Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் ஒட்டுமொத்த அறிவுக் களஞ்சியமான நாலந்தா அழிவின் பின்னணியில் திக் திக் காரணங்கள் #NPH 4

உலகின் ஒட்டுமொத்த அறிவுக் களஞ்சியமான நாலந்தா அழிவின் பின்னணியில் திக் திக் காரணங்கள் #NPH 4

நாலந்தா பல்கலைகழகத்தில் புதைந்துள்ள உண்மைகளும் மர்மங்களும்

உலகின் மிகப்பெரிய அறிவுக் கருவூலமாக விளங்கிய நாலந்தா பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டதன் பின்னணியில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. அதிலும், நாலந்தாவை இஸ்லாமிய மன்னர்கள் படையெடுப்பின்போது அழித்து, அதன் செல்வங்களையும், அறிவியல் தகவல்களையும் ஒட்டுமொத்தமாக நாசமாக்கிச் சென்றதாகவும் நம்பப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை, நாலந்தாவிற்கு ஒரு சுற்றுலா சென்று பார்க்கலாம் வாருங்கள். இது நேட்டிவ் பிளானட் ஹிஸ்டரி Native Planet History.

 உலகின் மிக அதிக காலம் இயங்கும் பல்கலைகழகம்

உலகின் மிக அதிக காலம் இயங்கும் பல்கலைகழகம்

கிமு ஆறாம் நூற்றாண்டில் பல்லவ தேவனால் கட்டப்பட்ட இந்த பல்கலைகழகம் உலகின் மிக அதிக ஆண்டுகள் இயங்கிய அமைப்பாக விளங்குகிறது. இது 800 ஆண்டுகளாக 10 ஆயிரம் மாணவர்கள், 2700 பணியாளர்களுடன் இயங்கியது.

wiki

கற்றலின் தொன்மை

கற்றலின் தொன்மை

இந்த பல்கலைக் கழகம் மொத்தம் 10 கோயில்களை கொண்டுள்ளது. மேலும் இங்கு தியான மண்டபங்களும், உலகத் தரம்வாய்ந்த நூலகங்களும் உண்டு.

wiki

நூலகம் அமைப்பு

நூலகம் அமைப்பு


இந்த நூலகம் மூன்று பிரிவுகளாக உள்ளது. அவை மூன்று தனித் தனி கட்டிடங்கள் ஆகும். ரத்னசகரா, ரத்னதாதி, ரத்னரங்க்ஜகா ஆகும். இவை சமய நூல்கள் மட்டுமல்லாது, பல அரிய இலக்கியங்கள்,வானவியல் சாத்திரங்கள், உலோகவியல்,
மொழியியல், தத்துவங்கள், அறிவியல், சமூக நலம், வரலாறு, பொருளாதாரம், சட்டம், புவியியல், கணிதம், கட்டுமானம், ஜோதிடம், மருத்துவம் மற்றும் பல நூல்கள் இருந்தன.
wiki

சீன பயணிகள் இப்பல்கலைகழகத்தின் மாணவர்கள்

சீன பயணிகள் இப்பல்கலைகழகத்தின் மாணவர்கள்

சீனப்பயணிகளான உலகம் முழுவதும் சுற்றிவந்த யுவான் சுவாங், ஹூயூன் சங் ஆகியோர் வெகு காலத்துக்கு முன்பு இந்திய வந்திருந்தபோது இங்கு பயின்றனர் எனவும், இந்த பல்கலைகழகத்தின் மூலம் பல விசயங்கள் கற்றனர் எனவும் இன்னொரு சீன எழுத்தாளரின் வாயிலாக அறியமுடிகிறது.

wiki

 பல்கலைகழகத்தின் பலமும் பலனும்

பல்கலைகழகத்தின் பலமும் பலனும்

இந்த பல்கலைகழகம் எரிக்கப்பட்டது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். அதிலும் இந்த இடத்திலுள்ள புத்தகங்களையும், மற்ற வளங்களையும் எரிப்பதற்கு எத்தனை நாள்கள் ஆகின என்பதை வைத்தே இதன் வலிமையை நம்மால் அறிய முடியும்.

