» »பெங்களூர் - சேலம் : ஒரு டூவீலர் டிரிப்....!

பெங்களூர் - சேலம் : ஒரு டூவீலர் டிரிப்....!

Written By: Udhaya

உங்களுக்கெல்லாம் ஜல்லிக்கட்டு பாக்க ஆசையிருக்கா.. அப்படின்னா சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு காண போலாமா..  பெங்களூரு முதல் சேலம் வரை ஒரு டூவீலர் பயணம் சென்று வரலாம். இது இரண்டு நாள் பயணம். ஜல்லிக்கட்டுக்கு தடை இருப்பதனால் ஜல்லிக் கட்டு  நடைபெறும் சாத்தியத்தை  அறிந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிடுங்கள்.  இல்லையென்றாலும் பைக் டிரிப் சூப்பர்தானே...

பெங்களூரிலிருந்து, சேலம் வரை ஒரு டூவீலர் பயணம்.. ஓசூரில் ஒரு இன்பச் சுற்றுலா. கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஏற்காடு ஒரு பார்வை. இதுதான் நம் சிறிய சுற்றுலாக் குறிப்பு.

காலை 8 மணிக்கு பயணத்தைத் தொடங்கினால், பெங்களூருவிலிருந்து அதிகபட்சம் 4 மணி நேரத்தில் சேலத்தை அடையலாம். இந்த பாதை பசுமை மிகுந்த பாதை என்பதாலும், வார விடுமுறையை கழிக்க ஏற்ற இடங்கள் இருப்பதாலும் இவை அழகிய சுற்றுலாத் தளமாக மாறியிருக்கின்றன. இந்த பாதையில் ஒரு பைக் ரைடு போனா எப்படி இருக்கும்.

பைக் ரைடுக்கு தேவையானவற்றை முதலில் திட்டமிட்டு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பொதுவாக தேவைப்படுபவை

மொபைல்

சார்ஜர் பவர்பேங்க்

உடைகள் கொண்டு செல்ல டிராவல் பேக்

தேவையென்றால் கொறிக்க சில பண்டங்கள்

வழியில் நிறைய எரிபொருள் நிலையங்களும். உணவு நிலையங்களும் இருப்பதால் பெட்ரோல், உணவுப் பொருள்கள் பற்றிய பயம் தேவையில்லை.

இனி உங்கள் ஆண் அல்லது பெண் நண்பர், இல்லையெனில் உங்கள் குடும்பம் (அ) உறவினரை அழைத்துக்கொண்டு புறப்படுங்கள். காலை 8 மணிக்கெல்லாம் கிளம்புவது அறிவுறத்தக்கது.

நீங்கள் பைக்கை அழுத்துவதை பொறுத்து 1 அல்லது 1.30 மணி நேரத்தில் ஓசூரை வந்தடையலாம்.

ஓசூரில் தங்கி சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. எனவே காலை 10 மணி முதல் ஓசூரை சுற்ற ஆரம்பியுங்கள்.

ஓசூர்

ஓசூர்

ஓசூர் கிருட்டிணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை நகராட்சி ஆகும். இவ்வூர் சென்னை நகரில் இருந்து மேற்கே 306 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூர் நகரத்தில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த நகரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ளது. இந்நகரம் பெருகி வரும் தொழிற்சாலைகளாலும், குளிர்ந்த தட்பவெப்பநிலையாலும் அறியப்படுகிறது.

PC: Vijaysmileall

 கிருஷ்ணகிரி அணைப்பூங்கா

கிருஷ்ணகிரி அணைப்பூங்கா

கிருஷ்ணகிரி அணை கிருஷ்ணகிரியிலிருந்து 7கி.மீ தொலைவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி பாதையில் அமைந்துள்ளது. இந்த அணையினால் அணையை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.

இதனை பார்வையிட ஒரு மணி நேரம் பிடிக்கும். உங்களின் வசதியைப் பொறுத்து முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

PC: Vivian Richard

 ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில்

ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில்

சுற்றுலாப் பயணத்தின் போது நேர மேலாண்மை என்பது மிக முக்கிய ஒன்று. தவறவிட்டால் மேலும் தாமதமாகும். அடுத்து சந்திர சூடேசுவரர் கோவில்.

கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரின் கிழக்கே மலையுச்சியில் சந்திர சூடேசுவரர் கோயில் (மலைக்கோயில்) உள்ளது. இக்கோயில் பழமைவாய்ந்த கோயிலாகும். இம்மாவட்டத்தில் தங்கத்தேர் அமைந்த ஒரே கோயில் இது ஒன்றேயாகும்.

PC:Sidhartn

 தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

கோயிலில் உள்ள கணபதிச் சிற்றாலயம் கங்கர்களின் சிற்பக்கூறுகளை கொண்டுள்ளது எனவும், உள் திருச்சுற்றில் உள்ள சப்தமாதர்கள், சூரியன் திருவுருவங்கள் கங்கர்கள் காலத்தவை என்றும் கருதப்படுகிறது. இக்கருத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் ஒசூர் பகுதியில் கங்கர்களின் 9, 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

கோவிலை சுற்றிப் பார்க்க நன்கு பொழுது போகும். கிட்டத்தட்ட சாப்பாட்டு நேரத்தை அடைந்ததும் வெளியேறலாம்.

PC:Arulghsr

கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம்

கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம்

கெலவரப்பள்ளி நீர்தேக்கம் (Kelavarapalli),(ஆவலப்பள்ளி அணை என்றும் அழைக்கப்படுகிறது) கிருட்டிணகிரி மாவட்டத்தில் ஒசூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள கெலவரப்பள்ளி என்ற சிற்றூரில் உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இத்தேக்கம் அமைந்துள்ளது.

PC: vijay S

அகரம் பாலமுருகன் கோவில்

அகரம் பாலமுருகன் கோவில்


அகரம் பாலமுருகன் கோயில் என்னும் கோயில் கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூர் இராயக்கோட்டை சாலையில் உள்ள அகரம் என்ற ஊரில் உள்ள முருகன் கோயில் ஆகும். இக்கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

PC: Arulghsr

முருகன் கோவிலின் பக்கவாட்டுத் தோற்றம்

முருகன் கோவிலின் பக்கவாட்டுத் தோற்றம்

கோயில் வளாகத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சிவன் நவக்கிரகங்கள் சன்னதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் உள்ள உற்சவர் சன்னதியில் பாலமுருகனையும், வள்ளி தெய்வானை உடனுறை முருகனையும் காணலாம்.

PC: Arulghsr

ராயக்கோட்டை

ராயக்கோட்டை

இவ்வூருக்கு பக்கத்தில் உள்ள மலையில் கோட்டை உள்ளது இம்மலை கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரமுடையது. இக்கோட்டையை தரைக்கோட்டை, மலைக்கோட்டை என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். மலைக்கோட்டை சிறந்த பாதுகாப்பு அரண்களைக் கொண்டது. பலகுளங்கள், வெடிமருந்துச் சாலைகள், இடிபாடுகளுடன் கூடிய பல கட்டடங்கள் உள்ளன.

ராயக்கோட்டைப் பகுதியை மாலை நேரங்களில் காண அருமையாக இருக்கும். மதிய உணவிற்கு பிறகு சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு, 4 மணிக்கெல்லாம் கிளம்பி விடுவோம்.

PC: Daniell Thomas

ஹென்றிசோல்ட்

ஹென்றிசோல்ட்

முதல் மூன்று மைசூர் போர்களிலும் இராயக்கோட்டை சிறப்பிடம் பெற்றது. ஐதர், திப்புவிற்கும், ஆங்கிலேயருக்கும் இடையே பல போர்கள் நடைப்பெற்றுள்ளன. இக்கோட்டை திப்புவிடமிருந்து மேஜர் கௌடி என்பவரால் 20.7.1791 இல் ஆங்கிலேயர்வசமானது.கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளின் ஒன்றாகவும், தலைமைக் கோட்டையாகவும் இருந்த்து. இந்தியாவிற்கு போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் வந்த சமயத்தில் இந்த ஊரை மிக அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்

