Search
  • Follow NativePlanet
Share
» »ரோம் நகரத்துடன் சரிக்குசமமாக நிமிர்ந்து நின்ற தமிழ் மண் #தேடிப்போலாமா 4

ரோம் நகரத்துடன் சரிக்குசமமாக நிமிர்ந்து நின்ற தமிழ் மண் #தேடிப்போலாமா 4

ரோம் நகரத்துடன் சரிக்குசமமாக நிமிர்ந்து நின்ற தமிழ் மண் #தேடிப்போலாமா 4

By Udhaya

தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்கள் உலகின் அத்தனை பெரும்நாடுகளுடனும் உறவு கொண்டிருந்தனர். வாணிபம் செய்வதற்காக மட்டுமல்லாமல்,கல்வி, கட்டிடக்கலை உள்ளிட்ட மற்ற கலைகளிலும் தகவல் பரிமாற்றங்கள் நடந்துகொண்டிருந்தன. அப்படி ரோம் நகரத்துடன் இருந்த உறவு வெளிவந்தது அரிக்கமேடு எனும் வரலாற்றுப் பொக்கிஷத்தை தோண்டியெடுத்தபோது. ரோம் பேரரசுக்கு நிகரான தமிழ் மண்ணின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதுடன், அங்குள்ள சுற்றுலா அம்சங்கள் குறித்தும் பார்க்கலாம் வாருங்கள்.

எங்குள்ளது

எங்குள்ளது


தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ளது இந்த அரிக்கமேடு எனும் வரலாற்றுப் பொக்கிஷம். அரியாங்குப்பம் எனும் ஆற்றின் கரையில் ஒய்யாரமாய் இருக்கிறது இந்த ஊர்.

 மீனவ கிராமம்

மீனவ கிராமம்


சோழர் காலத்திய வரலாற்றைப் பார்க்கும்போது, இந்த இடம் ஒரு மீனவ கிராமமாக இருந்திருக்கிறது. வெளிநாடுகளுக்கு பண்டமாற்று முறையில் வாணிபம் செய்துவந்ததாகவும் தெரியவருகிறது. அந்த காலத்திலேயே தமிழன் கடல்தாண்டி செய்த வாணிபம் பற்றி அறியாதவர்கள் யாரேனும் இருப்பாரோ.

சுற்றுலா செல்வோமா

சுற்றுலா செல்வோமா

அரிக்கமேடு வரலாற்றுப் பகுதிகளைப் பார்ப்பதற்கு முன், அங்கு எப்படி செல்வது என்பது குறித்து பார்க்கலாம்.

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சென்று, கடலூர் செல்லும் சாலையில் ஆறு கிமீ தூரம் பயணிக்கவேண்டும். அரியாங்குப்பம் எனும் இடத்தில் வீராம்பட்டினம் செல்லும் சாலையில் திரும்பி அரிக்கமேடு நோக்கி பயணிக்க வேண்டும்.

சென்னை - அரிக்கமேடு

சென்னை - அரிக்கமேடு


சென்னையிலிருந்து அரிக்கமேடு செல்ல மொத்த தூரம் 173கிமீ ஆகும். இந்த வழித்தடத்தில் சென்றால் 3 முதல் 4 மணி நேரத்திற்குள் சென்றடையலாம்.

அரிக்கமேடு

அரிக்கமேடு

அகழ்வாராய்ச்சிகளின் அடிப்படையில், இந்த இடத்தில் ரோம் நகரத்துடன் கடல் தாண்டிய வாணிபம் நடைபெற்றது என்பது தெளிவாகிறது. மேலும், இங்கிருந்து எளிதில் செல்லும் வகையிலுள்ள மாமல்லபுரம், எயில்பட்டிணம், காவிரிப்பூம்பட்டிணம் என வரலாற்று சிறப்புமிக்க பகுதிகள் வருகின்றன.

Jayaseerlourdhuraj

பிஞ்ஞோ தெ பெகெய்ன்

பிஞ்ஞோ தெ பெகெய்ன்

பிஞ்ஞோ தெ பெகெய்ன் என்பவர் ஒரு கிறித்தவ மத குரு ஆவார். இவரது வீடு ஒரு அரிய கலைப் பொருளாக பார்க்கப்படுகிறது. என்னவென்றால், அந்த காலத்தில் கட்டப்பட்ட இந்த வீடு வளத்துடனும் அழகாகவும் காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்துக்கு வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர். இந்த வீட்டை உள்ளூர் மக்கள் அத்ரான் சாமியார் வீடு என்று அழைக்கின்றனர்.

Jayaseerlourdhuraj

மாந்தோப்பு

மாந்தோப்பு

இந்த வீடு இருக்கும் இடம் ஒரு மாந்தோப்பு ஆகும். இங்கு செல்வது மிகவும் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும்.

