Search
  • Follow NativePlanet
Share
» »புரட்டாசி மாதத்தில் கட்டாயம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தலங்கள்!

புரட்டாசி மாதத்தில் கட்டாயம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தலங்கள்!

பெருமாளை சனிக்கிழமையில் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. அதுவும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் இன்னும் கூடுதல் பயண்கிட்டும் என்பது நம்பிக்கை.

By Saba

ஒன்பது கோள்களில் ஒன்றாகத் திகழும் புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் ஒன்று புரட்டாசி. புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹா விஷ்ணு பகவான். விஷ்ணுவின் அருளைப் பெற உகந்த காலமாக இருப்பது புரட்டாசி மாதம். பொதுவாகவே பெருமாளை சனிக்கிழமையில் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. அதுவும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் இன்னும் கூடுதல் பயண்கிட்டும் என்பது நம்பிக்கை. தமிழகத்தில் எந்த விஷ்ணு தலத்திற்கு இந்த புரட்டாசி மாதம் பயணிக்க வேண்டும் என பார்க்கலாம் வாங்க.

அரங்கநாத சுவாமி கோவில்

அரங்கநாத சுவாமி கோவில்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகும். காவிரி ஆற்றினால் சூழப்பட்ட, இத்தலம் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலைச் சுற்றிலும் மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது.

BOMBMAN

புரட்டாசி வழிபாடு

புரட்டாசி வழிபாடு

ஸ்ரீரங்கம் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, வைகாசி, ஆடி, புரட்டாசி, தை, மாசி, பங்குனி என ஏழு மாதங்களில் பெருமாள் கோவிலை விட்டு வெளியேறி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அவற்றுள், புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் அன்றை காலத்தில் சிறப்பு வழிபாடுகளும், மாபெரும் திருவிழாவும் கொண்டாடப்படும்.

Richard Mortel

சாரங்கபாணி திருக்கோவில்

சாரங்கபாணி திருக்கோவில்

சாரங்கபாணி சுவாமி கோவிலானது கும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற விஷ்ணு தலமாகும். 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக இக்கோவில் புகழ்பெற்றுள்ளது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும்.

பா.ஜம்புலிங்கம்

மூலவர் திருக்கோலம்

மூலவர் திருக்கோலம்

இத்தல மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் என்னும் திருநாமத்துடன் போற்றப்படுகிறார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் அருளுகிறார்.

Adam Jones

கள்ளழகர் திருக்கோவில்

கள்ளழகர் திருக்கோவில்

108 வைணவத் தலங்களில் மிகவும் புகழ்பெற்றது மதுரை கள்ளழகர் திருக் கோவில். பெரும்பாலும் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இத்தலம் 94 ஏக்கர் பரப்பளவில் 4 புறமும் கோட்டை சுவர்களால் ஆன பழமை வாய்ந்த கோவிலாகும். மதுரையில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் நட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்ற வழிபடுவர்.

Richard Mortel

வழிபாடு

வழிபாடு

வைகாசி, புரட்டாசி மாதங்களில் இத்தல மூலவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், திருமணத் தடை உள்ளவர்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்று மூலவருக்கும் அம்மையாருக்கும் மாலை அணிவித்து வழிபடுவதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

Richard Mortel

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X