PC: Salt.henry

கோட்டை மதில் சுவர்

கோட்டை மதில் சுவர்


மலைக்கோட்டையில் அரச பரம்பரையினர் வாழ்ந்தனர்.அவர்களின் பாதுகாப்புக்காக தரைக்கோட்டைக் கட்டப்பட்டது. இது ஜெகதேவிராயர் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை இந்த கோட்டை பயன்பாட்டில் இருந்தது. இப்பகுதியில் ஏறத்தாழ 1000 ஆண்டுகளாக ஆண்டுவந்தவர்கள், ஒவ்வொரு காலத்திலும், ஒரு நினைவுச்சின்னத்தை ஏற்படுத்தினர்

PC: Venkasub

கிடங்கு கட்டடம்

கிடங்கு கட்டடம்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1792 ஆம் ஆண்டு, மேஜர் கௌடி தலைமையில், 800 வீரர்கள் கொண்ட படை, திப்புசுல்தானைத் தாக்க வந்தது. இரண்டு நாட்கள் நடந்த சண்டைக்குப் பிறகே, இக்கோட்டையின் வடக்குப்பகுதி மதிலை, பீரங்கி கொண்டு தகர்த்தனர். அந்த அளவுக்கு இத்தரைக்கோட்டை உறுதியாக இருந்துள்ளது. தொடர்ந்து ஆங்கிலேயப்படை அங்கு தங்கியது. அக்காலக்கட்டத்தில் இறந்த படையினரின் உடல்கள் அங்கேயேப் புதைக்கப் பட்டன. அதில் முக்கியமானவர் ஜான் இன்னிஷ் ஆவார். அவர் இறந்த தேதி20 மார்ச்சு 1802 என, இராயக்கோட்டைச் சாலையிலுள்ள பள்ளி அருகே இருக்கும் சமாதி கூறுகிறது.

PC: Venkasub

ராயக்கோட்டை

ராயக்கோட்டை

ராயக்கோட்டையின் பழைய புகைப்படம்

PC: Linnaeus Tripe

 ஓகேனக்கல்

ஓகேனக்கல்


தர்மபுரியில் இருந்து 46 கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த அருவி.

ஒகேனக்கல்லில் உள்ளது ஒற்றை அருவி அல்ல இது அருவிகளின் தொகுப்பு. ஹொகேனேகல் என்ற கன்னட சொல்லுக்கு புகையும் கல்பாறை என்று பொருள் என்பர்.

இருள்வதற்கு முன்னர் ஓகேனக்கல் வந்துவிட்டால், படகு சவாரி, கண்காட்சி என நிறைவாக காண முடியும். இருட்டியதும் நம் பயணத்தைத் தொடர்வோம்.

PC: Vivian Richard

உணவருந்தும் கூடம்

உணவருந்தும் கூடம்


அருவிகளின் அருகில் அமைக்கப்பட்டுள்ள சாப்பிடும் இடம்.

PC: Thamizhparithi maari

கிருஷ்ணகிரி அருங்காட்சியகம்

கிருஷ்ணகிரி அருங்காட்சியகம்

அருங்காட்சியகத்தில், நடுகல் (வீரக்கல்),பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள்,கல்வெட்டுகள், கல் சிலைகள், மரப் படிமங்கள்,உலர் தாவரங்கள், மூலிகைப்பொருட்கள், கூத்துக் கலைப்பொருட்கள்,பனையோலைகள்,அருங்காட்சியக வெளியீடுகள், உலோகப் படிம ஒளிப்படங்கள், கலைப்பொருட்கள், தொல் தமிழர்கள் பயன்படுத்தியப் பொருட்கள், முதுமக்கள் பானைகள், சுடுமண் படிமங்கள், இருளர் பொருட்கள், மாந்தர் உடல் மாதிரிகள், கல் வகைகள், தொல்லுயிரிப் படிமங்கள், கனிமங்கள் ஆகியன உள்ளன.


