» »காஷ்மீரின் சாகச விளையாட்டுகள்!

காஷ்மீரின் சாகச விளையாட்டுகள்!

Written By: Staff

காஷ்மீர் எப்போதுமே த்ரில்லான அனுபவத்தை பயணிகளுக்கு தருவதில் குறைந்ததில்லை.

அந்த வகையில் காஷ்மீரின் பனிமூடிய சிகரங்களில் பனிச்சறுக்கில் ஈடுபடுவதும், ஹெலி-ஸ்கையிங் செய்வதும், ஆபத்தான மலைப்பாதைகளில் சிலிர்ப்பூட்டும் டிரெக்கிங் செல்வதும், பனியாறுகளில் படகுப்பயணத்தில் ஈடுபடுவதும், பாராகிளைடிங் மூலம் வானில் பறந்து களிப்படைவதும், மலையுச்சியில் கோல்ஃப் விளையாடி திளைப்பதும் காஷ்மீரின் முக்கியமான சாகச பொழுதுபோக்குகளாக அறியப்படுகின்றன.

பனிச்சறுக்கு

பனிச்சறுக்கு

காஷ்மீரில் பனிச்சறுக்கு விளையாட்டு குல்மார்க் பகுதியில் மிகவும் பிரபலம். இங்கு 1927-ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்ட பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்று உள்ளது. இந்த ரிசார்டை அடைய 400 மீட்டர் உயரத்தில் கேபிள் காரில் நீங்கள் பயணம் செய்ய வேண்டும். இப்படியாக ஒரு சிறிய சாகசப் பயணம் உங்களை ரிசார்ட்டின் உச்சிக்கு கொண்டு சேர்த்துவிடும்.

ஹெலி-ஸ்கையிங்

ஹெலி-ஸ்கையிங்

குல்மார்க் பகுதியில் பனிச்சறுக்கு சீசன் டிசம்பரில் தொடங்கி ஏப்ரல் பாதியில் முடிவடையும். இச்சமயங்களில் குல்மார்க்கில் பனிச்சறுக்கு வீரர்களுக்காக 'ஹெலி-ஸ்கையிங்'-யையும் ரிசார்ட் ஏற்பாடு செய்துகொடுக்கிறது. இந்த ரிசார்ட்தான் ஆசியாவிலுள்ள ஒரே ஹெலி-ஸ்கையிங் ரிசார்ட். அதுமட்டுமல்லாமல் உலகிலேயே கேனடாவுக்கு பிறகு ஹெலி-ஸ்கையிங் செய்வதற்கு காஷ்மீர்தான் சிறந்த இடமாக கருதப்படுகிறது. அதாவது ஹெலி-ஸ்கையிங் என்பது கேபிள் கார் இன்றி ஹெலிகாப்டர் மூலம் நீங்கள் பனிமூடிய சிகரத்தின் உச்சியை அடைந்து பின்னர் அங்கிருந்து கீழே பனிச்சறுக்கு செய்து வரவேண்டும். அதோடு உங்களை பின்தொடர்ந்து ஹெலிகாப்டரும் வரும்.

டிரெக்கிங்

டிரெக்கிங்

காஷ்மீர் பகுதியில் காணப்படும் டிரெக்கிங் பாதைகளிலேயே அமர்நாத் ஆலயத்துக்கு செல்லும் வழிதான் மிகவும் புகழ்பெற்ற மற்றும் சிலிர்ப்பூட்டும் டிரெக்கிங் பாதையாகும். அதோடு குல்மார்க்கிலிருந்து தொசாமைதான் டிரெக்கிங் பாதையை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. அதேபோல சோனாமார்க்கில் தொடங்கி பல மலைகளையும், ஏரிகளையும் கடந்து விஷான்சர், கிஷான்சர், காட்சர், சாத்சர், கங்காபல் வழியாக டிரெக்கிங் செல்லும் அனுபவம் அட்டகாசமானது. இவைத்தவிர ஷான்ஸ்கர் மலைத்தொடர் உறையவைக்கும் வெப்ப நிலைக்காகவும், திகிலூட்டும் உயரத்துக்காகவும் புகழ்பெற்ற டிரெக்கிங் பாதையாக அறியப்படுகிறது. இவ்வழியே செல்லும்போது ச்சா ச்சா லா பாஸ் மற்றும் தொன்மை வாய்ந்த கர்ஷா கொம்பா கோயில் ஆகியவற்றை கடந்த செல்வது அற்புத அனுபவமாக இருக்கும்.

ஷிக்காரா படகுப்பயணம்

ஷிக்காரா படகுப்பயணம்

காஷ்மீரின் சிலிர்ப்பூட்டும் சாகசங்களில் ஷிக்காரா படகுப்பயணத்துக்கு எப்போதும் தனி இடமுண்டு. ஷிக்காரா படகுப்பயணத்தில் தால் ஏரியின் சொக்கவைக்கும் இயற்கையழகையும், நகின் ஏரியின் மயக்கும் பேரழகையும் ஒரு சேர கண்டு களிக்கலாம். சாதாரணமாக ஒரு சில நாட்களை ஷிக்காராவில் செலவிடுவதே மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அதோடு இந்த படகுப்பயணத்திலும் ஈடுபட்டால் அந்த இடத்தைவிட்டு வர நீங்கள் அடம்பிடித்தாலும் ஆச்ச்சரியப்படுவதற்கில்லை!

வாட்டர் ராஃப்டிங்

வாட்டர் ராஃப்டிங்

பனிமூடிய சிகரங்கள், ஏரிகள் எல்லாம் சூழ வாட்டர் ராஃப்டிங் செய்வது என்பது சாகசத்தின் உச்சம் என்று சொல்லலாம். காஷ்மீரில் ஷான்ஸ்கர், பீஸ், சிந்து நதிகளில் வாட்டர் ராஃப்டிங்கில் ஈடுபடுவதே சிறப்பானதாக கருதப்படுகிறது. அதோடு செனாப் ஆற்றில் கயாக்கிங் செய்வது மிகவும் பிரபலம். அதேவேளையில் தால் ஏரியில் கயாக்கிங் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

பாராகிளைடிங்

பாராகிளைடிங்

காஷ்மீரில் சோனாமார்க், குல்மார்க், பதர்வாஹ் பகுதிகளில் பாராகிளைடிங் விளையாட்டு பிரபலமாக உள்ளது. இதற்கான சிறந்த சீசனாக மே முதல் ஜூன் வரையிலும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலுமான காலங்கள் கருதப்படுகின்றன. மேலும் பாராகிளைடிங் தற்போதுதான் காஷ்மீர் பகுதியில் பிரபலமடைந்து வருகிறது.

கோல்ஃப் விளையாட்டு

கோல்ஃப் விளையாட்டு

ஸ்ரீநகர் மற்றும் குல்மார்க் பகுதிகளில் காணப்படும் பசுமையான கோல்ஃப் மைதானங்களில் குறைந்த வெப்பநிலை காரணமாக சமவெளிகளில் விளையாடுவதை விட நீங்கள் நீண்ட நேரம் கோல்ஃப் விளையாட முடியும். காஷ்மீர் பகுதியில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலங்கள் கோல்ஃப் விளையாட சிறந்த காலங்களாக கருதப்படுகின்றன.

Read more about: சாகசம்

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்