Search
  • Follow NativePlanet
Share
» »நீங்க எவ்ளோ பெரிய தைரியசாலின்னு தெரிந்துகொள்ள ஆசையா ?

நீங்க எவ்ளோ பெரிய தைரியசாலின்னு தெரிந்துகொள்ள ஆசையா ?

நீங்க எவ்ளோ பெரிய தைரியசாலின்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆசையா உங்களுக்கு?. அதற்கு நீங்க விமானத்தில் இருந்து குதித்தோ, கடலுக்குள் மூழ்கியோ, உயரமான மலை முகட்டில் இருந்து பாராசூட்டுடனோ குதிக்க வேண்டும். கேட்கும் போதே தலை சுற்றுகிறது அல்லவா?. இந்த மாதிரியான அதி பயங்கரமான சாகசங்களில் ஈடுபட்டு "ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி" என சொல்லிக்கொள்ள ஆசையா?. வாங்க, இந்தியாவில் இது போன்ற சாகச விளையாட்டுகள் எங்கெல்லாம் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

Travelguru தளத்தில் ஹோட்டல் கட்டணங்களில் 40% தள்ளுபடி பெற்றிடுங்கள்

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் :

ஆழ்கடலில் மூழ்கி நீந்தும் ஸ்குபா டைவிங் எனப்படும் இந்த சாகச விளையாட்டு தற்போது இந்தியாவில் வேகமாக பிரபலமடைந்து வரும் சாகச விளையாட்டுகளில் ஒன்றாகும். இது கடற்கரைகளை ஒட்டியிருக்கும் சுற்றுலா நகரங்களில் பரவலாக இப்போது நடத்தப்படுகிறது.

Photo: Flickr

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் :

குறிப்பாக கோவா, லட்சத்தீவுகள், பாண்டிச்சேரி, அந்தமான் தீவுகள் போன்ற இடங்களில் ஸ்குபா டைவிங் நீச்சல் மூலம் அங்கிருக்கும் பேரழகு வாய்ந்த கடல் பகுதிகளை ரசிக்க முடியும்.

Photo: Flickr

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் :

இந்த சாகசத்தில் ஈடுபடும் முன்பு 2-3 நாட்கள் பயிற்சி எடுத்துக்கொள்வது கட்டாயம். பயற்சி முடித்த பிறகு சுவாச உபகரணங்கள், நீச்சல் அடிக்க ஏதுவாக இருக்கும் பிரத்யேக உடைகள் போன்றவற்றை அணிந்துகொண்டு கடலில் சில பத்து அடிகள் வரை மூழ்கி பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம்.

Photo: Flickr

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் :

ஆழ மூழ்கி நீச்சலடிக்க தயங்குபவர்கள் 'ஸ்நார்கிலிங்க்' என்னும் முறைப்படி கடல் மட்டத்தில் மிதந்தபடியே நீர் புகாத கண்ணாடிகள் வழியே கடலின் அழகை ரசிக்கலாம்.

Photo: Flickr

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் :

இந்த ஸ்குபா டைவிங் நடக்கும் இடங்களை பற்றிய மேலதிக விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள். கோவா, லட்சத்தீவுகள், பாண்டிச்சேரி.

Photo:

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் மற்றும் ஸ்நார்கிலிங்க் சாகசகங்களின் சில புகைப்படங்கள்.

Photo: Flickr

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் மற்றும் ஸ்நார்கிலிங்க் சாகசகங்களின் சில புகைப்படங்கள்.

Photo: Flickr

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் மற்றும் ஸ்நார்கிலிங்க் சாகசகங்களின் சில புகைப்படங்கள்.

Photo: Flickr

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் மற்றும் ஸ்நார்கிலிங்க் சாகசகங்களின் சில புகைப்படங்கள்.

Photo: Flickr

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் மற்றும் ஸ்நார்கிலிங்க் சாகசகங்களின் சில புகைப்படங்கள்.

Photo: Flickr

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் மற்றும் ஸ்நார்கிலிங்க் சாகசகங்களின் சில புகைப்படங்கள்.

