Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் மிக உயரமான போர்க்களத்தை பற்றி அறிந்துகொள்ளலாம் வாருங்கள்

உலகின் மிக உயரமான போர்க்களத்தை பற்றி அறிந்துகொள்ளலாம் வாருங்கள்

By Naveen

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் நீண்டகால தலைவலியாக இருந்து வருவது பாகிஸ்தானுடனான எல்லைப்பிரச்சனை தான். காஷ்மீர் மாநிலத்திலுள்ள சில பகுதிகளை சொந்தம் கொண்டாடுவதில் இருநாடுகளுக்குமிடையே சில போர்களே மூண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட பிரச்சனைக்குரிய பகுதிகளில் ஒன்று தான் சியாச்சின் பனிச்சிகரமாகும்.

இன்றும் இரவும் பகலும் உறையவைக்கும் குளிரிலும் இரு நாட்டு படைகளும் இங்கே முகாமிட்டு தங்கள் எல்லைகளை பாதுக்காத்து வருகின்றன. உலகின் மிக உயரமான போர்க்களமாக அறியப்படும் இந்த சியாச்சின் பனிச்சிகரத்தை பற்றி அறிந்துகொள்ளலாம் வாருங்கள்.

சியாச்சின் பனிச்சிகரம் !!

சியாச்சின் பனிச்சிகரம் !!

கடல் மட்டத்திலிருந்து 18,875அடி உயரத்தில் இமயமலையின் கிழக்கு காரகோரம் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக்கோட்டை ஒட்டி அமைந்திருக்கிறது இந்த சியாச்சின் பனிச்சிகரம்.

சியாச்சின் பனிச்சிகரம் !!

சியாச்சின் பனிச்சிகரம் !!

பூகோள ரீதியாக யுரேசியா தட்டும் இந்திய துணைக்கண்ட தட்டும் பிரியும் 'Great drainage divide' என்னுமிடத்தில் சியாச்சின் பனிச்சிகரம் அமைந்திருக்கிறது. மூன்றாம் துருவபிரதேசம் என்று சொல்லும் அளவிற்கு வருடத்திற்கு சராசரியாக 1000செ.மீ பனிப்பொழிவு இருக்கிறது.

சியாச்சினில் குளிர்காலங்களில் மனிதன் உயிர்வாழவே முடியாத அளவுக்கு -50*C வரை வெட்பநிலை கீழிறங்குகிறது.

சியாச்சின் பனிச்சிகரம் - பெயர் காரணம்:

சியாச்சின் பனிச்சிகரம் - பெயர் காரணம்:

பல்தி என்ற திபெத்திய கிளைமொழி ஒன்றின் படி 'சியா' என்பது ரோஜா மலர்கள் என்றும் , 'சுன்' என்பது மிகுதியான என்றும் பொருள்படுகின்றன. இந்த இரண்டு சொற்களின் புணர்வே 'சியாச்சின்' என்றானதாக சொல்லப்படுகிறது.

rv

ஆபரேஷன் மேகதூத்:

ஆபரேஷன் மேகதூத்:

உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பணிச்சிகரத்தை கைப்பற்றும் நோக்கத்தோடு இந்திய மேற்கொண்ட ராணுவ படைகுவிப்பு நடவடிக்கை தான்ஆபரேஷன் மேகதூத் என்றழைக்கப்படுகிறது.

இதேபோன்றதொரு நடவடிக்கையை பாகிஸ்தான் 'ஆபரேஷன் அபாபீல்' என்ற பெயரில் மேற்கொள்வதற்கு சரியாக ஒருநாள் முன்னதாக இந்திய ராணுவம் தனது படைகளை சியாச்சின் பனிச்சிகரத்தில் குவித்து அது மொத்தத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ayonbaner

மடியும் ராணுவ வீரர்கள்:

மடியும் ராணுவ வீரர்கள்:

1984இல் இருந்து இன்றுவரை இந்திய பாகிஸ்தான் படைகளிடையே அவ்வப்போது தாக்குதல் நடந்து வந்தாலும் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாவதை விட இங்கு நிலவும் கடும் குளிரினாலும், பணிச்சரிவினாலும் உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் கூட இங்கு ஏற்ப்பட்ட பனிச்சரிவில் சிக்கி மெட்ராஸ் ரெஜிமன்ட்டை சேர்ந்த 10 இந்திய வீரர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

ayonbaner

நீராதாரம்:

நீராதாரம்:

சியாச்சின் பனிச்சிகரம் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் முக்கிய ஜீவ நதிகளின் உயிராதாரமாக இருக்கிறது.

இதிலிருந்து உற்பத்தியாகும் நுப்ரா ஆறு லடாக்கை கடந்து சாயாக் நதியில் கலக்கிறது. இந்த சாயாக் நதி பின் உலகின் மிகப்பெரிய பாசனப்பகுதியின் உயிர்நாடியாக திகழும் சிந்து நதியுடன் இணைந்து பாகிஸ்தானில் பாய்கிறது.

Kothanda Srinivasan

சுற்றுலா:

சுற்றுலா:

மலையேற்றம் செய்ய சியாச்சின் பனிச்சிகரம் மிகச்சிறந்த இடமாக சொல்லப்பட்டாலும் இங்கு நிலவும் ராணுவ பதற்ற நிலையின் காரணமாக பொதுமக்கள் யாரும் இந்த பகுதிக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இருப்பினும் சியாச்சினுக்கு அருகில் இருக்கும் நுப்ரா பள்ளத்தாக்கு இந்தியாவில் அதிகம் பிரபலமாகாத அதேசமயம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத இயற்கை அழகை கொண்டிருக்கிறது.

ayonbaner

நுப்ரா பள்ளத்தாக்கு:

நுப்ரா பள்ளத்தாக்கு:

நுப்ரா பள்ளத்தாக்கு சியாச்சின் பனிச்சிகரத்தில் இருந்து 108கி.மீ தொலைவிலும் லடாக் மாநிலத்தின் தலைநகரான லெஹ் நகரிலிருந்து 150கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.

இங்கு தான் லடாக்கை காரகோரம் மலைப்பகுதிகளில் இருந்து பிரிக்கும் சியாச்சின் சிகரத்தில் உருவாகும் ஷ்யாக் ஆறு நுப்ரா ஆற்றுடன் கலக்கிறது.

நுப்ரா பள்ளத்தாக்கு:

நுப்ரா பள்ளத்தாக்கு:

நுப்ரா கடல்மட்டத்தில் இருந்து மிக உயர்ந்த இடத்தில் அமைந்திருக்கும் குளிர் பாலைவனமாகும்.

இங்கே நதிப்படுகைகளில் மட்டுமே கோதுமை, பார்லி போன்றவை விளைவிக்கப்படுகின்றன.

நுப்ரா பள்ளத்தாக்கு:

நுப்ரா பள்ளத்தாக்கு:

லடாக் வரை சுற்றுலா செல்வதாக இருந்தால் நிச்சயம் அப்படியே நுப்ரா பள்ளத்தாக்கிற்கும் சென்று வாருங்கள். புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுடையவராக இருந்தால் நிச்சயம் இந்த பயணம் உங்களுக்கு பிடிக்கும்.

நுப்ரா பள்ளத்தாக்கை பற்றிய பயண தகவல்கள்

Read more about: adventure kashmir ladakh trekking
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X