Search
  • Follow NativePlanet
Share
» »அழியப்போகிறதா திருப்பதி? வலைத் தளங்களைச் சுற்றும் கல்வெட்டு செய்திகள் - உண்மை என்ன?

அழியப்போகிறதா திருப்பதி? வலைத் தளங்களைச் சுற்றும் கல்வெட்டு செய்திகள் - உண்மை என்ன?

அழியப்போகிறதா திருப்பதி? வலைத் தளங்களைச் சுற்றும் கல்வெட்டு செய்திகள் - உண்மை என்ன?

திருப்பதி கோயில் அமைந்துள்ள திருமலையின் மர்மங்கள் பற்றியும், அந்த கோயிலில் நடக்கும் ஆச்சர்யங்கள் மற்றும் அறிவியல் அதிசயங்கள் பற்றியும் கடந்த பதிவுகளில் பார்த்தோம். சுற்றுலா அம்சங்கள் பொருந்திய மலையில் இருக்கும் இந்த திருப்பதி கோயிலில் இருப்பது முருகன் என்றும் சில செய்திகள் வந்ததையும் படித்திருக்கிறோம். ஆனால் திருப்பதி கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்களைப் பற்றி நாம் அதிகம் மெனக்கெடவில்லை என்றே தோன்றுகிறது. அப்படி என்ன இருக்கிறது அந்த கல்வெட்டுக்களில், உலகையே அதிரச் செய்யும் அந்த விசயங்கள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் காண்போம். இந்த கல்வெட்டுக்கள் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி

திருப்பதி

கருவறைக்குள் சென்று விட்டு திரும்பினால், நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடுகின்றனவாம். இது என்னமாதிரியான அறிவியல் என்று ஆச்சர்யப்படுகின்றனர் பக்தர்கள். சிலர் இதை பெருமாளின் அருள் செயல் என்றும் போற்றுகின்றனர்.

இது போல பெருமாளைத் தரிசிக்கும்போது செய்யப்பட்டிருந்த அலங்காரம், பெருமாளின் தோற்றம் அனைத்தும் மனதில் பதியாதாம். இப்படி கூறுபவர்கள் வெறுமனே இது கடவுளின் அருள் என்று நிறுத்திவிடவில்லை அதற்கான அறிவியல் காரணங்களையும் கூறுகின்றனர்.

Raji.srinivas

அறிவியல் காரணங்கள்

அறிவியல் காரணங்கள்

திருப்பதி சென்று வந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள். பெருமாள் எப்படி இருந்தார் என்று நினைவுபடுத்திப்பார்த்தால், அவர்களுக்கு எதுவும் நினைவுக்கு வராதாம். அதற்கு அறிவியல் காரணங்களும் இருக்கின்றனவாம். அப்படி என்ன அறிவியல் என்கிறீர்களா?

கருடாழ்வார் சன்னதியிலிருந்து கற்பகிரகம் வரை இருக்கும் ஒரு இடம் அத்தனை சக்தி வாய்ந்தது என்கிறார்கள் இக்கோயிலின் சமய பெரியவர்கள். எனர்ஜி பீல்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சக்தி முப்பத்து முக்கோடி தேவர்களால் இந்த இடம் சூழப்பட்டதைக் குறிக்கிறதாம்.

Adiseshkashyap

சக்தி வளையங்கள்

சக்தி வளையங்கள்

திருப்பதி கோயில் அமைந்துள்ள இடம் இயற்கையிலேயே சக்தி வளையங்கள் நிறைந்த இடமாக உள்ளது. அதாவது, கதிரியக்க கதிர்கள் போன்றவை இந்த இடத்தில் விழுவதாக கூறப்படுகிறது. இதற்கு தகுந்த ஆதாரம் இல்லாவிட்டாலும், இங்கு வரும் பக்தர்கள் இதை நம்புகின்றனர்.

அப்படி நம்பும் பக்தர்கள் தெரிவிக்கும் சில உண்மைகள் அல்லது நம்பிக்கைகள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைப்பதாக உள்ளது. அப்படி என்ன நம்பிக்கைகள் என நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இதனை நாம் ஆராய்ச்சி செய்து பார்க்கும்போது, அவர்கள் கூறிய ஒன்று நினைவுக்கு வருகிறது. அதாவது, கலியுகம் முடியவும், அலங்காரம் கலையும் என்று திருப்பதி மலையில் அமைந்துள்ள கல்வெட்டு ஒன்றில் கூறப்பட்டுள்ளனவாம்.

