» »பெங்களூர்- கன்னியாகுமரி ஒரு சூப்பர் டூர் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆர்வமா? இத படிங்க

பெங்களூர்- கன்னியாகுமரி ஒரு சூப்பர் டூர் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆர்வமா? இத படிங்க

Posted By: Udhaya

விடுமுறை நாட்களை வீட்டிலே கழிப்பதற்கு பதிலாக, நாம் காணாத நமக்கு அருகிலுள்ள இடங்களுக்கு சென்று ரசிப்பது நம் குடும்பத்தினரை, உறவினர்களை மற்றும் நண்பர்களை நாம் மகிழ்ச்சிபடுத்தும் செயலாக அமையும். எப்ப பாரு வேலை.. கொஞ்ச நேரம் என்கூட இருக்கறானா பாருங்க அப்படின்னு உங்க அப்பா அம்மா வருத்தப்படுவாங்கதானே. உங்களுக்கு திருமணம் ஆகிருந்தா உங்க மனைவி குழந்தைகள் கூட நேரம் செலவிடாம அலுவலகத்திலேயே பொழுது சரியாகிடுதா.. கிடைக்குற விடுமுறைய சந்தோசமா நண்பர்களுடன் கழிக்க முடியாம கணினிக்கு முன்னாடி வீண் அரட்டையிலேயே நேரம் செலவாகிறதா..

கவலையை விடுங்க.. ஒரு லாங் டூர் திட்டமிடுங்க.. போய்ட்டு வாங்க.. சரி இந்த பதிவுல நாம பெங்களூரில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை காண வேண்டிய இடங்கள், செய்ய வேண்டியவை, உண்டு மகிழவேண்டியவை குறித்து பார்க்கலாம். சரியா திட்ட மிட்டா சனி, ஞாயிறு விடுமுறை நாள்கள்ல போய்ட்டு வந்துடலாம். இல்லைனா கூட அவரவர் வசதிக்கு ஏற்ப இடங்களை கூட்டி குறைத்து மகிழ்ச்சியா ஒரு டிரிப் போலாம் கிளம்புங்க....

காலை 8 மணிக்கு கிளம்பும் நாம் முதலில் செல்லவிருப்பது மைசூரு. பெங்களூருவிலிருந்து 3 மணி நேரத்தில் வந்தடையலாம். மைசூருவில் காலை உணவை எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருந்தால், அன்றைய காலை நீங்கள் வெகு சீக்கிரமாக பெங்களூருவிலிருந்து கிளம்பவேண்டும்.

மைசூரு

மைசூரு

மைசூரு கர்நாடக மாநிலத்தின் கலாச்சார நகரம். இங்கு சுற்றிப் பார்க்க நிறைய இடம் இருக்கின்றது. எனினும் காலதாமதம் ஏற்படாதவாறு பாரத்துக்கொண்டால்,
சரியாக காலை 11 மணிக்கெல்லாம் மைசூரு வந்தடைந்துவிடலாம். முக்கியமாக காணவேண்டிய அரண்மனை, பிருந்தாவனத் தோட்டம், மியூசியம் போன்றவற்றை விரைவாக பார்த்துவிட்டால், மைசூரிலிருந்து 1 மணிக்கு முன் கிளம்பிவிடலாம்.

PC: Sathyaprakash

மைசூரு அரண்மனை

மைசூரு அரண்மனை

மூன்று அடுக்குகளை கொன்டு சாம்பல் நிற சலவைக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைசூரு அரண்மனையில் மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்கள் காணப்படுகின்றன. அரண்மனையை ஒட்டி 44.2 மீட்டர் உயரத்துக்கு ஐந்து அடுக்குகளை கொன்ட தூண் கோபுரம் ஒன்றும் காணப்படுகிறது. இதன் மேற்பகுதியில் உள்ள அலங்கார கலசங்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனையில் கோம்பே தொட்டி அல்லது பொம்மை விதானம் என்ற வாசல் வழியாக நுழையலாம். இந்த விதானத்தில் 19 ம் நூற்றாண்டு மற்றும் 20 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பொம்மைகள் காணப்படுகின்றன.

