Search
  • Follow NativePlanet
Share
» »கர்நாடகத்தின் பைந்தூர் கிராமத்துக்கு ஒரு சூப்பர் டிரிப் போலாமா?

கர்நாடகத்தின் பைந்தூர் கிராமத்துக்கு ஒரு சூப்பர் டிரிப் போலாமா?

பைந்தூர் கிராமம் அதனுடைய சூரிய அஸ்த்தமனக் காட்சிக்காகவும், அழகிய கடற்கரைக்காகவும் உலகப் புகழ்பெற்றது. இந்த எழில் கொஞ்சும் கிராமம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா நகரில் அமைந்துள்ளது. முன்னொரு கால

By Udhaya

பைந்தூர் கிராமம் அதனுடைய சூரிய அஸ்த்தமனக் காட்சிக்காகவும், அழகிய கடற்கரைக்காகவும் உலகப் புகழ்பெற்றது. இந்த எழில் கொஞ்சும் கிராமம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா நகரில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் பைந்தூர் அருகே உள்ள ஒட்டினன்னே என்ற சிறு குன்றில், பைந்து என்ற ரிஷி கடும் தவம் புரிந்ததாகவும், அதன் காரணமாகவே இதற்கு பைந்தூர் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.இந்த ஒட்டினன்னே குன்றிலிருந்து பார்த்தால் சூரியன் கடலில் இறங்கும் அற்புதக் காட்சியை பயணிகள் காணலாம். இதே போல் கொல்லூர் மூகாம்பிகை கோயில், பெலக்கா தீர்த்த அருவி, மரவந்தே கடற்கரை மற்றும் மூன்று புறங்களும் கடலால் சூழப்பட்ட முருதேஸ்வர் கோயில் ஆகியவையும் பைந்தூர் அருகே அமைந்திருக்கக் கூடிய சுற்றுலாத் தலங்கள். வாருங்கள் பைந்தூரின் அழகை கொண்டாடுவோம்.

எப்போது எப்படி?

எப்போது எப்படி?


பைந்தூரின் வெப்பநிலை எல்லா காலங்களிலும் இதமானதகவே இருக்கும். எனினும் ஆகஸ்ட்டிலிருந்து, மார்ச் வரையிலான காலங்களில் பைந்தூரை சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. இந்தக் கடற்கரை கிராமத்தை ரயில் மூலமாக அடைவது எளிது. அதேபோல் பெங்களூரிலிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பைந்தூருக்கு, பெங்களூர் மற்றும் மைசூரிலிருந்து எண்ணற்ற தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
Stanyserra

 பைந்தூர் கடற்கரை

பைந்தூர் கடற்கரை

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா தாலுக்காவில் அமைந்திருக்கும் பைந்தூர் கிராமத்தின் அழகுக்கும், கவர்ச்சிக்கும் முக்கிய காரணமாக விளங்குவது பைந்தூர் கடற்கரையே ஆகும். இது மரவந்தே கடற்கரையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பைந்தூர் கடற்கரையின் அமைதிக்காகவே உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இங்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அதோடு இங்கு சூரியனும், சமுத்திரமும் சங்கமிக்கும் கவின்மிகு காட்சி பயணிகளை வெகுவாக கவரக்கூடிய ஒன்று.

பைந்தூர் கடற்கரைக்கு அருகில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட கொல்லூர் மூகாம்பிகை கோயில் மிகவும் பிரசித்திப் பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். இது தவிர பைந்தூர் மலைகள், முருதேஸ்வர் மற்றும் ஒட்டினன்னே குன்று ஆகியவையும் இப்பகுதிகளுக்கு சுற்றுலா வரும் பயணிகளை வெகுவாக கவரக் கூடியவை.

Anuragg7990

பெலக்கா தீர்த்த அருவி

பெலக்கா தீர்த்த அருவி


பைந்தூர் வரும் பயணிகள் கண்டிப்பாக பெலக்கா தீர்த்த அருவிக்கு சென்று அதன் பரிசுத்தமான அழகை ரசிக்க வேண்டும். இந்த அருவி செங்குத்து பாறைகளுக்காகவும், சூரிய அஸ்த்தமனத்துக்காகவும் புகழ் பெற்ற ஒட்டினன்னே குன்றிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

சோமேஸ்வரா ஆலயம்

சோமேஸ்வரா ஆலயம்

பைந்தூர் கடற்கரை மற்றும் பைந்தூர் ஆற்றுக்கு அருகில் அமைந்திருக்கக் கூடிய சோமேஸ்வரா ஆலயம் அப்பகுதியின் மிகவும் பழமையான கோயில்களில் ஒன்று. இந்தக் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கத்தை காணவும், கோயிலில் உள்ள சிற்பங்களின் அழகினை கண்டு ரசிக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆண்டு தோறும் இங்கு வருகின்றனர்.

Vedamurthy.j

சனீஸ்வரா கோயில்

சனீஸ்வரா கோயில்


பைந்தூரில் உள்ள சனீஸ்வரா கோயிலுக்கு ஆண்டு தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள கோயில்களிலேயே சனீஸ்வரா கோயில்தான் மிகவும் பழமையானது.

Hariharan Arunachalam

மகாகாளி கோயில்

மகாகாளி கோயில்


பைந்தூருக்கு அருகில் உள்ள மகாகாளி கோயில் 300 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோயில் தற்போது சித்ராபூர் சரஸ்வதி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
wiki

ஸ்ரீ ராமச்சந்திர மந்திர்

ஸ்ரீ ராமச்சந்திர மந்திர்


பைந்தூர் வரும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆன்மீக ஸ்தலங்களில் ஸ்ரீ ராமச்சந்திர மந்திர் மிகவும் முக்கியமானது. இந்தக் கோயில் ராம பிரானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

Read more about: travel karnataka bangalore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X