Search
  • Follow NativePlanet
Share
» »அல்ச்சி அட்டகாசமான ஒரு அமைதிப் பூங்கா

அல்ச்சி அட்டகாசமான ஒரு அமைதிப் பூங்கா

அல்ச்சி அட்டகாசமான ஒரு அமைதிப் பூங்கா

அல்ச்சி என்ற புகழ் பெற்ற கிராமம் லடாக்கிலுள்ள லே மாநகராட்சியில் அமைந்துள்ளது. இண்டஸ் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கிராமம் இமயமலை வட்டாரத்தின் மத்தியில் லேவிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கிராமம் இதன் பெயராலேயே ஒரு மடத்தை கொண்டுள்ளது.

தட்டையான நிலப்பரப்பு

லடாக்கில் உள்ள இந்த அல்ச்சி மடம் ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலம். லடாக்கில் உள்ள அனைத்து மடங்களும் மலையின் மேல் அமையப்பெற்றுள்ளன. மாறாக இந்த அல்ச்சி மடம் மட்டும் தான் தட்டையான நிலப்பரப்பில் உள்ளது.

இந்த மடம் 11-ஆம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட ஒன்று. மேலும் தனித்தன்மை வாய்ந்த கட்டிடக்கலையுடன் இது விளங்குவதால் இது மேலும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த மடத்தின் கட்டிடத்திற்குள் மூன்று முக்கிய கோவில்கள் உள்ளன.

முக்கிய கோவில்கள்

அவைகள் டு-காங், சும்-செக் மற்றும் மஞ்சுஸ்ரீ கோவில். இந்த கோவில் சுவற்றில் புத்தர் மற்றும் பல கடவுள்களின் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இயற்கை அழகுக்கு மத்தியில் இருக்கும் இந்த கிராமம் பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் புத்த துறவிகளின் வாழ்க்கை முறைகளை மிக அருகில் இருந்து காணலாம். இந்த கிராமத்தில் இரவு தங்குவதற்கும் சில இடங்கள் உண்டு.

எப்படி செல்வது


அல்ச்சி கிராமத்திற்கு மிக அருகாமையில் இருக்கும் விமான நிலையம் லேவில் இருக்கும் விமான நிலையமே. இந்த விமான நிலையத்திலிருந்து இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களான புனே, டெல்லி, ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு விமான சேவை இயங்குகிறது. அல்ச்சி கிராமத்திற்கு மிக அருகில் இருக்கும் ரயில் நிலையம் பதான்கோட் மற்றும் சன்டிகர்ரில் உள்ளது.

எப்போது செல்வது


இந்த கிராமத்தில் உச்ச பட்சம் வானிலை நிலவும். உறைந்து போகும் அளவிற்கு கடும் குளிரை கொண்டுள்ளதாக இருக்கும் குளிர் காலம். ஆனால் வெயில் காலத்தின் போது மிதுவான வெப்ப நிலை நிலவுவதால் இதமாக இருக்கும். இந்த இடத்தில் வருடத்தின் பல நேரங்களும் மழை பெய்யும். கோடைக்காலத்தில் நீண்ட பகலை கொண்டிருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை அல்ச்சி கிராமம் வருவதற்கு உகுந்த நேரமாகும்.

அல்ச்சி மடம்

அல்ச்சி கிராமத்தில் அமைந்துள்ள அல்ச்சி மடம் லடாக்கில் உள்ள ஒரு பழமையான மடம். இதனை அல்ச்சி சோஸ்கோர் அல்லது அல்ச்சி கொம்பா என்றும் அழைப்பர். இந்த மடம் இண்டஸ் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

புத்த சமஸ்கிருதத்தை திபெடனுக்கு மாற்றும் மொழி பெயர்ப்பாளரான ரின்சென் சங்போவால் 958-1055 கி.பி. யில் கட்டப்பட்டது தான் இந்த மடம் என்று நம்பப்படுகிறது. இந்த மடத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இது தட்டையான நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

லோட்சவா லா-காங்

அல்ச்சியிலுள்ள லோட்சவா லா-காங் என்ற புத்த மத கோவில், புத்த சமஸ்கிருதத்தை திபெடனுக்கு மாற்றும் மொழி பெயர்ப்பாளரான ரின்சென் சங்போவின் நினைவாக எழுப்பப்பட்டது. இந்த கோவிலில் சக்ய குல துறவியான ஷக்யமுனியின் சிலை உள்ளது. தொங்கும் காதுகளை கொண்ட ரின்சென் சங்போவின் சிலை வலது புறமாக இருக்கிறது. கோவிலின் சுவர்களில் ஷக்யமுனியின் அழகான பழைய ஓவியங்களை காணலாம்.

அழகிய அல்ச்சி

அழகிய அல்ச்சி

அழகிய அல்ச்சி

அழகிய அல்ச்சி

அழகிய அல்ச்சி

அழகிய அல்ச்சி

அழகிய அல்ச்சி

அழகிய அல்ச்சி

அழகிய அல்ச்சி

அழகிய அல்ச்சி

    Read more about: alchi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X