PC: jim Ankan Deka

பிருந்தாவன் தோட்டம்

பிருந்தாவன் தோட்டம்

காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜ சாகர் என்ற அணைக்கு கீழே இந்த பூங்கா தோட்டம் அமைக்கப் பட்டுள்ளது. மைசூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பிருந்தாவன் கார்டன் என்ற பிரம்மாண்டமான பூங்கா தோட்டம் மைசூர் வருகை தரும் பயணிகள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய அற்புதமாகும்.

PC: abgpt

குதிரை சவாரி

குதிரை சவாரி


குதிரை சவாரி செய்வது சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி அனைவரும் மகிழும் நிகழ்வாகும். மைசூருவில் குதிரை சவாரி நாம் கட்டாயம் அனுபவிக்கவேண்டிய ஒன்றாகும்.

PC: Letmeseeit

சாமுண்டி ஹில்ஸ்

சாமுண்டி ஹில்ஸ்

சாமுண்டி மலைகள் கடல் மட்ட்த்திலிருந்து சுமார் 1065 அடிகள் உயரத்தில் உள்ளன. மைசூர் நகருக்கு வருகை தரும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இது. இந்த சாமுண்டி மலையின் உச்சியில் பார்வதி தேவியின் அவதாரமான சாமூண்டீஸ்வரி அம்மனின் கோயில் அமைந்துள்ளது. ஆனால் இந்த பயணத்தின் போது, மலையேற்றம் கடினம். ஏனென்றால் குறிக்கப்பட்டுள்ள கால அளவு அதிகமாகும் என்பதால், நேரம் அதிகம் இருந்தால் மட்டுமே இங்கு செல்லவேண்டும். அல்லது சாமுண்டி ஹில்ஸை தவிர்த்துவிடலாம்.

PC: Prof. Tpms

விலங்கியல் பூங்கா

விலங்கியல் பூங்கா

விலங்கியல் பூங்காவை விரைவில் சுற்றிப் பார்க்கலாம். இங்கு பல்வேறு வகையான இந்திய, ஆசிய விலங்கினங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

PC: punithsureshgowda

மைசூரு சில்க் சேலை

மைசூரு சில்க் சேலை

மைசூருவின் ஸ்பெஷல் என்றால் அது சில்க் சேலை. தேவைக்கேற்ப சேலை வாங்கிக் கொண்டு கிளம்புவோம். அதற்குரிய காலத்தில் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டால், தற்போது மதியம் 1 மணி ஆகியிருக்கும். மைசூருவில் நிறைய உணவு விடுதிகள் உள்ளன. நல்ல தரமான உணவு வகைகளும் கிடைக்கின்றன. நார்த் இண்டியன் , வெளிநாட்டு உணவுகள் முதல் செட்டிநாடு, தென்னிந்த உணவுகள் அனைத்தும் கிடைக்கும். பின் சேலத்தை நோக்கி நம் பயணத்தைத் தொடரலாம்.

PC: kiranravikumar

சேலம்

சேலம்

ஐந்தரை மணி நேர பயணத்தைத் தொடர்ந்து, சேலம் வந்தடைவோம். பின்னர், அங்குள்ள இடங்களில் ஒரு மணிநேரம் பொழுது போக்கலாம். நேரம் நமக்கு குறைவாகவே இருப்பதால், மேட்டூர் அணை, கைலாசநாதர் கோவில், சங்ககிரி கோட்டை இவற்றில் ஏதேனும் இரண்டு இடங்களுக்குப் போய் வரலாம். உங்களின் விருப்பப்படி எங்கே வேண்டுமானாலும் செல்லுங்கள். கவனம் ஒரு மணிநேரத்தில் நாம் புறப்பட்டாக வேண்டும்.

PC: Arunjothi

மேட்டூர் அணைக்கட்டு

மேட்டூர் அணைக்கட்டு

தமிழக விவசாயிகள் நம்பியிருக்கும் முக்கிய நீர் நிலைகளுள் மேட்டூர் அணையும் ஒன்றாகும். தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரங்களுள் ஒன்று என்றாலும், பெரும்பாலும் நீரின்றியே காணப்படுகிறது. தமிழகத்தின் விவசாயிகளுக்கு முக்கிய பிரச்சினையாக இது மாறி, பல பிரச்சனைகளை கடந்துள்ளது.

PC: Vvenka1

கைலாசநாதர் கோவில்

கைலாசநாதர் கோவில்

இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோவில் அல்ல. 10ம் நூற்றாண்டிலேயே இதன் ஒரு சில பகுதிகள் கட்டப்பட்டிருந்ததாக வரலாறு கூறுகின்றது. பின்னர் 17ம் நூற்றாண்டில் இது விரிவுபடுத்தப்பட்டது.

