Search
  • Follow NativePlanet
Share
» »இந்த வார இறுதியில் இந்த இடத்திற்கு செல்லுங்கள் – வீக்என்ட் அட்டகாசமாக அமையும்!

இந்த வார இறுதியில் இந்த இடத்திற்கு செல்லுங்கள் – வீக்என்ட் அட்டகாசமாக அமையும்!

கம்பீரமான மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட, கேரளாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள வயநாடு சொர்க்கத்தில் இருந்து நழுவி விழுந்த ஒரு சிறு துண்டு போல காட்சியளிக்கிறது.

அடர்ந்த காடுகள், பசுமையான நிலப்பரப்புகள், பல அழகான சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் நிறைந்த ஒரு இடமாக, வயநாடு இயற்கை ஆர்வலர்களுக்கும் மற்றும் அமைதியைத் தேடுபவர்களுக்கும் ஒரு சரியான வார இறுதி சுற்றுலாத் தலமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை!

ஆகவே, நீங்கள் இந்த வார இறுதியை வயநாட்டிற்கு சென்று கழிக்கலாம்! அதற்கான யோசனைகள் இங்கே!

ஏன் நீங்கள் வயநாட்டிற்கு செல்ல வேண்டும்

ஏன் நீங்கள் வயநாட்டிற்கு செல்ல வேண்டும்

நீர்வீழ்ச்சிகள், காலம் கடந்த குகைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், மசாலா தோட்டங்கள், வனவிலங்குகள் நிறைந்த வயநாடு தமிழ்நாட்டிற்கு மிக அருகில் உள்ள ஒரு அழகிய கேரள மலைவாசஸ்தலமாகும்.

அங்கு வசதியாக ஓய்வு எடுக்க ஹோம்ஸ்டேக்கள், விடுதிகள் மற்றும் பல விதமான தனித்துவமான தங்குமிடங்கள் நிறைந்துள்ளன.

பரந்து விரிந்த மசாலா தோட்டங்கள் வழியாக நடப்பது, வரலாற்றுக்கு முந்தைய குகைகளுக்கு ட்ரெக்கிங் செய்வது மற்றும் ரிசார்ட் விடுமுறையை அனுபவிப்பது ஆகியவை வயநாட்டின் இனிமையை உணர பெற நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்களில் ஒன்றாகும். ஆகவே இந்த வார இறுதியை நீங்கள் அங்கு அருமையாக கழிக்கலாம்.

வயநாடு ஏன் இயற்கை ஆர்வலர்களின் இருப்பிடமாக உள்ளது

வயநாடு ஏன் இயற்கை ஆர்வலர்களின் இருப்பிடமாக உள்ளது

மிகவும் பிரபலமான வயநாடு வனவிலங்கு காப்பகம், பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாகும். வயநாடு வனவிலங்கு காப்பகம் நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும், இது மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. வயநாடு யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் போன்ற பல்வேறு வகையான வனவிலங்குகளுக்கு இருப்பிடமாகும்.

மேலும் வயநாடு சில பழங்கால குகைகள் மற்றும் கோவில்கள் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கான ஏராளமான விருப்பங்களின் தாயகமாகும். மூடுபனி மூடிய மலைகள், பள்ளத்தாக்குகளின் பச்சை புல்வெளிகள், வெள்ளை நீர் ஊற்றுகள், நீல நீர் ஏரிகள் மற்றும் அடர்ந்த காடுகள் ஆகியவை வயநாட்டின் அற்புதமான இயற்கை அழகை வெளிப்படுத்துகின்றன. வரலாறும் கலாச்சாரமும் நிறைந்த வயநாடு வசீகரமான நீர்வீழ்ச்சிகள், குகைகள், ஓய்வு விடுதிகள் மற்றும் இயற்கை வாழ்க்கைக்கு பெயர் பெற்றது.

வயநாட்டின் சுற்றுலா தலங்கள்

வயநாட்டின் சுற்றுலா தலங்கள்

அரிய பறவைகள், தாவரங்கள் மற்றும் மூலிகைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குருவா தீவு
வயநாட்டின் சுற்றுலா தலங்களின் முதன்மை வகிக்கிறது. பசுமையான காடுகளுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையே அமைந்துள்ள அழகிய நன்னீர் ஏரியான பூக்கோடு ஏரி புகைப்படக் கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் விருப்பமான வயநாடு இடங்களில் ஒன்றாகும்.

உயிர்க்கோள காப்பகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக பல்லுயிர் பெருக்கம் நிறைந்த வனவிலங்கு வயநாடு சரணாலயம் வயநாட்டில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகும்.

கடல் மட்டத்திலிருந்து 2100 மீ உயரத்தில் அமைந்துள்ள செம்ப்ரா சிகரம், இந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக அறியப்படும் பாணாசுர சாகர் அணை, புதிய கற்காலம் மற்றும் மெசோலிதிக் காலத்தைச் சேர்ந்த கற்கால சிற்பங்கள் கொண்ட இந்தியாவின் ஒரே இடமான எடக்கல் குகைகள், தெற்கின் காசி என்றழைக்கப்படும் திருநெல்லி கோயில், தொல்பெட்டி வனவிலங்கு சரணாலயம், மூங்கில் தொழிற்சாலை, பாண்டம் ராக் மற்றும் நீலிமலா வியூ பாயிண்ட் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்த வயநாடு சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

இவை அனைத்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு வயநாட்டில் மிக உண்மையான மற்றும் ஒரு உன்னதமான ஓய்வை அளிக்கின்றன.

வயநாட்டிற்கு எப்படி செல்லவது

வயநாட்டிற்கு எப்படி செல்லவது

வடக்கில் தோல்பெட்டி, கிழக்கில் முத்தங்கா, தெற்கில் கல்பெட்டா, வடமேற்கில் மானந்தவாடி என வயநாடு தமிழ்நாடு மற்றும் கேரளாவின் எல்லையில் அமைந்துள்ளது. வயநாடு, ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக இருப்பதால் மற்ற முக்கிய நகரங்களுடன் விமானம், ரயில் மற்றும் சாலை இணைப்புகளைக் கொண்டுள்ளது. விமானம் அல்லது ரயிலில் வருபவர்கள் முறையே கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் அல்லது கோழிக்கோடு இரயில் நிலையத்தில் தரையிறங்கி, பின்னர் டாக்ஸி அல்லது பஸ்ஸில் வயநாட்டிற்கு செல்லலாம். அருகிலுள்ள நகரங்களில் இருந்து வயநாடுக்கு வசதியாக நீங்கள் அரசு அல்லது தனியார் பேருந்திலும் செல்லலாம்.

தென்னிந்திய நகரங்களில் இருந்து வயநாடு ஒரு சரியான வார இறுதி யோசனையாகும். பெங்களூரில் இருந்து சாலைப் பயணம் செய்தால், நாகர்ஹோல், பந்திப்பூர் மற்றும் முதுமலை ஆகிய மூன்று தேசிய பூங்காக்கள் வழியாகச் செல்லலாம். அது உங்கள் மனதிற்கும் கண்களுக்கும் நிச்சயம் ஒரு புத்துணர்வை அளிக்கும் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

Read more about: wayanad kerala
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X