Photo: Flickr

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் மற்றும் ஸ்நார்கிலிங்க் சாகசகங்களின் சில புகைப்படங்கள்.

Photo: Flickr

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் :

ஸ்குபா டைவிங் மற்றும் ஸ்நார்கிலிங்க் சாகசகங்களின் சில புகைப்படங்கள்.

Photo: Flickr

ஸ்கை டைவிங் :

ஸ்கை டைவிங் :

உங்களின் தைரியத்தின் எல்லையை சோதிக்கும் அதி பயங்கரமான சாகசங்களில் ஒன்று தான் இந்த ஸ்கை டைவிங். இரண்டாயிரம் அடி உயரத்தில் விமானம் நிலை நிறுத்தப்பட்டிருக்க அதிலிருந்து முதுகில் பாராசூட் உதவியுடன் குதித்து வானத்தில் மிதக்கும் 'எளிமையான' சாகசம் தான் இந்த ஸ்கை டைவிங். நிறைய தைரியமும், பாதுகாப்பு அம்சங்களும், பயிற்சியும் தேவைப்படும் இந்த சாகச விளையாட்டு தற்போது இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைந்து வருகிறது.

ஸ்கை டைவிங் :

ஸ்கை டைவிங் :

மைசூர்:

மைசூரில் இருக்கும் சாமுண்டி மலையில் 'டிராப் ஜோன்' என்ற தனியார் நிறுவனத்தால் ஸ்கை டைவிங் ஏற்பாடு செய்யப்படுகிறது. மூன்று விதமான ஸ்கை டைவிங் முறைகளில் நாம் ஒன்றை தேர்ந்தெடுத்து அப்படிப்பட்ட முறையில் ஸ்கை டிவிங் செய்யலாம். முதலாவது வகை 'ஸ்டேடிக் ஜம்ப்' எனப்படும் வழக்கமான ஸ்கை டைவிங் ஆகும். இதில் தனியாக ஒருவர் வானத்தில் சிறிது நேரம் மிதந்துவிட்டு பின் பாராசூட் மூலம் தரையிறங்குவது ஆகும். இரண்டாவது 'டெண்டம் ஜம்ப்' எனப்படும் பயற்சியாளர் ஒருவருடன் சேர்ந்து குதிப்பது ஆகும். தனியாக குதிக்க பயப்படுபவர்கள் இம்முறைப்படி குதிக்கலாம். மூன்றாவது வேகமாக தரையிறங்கும் முறையாகும். இம்மூன்று முறைகளில் எதோ ஒரு வகையில் நாம் குதிக்கலாம்.

ஸ்கை டைவிங் :

ஸ்கை டைவிங் :

தானா:

மத்தியப்பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 200 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது தானா என்னும் சிறிய நகரம். சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இல்லா விட்டாலும் இந்தியாவின் ஸ்கை டைவிங்கின் தலைநகர் என்று சொல்லக்கூடிய அளவு ஸ்கை டைவிங் சாகச பிரியர்களிடையே இந்நகரம் பிரபலமாகும். 4,000 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் போது ஏற்ப்படும் இதயத்தை உறைய வைக்கும் அனுபவம் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாததாய் இருக்கும்.

ஸ்கை டைவிங் :

ஸ்கை டைவிங் :

அம்பி பள்ளத்தாக்கு:

மும்பையில் இருந்து இரண்டு மணி நேர சாலைப்பயணத்தில் வருகிறது இந்த அம்பி பள்ளத்தாக்கு. இந்தியாவில் ஸ்கை டைவிங் சிறந்த இடம் என இது வர்ணிக்கப்படுகிறது. காரணம் என்னவெனில் இங்கு மட்டும் தான் 10,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்ய ஏற்ற வகையில் புவியியல் அமைப்பு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அத்தனை அடி உயரத்தில் இருந்து குதிக்கையில் அற்புதமான இயற்கை காட்சிகளையும் நாம் இங்கே காண முடியும். மூச்சுத்திணறல் அல்லது முதுகுத்தண்டு பிரச்சனை இருப்போர் ஸ்கை டைவிங்கை தவிர்ப்பது நல்லது.

