Search
  • Follow NativePlanet
Share
» »அஜ்மீர் நகரத்துல இந்தமாதிரி விசயங்கள்லாம் இருக்கா?

அஜ்மீர் நகரத்துல இந்தமாதிரி விசயங்கள்லாம் இருக்கா?

அஜ்மீர் நகரத்துல இந்தமாதிரி விசயங்கள்லாம் இருக்கா?

ராஜஸ்தான் மாநிலத்தின் 5வது பெரிய நகரமான அஜ்மீர் நகரம் மாநிலத்தலைநகரமான ஜெய்பூரிலிருந்து 135கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது முன்னர் அஜ்மீரே அல்லது அஜய்மேரு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த நகரம் ஆரவல்லி மலைத்தொடரால் சூழப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பழமை வாய்ந்த தாராகர் கோட்டை அஜ்மீர் நகருக்கு அரணாக அமைந்துள்ளது. வாருங்கள் இந்த இடத்துக்கு சென்று சுற்றுலாவை ரசிப்போம்.

 வரலாறு

வரலாறு

சௌஹான் வம்சத்தைச்சேர்ந்த அஜய்ராஜ் சிங் சௌஹான் என்பவரால் 7ம் நூற்றாண்டில் இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் சௌஹான் வம்சத்தாரால் ஆளப்பட்ட அஜ்மீர் பிரதேசத்தின் மிகச்சிறந்த மன்னராக பிருதிவிராஜ் சௌஹான் புகழுடன் அறியப்படுகிறார்.

அஜ்மீரின் வரலாற்றுப்பின்னணி அஜ்மீர் நகரம்1193ம் ஆண்டு முஹமது கோரியால் கைப்பற்றப்பட்டது. இருப்பினும் கப்பம் கட்டும் ஒப்பந்தத்தின் பேரில் சௌஹான் மன்னர்கள் தொடர்ந்து அஜ்மீர் பிரதேசத்தை ஆளும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். பின்னாளில் 1365ம் ஆண்டில் மேவார் மன்னராலும், 1532ம் ஆண்டு மார்வார் வம்சத்தாலும் அஜ்மீர் கைப்பற்றப்பட்டது.

1553ம் ஆண்டு ஹேமு என்றழைக்கப்பட்ட ஹேம் சந்த்ர விக்கிரமாதித்ய மன்னர் அஜ்மீரை வென்றார். இருப்பினும் அவர் 1556ம் ஆண்டு இரண்டாம் பானிப்பட்டு போரில் இறந்தார். பின்னர் 1559ம் ஆண்டில் அஜ்மீர் முகலாயப் பேரரசர் அக்பரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இறுதியாக 18ம் நூற்றாண்டில் மராத்தாக்களின் ஆட்சியின் கீழ் அஜ்மீர் வந்தடைந்தது.

1818ம் ஆண்டில் ஆங்கிலேய அரசு மராத்தாக்களிடமிருந்து 50000 ரூபாய் தொகை மூலம் ஆஜ்மீரை மேவாருடன் இணைந்த ஒரு மாநிலமாக உருவாக்கியது.


1950ம் ஆண்டில் தனி மாநிலமாக உருவான அஜ்மீர் கடைசியாக 1956ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்துடன் இணைந்தது.

Singh92karan

 அற்புத சுற்றுலாஸ்தலங்கள்

அற்புத சுற்றுலாஸ்தலங்கள்

காஜா மொயின் - உத்- தின் சிஸ்தி எனும் புகழ்பெற்ற சூஃபி ஞானியின் சமாதிஸ்தலமான தர்கா ஷரீஃப் இங்கு அமைந்துள்ளது. தாராகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த தர்க்கா ஷரீப் எனும் ஆன்மீகத்தலம் எல்லா மதத்தினராலும் விஜயம் செய்யப்படுகிறது.

Billyakhtar

அணா சாகர் ஏரி

அணா சாகர் ஏரி


அணா சாகர் ஏரி என்றழைக்கப்படும் செயற்கை ஏரி இந்நகரின் வட பகுதியில் அமைந்துள்ளது. பேரரசர் ஷாஜஹான் கட்டிய பர்தாரி என்றழைக்கப்படும் மண்டப அமைப்புகள் இந்த ஏரிக்கு இன்னும் அழகு சேர்க்கின்றன. அணா சாகர் ஏரி சுற்றுலாப்பயணிகளுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் பிடித்தமான சிற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.

Debabrata Ghosh

அஜ்மீர் மியூசியம்

அஜ்மீர் மியூசியம்


பேரரசர் அஜ்மீருக்கு விஜயம் செய்யும்போது தங்குமிடமாக பயன்பட்ட அரண்மனையானது தற்போது அஜ்மீர் மியூசியம் என்றழைக்கப்படுகிறது. இந்த மியூசியத்தில் 6ம் நூற்றாண்டு மற்றும் 7ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஹிந்துக்கடவுளர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

முகலாயர்கால சிற்பங்கள் மற்றும் ராஜபுதன முகலாய வம்சங்களைச்சேர்ந்த கவச உடைகள் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டரை நாட்களில் கட்டி முடிக்கப்பட்டதாக சொல்லப்படும் அதய் தின் கா ஜோப்ரா எனும் மசூதி ஒன்றும் இந்தோ இஸ்லாமிய கட்டிடக்கலை மேன்மைக்கான உதாரணமாக இங்கு அமைந்துள்ளது.

நசியான்(சிவப்பு) கோயில், நிம்பர்க் பீடம் மற்றும் நரேலி ஜெயின் கோயில் போன்றவை இங்குள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். அஜ்மீரில் ராஜபுதன வம்சத்தினருக்காக உருவாக்கப்பட்டுள்ள மேயோ கல்லூரி நாட்டிலேயே சிறந்த கல்விநிலையமாக புகழ்பெற்றுள்ளது.

Siddharth429

 எப்படி செல்வது

எப்படி செல்வது

அஜ்மீர் நகரம் புனித யாத்ரீகத்தலமான புஷ்கர் ஸ்தலத்துக்கான நுழைவாயிலாகவும் திகழ்கிறது. இங்கிருந்து 11 கி.மீ தூரத்தில் புஷ்கர் ஸ்தலம் அமைந்துள்ளது. புஷ்கர் ஏரி மற்றும் ஒரு பிரம்மா கோயிலுக்கு புகழ் பெற்று விளங்கும் புஷ்கர் ஸ்தலத்துக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்வது குறிப்பிடத்தக்கது.

அஜ்மீர் நகரம் விமானம், ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அஜ்மீர் நகரத்துக்கு அருகில் ஜெய்பூர் சர்வதேச விமான நிலையமான சங்கனேர் விமான நிலையம் அமைந்துள்ளது. மேலும், அஜ்மீர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கிய பெருநகரங்களுக்கும் ரயில் சேவைகளைக்கொண்டுள்ளது. இவை தவிர, அஜ்மீர் நகரம் சாலை வசதிகளாலும் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. அஜ்மீர் நகருக்கு விஜயம் செய்து மகிழ்வதற்கு குளிர்காலம் உகந்த காலமாகும்.

Varun Shiv Kapur

அழகிய அஜ்மீர்

அழகிய அஜ்மீர்

அழகிய அஜ்மீர்

அழகிய அஜ்மீர்

அழகிய அஜ்மீர்

அழகிய அஜ்மீர்

அழகிய அஜ்மீர்

அழகிய அஜ்மீர்

அழகிய அஜ்மீர்

அழகிய அஜ்மீர்

Read more about: ajmer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X