இந்த கல்வெட்டு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் இந்த கல்வெட்டுகள் அழிந்துவருகிறது என்று கூறுகின்றனர். அதில் இருக்கும் செய்திகள் சரிவர இல்லை எனவும், பக்தர்கள் தங்கள் நம்பிக்கைகளை கல்வெட்டுக்களில் இருப்பதாக கூறிவருகின்றனர் என்றும் தெரிவிக்கின்றனர்.

கலியுகம் முடிந்தால்....

கலியுகம் முடிந்தால்....

புராணத்தின் படி பகவான் விஷ்ணு பல அவதாரங்களை எடுப்பார். அப்படி கலியுகத்தில் அவர் அவதரித்து மக்களைக் காத்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். இந்த கலியுகம் முடியும் தருவாயில் பூமியில் இருக்கும் விஷ்ணுவின் தலங்கள் அனைத்தும் மாயமாகும் எனவும், அதன்பிறகு அவர் அடுத்த அவதாரம் எடுத்து பூமியில் தலங்களை உருவாக்குவார் என்றும் கூறுகின்றனர். இது கேட்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், பக்தர்களின் நம்பிக்கையை நாம் குறை சொல்லமுடியாது. ஏனெனில், புராணங்கள் நிஜத்தில் நடந்தவை என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

கல்வெட்டுகளை பாதுகாக்க

கல்வெட்டுகளை பாதுகாக்க

பாதி கல்வெட்டுக்கள் அழிந்த நிலையில் இருந்தாலும் கோயிலின் சுவற்றை பாதுகாக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து அரசு உதவியுடன் தங்க தகடு பதிக்க திட்டமிட்டது நாம் அனைவரும் அறிந்த நிகழ்வுதான். இதனால் சுவரில் துளையிடுவது, கட்டுமானங்களினால் பல கல்வெட்டுக்கள் மீண்டும் பாலாகும் என எதிர்ப்பு எழுந்தது.

திருப்பதி பெயர் காரணம்

திருப்பதி பெயர் காரணம்

இறைவன் குடிகொண்டிருந்த தலத்தை ‘திருப்பதி' என்று குறிப்பிடும் மரபு வழக்கில் இருந்துள்ளது. எனவே இந்த ‘திருப்பதி' எனும் பெயருக்கு ‘ஒப்பிலா இறைவன் குடிகொண்டுள்ள தலம்' எனும் பொருத்தமான பெயர் ஆதியிலிருந்தே விளங்கி வந்திருக்கிறது.

திருப்பதிக்கு செல்லும் ரயில்கள்

திருப்பதிக்கு செல்லும் ரயில்கள்


சென்னையிலிருந்து திருப்பதி செல்ல சப்தகிரி எக்ஸ்பிரஸ் , எழும்பூர் - தாதர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - நாகர்சூல் வாராந்திர வண்டி, சென்னை சென்ட்ரல் -மும்பை வண்டி, திருப்பதி எக்ஸ்பிரஸ், மும்பை எல்டிடி, கருடாத்ரி எக்ஸ்பிரஸ், கச்சிகுடா எக்ஸ்பிரஸ், அகமதாபாத் எக்ஸ்பிரஸ், காரைக்கால் மும்பை எக்ஸ்பிரஸ் என நிறைய ரயில்கள் திருப்பதி செல்கின்றன.

மேலும் திருநெல்வேலி - பிலாஸ்பூர் வண்டி, நாகர்கோயில் மும்பை வண்டி, கன்னியாகுமரி - மும்பை வண்டி, ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், குருதேவ் எக்ஸ்பிரஸ் , கன்னியாகுமரி திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ஆகிய வண்டிகள் திருப்பதிக்கு செல்கின்றன. இதுதவிர தமிழகத்தின் பெரும்பாலும் இடங்களிலிருந்து நிறைய ரயில்கள் தினசரி திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன,

திருப்பதியை கட்டியவர் யார் தெரியுமா?

திருப்பதியை கட்டியவர் யார் தெரியுமா?

பல தமிழ்ப்புலவர்களின் பாடல்களிலிருந்து கோர்த்து திரட்டப்பட்ட வரலாற்று ஆதாரங்களின்படி திருப்பதிக்கோயிலானது திருவேங்கடமலையில் தொண்டை மண்டல மன்னனான ‘தொண்டைமான் இளந்திரையன்' என்பவரால் எழுப்பப்பட்டிருக்கவேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது.

ஒரு தமிழரால் எழுப்பப்பட்டதே இந்த திருமலையில் அமைந்துள்ள திருப்பதி கோயில் என்றும் கூறப்படுகிறது. மேலும் தொண்டைமான் என்பவர், முருகபக்தர் என்றும் அவர் முருகர் கோயிலைத் தான் எழுப்பியிருப்பார் என்றும் பேச்சு உள்ளது. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு பார்த்தால் திருப்பதி மிகச் சிறந்த சுற்றுலாத் தளமாகும்.