wiki

சர்வ நாசமான மனிதனின் அறிவுக் களஞ்சியம்

சர்வ நாசமான மனிதனின் அறிவுக் களஞ்சியம்

இப்படி தீயிட்டு கொளுத்தியதன் மூலம் கொஞ்சம்கொஞ்சமாக சேர்த்து வைத்த மனிதனின் ஒட்டுமொத்த அறிவியலும், அறிவும் இந்த இடத்திலிருந்து வெளியான புகையிலேயே அழிந்துவிட்டதாக கூறுகின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள்.
wiki

உலகுக்கே பெரும் இழப்பு

உலகுக்கே பெரும் இழப்பு

இந்த இடத்தில் ஏகப்பட்ட அறிவு சம்பந்தமான ஆராய்ச்சிகளும், புத்தகங்களும் இருந்தன. அவை எல்லாம் அழிக்கப்பட்டபின் அது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே மிகப்பெரிய இழப்பு என்று பார்க்கப்படுகிறது.
wiki

 கற்றலின் சுரங்கம்

கற்றலின் சுரங்கம்

கற்றலின் சுரங்கமான, மதிப்பிற்குரிய நாலந்தா என்று தான் 16 - 17 ஆம் நூற்றாண்டுகளில் வாழந்த திபெத்திய வரலாற்று ஆய்வாளர் தராநாத், நாலந்தா பல்கலைகழகத்தை பற்றி குறிப்பிடும் பொழுது சொல்கிறார்.
wiki

ஐ திசிங்க்

ஐ திசிங்க்

நாலந்தா பல்கலைகழகத்திற்கு ஐ-திசிங் வந்த பொழுது அங்கு 3,700 பவுத்த துறவிகள் இருந்தார்கள். அந்த மொத்த வளாகத்தில் சுமாராக 10,000 பேர் தங்கியிருந்தார்கள். அங்கே சொல்லித்தரப்படும் மிக அருமையான விரிவாக கல்வியை போலவே அந்த வளாகத்தில் இருந்த கட்டிடங்களும் இருந்தன. அங்கே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொழுது அங்கிருந்த பெரிய குவியல் 1400 அடி நீளமும் 400 அடி அகலமும் கொண்டிருந்தது. ஹூன் தாசேங் அங்கு ஏழு பவுத்த தங்குமிடங்களும் எட்டு மையங்களும் இருந்ததை குறிப்பிடுகிறார். அந்த தங்குமிடங்கள் பல அடுக்கு மாடி அமைப்புகளாகவும் அங்கிருந்த நூலகம் மூன்று கட்டிடங்களையும் அவற்றில் ஒன்று ஒன்பது மாடிகளை கொண்டதாகவும் இருப்பதை குறிப்பிடுகிறார்.
wiki

முஸ்லீம் படையெடுப்புகள்

முஸ்லீம் படையெடுப்புகள்

முஸ்லீம் படையெடுப்புகளில் இந்தியாவின் பல இடங்கள், பல செல்வங்கள், பல அரிய நூல்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் இந்த நாலந்தா பல்கலைக்கழகமும் என்று இஸ்லாமிய அரச வம்சத்தின் தாபாக் இ நசாரி எனும் நூலில் மவுலானா மின்ஹாஜ்- உத்- தின் என்பவரால் விவரிக்கப்படுகிறது.

 இந்துக்களால் அழிக்கப்பட்டதா?

இந்துக்களால் அழிக்கப்பட்டதா?


மேலும், திபெத்திய அரசன் கலாகுரி என்பவன்தான் இந்த நாலந்தா பல்கலைக் கழகம் அழிக்கப்பட்டதாகவும், அவன் இரவு பகல் பாராது ஆட்களைக் கொண்டு இதை எரியூட்டியதாகவும் நம்பப்படுகிறது. மேலும், திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங், இந்த நூலகத்தை இந்துக்களின் போர்வையில் சிலர் எரித்ததாக கூறுகிறது.
wiki

வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே

வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே

இதுமட்டுமல்ல இன்னும் எத்தனையோ நூல்கள், நாலந்தா பல்கலைக் கழகம் அழிக்கப்பட்டது இந்த காரணத்தினால், இவரால் என்று ஆயிரம் பேரை விரல் நீட்டுகின்றன. இவையெல்லாம் இம்சை அரசன் படத்தில் வரும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. வரலாற்றில் திரிபுகளும், பொய்களும் கலந்தே உள்ளன.
wiki

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X