Search
  • Follow NativePlanet
Share
» »வெள்ளியங்கிரி மலையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் !!

வெள்ளியங்கிரி மலையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் !!

வெள்ளியங்கிரி மலையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் !!

By Super Admin

கொங்கு நாட்டின் தலைநகரமான கோயம்பத்தூர் தொழில் நகரம் என்பதனை தாண்டி தமிழகத்தின் முக்கியமான திருக்கோயில்கள் அமைந்திருக்கும் நகரமாகவும் அறியப்படுகிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோயில், அவினாசியில் உள்ள அவிநாசியப்பர் திருக்கோயில், முருகனின் ஏழாம் படைவீடு என்று போற்றப்படும் மருதமலை முருகன் கோயில், மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோயில், கோனியம்மன் கோயில் போன்ற பழமையான ஆன்மீக ஸ்தலங்கள் கோவையில் அமைந்திருக்கின்றன.

மனதை மயக்கும் தர்மசாலாவில் உள்ள ட்ரைய்யுன்டினை நோக்கி ஒரு இனிமையான பயணம் ! வாங்கப் போகலாம்!மனதை மயக்கும் தர்மசாலாவில் உள்ள ட்ரைய்யுன்டினை நோக்கி ஒரு இனிமையான பயணம் ! வாங்கப் போகலாம்!

இவ்வரிசையில் கோவையில் தமிழகத்தின் மிகமுக்கியமான சைவ திருத்தளங்களில் ஒன்றான வெள்ளியங்கிரி மலை அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கடுமையான மலைப்பாதையை கடந்து வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க வருகின்றனர். இந்த கோயிலைப்பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

மோடி தேசத்தில் ஒரே மலையில் 1000 கோயில்கள் - எங்கே? எப்போ? எப்படி?மோடி தேசத்தில் ஒரே மலையில் 1000 கோயில்கள் - எங்கே? எப்போ? எப்படி?

இந்த மாதத்தின் டாப் 5 அட்டகாசமான கட்டுரைகள் கீழே

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை :

தென்கயிலாயம் என அழைக்கப்படும் இந்த வெள்ளியங்கிரி மலை கோவை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்திருக்கிறது.

sri kanth

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை :

இந்த வெள்ளியங்கிரி மலை பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த இடமாக சொல்லப்படும் இமய மலையின் மேல் அமைந்திருக்கும் கயிலாய மலைக்கு இணையாக போற்றப்படுகிறது.

sri kanth

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை :

கயிலாய மலையை போன்றே இந்த வெள்ளியங்கிரி மலையிலும் சிவ பெருமான் வீற்றிருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

வெள்ளியங்கிரி மலையில் ஒரு குகையினுள் சுவயம்பு லிங்கமாக காட்சி தருகிறார்.

sri kanth

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை :

இந்த வெள்ளியங்கிரி மலையில் மொத்தம் ஏழு குன்றுகள் இருக்கின்றன. இவற்றை கடந்தே நம்மால் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க முடியும்.

இந்த மலைப்பாதை சவால் நிறைந்த ஒன்று என்பதோடு மட்டுமில்லாமல் மனிதர்களை தாக்கும் விலங்குகள் வாழும் பகுதியாகவும் இருக்கிறது.

sri kanth

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை :

இமய மலையில் இருக்கும் கயிலாய மலைக்கு செல்ல முடியாதவர்கள் தென் கயிலாயம் எனப்படும் இந்த வெள்ளியங்கிரி மலைக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

sri kanth

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை :

ரத்தினகிரி, தக்ஷின கைலாசம், பூலோக கயிலாயம் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த மலையில் தான் தனது உமையாள் பார்வதி தேவியின் கோரிக்கைக்கு இணங்க பிரணவ தாண்டவத்தை சிவபெருமான் ஆடியதாக கூறப்படுகிறது.

Natesh Ramasamy

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை :

இந்த வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை வர பிப்ரவரி முதல் ஜூன் மே மாதம் வரையிலான காலகட்ட்டம் உகந்ததாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக சித்திரா பௌர்ணமி பண்டிகையின் போது ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருகின்றனர்.

