Search
  • Follow NativePlanet
Share
» »கோட்டை முழுக்க கிரானைட்! நாட்டிலேயே இதுதான் பெரியதாம்..!

கோட்டை முழுக்க கிரானைட்! நாட்டிலேயே இதுதான் பெரியதாம்..!

ஆந்திராவில் ஆன்மீகத் தலங்களும், நினைவுச் சின்னங்களும் என சுற்றுலாத் தலங்கள்பிரசிதிபெற்றதாக இருப்பினும் நாட்டிலேயே மிகப் பெரிய கோட்டையும் ஒன்று உள்ளது தெரியுமா ?.

விஜயநகரப் பேரரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆந்திரப் பிரதேசத்தின் கலாச்சாரமும், மாறுபட்ட பாரம்பரியமும் செழுமை மிக்கது. விஜயநகர மன்னர்களால் 6-ஆம் நூற்றாண்டில் சீமாந்திராவின் கட்டப்பட்ட வீரபத்ரர் ஆலயம் புகழ்பெற்ற ஆந்திர வரலாற்றுச் சின்னமாக திகழ்கிறது. இவைத் தவிரி ஆன்மீகத் தலங்களும், நினைவுச் சின்னங்களும் என பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இங்கே பிரசிதிபெற்றதாக உள்ளது. இவற்றுள் நாட்டிலேயே மிகப் பெரிய கோட்டையும் ஒன்று உள்ளது உங்களுக்குத் தெரியுமா ?. வாருங்கள், அக்கோட்டை குறித்து அறிந்து கொள்வோம்.

ஆந்திராவின் கோட்டைகள்

ஆந்திராவின் கோட்டைகள்


ஆந்திராவில் புகழ்பெற்ற கோட்டைகள் ரச்சகொண்டா மற்றும் புவனகிரி கோட்டைகள். 40 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட மலைப்பாறையின்மீது 500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது புவனகிரி கோட்டை. தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடனும் தோற்றத்துடனும் காட்சியளிப்பதால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இந்த புவனகிரி கோட்டை பிரசித்தமாக அறியப்படுகிறது.

YVSREDDY

அதோனி கோட்டை

அதோனி கோட்டை


ஆந்திராவில் பெரும்பாலும் யாரும் அரியாத கோட்டையாக காட்சியளிக்கிறது அதோனிக் கோட்டை. கோட்டையின் முக்கியமான பகுதிகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. விஜயநகர பேரரசுக் காலத்தில் இக்கோட்டைக்கு உட்பட்ட பகுதியில் வேணுகோபால கோவில் கட்டப்பட்டுள்ளது. இது அக்கால கட்டிடக்கலையின் திறமைக்கு சான்றாக இன்றும் திகழ்கிறது.

RameshSharma1

மிகப் பெரியக் கோட்டை

மிகப் பெரியக் கோட்டை


இந்தியாவில் உள்ள கோட்டைகளில் மிகவும் நீளமானது அதோனிக் கோட்டை. இதன் சுற்றுச் சுவர் மட்டும் சுமார் 50 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 7 நுழைவாயில்கள், பிரம்மாண்ட குன்றுகளால் சூழப்பட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோட்டையாகும்.

S. Praveen Bharadhwaj

கோட்டை முழுக்க கிரானைட்

கோட்டை முழுக்க கிரானைட்


அதோனி கோட்டையும், அது அமைந்துள்ள சுற்றுவட்டாரமும் மிகப் பெரிய செல்வமிக்கதாக திகழ்கிறது. காரணம், ஏழு கிரானைட் குன்றுகளால் இந்தக் கோட்டை சூழப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அக்காலத்து பாதுகாப்பையும், பேரரசுகள் தங்களுக்கான செல்வங்களின் மீதும், ஆடம்பரங்களின் மீதும் எந்தளவிற்கு கவணம் செலுத்தியுள்ளனர் என்பதை விளக்குகிறது.

RameshSharma1

கோட்டையின் உள்ளே!

கோட்டையின் உள்ளே!


அதோனி கோட்டை முழுவதும் சிதிலமடைந்து காணப்பட்டாலும் உட்புறத்தில் அமையப்பெற்றுள்ள அம்சங்கள் சற்று வியப்பையே ஏற்படுத்துகிறது. நவாப் தர்பார் மஹால், வேணுகோபால சுவாமி கோவில், ஜமியா மசூதி, தர்கா, சிவன் கோவில், பவானி கோவில் என பல்வேறு சிறப்பம்சங்கள் இதனுள்ளே காணப்படுகிறது. குறிப்பாக, ஒரே கோட்டை வளாகத்தில் இஸ்லாமிய வழிபாட்டுத் தளமும், சிவன் கோவிலும் அமையப்பெற்றுள்ளது மதநல்லினக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

RameshSharma1

அதோனிக் குகை

அதோனிக் குகை


இவை அனைத்தையும் விட சிறப்பம்சம் கோட்டையின் அருகிலேயே காணப்படும் குகை தான். இந்த பேலும் குகைளும் கூட நாட்டிலேயே மிகவும் நீளமான இயற்கையாக உருவான குகை என்ற பெருமை பெற்றுள்ளது. வெளியிலிருந்து பார்த்தால் மூன்று ஆழமான கிணறுகள் போன்று தோன்றும். நடுவில் இருக்கும் கிணறு தான் குகையின் முகப்பாகும். குகையின் முகப்பிலிருந்து 150 அடி கீழே இறங்கினால் பாதாள கங்கை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Pravinjha

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X