Search
  • Follow NativePlanet
Share
» »ஆபானேரி சாந்த் பாவ்ரி படிக்கிணறு!!!

ஆபானேரி சாந்த் பாவ்ரி படிக்கிணறு!!!

By

இந்தியாவில் பிரம்மாண்டமும், பேரழகும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற சாந்த் பாவ்ரி படிக்கிணறு ராஜஸ்தான் மாநிலம், ஆபானேரி கிராமத்தில் அமைந்திருக்கிறது.

இந்த படிக்கிணறு சாந்த் மகாராஜாவால் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது போன்ற பாவ்ரிகள் அல்லது படிக்கிணறுகள் அந்த காலங்களில் மழை நீரை சேமித்து வைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

3,500 படிக்கட்டுகள்

3,500 படிக்கட்டுகள்

ஜெய்ப்பூர் நகரிலிருந்து 95 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள ஆபானேரி கிராமத்தின் பொக்கிஷமாக கருதப்படும் சாந்த் பாவ்ரி, 3,500 படிக்கட்டுகளைக் கொண்டது.

படம் : Doron

100 அடி ஆழம்

100 அடி ஆழம்

சாந்த் பாவ்ரி படிக்கிணறு 100 அடி ஆழமும், 13 தளங்களும் கொண்டு வட்ட வடிவில் மிக பிரம்மாண்டமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

படம் : Ramón

சினிமா!!!

சினிமா!!!

சாந்த் பாவ்ரி படிக்கிணறு 'தி ஃபால்' மற்றும் 'தி டார்க் நைட் ரெய்சஸ்' போன்ற திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படம் : Ramón

காட்சிக் கூடங்கள்

காட்சிக் கூடங்கள்

இந்த கிணறுக்கு மூன்று புறங்களும் படிகள் சூழ்ந்திருக்க, இதன் நான்காவது பக்கத்தில் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

படம் : Ramón

காட்சிக் கூடங்களிலிருந்து...

காட்சிக் கூடங்களிலிருந்து...

காட்சிக் கூடங்களிலிருந்து தெரியும் சாந்த் பாவ்ரியின் தோற்றம்.

படம் : Ramón

சிற்ப வேலைகள்

சிற்ப வேலைகள்

இந்தக் காட்சிக் கூடங்கள் அழகிய சிற்ப வேலைப்பாடுகளால் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.

படம் : Ramón

சிற்பம்

சிற்பம்

காட்சிக் கூடங்களில் காணப்படும் பெண் தெய்வமொன்றின் சிற்பம்.

படம் : Ramón

தூண்கள்

தூண்கள்

காட்சிக் கூடங்களில் உள்ள அலங்கரிக்கப்பட்ட தூண்கள்.

படம் : Pablo Nicolás Taibi Cicare

ராஜா ராணி அறைகள்

ராஜா ராணி அறைகள்

கலை நிகழ்சிகள் நடந்தேறும் மேடைகளையும், ராஜா ராணிகளின் அறைகளையும் நீங்கள் இங்கே பார்க்கலாம்.

படம் : Ramón

படிக்கட்டுகளின் அமைப்பு

படிக்கட்டுகளின் அமைப்பு

படிக்கட்டுகளின் அமைப்பைக் காட்டும் குளோஸ்-அப் புகைப்படம்.

படம் : rajkumar1220

சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள்

சாந்த் பாவ்ரி கிணற்றின் படிகளில் கவனமாக இறங்கிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : 达 李

தடுப்புக் கம்பிகள்

தடுப்புக் கம்பிகள்

கிணற்றைச் சுற்றி பாதுகாப்புக்காக தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

படம் : Vetra

நுழைவாயில்

நுழைவாயில்

சாந்த் பாவ்ரி படிக்கிணற்றின் நுழைவாயில்.

படம் : Arpita Roy08

கட்டணம் இல்லை

கட்டணம் இல்லை

சாந்த் பாவ்ரி கிணறு தற்போது தொல்பொருள் துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கிணற்றை சுற்றிப் பார்க்க கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.

படம் : Ramón

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

ஆபானேரியிலிருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் 86 கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டல்களில் தங்கிக்கொள்ளலாம்.

ஜெய்ப்பூர் ஹோட்டல் டீல்கள்

படம் : Ramón

ஆபானேரியை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

ஆபானேரியை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Ramón

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X