ஸ்கை டைவிங் :

ஸ்கை டைவிங் :

பாண்டிச்சேரி:

நம்ப முடியவில்லை அல்லவா?. நம்மூர் பாடிசெரியிலும் இப்போது காகினி என்னும் தனியார் நிறுவனத்தால் ஸ்கை டைவிங் ஆரம்பிக்கப்படுள்ளது. வார விடுமுறையை கொண்டாட பாண்டிச்சேரி செல்பவராக இருந்தால் இந்த சாகசத்தையும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். அழகு நிறைந்த பாண்டிச்சேரியை வானத்தில் இருந்த ரசிப்பது எத்தனை ஆனந்தமாக இருக்கும். நிச்சயம் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

ராப்டிங் :

ராப்டிங் :

ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றில் இயற்கையின் பேராற்றலுக்கு சவால் விட்ட படி படகில் அமர்ந்து சாகசப்பயணம் செல்வதென்பது அத்தனை சுலபம் இல்லை என்றாலும் சாகசங்களை விரும்புகிறவர்களுக்கு அது சாதாரணம் தான். சாகசப்பபடகு சவாரி ஹிமாலய மலைப்பகுதிகளில் ஓடும் ஆறுகளில் தான் முதன்முதலில் துவங்கப்பட்டது என்றாலும் தற்போது தென் இந்தியாவிலும் அது பிரபலமடைந்து வருகிறது. உறைய வைக்கும் இந்த சாகசம் செய்ய சிறந்த இடங்கள் எவை என்பதை தெரிந்துகொள்வோம்.

Photo:Philip Larson

ராப்டிங் :

ராப்டிங் :

ரிஷிகேஷ்:

யாத்திரீகர்கள் வந்து செல்லும் முக்கிய இடங்களில் ஒன்றான ரிஷிகேஷ் சாகசப்படகு சவாரி செய்ய உலகின் சிறந்த இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. சிவபுரியில் இருந்து லக்ஷ்மண சுஹ்லா வரையிலான 16கி.மீ தொலைவு உள்ள ஆற்றுப்பதை பல ஆபத்தான திருப்பங்களையும், சுழல் உருவாகும் இடங்களையும் கொண்டுள்ளது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கு சாகசப்படகு சவாரி செய்ய ஏற்ற காலநிலை நிலவுகிறது. மற்ற நேரங்களில் வெள்ளப்பெருக்கும் கடும் குளிரும் நிலவும் என்பதால் படகு சவாரி அந்நேரங்களில் இங்கு தடை செய்யப்படுகிறது.

Photo:Spurkait

ராப்டிங் :

ராப்டிங் :

சன்ச்கர்:

படூம் மற்றும் சிமோ பகுதிகளுக்கு இடையே சன்ச்கர் ஆற்றில் நடக்கும் சாகசப்படகு சவாரி அந்தப்பகுதியின் பேரழகை ரசிக்க அருமையான வாய்ப்பை நமக்கு நல்குகிறது. ஆற்றின் இருபுறங்களிலும் 100 அடிக்குமேலான மலைகளை கடந்து செல்கையில் வேறெங்கோ மாய உலகம் ஒன்றினுள் செல்லும் பரவசம் நம்மை தொற்றிக்கொள்ளும். லடாக்கில் நாம் அதிகம் அறிந்திராத சில அழகான பிரதேசங்களை தாண்டி செல்லும் இந்த சாகசப்பயணம் சன்ச்கர் ஆறு இந்து மகா சமுத்திரத்தில் கலக்குமிடத்தில் நிறைவடைகிறது. சாகசங்கலளோடு இயற்கையின் அழகையும் ரசிக்க வேண்டும் என நினைப்பவர்கள் தவறாமல் சன்ச்கர் வரவேண்டும்.

Photo:Philip Larson

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X