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை :

12 - 45 வயதுடைய பெண்கள் இந்த மலையின் மீது ஏற அனுமதியில்லை. மலையேற ஏற ஆக்சிஜன் அளவு குறையும் என்பதால் சுவாச கோளாறு இருப்பவர்கள் இந்த மலையேற்றத்தை தவிர்ப்பது நல்லது.

இங்கே அவசர உதவி கிடைக்க தாமதமாகும் என்பதால் மலையேறுபவர்கள் சில அவசர கால மருந்துகளையும் தங்களுடன் எடுத்து செல்வது சிறந்தது.

sri kanth

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை :

கோயம்பத்தூர் நகரில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு காந்திபுரத்தில் இருந்து தினசரி நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மஹாசிவராத்தி போன்ற பண்டிகைகளின் போது சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

sri kanth

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை :

இங்கே மலை ஏறுவதற்கு முன்பாக அடிவாரத்தில் உள்ள கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு செல்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

சுற்றுவட்டாரப்பகுதியில் தங்கும் விடுதிகள் எங்கும் இல்லை என்பதால் இந்த அடிவார கோயிலிலேயே பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கின்றனர்.

sri kanth

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 'தியான லிங்கம்' என்ற தியான மண்டபமும் அமைந்திருக்கிறது. வெள்ளிங்கிரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தவறாமல் செல்லும் இடமாக இது திகழ்கிறது.

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலையில் அதிகாலை நிகழும் சூரிய உதயம் நாம் தவற விடக்கூடாத விஷயங்களில் ஒன்றாகும்.

படந்திருக்கும் பனி மெல்ல விலக இளஞ்சிவப்பு நிறத்தில் சூரியன் தன் கரம் பரப்புவது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

sri kanth

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை :

ஏறுவதை விடவும் இறங்குவது இந்த வெள்ளியங்கிரி மலையில் மிகவும் கடினமான காரியமாகும். இறங்கும் போது நிலைதவறி கீழே விழுந்துவிடாமல் இருக்கும் மலையேறும் பக்தர்கள் அனைவரும் மூங்கில் கம்பு ஒன்றை உடன் கொண்டு செல்கின்றனர்.

sri kanth

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை :

குறிப்பிட்ட சில மாதங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் தோன்றும் காட்டாறுகள், வேட்டையாடும் விலங்குகள் போன்றவற்றினால் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவது உயிருக்கே ஆபத்தான விஷயமாக முடியும்.

sri kanth

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை :

இந்த மலையில் இன்றும் ஏராளமான சித்தர்கள் கண்களுக்கு புலப்படாமல் அரூபமாக தியானத்தில் ஈடுபட்டு வருவதாக நம்பப்படுகிறது. இதனால் மலையேறும் போது கூடுமானவரை சத்தம் போடுவதை தவிர்க்கப்பாருங்கள்.

Natesh Ramasamy

வெள்ளியங்கிரி மலை :

வெள்ளியங்கிரி மலை :

இயற்கையும் ஆன்மீகமும் உங்களுக்கு மிகவும் விருப்பமானவை என்றால் நிச்சயம் இந்த வெள்ளியங்கிரி மலைக்கு வருகை தாருங்கள்.

வாழ்கையில் என்றென்றைக்கும் மறக்க முடியாத அனுபவமாக அது நிச்சயம் அமையும்.

ஆத்தாடி... எத்தன பாம்பு... இது என்ன ராஜநாகங்களின் தலை நகரமா?ஆத்தாடி... எத்தன பாம்பு... இது என்ன ராஜநாகங்களின் தலை நகரமா?

பிரிட்டிஷ் பொறியாளரையே குழப்பி விரட்டிய அந்த தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா?பிரிட்டிஷ் பொறியாளரையே குழப்பி விரட்டிய அந்த தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா?

விலங்குகளாக உருமாறும் அதிசய மரம் .... எங்கே இருக்கிறது தெரியுமா?

3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்

ரஜினிகாந்த் செல்லும் குகையின் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?ரஜினிகாந்த் செல்லும் குகையின் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X