PC: Thamizhparithi maari

அருங்காட்சியகம்

அருங்காட்சியகம்

அருங்காட்சியகத்தில் உள்ள பழைமையான கல்

PC: Thamizhpparithi Maari

கல்வெட்டு

கல்வெட்டு

கல்வெட்டு

PC: Thamizhpparithi Maari

சிலைகள்

சிலைகள்

அருங்காட்சியத்தில் காணப்படும்13ம் நூற்றாண்டு சிலைகள்

PC: Thamizhpparithi Maari

 கிருஷ்ணகிரி கோட்டை

கிருஷ்ணகிரி கோட்டை

இது விசயநகரப் பேரரசின் பேரரசர்களுள் ஒருவரான கிருட்ணதேவராயரால் கட்டப்பட்டது. இவரது பெயரைத் தழுவியே இக்கோட்டைக்கும், நகரத்துக்கும் "கிருட்ணகிரி" என்ற பெயர் ஏற்பட்டது. அக்காலத்தில் "பரமகால்" என அழைக்கப்பட்ட இப்பகுதியையும் கோட்டையையும் ஜெகதேவிராயர் என்பவர் போர்களில் அவர் காட்டிய வீரத்துக்காக விசயநகரப் பேரரசிடம் இருந்து பரிசாகப் பெற்றுக்கொண்டார். இவர் ஜெகதேவி என்னும் இடத்தைத் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டுவந்தார்.

PC: Tapanmajumdar

தர்மபுரி

தர்மபுரி

முக்கால் மணி நேர பயண தூரத்தில் கிருஷ்ணகிரியிலிருந்து தர்மபுரி வந்தடையலாம். முக்கிய இடமாக மேட்டூர் அணை பார்வையிடலாம்

PC: Prveen kumar

கோட்டைக் கோவில்

கோட்டைக் கோவில்

முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் கோட்டைக் கோவிலில் அரை மணிநேரம் செலவிட்டு பின் சேலம் நோக்கிய நம் பயணத்தைத் தொடரலாம்.

PC: dharmapuri.nic.in

தீர்த்தமலை கோவில்

தீர்த்தமலை கோவில்

தீர்த்தமலை கோவில்

PC: dharmapuri.nic.in

 ஏற்காடு

ஏற்காடு

ஏற்காடு

பின்னர் நாம் ஏற்காடு புறப்பட்டுச் செல்லலாம்.

PC: Badrri

கிளியூர் நீர் வீழ்ச்சி

கிளியூர் நீர் வீழ்ச்சி

மாலை வேளைகளில் அற்புதமாக காட்சியளிக்கும் கிளியூர் நீர் வீழ்ச்சிக்கு 4 மணிக்கெல்லாம் வருவது சிறந்தது.

PC: antkriz

தாவரவியல் பூங்கா

தாவரவியல் பூங்கா

தாவரவியல் பூங்கா

PC: Jai kumara Yesappa

சூரிய மறைவு ஏற்காடு

சூரிய மறைவு ஏற்காடு

சூரிய மறைவு காட்சி ஏற்காட்டில் சிறப்பாக கண்டுகளிக்கக்கூடியது ஆகும். பின்னர் 1.30 மணி நேர பயணத்தில் சேலத்தை அடையலாம். சேலத்தில் இரவு தங்கி ஓய்வெடுத்துவிட்டு ஜல்லிக்கட்டை ரசிக்க செல்லலாம்.

PC: Jai kumara Yesappa

கொண்டாலம்பட்டி

கொண்டாலம்பட்டி

சேலத்திலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது கொண்டாலம்பட்டி. வரும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடமாக கருதப்படுகிறது.

PC: mahendrabalan

 தம்மம்பட்டி

தம்மம்பட்டி

சேலத்திலிருந்து 1 மணி நேர தொலைவில் அமைந்துள்ள இந்த ஊர், அலங்காநல்லூர், பாலமேடுக்கு அடுத்து ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற ஊராகும். பகல் பதினொரு மணியளவில் தொடங்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளைக் காண முந்தையநாளே இங்கு வந்து தங்கிவிடுவோம்.

இந்த ஊரில் பார்வையாளர்கள் தங்குவதற்கு என வசதிகள் செய்யப்படும். பொதுவாகவே அதிகளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என்பதால் காலம் காலமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

PC: Amsudhagar

Please Wait while comments are loading...