் பாயும் இந்த ஆற்றில் pebbles எனப்படும் கூழாங்கற்கள் அதிகளவில் இருப்பதாலேயே இதற்கு 'கல்லார்' என்ற பெயர் வந்திருக்கிறது.

Satish Somasundaram

மீனுமுட்டி அருவி:

மீனுமுட்டி அருவி:

பொன்முடி-கல்லார் சாலையில் இருந்து 3கி.மீ தொலைவில் உள்ளமீனுமுட்டி அருவி பொன்முடிக்கு அருகில் இருக்கும் மற்றுமொரு நல்ல சுற்றுலாத்தலம் ஆகும். இந்த அருவியை அடைய கேரள வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று அடர்ந்த வனத்தினுள் சில தூரம் ட்ரெக்கிங் செய்ய வேண்டும்.

பெப்பரா வனவிலங்கு சரணாலயம்:

பெப்பரா வனவிலங்கு சரணாலயம்:

பொன்முடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் தேவைக்காகபெப்பரா அணை கட்டப்பட்டது. பின்னர் 1983ஆம் ஆண்டு இந்த அணையை சுற்றியுள்ள பகுதிகள் வனவிலங்கு சரணாலயமாக மாற்றப்பட்டது.

Thejas Panarkandy

பெப்பரா வனவிலங்கு சரணாலயம்:

பெப்பரா வனவிலங்கு சரணாலயம்:

பெப்பரா வனவிலங்கு சரணாலயம் 53 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு நீங்கள் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, நீலகிரி நீலவால் குரங்கு போன்ற விலங்குகளை கண்டு ரசிக்கலாம்.

இந்த வனவிலங்கு சரணாலயத்தினுள் இருக்கும்பெப்பரா அணையையும் நிச்சயம் கண்டு ரசிக்க வேண்டும்.

Easa Shamih

கோல்டன் வேல்லி:

கோல்டன் வேல்லி:

பொன்முடியில் ட்ரெக்கிங் செய்ய மிகவும் ஏற்ற இடம் இந்தகோல்டன் வேல்லி ஆகும்.சிற்றாறுகளும், நீரோடைகளும், பசுமை மாறா மரங்களும் சூழ இயற்கையின் பேரழகு கொட்டிக்கிடக்கும் இந்த இடத்திற்கு புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்கள் தேன் நிலவுக்கு கோல்டன் வேல்லி வருவது வெகுப் பொருத்தமாக இருக்கும்.

vishwaant avk

எப்படி அடைவது?:

எப்படி அடைவது?:

பொன்முடி மலைப்பகுதிக்கு அதன் அருகாமையில் அமைந்துள்ள திருவனந்தபுரம் நகரிலிருந்தும், கேரளாவின் மற்ற பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொன்முடி சென்னையில் இருந்து 775கி.மீ தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 730கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.

Kerala Tourism

பயண வழிகாட்டி:

பயண வழிகாட்டி:

பொன்முடியை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

Girish...

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

பொன்முடியின் பேரழகு !!

Thejas Panarkandy

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

பொன்முடியின் பேரழகு !!

Satish Somasundaram

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

மலைகளுக்கு பின்னால் ஒளியும் சூரியன் !!

Thejas Panarkandy

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

பொன்முடி சிகரம் !!

Thejas Panarkandy

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X