Search
  • Follow NativePlanet
Share
» »கோவாவின் கிறிஸ்துமஸ் இரவு விருந்து எப்படி இருக்கும் தெரியுமா? இதோ இப்படித்தான்!

கோவாவின் கிறிஸ்துமஸ் இரவு விருந்து எப்படி இருக்கும் தெரியுமா? இதோ இப்படித்தான்!

கோவாவின் கிறிஸ்துமஸ் இரவு விருந்து எப்படி இருக்கும் தெரியுமா? இதோ இப்படித்தான்!

PC: © Jorge Royan

கிறிஸ்துமஸ் தினத்தில் செல்லவேண்டிய சுற்றுலா தளங்கள் குறித்து இந்த தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இரண்டாவது நாளான இன்று நாம் காணவிருப்பது கோவா. கோவாவில் கிறிஸ்துமஸ் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அப்போது என்ன தயக்கம் வாருங்கள் இது கிறிஸ்துமஸ் சுற்றுலா 2018.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

டிசம்பரில் இந்தியா


டிசம்பர் மாதம் என்றாலே இந்தியா குளிர்கிறது. விழாக்காலம் தொடங்கியதால் வண்ண விளக்குகளால் ஒளிர்கிறது இதுவரையில் குறைவாகவே கொண்டாடப்பட்டு வந்த கிறிஸ்துமஸ் இந்தியாவில் இந்த ஐந்து ஆண்டுகளில் பெருமளவு அதிக மக்களால் கொண்டாடப்படுகிறது. இவர்களுக்கு மதம் எனும் பிரிவினைகள் தேவையில்லை. கொண்டாட ஒரு நாள் போதும். சாதி, மத, இன பேதங்களை மறந்து கொண்டாடுகிறார்கள்.

அப்படிப்பட்ட இந்தியாவின் ஆண்டு இறுதி கொண்டாட்டங்கள்

இதற்கு பெரும்பங்கு காரணம் இந்தியாவில் தொழில் தொடங்கிய வெளிநாட்டு நிறுவனங்கள்தான். பன்னாட்டு நிறுவனங்கள் அவர்கள் நாட்டில் கொண்டாடும் விழாக்களுக்கு இங்கு விடுமுறை அளித்து, அத்துடன் இவர்களையும் கொண்டாட ஊக்கப்படுத்துகிறது. இந்தியாவை பெயருக்குகூட மறுக்க வேண்டாம். கொண்டாட்டங்கள் என்றாலே இந்தியாதான். வாரம் ஒரு திருவிழா இந்தியர்களின் மனதை எட்டிப் பார்த்துவிடும். இதனால் பிரிவினை தூண்டும் சக்திகள் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளன. அந்த வகையில் கிறிஸ்துமஸ் விழா கிறிஸ்தவர்களின் கொண்டாட்டம் என்று மட்டுமில்லாமல், மற்றவர்களுக்கான சுற்றுலா கதவையும் திறந்து விட்டுள்ளது. ஆண்டிறுதியில் 10 நாட்கள் வரை நிறுவனங்கள் விடுமுறையை அறிவிக்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் சுற்றுலா செல்கிறார்கள்.

கோவா உங்களை அன்புடன் வரவேற்கிறது

கொண்டாட்டம் என்றால் கோவா.. குத்தாட்டம் என்றால் கோவா.. குதூகலம் என்றால் கோவா என விஜய் பட விழாவில் ஏறி புலி நடனமாடிய டி ஆரைப் போல கோவா சென்று வந்தவர்கள் கூறும் கதைகளை கேக்கமுடியாமல் மனம் வெதும்பும் நண்பர்களே.. இது உங்களுக்கான கோவா சுற்றுலா தயாராகிவிட்டது. இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையை கோவாவில் ஜமாய்க்கலாம்.

கோவா - எப்டி இருக்கும்


அலைகள் மினுமினுக்க சூரிய ஒளி ஜிகுஜிகுக்க அலைகளுடனும் உள் மனங்களுடனும் விளையாடும் குழந்தைகளைப் போல உடைகளும் தளதளக்க கோவாவில் கொண்டாட்டத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கிறார்களா என்ன?

இந்தியாவின் மற்ற பகுதிகள் புத்தாண்டை வரவேற்க இறுதி நாளில்தான் தயாராகும். ஆனால் கோவாவோ பத்து நாட்கள் முன்னதாகவே களைகட்டும்.

அலங்காரங்கள்

மணமணக்கும் அழகிய வண்ண மெழுகுவர்த்திகள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கென பெயர்பெற்ற இசைகளுடன் பாடல்களும் ஒலிக்க மின்னும் விளக்குகளுடன் வண்ணமயமான கிறிஸ்துமஸ் மரங்களும் ஜில்ஜில் மணிகளும், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் சாண்டா தாத்தாவும், வண்ண மய வான வேடிக்கைகளும் நிறைந்து இருக்கும் கோவா.

