Search
  • Follow NativePlanet
Share
» »கார்த்திகை மாதம் அய்யப்பன் வாழ்ந்த அடூருக்கு ஒரு பயணம் செல்வோமா?

கார்த்திகை மாதம் அய்யப்பன் வாழ்ந்த அடூருக்கு ஒரு பயணம் செல்வோமா?

கார்த்திகை மாதம் அய்யப்பன் வாழ்ந்த அடூருக்கு ஒரு பயணம் செல்வோமா?

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் பாரம்பரிய பெருமை வாய்ந்த அடூர் நகரம் அதன் கலச்சாரம், கோயில்கள், திருவிழாக்கள் ஆகியவற்றுக்காக மிகவும் புகழ்பெற்றது. இந்த நகரம் திருவனந்தபுரத்திலிருந்தும், எர்ணாகுளத்திலிருந்தும் முறையே 100 மற்றும் 140 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஏராளமாக அமைந்திருக்கும் கோயில்களும், அவற்றில் கொண்டாப்படும் விழாக்களும் அடூர் நகரத்தின் தனித்துவமான கலாச்சாரத்தினை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. வாருங்கள் அடூரில் ஒரு உலா சென்று வருவோம்

 பார்த்தசாரதி கோயில்

பார்த்தசாரதி கோயில்

கோயில்கள் மற்றும் தேவாலயங்களின் நகரம் அடூர் நகரத்தில் உள்ள கோயில்களிலேயே கிருஷ்ண பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் பார்த்தசாரதி கோயில் மிகவும் புகழ்பெற்றது.

Saatvik.Jacob

மற்ற கோவில்கள்

மற்ற கோவில்கள்

இதுதவிர பந்தளம் மஹாதேவா கோயில், பாட்டுப்புரக்கல் தேவி கோயில், புத்தென்காவில் பகவதி கோயில், ஸ்ரீநாராயணபுரம் மஹாவிஷ்ணு கோயில் போன்ற ஆலயங்களும் அடூர் நகரத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய புண்ணிய ஸ்தலங்கள்.

Abhinarayan

 பக்தர்கள் கூட்டம்

பக்தர்கள் கூட்டம்

சென்னம்பள்ளியில் உள்ள ஸ்ரீதர்ம சாஸ்தா கோயில் மற்றும் எலம்மன்னூரில் உள்ள மகாவிஷ்ணு கோயில்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

Saatvik.Jacob

 கிறித்துவம்

கிறித்துவம்


அடூர் நகரத்தின் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயங்களாக செயின்ட் ஜார்ஜ் ஆர்தோடக்ஸ் மற்றும் செயின்ட் மேரிஸ் ஆர்தோடக்ஸ் சிரியன் கத்தீட்ரல் தேவாலயங்கள் அறியப்படுகின்றன.

Saatvik.Jacob

ஷாப்பிங்க்

ஷாப்பிங்க்


அடூர் நகரில் அமைந்துள்ள மூலம் மார்கெட் கேரளாவின் பழமையான அங்காடிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த மார்கெட்டுக்கு நீங்கள் வரும் போது இதுவரை கண்டிராத புது வித ஷாப்பிங் அனுபவத்தை கண்டிப்பாக உணர்வீர்கள்.

Ref: W236

பந்தளம் அரண்மனை

பந்தளம் அரண்மனை

பந்தளம் அரண்மனை அடூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்தளம் எனும் சிறிய நகரத்தில், அச்சன்கோயில் ஆற்றங்கரையோரத்தில் அமைந்திருக்கிறது.

இந்த அரண்மனையில் மதுரை பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படும் பந்தளம் அரச பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர். இதன் வரலாற்று பெருமையை பற்றி பேசும் அதேவேளையில் நாம் இதன் மதச் சிறப்பை பற்றியும் பேசியாக வேண்டும்.

Suresh Babunair

 பந்தளம் மஹாதேவா கோயில்

பந்தளம் மஹாதேவா கோயில்

கேரளாவின் தொன்மையான ஆலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் பந்தளம் மஹாதேவா கோயில், அடூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அச்சன்கோயில் ஆற்றங்கரையோரத்தில் எழிலே உருவாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

Anoopan

Read more about: travel kerala
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X