இந்த மாமரங்கள் தொடர்ந்து முறைப்படி திட்டமிட்டு நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

Nshivaa

அரியாங்குப்பம் ஆறு

அரியாங்குப்பம் ஆறு

இதன் மேற்கு திசையில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது. இதன் அருகில் ஒரு சிறிய நிலப்பரப்பு தீவு போல் காட்சியளிக்கிறது. இந்த ஆறு வீராம்பட்டினத்தில் கடலில் கலக்கிறது.

John Hill

 அரிக்கமேட்டின் அகழ் வரலாறு

அரிக்கமேட்டின் அகழ் வரலாறு

தமிழின் புகழை ஓங்கி உலகுக்கு சொன்னது பெரும்பாலும் தமிழரல்லாதவர்கள்தான். அரிக்கமேடும் விதிவிலக்கல்ல.. அரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு செய்தவர்களுக்கு கிடைத்தது செங்கல், ஈமத்தாழிகள், மணிகள், ஓடுகள், கலைப் பொருள்கள். சில தமிழ் பிராமி எழுத்துக்களும் கிடைத்துள்ளன.

Ramsadeesh

ரோமானிய நாணயங்கள்

ரோமானிய நாணயங்கள்


சாயக்கலவை ஓடுகள், மணி உருக்குச் சட்டங்கள், ரோமானிய நாணயங்கள் என கலைப்பொருள்களும், தயாரிப்பு பொருள்களும் கிடைத்துள்ளன. இதிலிருந்து பண்டைய ரோம் நகரத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதை அறியலாம்.

Muthukumaran p

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அரிக்கமேடு அருகே அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில்லே நகரம், ராஜ் நிவாஸ், தூய இருதய கிறித்துவ தேவாலயம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட எண்ணற்ற இடங்கள் அமைந்துள்ளன.

Karthik Easvur

 அரவிந்தர் ஆசிரமம்

அரவிந்தர் ஆசிரமம்

ஸ்ரீ அரவிந்தரின் இறப்பிற்குப் பிறகு 1950-ல் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் சேவை நிறுவனத்தை நிறுவி அதன் தலைவராகவும் 'அன்னை' இருந்தார். இந்த ஆசிரமத்திற்குள் மூன்று வயத்திற்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் ஆசிரமத்தின் நிர்வாகத்திடமிருந்து சிறப்பு அனுமதி பெற்றால் மட்டுமே ஆசிரமத்திற்குள் புகைப்படம் எடுக்கவும் முடியும். காலை 8 மணியிலிருந்து 12 மணி வரையிலும் மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இந்த ஆசிரமத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஆசிரமத்திற்குள் இருக்கும் பரந்த நூலகத்திற்குள் இருக்கும் நூல்களை ஆசிரம அதிகாரிகளின் அனுமதியுடன் படிக்க முடியும்.

 ஆரோவில் நகரம்,

ஆரோவில் நகரம்,

பாண்டிச்சேரி நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள உதய நகரம் என்ற பொருள்படும் ஆரோவில் நகரம், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களையும், கலாச்சாரங்களையும் இணைக்கும் நகரமாக திகழ்கிறது. 50 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களையுடைய இந்த நகரம் ஒரு சர்வதேச நகரமாகும். சாலை வழியாக எளிதில் அடையும் வகையில் இருக்கும் ஆரோவில் கலாச்சார அமைதி மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக உள்ளது.

தூய இருதய கிறிஸ்து தேவாலயம்

தூய இருதய கிறிஸ்து தேவாலயம்


பாண்டிச்சேரியிலுள்ள புகழ் பெற்ற மற்றும் முக்கியமான தேவாலயங்களில் ஒன்று தூய இருதய கிறிஸ்து தேவாலயமாகும். கோதிக் கட்டிடக்கலையையொட்டிய வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம் வருடம் முழுவதும் பார்வையாளர்களை வர வைக்கும் இடமாகும். இந்த தேவாலயத்தில் இருக்கும் கண்ணாடி ஜன்னல்களில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் காலங்களை பிரதிபலிக்கும் வகையில் வரையப்பட்டிருக்கும் கண்ணாடி ஓவியங்கள் மிகவும் கவனிக்கத் தக்க அம்சங்களாகும்.

பாண்டிச்சேரி கடற்கரை

பாண்டிச்சேரி கடற்கரை

வீதி உலா கடற்கரை என்று அழைக்கப்படட பாண்டிச்சேரி கடற்கரை, பாண்டிச்சேரியின் முதன்மையான பார்வையிடங்களில் ஒன்றாகும். அரியான்குப்பம் பகுதியில் புதிய துறைமுகம் கட்டப்பட்ட பிறகு ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக ஒரு காலத்தில் அழகிய கடற்கரையாக இருந்த இதன் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இந்த வீதி உலா கடற்கரையில் தற்பொழுது கற்பாளங்கள் செயற்கை சுவர்களாக வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த கடற்கரையில் நடந்து செல்லவோ, நீச்சலடிக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Read more about: travel pondicherry beach
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X