முகலாய மன்னர்களிடமிருந்து தப்பித்த கோயில்

முகலாய மன்னர்களிடமிருந்து தப்பித்த கோயில்

14ம் நூற்றாண்டில் மிகுந்த பிரபலமான இந்த கோயில், முகலாயர் ஊடுருவல், கொள்ளைக்காரர்களிடமிருந்து தப்பித்துள்ளது சிறப்பம்சமாகும். அந்த காலத்தில் முகலாயர்கள் இந்தியாவில் இருந்த பல கட்டிடக்கலை சிறப்புக்களை தரை மட்டமாக்கினர் என்பது வரலாற்றுத் தகவல்.

எப்போதெல்லாம் செல்லலாம்

எப்போதெல்லாம் செல்லலாம்

இன்று திருப்பதி நகரம் ஒரு ஆன்மீக மையமாக மட்டுமல்லாமல் ஒரு செழுமையான கலாச்சார கேந்திரமாகவும் பரிணமித்துள்ளது. இந்நகரத்தில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் சந்தைகள் மிகப்பிரசித்தமாக அறியப்படுகின்றன. இவற்றில் மே மாதத்தில் நடைபெறும் கங்கம்மா ஜாத்ரா எனும் உற்சவம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த உற்சவத்தின்போது வித்தியாசமான சடங்கு முறைகள் பின்பற்றப்படுகின்றன. அச்சமயம் பக்தர்கள் முதலில் மாறுவேடம் பூண்டு கோயிலுக்கு முன்பாக தெருவில் ஊர்வலமாக செல்கின்றனர். பின்னர் முகத்தில் சந்தனம்பூசி தலையில் மல்லிகை மலர் மாலைகள் அணிந்து கோயிலுக்குள் நுழைகின்றனர்.

தெய்வச்சிலை உடைக்கும் சடங்கு

தெய்வச்சிலை உடைக்கும் சடங்கு

உற்சவத்தின் இறுதியில் மண்ணால் செய்யப்பட்ட தெய்வத்தின் சிலையை உடைக்கிறார்கள். இன்பமும் நீ துன்பமும் நீ என்பதாக. இன்பத்தை தந்த நீயே துன்பத்தையும் விலக்குவாயாக என்று இறைவனின் காலடியில் சரணடைகிறார்கள் பக்தர்கள்.

கலியுகம் ஆபத்தானதா

கலியுகம் ஆபத்தானதா

கலிகாலம்.. ஆபத்து.. அழிவு என்று ஒருபுறம் புரளிகள் கிளம்பிக்கொண்டிருந்தாலும், சுற்றுலாத்தளம் எனும் நோக்கில் நாம் திருப்பதியைப் பற்றி சில விசயங்களை ஆராய்ந்தோம். அதன்படி, திருப்பதி அழியவேண்டிய எந்த சாத்தியக்கூறுகளும் இல்லவே இல்லை. இதுபோன்று புரளிகளைக் கிளப்பிவிடும் பேர்களை நம்பாதீர்கள் என்றே சொல்லத்தோன்றுகிறது. திருப்பதிக்கு சென்றால் அங்குள்ள பெருமாள் கோயில் மட்டும்தான் சுற்றுலாவா என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் தமிழ் நேட்டிவ் பிளானட் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் குறித்த தகவல்களையும் திரட்டித் தருகிறது.

விலங்கியல் பூங்கா

விலங்கியல் பூங்கா


அருள்மிகு வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்கா 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி திறக்கப்பட்டிருக்கிறது. 5532 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வனவிலங்கு பூங்காவில் யானை, சிறுத்தை, மான், காட்டுப்பன்றி, காட்டுமயில், காட்டுக்கிளி போன்றவை வசிக்கின்றன. மரகதப் பச்சையுடன் காட்சியளிக்கும் புல்வெளிகளைக்கொண்ட இந்த பூங்காவில் காட்டுமயில் பிரிவு, சாகபட்சணிப்பிரிவு, சிறிய வகை மாமிசபட்சணிகள் பிரிவு போன்றவை பார்வையாளர்களை கவர்கின்றன.

