Search
  • Follow NativePlanet
Share
» »கண்டேரி கோட்டையும் அலிபாக் பீச்சும் - வாங்க ஒரு எட்டு போய்ட்டு வருவோம்

கண்டேரி கோட்டையும் அலிபாக் பீச்சும் - வாங்க ஒரு எட்டு போய்ட்டு வருவோம்

கண்டேரி கோட்டையும் அலிபாக் பீச்சும் - வாங்க ஒரு எட்டு போய்ட்டு வருவோம்

By Udhay

மஹாரஷ்டிராவின்மேற்குக்கடற்கரைப்பகுதியில் கொங்கணப்பிரதேசத்தில் ராய்காட் மாவட்டத்தில் இந்த அலிபாக் நகரம் அமைந்துள்ளது. இது மும்பை மெட்ரோவுக்கு வெகு அருகிலேயே உள்ளது. அலி தோட்டப்பூங்காவை குறிப்பிடும்படியாக இது அலிபாக் என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான மா மற்றும் தென்னை மரங்களை இங்கு அலி நட்டதாக சொல்லப்படுகிறது. இதன் துவக்க வரலாறு 17ம் நூற்றாண்டில் சிவாஜி மஹாராஜாவால் உருவாக்கப்பட்டதிலிருந்து துவங்குகிறது. 1852ம் ஆண்டு இது ஒரு தாலுக்காவாகவும் அந்தஸ்து பெற்றது. அலிபாக் பகுதி பெனி இஸ்ரேலிய யூதர்கள் பல வசிக்கும் பகுதியாகவும் உள்ளது.

இங்கு பாக்கவேண்டிய முக்கியமான பகுதி இரண்டு. இரண்டும் அருகருகே அமைந்துள்ளன. ஒன்று கடற்கரை மற்றொன்று கடற்கரை அருகில் அமைந்துள்ள கோட்டை.

கண்டேரி கோட்டையும் அலிபாக் பீச்சும் - வாங்க ஒரு எட்டு போய்ட்டு வருவோம்

Rakesh Ayilliath

கண்டேரி கோட்டை

சுமார் 320 ஆண்டுகளுக்கு முன்பு 1678ம் ஆண்டு இந்த கண்டேரி கோட்டை கட்டப்பட்டுள்ளது. பேஷ்வா வம்சத்தினரால் இது ஆங்கிலேயருக்கு அளிக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கின்றது. அலிபாக்கில் உள்ள இந்த கோட்டை தாய் பீச்சிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. ஒரு சிறு தீவின் மீது உறுதியாக இந்த கோட்டை காணப்படுகிறது. இதன் அருகாமையில் ஒரு கலங்கரை விளக்கமும் உள்ளது. இந்த கோட்டை தற்சமயம் மும்பை துறைமுக நிர்வாக அமைப்பின் மூலம் பராமரிக்கப்படுகிறது. பயணிகள் இந்த கோட்டையின் உள்ளே சென்று பார்ப்பதற்கு மும்பை துறைமுக நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டேரி கோட்டையும் அலிபாக் பீச்சும் - வாங்க ஒரு எட்டு போய்ட்டு வருவோம்

Rakesh Ayilliath

அலிபாக் பீச் இதுதான் இந்தியாவின் கருங்கடல்

அலிபாக் என்ற தன் நகரத்தின் பெயரிலேயே அறியப்படும் இந்த கடற்கரையானது அலிபாக் செல்லும் பயணிகளின் முக்கிய விருப்ப ஸ்தலமாகும். இங்கிருந்து கொலாபா கோட்டையையும் நன்றாக பார்க்க முடியும். இங்குள்ள கடற்கரை மணல் நல்ல கருமை நிறத்தில் இருப்பது ஒரு சுவாரசியமான கண்களைக் கவரும் அம்சமாகும். எல்லா பீச்'களையும் போன்றே இங்கும் நிறைய உணவகங்கள் நிறைந்துள்ளன. பயணிகள் உள்ளூர் உணவு வகைகள் மற்றும் இளநீரை ருசித்தபடியே கடற்கரை அழகை மற்றும் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம்.

Read more about: travel beaches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X