PC: Thiagupillai

ஜூமா மசூதி

ஜூமா மசூதி

சேலம் பகுதியின் முக்கிய மசூதியாக கருதப்படும் இது பலர் வந்து செல்லும் இடமாக உள்ளது. நகரத்தின் இதயப் பகுதியான மணிமுத்தாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இந்த மசூதி. மைசூரை ஆண்ட மன்னர் திப்புசுல்தானால் கட்டப்பட்ட பழம்பெரும் மசூதி இது.

PC: syed87mustafa

சங்ககிரி கோட்டை

சங்ககிரி கோட்டை

சங்ககிரி மலைமீது அமைந்துள்ள இந்த மாபெரும் கோட்டைக்குள், 6 நடைபாதைகள், 5 கோயில்கள், 2 மசூதிகள் உள்ளன. திப்புசுல்தானும், தீரன் சின்னமலையும் பயன்படுத்திய துப்பாக்கிகள்உள்ளிட்ட போர் ஆயுதங்களும் இங்கு உள்ளன. சங்ககிரி கோட்டைக்கு செல்லும் வழியில் செயின்ட் ஆண்டனி தேவாலயம் உள்ளது. இவையனைத்தையும் கண்குளிர ரசித்துவிட்டு மாலை 6 மணிக்கெல்லாம் கிளம்பி விடவேண்டும். அப்போதுதான் இரவு திருச்சியில் சீக்கிரம் சென்ற சேர முடியும்.

PC: jayakanthanG

நாமக்கல்

நாமக்கல்

சேலத்திலிருந்து திருச்சி செல்லும் வழியில் நாமக்கல் இருக்கிறது. இடையில் தேவையான பொருள்கள் ஏதும் வாங்க வேண்டுமென்றால் இங்கு வாங்கிக் கொள்ளலாம். அல்லது சில மணி நேரங்களில் கரூர் வந்துவிடும் அங்கும் உங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.

PC: Booradleyp

கரூர்

கரூர்


சில நிமிடங்கள் இளைப்பாறி, குளிர்பானங்கள் ஏதும் சாப்பிட இது ஒரு சிறிய ஓய்வாக அமையும். நீண்ட தூரம் கார் ஓட்டி வந்து சிரமப்படாதீர்கள். சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்ளலாம்.

PC: Balaji

திருச்சி

திருச்சி

இரண்டரை மணி நேர பயணத்துக்குப் பிறகு இரவு 9 முதல் 10 மணிக்குள் திருச்சி வந்தடைந்து விடலாம். திருச்சியில் சுற்றிப்பார்க்க நிறைய இடமிருக்கிறது. எனினும் நேரம் தாமதமாகிவிட்டதால், இங்கு இரவு தங்கி கொண்டு காலையில் சுற்றிப்பார்க்கலாம்.

திருச்சியில் தங்கும் விடுதிகள் அதிகளவில் உள்ளன. திருச்சியில் இரவு ஓய்வெடுத்துவிட்டு, காலை 8 மணிக்கெல்லாம் கிளம்பி விடுங்கள். மலைக்கோட்டை, அரங்கநாதர் கோவில், கல்லணை என இவற்றை காண இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் பிடிக்கும்.

அரங்கநாதர் கோவில் பற்றி மேலும் அறிய

மலைக்கோட்டை பற்றி மேலும் அறிய

PC: vensatry

மலைக்கோட்டை

மலைக்கோட்டை

உலகிலேயே மிகப் பழமையான பாறை என்ற பெருமை கொண்டது. 83 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலைக்கோட்டைப் பாறை, 3800 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகிறது.

ஒரு மில்லியன் ஆண்டு என்றால் 10 லட்சம் ஆண்டுகள். கிரீன்லாந்து, இமயமலைப் பாறைகளைவிட பழமையானது!. 344 படிகள் கொண்ட பாறையில் ஏறிச் சென்றால், ஏசு பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே செதுக்கப்பட்ட கல்வெட்டுகளைக் காணலாம்.