Megha bansal 22

அருள்மிகு பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில்


திருப்பதியிலிருந்து 4 கி.மீ தூரத்தில் அப்பலாயகுண்டா எனும் இடத்தில் இந்த அருள்மிகு பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருமலையை நோக்கி பயணிக்கும்போது அருள்மிகு வெங்கடேஸ்வரர் ஓய்வெடுத்த ஸ்தலமாக இது அறியப்படுகிறது. அருள்மிகு பத்மாவதி அம்மவாருவுடன் ஆன தனது திருமணத்திற்கு பிறகு இந்த இடத்தில் சித்தேஷ்வரர் போன்ற முனிவர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரர் சித்தி அருளியதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த கோயிலில் விசேஷ அபிஷேக சடங்குகள் செய்விக்கப்படுகின்றன. இவற்றில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஸ்ரீ ஆண்டாள், பத்மாவதி தேவி மற்றும் ஆஞ்சநேயருக்கான சிறு சன்னதிகளும் இந்த கோயிலில் உள்ளன.

Agasthyathepirate

மங்கலபாலம் ஏரி

மங்கலபாலம் ஏரி


இந்த பகுதியில் அமைந்துள்ளது மங்கலபாலம் ஏரி. இது திருப்பதியிலிருந்து சரியாக 20கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி இந்த பகுதியில் மிகச் சிறந்த இயற்கை நீர்நிலை ஆகும். இந்த ஏரியின் ஓரத்தில் அழகிய மரங்கள் அமைந்துள்ளன. மேலும், இது தமிழக எல்லையிலிருந்து மிக அருகில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இங்கு கங்கம்மா கோயில் ஒன்று உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டால், உடனே திருமணம் ஆகும் என்பது நம்பிக்கையாகும்.

 இஸ்கான் கிருஷ்ண பகவான் கோயில்

இஸ்கான் கிருஷ்ண பகவான் கோயில்

‘இஸ்கான் கிருஷ்ண பஹவான் கோயில்' திருமலையை நோக்கி செல்லும் பாதையிலேயே அமைந்துள்ளது. வெண்மையும் தங்கநிறமும் கொண்ட புதுமையான வடிவமைப்புடன் இந்த கோயில் மிளிர்கிறது. இதன் சுவர்களில் நரசிம்மஸ்வாமி, கிருஷ்ண பஹவான், கிருஷ்ண லீலா மற்றும் வராக ஸ்வாமி ஆகிய சித்தரிப்புகளை பார்க்கலாம். கிருஷ்ணரது லீலைகளை சித்தரிக்கும் வண்ண ஓவியங்கள் இந்த கோயிலின் ஜன்னல் கண்ணாடிகளில் தீட்டப்பட்டுள்ளன. கிறித்துவ தேவாலய பாணியில் இவை காட்சியளிக்கின்றன. கோயிலின் உட்கூரையை தஞ்சாவூர் பாணி ஓவியங்களும் அலங்கரிக்கின்றன. கருவறையில் கிருஷ்ணர் கோபியர் சூழ காட்சியளிக்கின்றார்.

திருமலை மான் பூங்கா

திருமலை மான் பூங்கா


பாதுகாக்கப்பட்ட காடுகள் பிரிவுக்குள் அடங்கும் இந்த காடுகளில் அமைந்துள்ளது திருமலை மான் பூங்கா. இயற்கையை நேசிக்கும் சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம் வருகைத் தருகின்றனர். இங்கு வரும் நேரம் குறைவென்றாலும், உங்களுக்கு நேரம் போவதே தெரியாத அளவுக்கு, இங்குள்ள சூழல் உங்கள் கண்களைக் கட்டிவிடும்.

கல்யாணி அணை

கல்யாணி அணை


கல்யாணி டேம் என்று அழைக்கப்படும் இந்த அணை திருமலையில் அமைந்துள்ளது. திருப்பதி மலை ஏறும் வழியில் சற்று தூரம் நடந்து சென்றால் இந்த டேம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலக்கோனம் நீர்வீழ்ச்சி

தலக்கோனம் நீர்வீழ்ச்சி

நெடுந்தூரம் செல்லும் பயணத்தில் நீர்வீழ்ச்சி வந்தால் காணத் தவறிவிடுவோமா என்ன எப்படியும் தேடி பிடித்து ஒரு குளியலை போட்டுவிட்டுதான் ஊர் திரும்பவேண்டும் என்று வைராக்கியத்துடன் நிறைய சுற்றுலாப் பயணிகள் இருப்பார்கள். திருப்பதியிலிருந்து அருகில் இருந்தாலும், மலையேற்றப் பாதை என்பதால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகின்றது இந்த இடத்தை அடைய. உண்மையில் இயற்கை ஆர்வலர்கள் அதிகம் விரும்பும் பகுதி இதுவாகும்.

Read more about: travel temple tirupati
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X