புதுமணப்பெண் போல

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தான் கோவாவினை நன்கு அலங்கரித்து புதுமணப் பெண் போல மாற்றி நிற்கவைக்கும். கோவாவின் எந்த தெருவும், எந்த கடைவீதியும் வண்ண விளக்குகளாலும், நட்சத்திரம் உட்பட பல்வேறு வடிவ ஒளிகளால் மின்னும்.

நள்ளிரவு வழிபாடு


கிறிஸ்துமஸ் தினம் தொடங்கும் அந்த நள்ளிரவில் ஏராளமானோர் கூடி ஆலயத்தில் வழிபாடு நடத்துவார்கள். இந்தியாவில் அதிகம் மக்கள் கூடும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோவாவில்தான் என்கிறார்கள்.

உங்களுக்குத் தெரியுமா?

கோவாவில் மொத்தம் 400க்கும் அதிகமான தேவாலயங்கள் அமைந்துள்ளன.

பாம் ஜீஜஸ் பசிலிக்கா அல்லது குழந்தை ஏசுவின் புனித இடம்


பாம் ஜீஜஸ் பசிலிக்கா ஒரு காலத்தில் ஃபிரான்சிஸ் சேவியர் எனும் கிறிஸ்தவ மதகுருவின் இல்லமாக இருந்தது. அவர் இறப்புக்கு பிறகு அவரது உடல் நீண்ட வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்தது. இவருக்கு தீராத நோய்களைத் தீர்க்கும் அதிசய சக்தி இருந்ததாக நம்பப்படுகிறது.

பச்சை நிறமே பச்சை நிறமே

இந்த கட்டிடம் ஜிஸ்வைட் கட்டிடக் கலை எனும் ஒரு பாணியைக் கடைபிடித்து கட்டப்பட்டது. இந்த தேவாலயத்தின் கூரை முழுவதும் துத்தநாக பூச்சு பூசப்பட்டு மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வானவேடிக்கைகள்

கோவாவின் எல்லா பகுதிகளும் வண்ணங்களால் ஒளிரும். தரையில் எரியும் வண்ண விளக்குகளோடு, வானில் மின்னும் வான வேடிக்கை காட்டும் வெடிகளும் பார்ப்பவர்கள் கண்களுக்கு மிக அற்புதமான விருந்தாக அமையும்.

அஞ்சுனா கடற்கரை வண்ணமயமானதாக இருக்கும். கேளிக்கைகளுடன் ஷாப்பிங்க்கான அற்புதமான விசயங்களையும் பெற்றிருக்கும்.

வீட்டில் செய்யப்பட்ட சாக்கலேட்கள்


சாக்லேட்களும், கேக்குகளும் கோவாவின் கிறிஸ்துமஸ் விருந்தில் மிக முக்கிய இடத்தை பெறுபவை.

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட கேக்குகளும், சாக்லேட்களும் மிகவும் கவர்பவை. மக்கள் விரும்பி வாங்கி சுவைப்பார்கள். அதிலும் சில சிறிய வகை ரெஸ்ட்ரான்ட் களில் தரப்படும் கிறிஸ்துமஸ் கேக்குகள் மிகவும் அற்புதமான சுவையுடன்கூடியவையாக இருக்கும். இதற்காகவே கூட்டம் அலைமோதும்.

கிறிஸ்துமஸ் நடனம்

எந்த ஒரு விழாவாக இருந்தாலும், இரவு விருந்துகள், ஆர்ப்பரிக்கும் கூட்டம், அட்டகாசமான இசைகள், குதூகலிக்கும் கொண்டாட்டம் இருக்கும்தானே. கிறிஸ்துமஸின்போதும் இரவு விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். மாலை நேரங்களிலேயே தொடங்கும் இந்த கொண்டாட்டங்கள் இரவு வரை நீளும். நீங்கள் இசைக்கேற்ப ஆடி மகிழ்ந்து வேண்டியதை வாங்கி சுவைத்து கிறிஸ்துமஸை கொண்டாடித் தீர்க்கலாம்.

கிழவனை கொளுத்து


அடடே.. என்ன இது அநியாயமா இருக்குனு கேக்காதீங்க. இது ஒரு உள்ளூர் நடைமுறை. இந்த பகுதியில் பழைய துணிகளால் செய்யப்பட்ட உருவ பொம்மை ஒன்றை தீயிட்டு கொளுத்தி கொண்டாடுகிறார்கள். அதற்குதான் இந்த பெயர்.1

கோவாவில் எங்கெல்லாம் கொண்டாடலாம்

பழைய கோவா

அஞ்சுனா பீச்

கிளப்பிங் மற்றும் பார்ட்டியிங்க் எனப்படும் கேளிக்கை பகுதிகள்.

Read more about: travel goa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X