Search
  • Follow NativePlanet
Share
» »நர்மதை நதிக்கரையோரத்தில் அச்சுறுத்தும் ஓர் அவதாரக் கோட்டை!

நர்மதை நதிக்கரையோரத்தில் அச்சுறுத்தும் ஓர் அவதாரக் கோட்டை!

சிவபெருமானின் உடலில் இருந்து தோன்றியதால் நர்மதை ஆறு, ஜடாசங்கரி என்றும் அழைக்கப்படுகிறது. பல புகழ்பெற்ற இந்நதிக் கரையோரம் அமைந்துள்ள அச்சுருத்தும் ஓர் அவதாரக் கோட்டை தெரியுமா ?

தென்னிந்தியாவில் கிரி வலம் எப்படி பிரபலமான ஒன்றோ அதேப் போன்று வட இந்தியாவில் நர்மதை நதிவலம் பிரபலமான ஒன்று. நர்மதை ஆறானது மிகவும் புனிதமான நதியாகவும், இதனை காலணி அணியாமல் வலம் வர வேண்டும் என்றும் வட இந்தியாவில் உள்ள இந்துக்களிடையே கட்டுப்பாடுகள் உள்ளன. புராணத்தின்படி நர்மதை சிவபெருமானின் உடலில் இருந்து தோன்றியதால் நர்மதை ஜடாசங்கரி என்றும் இதனை அழைக்கின்றனர். இவ்வாறு புகழ்பெற்ற இந்நதிக் கரையோரம் அமைந்துள்ள அச்சுருத்தும் ஓர் அவதாரக் கோட்டை குறித்து கேள்விப்பட்டிருக்கீங்களா ?

இந்தோர்

இந்தோர்

நர்மதா நதி வழிந்தோடும் பகுதிகளில் ஒன்றுதான் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தோர் மாவட்டம். முற்காலத்தில் இந்தோர் நகரம் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டு வந்தது. இந்நகரில் காணப்படும் இந்த்ரேஷ்வர் கோவிலின் மூலமாக இந்நகரமே இந்த்ரேஷ்வர் என அழைக்கப்பட்டு வந்தது. அதற்கு முன்பாக, ராணி அஹில்யாபாய் பெயரைக் கொண்டு அஹில்யாநகரி என்று அழைக்கப்பட்டுள்ளது.

Dchandresh

அஹில்யா கோட்டை

அஹில்யா கோட்டை

சுமார் 250 ஆண்டுகள் பழமையான கோட்டைகளுல் ஒன்று அஹில்யா கோட்டை. உள்ளூர் மக்களால் ஹோல்கர் கோட்டை என்றும் அழைக்கப்படும் இக்கோட்டை மத்தியப் பிரதேசத்தின் மஹேஷ்வரில் உள்ள ஒரு முக்கியச் சுற்றுலாத் தலமாகும். இந்நூர் மகாராணியின் விருப்பமான இருப்பிடமாகத் திகழ்ந்த இக்கோட்டையின் அழகும், கட்டிடக் கலையும் கட்டாயம் காண வேண்டிய ஒன்று.

Bernard Gagnon

மால்வா ராணிக் கோட்டை

மால்வா ராணிக் கோட்டை

அஹில்யா கோட்டையானது, மால்வா ராணியாகிய மகாராணி அஹில்யா பாய் ஹோல்கரின் வசிப்பிடமாக இருந்துள்ளது. இக்கோட்டையின் வளாகத்தில், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சாத்ரிகளையும், ராணி இக்கோட்டையில் தங்கியிருந்த காலத்தில் அமர்ந்திருந்த அரியணையையும் காணலாம் தற்போதும் காணலாம்.

Anupams123

கோட்டை அமைப்பு

கோட்டை அமைப்பு

இக்கோட்டையில் மொத்தம் 14 அறைகள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் பழமையான வரலாற்றை நிகழ்வுகளை பறைசாற்றுகின்றது. அலங்காரப் பொருட்கள், இருக்கைகள், படுக்கைகள் என அனைத்தும் பழமையின் அம்சங்களாக உள்ளன. இக்கோட்டையில் தங்கிய படியே நர்மதை நதியின் அழகை ரசித்து மகிழ புதமனத் தம்பதிகள் அதிகளவில் இங்கே பயணிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஹனிமூனுக்கு பெயர்பெற்ற இடமாகவும் இது திகழ்கிறது.

Dchandresh

விண்டோ ஆப் பிளிஸ்

விண்டோ ஆப் பிளிஸ்

ராணி அஹில்யா பாய் வழிபாடு செய்த நூற்றுக்கணக்கான லிங்கங்கள் அடங்கிய ஒரு லிங்கார்ச்சனை கோர்ட்யார்டு தலமும் இங்கே உள்ளது. இதில் தற்போது நீம் மற்றும் இம்லி ஆகிய இரண்டு பெயர்களில் ஜன்னல் இருக்கைகளுடன் நர்மதை நதியில் அழகை கண்டு ரசிக்கும வகையில் இரண்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Kirandeep Atwal

சிவனுக்கு அர்ப்பனிக்கப்பட்ட கோட்டை

சிவனுக்கு அர்ப்பனிக்கப்பட்ட கோட்டை

இப்பழங்காலக் கோட்டையின் உள்ளே சிவபெருமானின் பல்வேறு அவதாரங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களும் உள்ளன. தன் ராஜ்ஜியத்தைக் காக்க பகீரத பிரயத்தனம் செய்த, ஆற்றல்மிக்கவராக விளங்கிய ராணி அஹில்யா பாய் ஹோல்கரை நினைவுகூறும் வகையில் உள்ளது.

Bernard Gagnon

தங்கும் விடுதி

தங்கும் விடுதி

அஹில்யா கோட்டை தற்போது, இந்தூரின் கடைசி இளவரசரான ஷிவாஜி ராவ் ஹோல்கரால் ஒரு பாரம்பரிய விடுதியாக செயல்பட்டு வருகிறது. மராட்டியர் காலத்தைய நேர்த்தியான கட்டுமானத்தோடு கூடிய இந்த கோட்டை, சுற்றுலாப் பயணிகள் மிக விரும்பும் சுற்றுலாத் தலங்களுள் குறிப்பிடத்தக்கவையாகும்.

Bernard Gagnon

அஹில்யேஷ்வர் கோவில்

அஹில்யேஷ்வர் கோவில்

அஹில்யா கோட்டைக்கு பயணம் செய்வோர் யாவரும் தவறவிடக் கூடாத தலம் அஹில்யேஷ்வர் கோவில். மஹேஷ்வரில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பிரசிதிபெற்ற இக்கோவில் நர்மதா நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மண்டபம் பிரமிப்பூட்டும் அலங்காரத்துடன் ஜொலிக்கும் அழகும், மாலை வேலையில் சூரியன் மறையும் தருணத்தில் மிளிரும் காட்சியும் பிரம்மிப்பூட்டும் அழகுடன் இருக்கும்.

Lukas Vacovsky

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

மத்தியப்பிரதேசத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் மஹேஷ்வரை சாலை வழியாக பேருந்து போக்குவரத்து சேவைகள் உள்ளன. மஹேஷ்வரிலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் இந்தூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. 85 கிலோ மீட்டர் தொலைவில் இந்தூர் விமான நிலையம் அமைந்துள்ளது.

Karan Dhawan India

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X