Search
  • Follow NativePlanet
Share
» »துடைத்து எடுத்த புயல்! அலைகளே இல்லா கடற்கரை! அதிரச்செய்த அதிராம்பட்டினம்

துடைத்து எடுத்த புயல்! அலைகளே இல்லா கடற்கரை! அதிரச்செய்த அதிராம்பட்டினம்

துடைத்து எடுத்த புயல்! அலைகளே இல்லா கடற்கரை! அதிரச்செய்த அதிராம்பட்டினம்

By IamUD

சுனாமி அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ள கஜா புயலால் கடலில் அலையே இல்லாத நிலை உருவாகி தமிழகத்தை அதிரச் செய்திருக்கிறது அதிராம்பட்டினம். அப்பகுதி மக்கள் கடற்கரையைப் பார்த்து பீதியாகியுள்ளதாக தெரிகிறது.

கஜா புயல் மொத்த தமிழகத்தையே முடக்கி போட்டுள்ளது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. முக்கியமாக அதிராம்பட்டினத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது. இதனால் தமிழக கடற்கரைச் சுற்றுலாவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினத்தில் ஏற்பட்ட பாதிப்பையும், சுற்றியுள்ள பகுதிகளைப் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

வேதாரண்யம் அருகே

வேதாரண்யம் அருகே

பல்வேறு பீதிகளையும் கருத்துகளையும் கிளப்பி கடைசி நேரத்தில் திசை மாறிய கஜா புயல், வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதனால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட இடங்களில் மிக முக்கியமானது அதிராம்பட்டினம் கிராமம் ஆகும்.

பாதிப்புகள்

பாதிப்புகள்

நாகப்பட்டினத்தில் இந்த கஜா புயல் 108 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியது. இதனால் பெரும்பாலான மரங்கள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.புராதன கட்டிடங்கள், வீடுகள் நிறைய இடிந்து விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து மழை வேறு பெய்த காரணத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

அதிர்ந்து போன அதிராம்பட்டினம்

அதிர்ந்து போன அதிராம்பட்டினம்


அதிராம்பட்டினத்தில் இன்று காலை 111 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் அங்கு இருக்கும் பெரிய கட்டிடங்கள், குடிசைகள், பழைய கட்டிடங்கள் எல்லாம் இடிந்து விழுந்துள்ளது. சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்

சுனாமி அளவுக்கு பாதிப்பு

சுனாமி அளவுக்கு பாதிப்பு

கஜா புயல் 2004 சுனாமிக்கு அடுத்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பலரின் வாழ்வாதாரம் மொத்தமாக நிலைகுலைந்து போய் இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.

 தொடரும் மழை

தொடரும் மழை

நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் மழை தொடர்ந்து பெய்துகொண்டுதான் இருக்கின்றதாம். திண்டுக்கல் சுற்றுவட்டாரப்பகுதிகளையும் மழை விட்டு வைக்கவில்லை. கிட்டத் தட்ட மத்திய தமிழகத்தை மழை நனைத்துக் கொண்டிருக்கிறது. மழை பெய்வதால் இந்த பகுதிகளில் சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் சுற்றுலாவுக்கு திட்டமிடவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

 இன்றைய தினத்தில் மழை பெய்யும் இடங்கள்

இன்றைய தினத்தில் மழை பெய்யும் இடங்கள்

கடலூர் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இங்கு சுற்றுலா வந்த மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து வெளியேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

 பாதிக்கப்பட்ட சுற்றுலாத் தளங்கள்

பாதிக்கப்பட்ட சுற்றுலாத் தளங்கள்

இந்த புயலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டது டெல்டா மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்கள்தான். வேதாரண்யமும் அதிராம்பட்டினமும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நல்லவேளையாக மகாபலிபுரம், முட்டுக்காடு பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பு இல்லை. சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்பதால் தமிழகத்தின் சுற்றுலாவுக்கு பெரிய அளவில் பிரச்சனை இல்லை. மேலும் கன்னியாகுமரி பகுதிகளில் மழை ஓரளவுக்கு இருந்தாலும், சுற்றுலா பாதிப்படையாது எனத் தெரிகிறது.

 அலைகளற்ற அதிராம்பட்டினம் கடற்கரை

அலைகளற்ற அதிராம்பட்டினம் கடற்கரை


அதிராம்பட்டினம் கடற்கரையில் புயல் கடப்பதற்கு முன்னர் அலைகளே இன்றி அமைதியாக கடல் இருந்ததைப் பார்த்து மக்கள் பீதியடைந்துள்ளனர். கடல் அமைதியாக இருந்தால் அதிக அளவில் பாதிப்பு இருக்கும் என்பது அவர்கள் ஏற்கனவே கணித்திருந்தனர். இதனால் பாதுகாப்பான இடங்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர்.

Read more about: travel beaches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X