India
Search
  • Follow NativePlanet
Share
» »ஆசியாவிலேயே மிக உயரமான பாராகிளைடிங் ஸ்பாட் – பிர் பில்லிங்கில் ஒரு சகாசச் சுற்றுலா!

ஆசியாவிலேயே மிக உயரமான பாராகிளைடிங் ஸ்பாட் – பிர் பில்லிங்கில் ஒரு சகாசச் சுற்றுலா!

இமாச்சல பிரதேசத்தின் ஜோகிந்தர் நகர் பள்ளத்தாக்கின் மேற்கில் அமைந்துள்ள பிர் பில்லிங் 'இந்தியாவின் பாராகிளைடிங் தலைநகரம்' என்று பிரபலமாக அறியப்படும் ஒரு அழகிய சுற்றுலாத் தலமாகும். சாகசப் பிரியர்களின் தலைநகரான பிர் இல் ஏராளமான விளையாட்டுகளும் பொழுதுபோக்குகளும் நிரம்பியுள்ளன.

பறவையைப் போல சுதந்திரமாக பறந்து திரிந்து, கீழே இருக்கின்ற அனைத்தும் கடுகு போல தெரிவதைப் பார்த்து ஆச்சர்யப்பட வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, பாராகிளைடிங் தான்! இங்கே இருக்கின்ற பல கவர்ச்சிகரமான செயல்களும் தனித்துவமான செயல்பாடுகளும் வார இறுதியில் தாகத்தை தணிக்க வரும் சாகசப் பயணிகளுக்கு ஒரு விருந்தாக அமைகிறது. பிர் பில்லிங் பற்றிய இதர முக்கிய தகவல்கள் இதோ!

பிர் பில்லிங்கில் பாராகிளைடிங்

பிர் பில்லிங்கில் பாராகிளைடிங்

8000 அடி உயரத்தில் வானத்தைத் தொடும் அளவிற்கு பிரமிக்க வைக்கும் இந்த இடம், வலிமைமிக்க தௌலதார் மலைத்தொடரின் மிகவும் பிரமிக்க வைக்கும், அழகிய மற்றும் அற்புதமான காட்சியை வழங்குகிறது. பிர் பில்லிங் ஆசியாவின் மிக உயரமான மற்றும் உலகின் இரண்டாவது உயரமான பாராகிளைடிங் இடமாகும்.
பாராகிளைடிங்கை பொருத்தவரை பிர் பில்லிங் சந்தேகத்திற்கு இடமின்றி உங்களது மனதை கொள்ளையடிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த ஏரோ ஸ்போர்ட்டை ரசிக்க பிர் பில்லிங் சிறந்த இடமாக இருப்பதால் ஒவ்வொரு சாகச ஆர்வலர்களின் விருப்பப்பட்டியலிலும் பிர் பில்லிங் முதலிடத்தில் உள்ளது. பாராகிளைடிங்கிற்கு மிகவும் இனிமையான காலநிலை தேவைப்படுவதால் அக்டோபர் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் இந்த விளையாட்டுக்கு ஏற்ற மாதங்களாகக் கருதப்படுகின்றன.
ஒரு நபர் பாராகிளைடிங் செய்வதற்கு ரூ. 2500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் ஷார்ட், மீடியம் மற்றும் லாங் ஃபிளையிங் செஷன்ஸ் உண்டு, அதற்கு ஏற்றார்போல் கட்டணமும் மாறுபடுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் நிபுணர்களால் கையாளப்படுகிறது.

பிர் பில்லிங்கில் உள்ள மற்ற செயல்பாடுகள்

பிர் பில்லிங்கில் உள்ள மற்ற செயல்பாடுகள்

நீங்கள் அமைதியை தேடுபவராக இருந்தாலும் சரி, நண்பர்களுடன் விடுமுறையை குதூகலமாக கொண்டாட விரும்பினாலும் சரி, அன்பிற்குரியவருடன் இனிமையாக பொழுதை கழிக்க நினைத்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் இங்கே ஆப்ஷன்ஸ் உண்டு.
ட்ரெக்கிங், கேம்பிங், ட்ரெக்கிங், ஹேங் கிளைடிங், மவுண்டன் பைக்கிங், பிர் பஜாரில் ஷாப்பிங், திபெத்தியன் காலனி, பிர் நதி வழியாக நடைபயிற்சி செய்வது, பொம்மை ரயிலில் பயணம், பாங்கோரு நீர்வீழ்ச்சியை ரசிப்பது, மான் பார்க் இன்ஸ்டிடியூட், ஆர்யா மார்காவுடன் ஸ்பா, பிர் கஃபேக்கள் மற்றும் சோக்லிங்கில் உள்ள மடாலயம் இங்குள்ள இதர பிற சுற்றுலா அமசங்களாகும்.

பிர் பில்லிங்கை எப்படி அடைவது?

பிர் பில்லிங்கை எப்படி அடைவது?

பிர் பில்லிங் என்று ஒன்றாக நாம் கூறினாலும் இரண்டும் வெவ்வேறு இடங்களாகும் மற்றும் இரண்டிற்கும் இடையேயான தூரம் 14 கிமீ ஆகும். ஒன்றை பார்த்து மற்றொன்றை பார்க்காமல் தவிர்க்க முடியாது. அதனால் தான் இவை பிர் பில்லிங் என்றழைக்கப்படுகிறது. பிர் பில்லிங்கில் வானிலையானது 18 முதல் 2௦ டிகிரியாக உள்ளது. மேலும் குளிர்காலத்தில் இது பரவலாக குறைகிறது.
பிர் பில்லிங்கிற்கு அருகிலுள்ள விமான நிலையம் 65 கி.மீ தொலைவில் உள்ள தர்மசாலா விமான நிலையம் ஆகும். மேலும் 3 கிமீ தொலைவில் உள்ள அஹ்ஜு ரயில் நிலையம் பிர் பில்லிங்கிற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் ஆகும்.

பிர் பில்லிங்கை எப்படி அடைவது?

பிர் பில்லிங் என்று ஒன்றாக நாம் கூறினாலும் இரண்டும் வெவ்வேறு இடங்களாகும் மற்றும் இரண்டிற்கும் இடையேயான தூரம் 14 கிமீ ஆகும். ஒன்றை பார்த்து மற்றொன்றை பார்க்காமல் தவிர்க்க முடியாது. அதனால் தான் இவை பிர் பில்லிங் என்றழைக்கப்படுகிறது. பிர் பில்லிங்கில் வானிலையானது 18 முதல் 2௦ டிகிரியாக உள்ளது. மேலும் குளிர்காலத்தில் இது பரவலாக குறைகிறது.
பிர் பில்லிங்கிற்கு அருகிலுள்ள விமான நிலையம் 65 கி.மீ தொலைவில் உள்ள தர்மசாலா விமான நிலையம் ஆகும். மேலும் 3 கிமீ தொலைவில் உள்ள அஹ்ஜு ரயில் நிலையம் பிர் பில்லிங்கிற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் ஆகும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X