PC: The British Library

https://en.wikipedia.org/wiki/Tiruchirappalli#/media/File:The_tank_and_Rockfort_Trichinopoly.jpg

திருவரங்கம் அரங்கநாதர் கோவில்

திருவரங்கம் அரங்கநாதர் கோவில்

காவிரி ஆற்றினால் சூழப்பட்ட, மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும் . இக்கோவிலில் மிகப் பெரிய இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன் உள்ளது. இது தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக ஆகும்.

PC: Giridhar Appaji Nag Y

கல்லணை

கல்லணை

கரிகால் சோழனால் கட்டப்பட்ட மிகப்பரிய அணை இதுவாகும். 329 மீட்டர் நீளமும், 20 மீ அகலமும் கொண்டது இந்த அணை. இது பலநூறு ஆண்டுகள் கடந்து இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. தமிழர்கள் பண்டைக் காலத்திலேயே பொறியியல் தொழில்நுட்பத்தில் வல்லுநர்களாகத் திகழ்ந்ததற்கு இந்த அணை மறுக்கமுடியாத சாட்சி.


PC: Beckamarajeev

கரிகாலச் சோழன் நினைவகம்

கரிகாலச் சோழன் நினைவகம்

பின்னர் இறுதியாக கரிகாலச் சோழன் நினைவகத்தைப் பார்வையிட்டுவிட்டு, அங்கிருந்து கிளம்பலாம். 11 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டால், மதிய உணவுக்கு திண்டுக்கல்லை அடைந்துவிடலாம்.

PC: Srithern

திண்டுக்கல்

திண்டுக்கல்

சரியாக மதிய சாப்பாடு நேரத்துக்குள் திண்டுக்கல்லை அடைந்துவிட்டால், இவ்வூரின் பிரபல உணவான தலப்பாக்கட்டி பிரியாணியை ஒரு ருசி பார்த்துவிடலாம். தலப்பாக்கட்டி பிரியாணி பல்வேறு நகரங்களிலும் கிடைக்கும் என்றாலும், தோன்றிய இடத்தில் ருசிப்பது தனி சுவைதான் என்கின்றனர் பலர்.

PC: Drajay

தலப்பாகட்டி பிரியாணி

தலப்பாகட்டி பிரியாணி

மதிய உணவு சாப்பிட்டு, ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின் திண்டுக்கல்லில் இருந்து கிளம்ப வேண்டும். சிறிது தூரத்தில் உள்ள மதுரையை அடைந்து அங்கு 2 மணி நேரம் செலவிட, பின்னர் கன்னியாகுமரியை நோக்கிய நம் பயணம் சிறப்பாக அமையும்.

PC: thalappakatti

மதுரை

மதுரை

மதுரையில் சுற்றிப் பார்ப்பதற்கென மீனாட்சியம்மன் கோவில், காந்தி அருங்காட்சியகம், கூடல் அழகர் கோவில் என பல்வேறு இடங்கள் உள்ளன. எனினும் முக்கியமான இடங்களாக நீங்கள் கருதுபவற்றை சீக்கிரம் பார்த்துவிட்டு கன்னியாகுமரி புறப்படலாம்.


PC: எஸ்ஸார்

காந்தி அருங்காட்சியகம்

காந்தி அருங்காட்சியகம்

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது அணிந்திருந்த மேல்துண்டு இந்த அருங்காட்சியகத்தில் இரத்தக்கரையுடன் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் ஏப்ரல் 15 அன்று 1959 ஆம் வருடம் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவில்லம் ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருக்கின்றது.

PC: vegpuff

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

விழாக்காலங்களில் மீனாட்சியம்மனை தரிசிக்க மிகுந்த தாமதம் ஆகலாம். இதனால் நம் பயணத் திட்டத்தை இரண்டு மூன்று மணிநேரம் முன்கூட்டியே திட்டமிட்டு வரவேண்டும்.

PC: எஸ்ஸார்

கூடல் அழகர் கோவில்

கூடல் அழகர் கோவில்

மீனாட்சியம்மன் கோவிலைத் தொடர்ந்து நேரமிருந்தால் இந்த கோவிலை காணலாம். கட்டாயம் காணவேண்டிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

PC: Ssriram mt

விருதுநகர்

விருதுநகர்

இந்த மாவட்டத்தில் பால்கோவா சிறப்பாக கருதப்படுகிறது. இங்கு கிடைக்கும் பால்கோவா மிகுந்த சுவையுடையதாகவும், மற்ற இடங்களை ஒப்பிடும்போது விலை குறைவாகவும் கிடைக்கும். நீங்கள் இனிப்பு விரும்பிகள் என்றால் வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் உறவினர்களுக்கும் வாங்கிச் செல்லுங்கள்.

PC: Arunankabilan

கோவில்பட்டி

கோவில்பட்டி

விருதுநகர் பால்கோவா போல, கோவில்பட்டிக்கு கடலை மிட்டாய். வெல்லத்தில் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்ட கடலை மிட்டாய்களை ருசிப்பது அலாதியான மகிழ்ச்சி.


PC: NAGAKRISH

திருநெல்வேலி

திருநெல்வேலி

மாலை 3 மணிக்கெல்லாம் திருநெல்வேலி வந்தடைந்துவிட்டால் நெல்லையப்பர் கோவில் தரிசனம் முடித்துவிட்டு செல்லலாம். 4 மணிக்கு மேல் ஆகிவிட்டால் நேரடியாக கன்னியாகுமரி செல்வது அறிவுறுத்தலுக்குரியது. ஏனென்றால் நீங்கள் கன்னியாகுமரியில் கட்டாயம் காணவேண்டிய ஒன்றான சூரிய மறைவு நிகழ்வு காண முடியாமல் ஆகிவிடும்.

PC: Nijumania

நெல்லையப்பர் கோவில்

நெல்லையப்பர் கோவில்

ஏழாம் நூற்றாண்டிலேயே சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் இதுவாகும். மிகத்தொன்மையான கோவில்களுள் ஒன்றான இது புதுப்பொலிவுடன் மெருகூட்டப்பட்டு காட்சியளிக்கிறது. திருநெல்வேலியில் சிறப்பாக கருதப்படும் அல்வா மாலை மங்கிய நேரத்தில் தான் சுட சுட கிடைக்கும். ஆனால் அவ்வளவு நேரம் தாமதித்தால் நீங்கள் சூரிய மறைவு காண முடியாது.


PC: Vashikaran Rajendrasingh

குற்றாலம்

குற்றாலம்

திருநெல்வேலியிலிருந்து சில மணி நேர தூரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற அருவிகளின் கூட்டம் குற்றாலம் எனப்படுகிறது. வேறொரு டிரிப்பில் அல்லது கன்னியாகுமரி போய்விட்டு திரும்புகையில் நீங்கள் குற்றாலம் சென்று வரலாம். அருவிகளில் விழும் நீர் மருத்துவகுணம் மிக்கது.

PC: Mdsuhil

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

திருநெல்வேலியிலிருந்து 1.30 மணி நேர பயணத்தில் கன்னியாகுமரி வந்தடையலாம். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, காந்தி மண்டபம், கடற்கரைகள், சூரிய உதயம், மறைவு ஆகியவை காணலாம்.

PC: Docku

திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறை

திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறை

இரவு நேரங்களில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்த பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிடும். அதைக் கருத்தில் கொண்டு சீக்கிரமாக வந்தால் இரண்டையும் ரசிக்கலாம்.

PC: Ravivg5

பகவதியம்மன் கோவில்

பகவதியம்மன் கோவில்

விழாக்காலங்களில் அதிக கூட்டம் காணப்படும் என்பதால், முன்கூட்டியே திட்டமிட்டு வரவேண்டும். பகவதியம்மன் கோவில் மூக்குத்தி தரிசனம் என்பது இங்கு வரும் பக்தர்களால் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

PC: Parvathisri

சூரிய மறைவு காட்சி

சூரிய மறைவு காட்சி

சூரியன் உலகம் முழுவதும் மறையும் தானே.. அதற்கு என்ன ஸ்பெஷல் எனக் கேட்கலாம். ஒரே நேரத்தல் சூரிய மறைவையும், சந்திர உதயத்தையும் இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே இங்கு தான் காணமுடியும். அந்தமான் உள்ளிட்ட வேறு சில இடங்களில் பார்க்கமுடியும் என்றாலும், இந்தியாவின் தீபகற்ப பகுதியில், மூன்று கடல்கள் சந்திக்கும் பகுதியில் அதுவும் மக்களால் புனித இடமாக கருதப்படும் பகுதியில் சூரிய மறைவு மற்றும் சந்திர உதயத்தை காண்பதை வேண்டாம் என்றா சொல்வீர்கள்....


PC: M.Mutta

Read more about: travel பயணம்

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்